வெளிநாடுகளில் பெண்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை பரவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதில் மூன்றில் ஒரு பங்கு என இருந்த பெண்கள் விகிதம், இளம்பெண்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து, ஆண்களுக்கு சரிபாதி பெண்களும் பயன்படுத்துகிறார்கள் என்ற நிலைக்கு நெருங்கியுள்ளது. ஆரம்பத்தில் மது, சிகரெட் என்று பழகிக்கொண்டிருந்த படித்த, வசதி படைத்த இளம்பெண்கள், இன்று சர்வதேச போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் அரசாங்கம், அதை குடும்பப்பெண்கள் மத்தியில் கொண்டுசெல்லத் தவறி விட்டதோ என எண்ணுமளவுக்கு தற்போது குடும்பப் பெண்களும் சர்வதேசப் போதைப்பொருட்களின் போதைக்கு அடிமையாகி இருப்பது சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்திருப்பதன் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலுள்ள பிரபல கான்வென்ட் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் வகுப்பறையில் போதையில் இருந்ததைக் கண்டுபிடித்த ஆசிரியர், பெற்றோரை வரவழைத்து அந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவிகள் போதைக்கு மது அருந்தவில்லை என்றும், ஒரு வசதியான மாணவியின் தாயார் மறைத்து வைத்து அடிக்கடி பயன்படுத்திவந்த போதைப் பொருள
வெளிநாடுகளில் பெண்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை பரவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதில் மூன்றில் ஒரு பங்கு என இருந்த பெண்கள் விகிதம், இளம்பெண்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து, ஆண்களுக்கு சரிபாதி பெண்களும் பயன்படுத்துகிறார்கள் என்ற நிலைக்கு நெருங்கியுள்ளது. ஆரம்பத்தில் மது, சிகரெட் என்று பழகிக்கொண்டிருந்த படித்த, வசதி படைத்த இளம்பெண்கள், இன்று சர்வதேச போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் அரசாங்கம், அதை குடும்பப்பெண்கள் மத்தியில் கொண்டுசெல்லத் தவறி விட்டதோ என எண்ணுமளவுக்கு தற்போது குடும்பப் பெண்களும் சர்வதேசப் போதைப்பொருட்களின் போதைக்கு அடிமையாகி இருப்பது சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்திருப்பதன் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலுள்ள பிரபல கான்வென்ட் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் வகுப்பறையில் போதையில் இருந்ததைக் கண்டுபிடித்த ஆசிரியர், பெற்றோரை வரவழைத்து அந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவிகள் போதைக்கு மது அருந்தவில்லை என்றும், ஒரு வசதியான மாணவியின் தாயார் மறைத்து வைத்து அடிக்கடி பயன்படுத்திவந்த போதைப் பொருளை அந்த மாணவி எடுத்துவந்து சக மாணவிகளுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில்தான் திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி. சுதர்ஷன் தலைமையிலான டீம், கடந்த 12ஆம் தேதி குமரி மாவட்ட எல்லையான பாறசாலை பைபாஸ் ரோட்டில் வைத்து சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு டைய திருவனந்தபுரம் பீமாபள்ளி காசிம், பூந்துறை ஷதாஹித் அலி, கல்லம்பலம் ரியாத் ஆகிய 3 பேரை சினிமா பட பாணியில் காரில் துரத்திச் சென்று துப்பாக்கிமுனையில் பிடித்தனர். அவர்களிடமிருந்து பெண்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய 3.5 கிலோ ஓபியாய்டு போதைப் பொருட்களையும், 2 கார்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போதைப்பொருளை கன்னியாகுமரியைச் சேர்ந்த ஏஜெண்டுகள் அசோக் மற்றும் ஷாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கக் கொண்டு செல்லும்போது தான் கொச்சி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவிடமிருந்து வந்த தகவலையடுத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், களக்கூட்டத்தில் வைத்து கேரளா மற்றும் கர்நாடகா பதிவெண் கொண்ட இரண்டு கார்களை சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அந்த இரண்டு கார்களும் சோதனையை மீறி அதிகாலை 6 மணிக்கு பைபாஸில் பறந்தன. உடனே போலீசாரும் 4 வாகனங்களில் பின்தொடர்ந்து விரட்டினார்கள். சுமார் 40 கி.மீ. தூரம் சினிமா பட பாணியில் கடத்தல்காரர்களைப் பிடிக்க நடந்த ரேஸில், பைலிபாஸ் ரோடு முடிகிற குமரி எல்லையான பாறசாலையில் தடுப்புக் கற்களை வைத்து கடத்தல்காரர்களை மடக்கியது போலீஸ்.
