திருச்சி மாவட்டத் தில் எடப்பாடியால் புதிதாக நியமிக்கப்பட்ட மா.செ.க்கு கட்சிக்குள் ளேயே எதிர்ப்பு கிளம்பி யிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
அ.தி.மு.க.வில் இ.பி. எஸ்., ஓ.பி.எஸ். அணி களுக்குள் ஏற்பட்ட மோதலில், சட்டப்படி யாகவும், தேர்தல் ஆணையத்திலும் எடப் பாடி அணியே வெற்றியை தன்பக்கம் தக்க வைத்தது. இதன் பிறகுதான் தமிழகத்தில் காலியாக இருந்த மாவட்டச் செயலாளர்கள் பதவிகளை எடப்பாடி நிரப்பினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த வெல்லமண்டி நட ராஜன், ஓ.பி.எஸ். அணி பக்கம் இருப்பதால் அந்நகரின் மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் பதவி நீண்டகாலமாக காலியாக இருந்துவந்தது. இந்த நிலையில், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செய லாளராக அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளராக இருந்துவரும் ஜெ.சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவைச் செய லாளர் உட்பட பல பதவிகளை வகித்தவர். கட்சியில் ஏற்பட்ட பிளவின்போது இவர் டி.டி.வி. தினகரன் பக்கம் சென்றிருந் தாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி தலை மையிலான அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மா.செ. பதவி ஜெ.சீனிவாச னுக்கு வழங்கப்பட்டவுடன் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. நீண்ட காலமாக அ.தி.மு.க.வில் உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் மாற்றுக் கட்சிக்குச் சென்றுவந்தவருக்கு முன்னுரிமை கொடுத்து பதவி தருவது ஏற்க முடியாத ஒன்று என நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை உழைத்தவர்களுக்கு மதிப் பளிக்காமல் பணம் உள்ளவர் களுக்கே பதவி வழங்குவதாக பலரும் குற்றம்சாட்டினர். அதேபோல் திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வின் மூத்த, முக்கிய நிர்வாகிகள் சீனிவாசனுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ள தாகக் கூறியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாகத் தான் ஜெ.சீனிவாசனுக்கு எதிராக 4 பகுதிச் செயலாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். சுரேஷ் குப்தா, நாகநாதர் பாண்டி, முத்துக்குமார், பூபதி ஆகிய நான்கு பகுதிச் செயலாளர்களும் எடப்பாடிக்கு பிராது அனுப்பியுள்ளனர். மாவட்டத்தில் காலியாக உள்ள பதவிகளில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு பணம் வாங்கிக்கொண்டுதான் பதவியே தருகிறார் என்ற குற்றச்சாட்டை அந்தப் புகாரில் முன்வைத்துள்ளனர்.
தங்கமணி, வேலுமணி போன்றவர்களின் காதுகளிலும் இந்த தகவலை போட்டுள்ளனர். அதேபோல், போஸ்டர் களில் எம்.பி. குமாரின் படத்தை போடக்கூடாது என்றும், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் கலைஞர் சிலை வைக்கும் முயற்சிக்கும், கொடிக்கம்பம் நடும் நிகழ்வுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் மௌனம் காப்பதாகவும், அமைச்சர் நேருவுடன் இணைந்து அரசியல் செய்கிறார் என்றும் ஜெ.சீனிவாசனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
இதுகுறித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசனிடம் பேசியபோது, “"இன்றைய சூழ்நிலையில் தலைமைக்குத் தெரியாமல் எந்த ஒரு பதவியும் மாவட் டத்திற்குள் போடமுடியாது. நானும் இதுவரை எந்த நிர்வாகி யிடமும் வாக்குறுதி கொடுக்கவில்லை. அவர்கள் என்மீது குற்றச்சாட்டைப் பரப்புவதற்கு முக்கிய காரணம், அவர் களுக்கு பிடிக்காதவர்களுக்கு நான் பதவி கொடுத்துவிடு வேன் என்ற எண்ணம்தான். நான் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டேன். கட்சியின் பொதுச்செயலாளர், தலை மையிலிருந்து கொடுக்கும் உத்தரவின்படிதான் பதவி போடப்படும். எனக்கும் எம்.பி. குமாருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. நான் அவருடைய படத்தைப் போடவேண் டாம் என்று இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. போஸ் டர்களில் அவருடைய படத்தினை பெரிதாகவும், என்னு டைய படத்தை பாக்ஸுக்குள் போடாமல் வெளியே சிறிய தனிப்படமாக போடுங்கள் என்றே அறிவுறுத்தியுள்ளேன்.
தி.மு.க.வின் செயல்பாடுகளுக்கு நான் எதிர்ப்பு தெரி விக்கவில்லை என்று கூறுகிறார்கள். நான் வெளிப்படையாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கமுடியுமோ அதற்கான வேலை களில் ஈடுபட்டுள்ளேன். எனவே என்னுடைய பணியில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படவில்லை. ஆனால் என்னைப் பற்றி அவதூறு பரப்பிவருகிறார்கள். ஏன் இப்படிச் செய் கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை''”என்று வருத்தத்துடன் கூறினார்.
வெல்லமண்டி நடராஜனின் நிலைகுறித்து கட்சி வட் டாரங்களில் விசாரித்தபோது, அவர் எடப்பாடி அணிக்கு வருதற்கான மனநிலையில் உள்ளதாகவும், விரைவில் வந்து இணைந்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள். தேர்தல் நெருங் கும் சமயத்தில் இன்னும் பல காட்சிகள் மாறும். எனவே இந்த தேர்தல் எல்லா கட்சிகளுக்கும் ஒரு சவாலான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நிலையை உருவாக்கி உள்ளது.