எதிர்க்கும் கட்சிகள்! எதிர்பார்க்கும் குடிமகன்கள்! அதிர வைக்கும் உண்மை!

taa

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போட்டு மக்களை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தது மத்திய - மாநில அரசுகள். 42 நாட்களை கடந்த நிலையில் இந்தியா முழுவதும் சில தொழிற்சாலைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதி வழங்கிய அரசுகள், மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கி யுள்ளது. தமிழகத்தில் மே 7ந்தேதி முதல், சரக்கு களின் விலையேற்றத்துடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன்.

அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பலரும் டாஸ்மாக் கடை திறப் புக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனாவை எதிர்த்து மக்கள் உயிர் வாழவே திண்டாடிக்கொண்டு இருக் கும் நிலையில், டாஸ்மாக் கடையை திறந்து குடும்பங்களை பலிகொடுக்க நினைப்பது சரியா என அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். அதிமுக அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, திமுகவினர் 7ந்தேதி காலை கறுப்பு சட்டை அணிந்து வீட்டு முன் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

tt

காவல்துறை மற்றும் வருவாய்த் துறை தரப்பில் டாஸ்மாக் திறப்பு குறித்து விசாரித்தபோது, மார்ச் 24ந்தேதி முழுமையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அப்போதே தீவிர குடிமகன்கள் ஸ்டாக் வாங்கி வைத்தனர். வாங்கி வைத்த சரக்குகள் ஒரு வாரத்தில் காலியானதும், சரக்கு எங்கே கிடைக்கும் என தேடத் துவங்கினர். அப்போது மார்க்கெட் டில் சரக்கு விற்பனை செய்யும் புள்ளிகள், ஒரு புல் பாட்டிலின் விலை 2 ஆயிரத்தில் தொடங்கி 3

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போட்டு மக்களை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தது மத்திய - மாநில அரசுகள். 42 நாட்களை கடந்த நிலையில் இந்தியா முழுவதும் சில தொழிற்சாலைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதி வழங்கிய அரசுகள், மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கி யுள்ளது. தமிழகத்தில் மே 7ந்தேதி முதல், சரக்கு களின் விலையேற்றத்துடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன்.

அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பலரும் டாஸ்மாக் கடை திறப் புக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனாவை எதிர்த்து மக்கள் உயிர் வாழவே திண்டாடிக்கொண்டு இருக் கும் நிலையில், டாஸ்மாக் கடையை திறந்து குடும்பங்களை பலிகொடுக்க நினைப்பது சரியா என அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். அதிமுக அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, திமுகவினர் 7ந்தேதி காலை கறுப்பு சட்டை அணிந்து வீட்டு முன் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

tt

காவல்துறை மற்றும் வருவாய்த் துறை தரப்பில் டாஸ்மாக் திறப்பு குறித்து விசாரித்தபோது, மார்ச் 24ந்தேதி முழுமையாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அப்போதே தீவிர குடிமகன்கள் ஸ்டாக் வாங்கி வைத்தனர். வாங்கி வைத்த சரக்குகள் ஒரு வாரத்தில் காலியானதும், சரக்கு எங்கே கிடைக்கும் என தேடத் துவங்கினர். அப்போது மார்க்கெட் டில் சரக்கு விற்பனை செய்யும் புள்ளிகள், ஒரு புல் பாட்டிலின் விலை 2 ஆயிரத்தில் தொடங்கி 3 ஆயிரம் வரை விற்பனை செய்தார்கள். ஒரு சில ரெய்டுகளுக்குப் பிறகு, சரக்கு டிமாண்டால் விலை 4 ஆயிரம் ஆனது. அவ்வளவு விலை கொடுக்க எல்லா குடிமகன்களாலும் முடியாது.