இந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து ரூரல் எஸ்.பி. சுதர்ஷன் தலைமையிலான டீமிடம் நாம் விசாரித்தபோது, "பிடிபட்ட 3 பேரும் சர்வதேச அளவில் ஓபியாய்டு போதைப்பொருள் சப்ளை செய்யும் நெட்வொர்க்கின் ஏஜெண்டுகள். இவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்கள் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களின்படி இந்த நெட்வொர்க்கிற்கு இந்தியாவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். சர்வதேச அளவில் இந்த கும்பலை ஆப்கானிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து இயக்குகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மிசோரம், மணிப்பூர் வழியாக ஓபியாய்டு எனும் போதைப்பொருள் இந்தியாவிலுள்ள ஏஜெண்டின் கைக்கு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் சப்ளையில் இருந்த இந்த போதைப்பொருள் தற்போது தென் மாநிலங்களிலும் வேகமாகப் பரவிவருகிறது.
குறிப்பாக, கேரளாவில் திருவனந்தபுரம், கோவளம், கொல்லம், கொச்சி, எர்ணாகுளம், கண்ணூர் போன்ற பகுதிகளிலும், அதேபோல் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலும் இந்த போதைப்பொருளை பதுக்கிவைத்து சப்ளை செய்கிறார்கள். இந்த ஓபியாய்டு போதைப் பொருளை அதிகமாகப் பெண்களைக் குறிவைத்துதான் விற்பனை செய்துவருகிறார்கள். வெளிநாடுகளில் பெண்கள் பயன்படுத்துவது போல் இங்கு நட்சத்திர விடுதிகளில் வந்து தங்கும் பெண்கள், பெரிய கிளப்புகளில் உறுப்பினராக இருக்கும் பெண்கள், சினிமா நடிகைகள், தனிமையில் இருக்கும் வசதியான குடும்பப் பெண்கள், அதேபோல் விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவிகள், ஐ.டி. போன்ற பெரிய நிறுவனங்களில் இரவுபகலாக வேலை செய்யும் பெண்கள் என பலதரப்பட்ட பெண்களும் இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.
பிடிபட்ட ஷதாஹித் அலி, ரியாத், காசிம் ஆகிய 3 பேரும் தென் மாநிலத்தில் முக்கிய ஏஜெண்ட்டுகள். இதில் காசிம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து போதைப்பொருட்களை சப்ளை செய்துவிட்டுச் செல்வான். கன்னியாகுமரி அசோக், ஷாஜி இருவரும் காசிமிடம் மட்டும்தான் நேரில் தொடர்புள்ளவர்கள். கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலம் என்பதால் அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் ஓபியாய்டு போதைப்பொருள் சப்ளை கண்டிப் பாக இருக்கும்.
தற்போது பிடிபட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், காசிமுக்கு பெங்களூரில் 2 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களை கஸ்டடியில் எடுத்து இந்தியாவிலுள்ள அவர்களின் நெட் வொர்க்கை அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து செயல்பட்டு ஒட்டுமொத்த கும்பலை யும் சுற்றிவளைத்துக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்றனர்.
இந்த ஓபியாய்டு போதைப்பொருளைப் பயன்படுத்துவதன் விளைவு குறித்து மருந்து ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “"பெண்கள் இன்றைக்கு படித்து முடித்து பல்வேறு பணி களுக்கு செல்கிறார்கள். பல்வேறு புராஜெக்ட்டு களை செயல்படுத்துகிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்களும்கூட நிறைய விஷயங்களைக் கையாளுகிறார்கள். இவர்கள் தினமும் பல்வேறு பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளக் கூடிய கட்டாயத்தில் உள்ளனர். தனிமையில் வசிக்கக்கூடிய பெண்களும் சரி, குடும்பத்தோடு வாழும் பெண்களாக இருந்தாலும் சரி, பணிக்கு செல்லக்கூடிய பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், தனக்கு முன் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பதற்கும் போதைப் பொருளுக்கு அடிமையாகிறார்கள்.
சிலர் தங்களின் உணர்வுகளைத் தூண்டுவதற் கும், உற்சாகத்துக்கு ஊக்கம் கொடுப்பதற்காகவும் போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டையும் செய்யக்கூடிய தன்மை கொண்ட செயற்கையான ஓபியாய்டு போதைப் பொருள் எம்.டி.எம்.ஏ.வுக்கு நிகரான போதையை சைலன்டாக சுமார் 5 மணி நேரம் ஏற்படுத்தக் கூடியது. இது மாத்திரை மற்றும் பவுடராகவும் ஸ்பிரேயாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதை அதிகம் பயன்படுத்தும் பெண்களுக்கு கர்ப்பம்தரித்தலில் பிரச்சினை ஏற்படுவதோடு, இதயக்கோளாறு போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். இதெல்லாம் தெரிந்தும் மற்ற பெண்களைப் போன்று மருத்துவக் கல்லூரி மாணவிகளும் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த போதைப்பொருளின் மொத்த நெட்வொர்க்கை யும் இந்தியாவில் அழித்தே தீரவேண்டும்''’ என்றனர்.
பொதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்களைத் தாண்டி, மாணவர்கள் மத்தியில் பரவி, தற்போது மாணவிகள், குடும்பத் தலைவிகள் என பெண்கள் மத்தியிலும் அதிகரித்திருப்பது, மிகவேகமாக போதைப் பொருள் பயன்பாடு பரவும் அபாயத்தையே வெளிக்காட்டுகிறது.