யர்நீதிமன்றத்தில் நடந்துவரும் ஸ்டெர்லைட் வழக்கை கேலிப்பொருளாக மாற்றும்விதமாக, "அந்நியன்" பட அம்பி போல் நீதிமன்றத்திற்கு ஒரு முகத்தையும், மாவட்ட மக்களிடையே வேறொரு முகத்தையும் மாறி மாறி காட்டிவருகின்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி என்கின்ற குற்றச்சாட்டு பரவலாகியுள்ளது தூத்துக்குடியில்! ""தற்போது தமிழகத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கவும், பாக்ஸைட் கனிம வளங்கள் எடுப்பு, சேலம் உருக்காலை ஏலம் என எண்ணற்ற திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் ஸ்டெர்லைட் வேதாந்தா என்கிற ஒற்றைப் பெயரை இங்கு தீய சொல்லாகவே பார்க்கின்றனர் மக்கள்.

ster

மக்களுக்கு பொருளாதார ஆசையைத் தூண்டிவிட்டு அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து தங்கள் வழிக்குக் கொண்டுவர நினைக்கின்றது ஸ்டெர்லைட் நிர்வாகம். அவர்களுக்கு உறுதுணையாக மாவட்ட நிர்வாகமும் இருப்பதுதான் வேதனையே'' என்கிறார் உடன்குடி முகைதீன். கடந்த வாரம், இலவச தையல் பயிற்சி தருகிறோம் என்ற போர்வையில் தெற்கு வீரபாண்டியாபுரம் மற்றும் காயலூரணி கிராமங்களில் தையல் இயந்திரங்களை ஸ்டெர்லைட் ஆதரவாளர்களின் வீட்டில் இறக்கி வைத்தனர். இதைப் பார்த்த கிராம பொதுமக்கள் விவரம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

""ஸ்டெர்லைட்டால் 15 பேர் உயிரை எடுத்திருக்காங்க, தையல் சொல்லிக் கொடுக்கணும்னா ஸ்டெர்லைட் இடத்துல நடத்துங்க, ஊருக்குள்ள விடமாட்டோம்'' என்றும் "அரசு அனுமதியிருக்கிறதா?'' என மக்கள் அடுக்கடுக்காக கேட்ட sterகேள்விகளால் பதட்டமடைந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள், உள்ளூர் வி.ஏ.ஓ.வும், சிப்காட் காவல் நிலையத்தாரும் வந்து விசாரித்ததும், தையல் மிஷின்களை திரும்ப வண்டியில் ஏற்றிக்கொண்டு எஸ்கேப்பாகியுள்ளனர்.

Advertisment

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான சந்தனசேகரோ, ""ஸ்டெர்லைட்டின் இத்தகைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய அடாவடி தருணங்களில், மக்கள் எங்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து புகார் கொடுக்கின்றனரோ அங்கு மட்டும் கண்துடைப்புக்காக, சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மாவட்ட நிர்வாகம்''’என குற்றம்சாட்டுகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர் அக்ரி பரமசிவனோ, ""அரசு அடிப்படை திட்டங்களான குடிநீர், சுகாதாரம், கல்வி, மகளிர் வேலைவாய்ப்பு பயிற்சி, நீர்நிலைகளை பாதுகாத்தல், பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் என நடைமுறைப்படுத்த வேண்டிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இவையெதையும் முறையாகச் செய்யாமல் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் இவற்றையெல்லாம் செய்ய அனுமதிக்கிறார். தமிழக அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு இத்தகைய அனுமதியை எப்படி வழங்குகிறது மாவட்ட நிர்வாகம்?'' என்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கருத்திற்காக தொடர்புகொண்டோம்; பதிலில்லை.

-நாகேந்திரன்

Advertisment