tt

வசதி குறைவானவர்கள் சாராயம் நோக்கிச் சென்றார்கள். ஆந்திரா - தமிழக பார்டர் காட்டு பகுதியில் காய்ச்சப்படும் கள்ளச் சாராயம், ஆந்திராவில் இருந்து சரக்கு பாட்டில்கள் தமிழகத்தின் திருப்பத்தூர், வேலூர், இராணிப் பேட்டை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங் களுக்குள் வந்தது. பாண்டிச்சேரி சரக்குகள் கடலூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் என ரகசிய மாக பயணமானது. அதேபோல் ஜவ்வாதுமலை, கல்வராயன்மலை சாராயங்கள்... திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாய்ந்தது. ஒரு லிட்டர் சாராயம் 300 ரூபாய், அதிகப் பட்சம் 400 ரூபாய் என விற்பனையானது. வாடிக்கையாளர் கள் அதிகரிக்க அதுவும் லிட்டர் 1000, 1500 என எகிறியது. அது ttமட்டுமல்ல... சாராயம் காய்ச்சுபவர் களின் எண்ணிக்கையும் அதி கரித்தது. புதியவர்கள் பலரும் இந்த தொழிலுக்குள் வந்தனர். அவர்கள் இளைஞர்கள் என்கிற தகவல் உளவுத்துறையை அதிர்ச்சியடைய செய்ததால், முதல்வருக்கு ரிப் போர்ட் அனுப்பியது.

மூன்றாவது லாக்டவுன் பிரதமர் மோடி அறிவித்ததும், தமிழகத்தை சுற்றியுள்ள ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் மதுவிற்பனைக்கு அனுமதி அளித் தன, கடைகள் திறக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் இருந்து பொய்யான காரணங்களை சொல்லி வாகன அனுமதி வாங்கியும், சட்ட விரோதமாக பார்டரை தாண்டிச் சென்று மதுவை வாங்கினர். இதைதயே காரணம் காட்டி, தமிழக டாஸ்மாக் கடைகளை திறந்தது எடப்பாடி அரசு.

திருவண்ணாமலை மாவட் டத்தில் இந்த லாக்டவுன் காலமான 24.5.2020 முதல் 5.5.2020 வரை 686 கள்ளச்சாராய வழக்குகள் பதிவாகி, 623 பேர் கைதாகியுள்ளனர். கள்ளச் சாராயம், ஊறல் என 48 ஆயிரம் லிட்டர் பறிமுதல் செய்து அழித் துள்ளன. மதுபாட்டில் சரக்குகள் பறிமுதல் மட்டும் 640 லிட்டர்தான். இப்படி பல மாவட்டங்களில் கள்ளசாராய வழக்குகள் அதிகள வில் பதிவாகியுள்ளன.

டாஸ்மாக் கடைகள் திறந் துள்ளது குறித்து திருவண்ணா மலையை சேர்ந்த சமூக ஆர்வல ரான ஆனந்த் நம்மிடம், ""விவசாய தொழிலில் உள்ள சிலர் இந்த தடைக் காலத்தில் சாராயம் காய்ச்சும் வேலைகளில் ஈடுபட துவங்கியுள் ளனர். வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ள பல இளைஞர் கள் இந்த தொழிலில் வரும் வருமானத்தை பார்த்து மயங்கியுள்ளனர். போலீஸ் கெடுபிடிக்கு நடுவில், 10 லிட்டர் எடுத்துச் சென்று கொடுத்தால்கூட 5000 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்பதால் இந்த சவாலான வேலையில் இளை ஞர்கள் இறங்கியுள்ளார்கள்.

ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு போலீஸôர் பாதுகாப்பு பணியில் உள்ள நிலையில் இளைஞர்கள் ரிஸ்க் எடுத்து கொண்டு செல்கிறார்கள், மாட்டினால் அவர்கள் வாழ்க்கை அவ்வளவுதான். அதேபோல் பல இடங்களில் புதிது புதிதாக சாராய உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் உருவாகியிருக் காங்க. இவர்களை அப்படியே தொடரவிட்டால் இதனை நிரந்தர தொழிலாக்கிக்கொள்வார்கள். சாராயத்துக்கு டிமாண்ட் இருப்பதால் கடுக்காய், வேப்பமர பட்டை என பழைய காய்ச்சும் முறையை கைவிட்டு, ஊறலில் யூரியா கலந்து உடனடியாக சாராயமாக்கி விற்கின்றனர், இது உயிருக்கு உடனடி ஆபத்தானது. அதனால் டாஸ்மாக் கடைகளை திறந்த அரசாங்கம், குடியை மறந்தவர்களை மீண்டும் குடிக்காமல் இருக்க மது வாங்குவதை இறுக்கமாக்க வேண்டும், கடந்த 40 நாட்களில் குடியை மறந்தவர்கள் கட்டுப்பாடுகளை பார்த்து குடிப்பதை நிறுத்த வாய்ப்புண்டு, அதனை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்'' என்றார்.

இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் பூவண்ணன் கணபதியிடம் இதுப்பற்றி பேசியபோது, ""மது உடலுக்கு கெடுதிதான். இந்த 144 தடை உத்தரவால் மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்மி கேன்டீனில் வாங்குபவர்களிடம் கூடுதல் விலைக்கொடுத்து வாங்கி குடித்தவர்கள் உண்டு. அதுவும் கிடைக்காதவர்கள் சாராயம் குடித்தார்கள். குடிப்பவர்கள் உலகம் முழுவதும் இரண்டு வகைப்படுவர். ஒருவர் குடித்தே ஆகவேண்டும் என குடிப்பவர், மற்றொருவர் ஜாலிக் காக குடிப்பவர். குடித்தே ஆக வேண்டும் என குடிப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் குடித்து விடுகிறார்கள். ஒரு இடத்தில் மது கிடைக்கிறது எனும்போது, ஜாலிக்காக குடிப்பவர்களும் சாகசத்துக்காக அங்கு சென்று குடிப்பார்கள். அப்படி செல்லும்போது விபத்துக்கள் நடைபெறும், வழக்கு போன்றவை வரும். அதோடு மது கிடைக்கும் இடத்தில் இருந்து வாங்கி வந்து கிடைக்காத பகுதிகளில் ttகூடுதல் விலைக்கு விற்று, மதுக்கடத்தலில் ஈடுபடுவார்கள், இப்போது வேறெந்த வேலையும் இல்லை, குடும்பத்தின் பசியை போக்க வேண்டும் என்பதால் கவலை யில்லாமல் இறங்குவார்கள், கடந்த காலத்தில் இதற்கான சான்றுகள் பலவுள்ளன. இது சட்டத்துக்கு பெரும் சிக்கல்.

பூரண மதுவிலக்கு என்பது ஏமாற்றுத்தனம். பூரண மதுவிலக்கு உள்ள மாநிலமாக குஜராத்தை சொல்வார்கள். குஜராத்தில் ஊருக்கு ஊர் சாராயம் விற்பனை நடக்கிறது. சாராயம் விற்பதை அரசு தடுத்தபோது, விஷ சாராய மரணங்கள் அதிகரித் ததால், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. அந்த மாநிலத்தில் வாழும் மருத்துவர் ஒருவர் அனுமதி கடிதம் மூலம் மாதத்துக்கு இரண்டு புல் பாட்டில் வாங்கிக்கொள்ளலாம். வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அங்கு சென்று ஓட்டலில் தங்கினால் சுற்றுலா பயணி என்கிற கணக்கில் சாதாரண மாகவே மது வாங்கலாம். நான் குடிக்கமாட்டேன் என்றால் ஓட்டல் நிர்வாகமே சம்மந்தப்பட்ட வருடன் டீல் போட்டுக்கொண்டு வாங்கி வெளியே விற்கிறது. இங்கு ஏழை, பணக்காரன் எல்லாருமே குடிக்கிறார்கள். மது குடிப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்பது என்பது நீண்ட பயணம் கொண்டது. மதுவிலக்கு அமல்படுத்தும் முன் அந்த நீண்ட பயணத்தை அரசுகள் தொடங்க வேண்டும். அதோடு மது குடிப்பவர்களை குற்ற வாளிகள் போல் சித்தரிப்பது என்பது மாட்டுக்கறி உண்பவர்களை கொடியவர்கள் என சித்தரித் தார்களே அதுபோன்றதுதான். அதனால் டாஸ்மாக் கடை திறப்பு என்பது விவாதத் துக்குரியதல்ல'' என்றார்.

நீங்க ஏதாவது பேசிக்கிட்டு இருங்க நாங்க எங்க வேலையை பார்க்கிறோம் என மே 7ந்தேதி டாஸ்மாக் வாசலில் க்யூவில் நிற்க தொடங்கி விட்டார்கள் குடி மக்கள்.

- து.ராஜா

nkn090520
இதையும் படியுங்கள்
Subscribe