தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக் கிறார் என்ற பேச்சு எதிரொலித்தபடி இருந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை மாற்றிவிட்டு, நாகாலாந்து கவர்னர் ரவீந்திர நாராயண ரவியை தமிழகத்திற்கு நியமித்திருக்கிறது ஒன்றிய அரசு. பன்வாரிலாலுக்கு இன்னும் ஒரு வருடம் பதவிக் காலம் இருக்கும் நிலையில் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார் அவர்.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஓய்வுபெற்ற அரசின் உயரதிகாரிகளை, சர்ச்சைக்குரிய நபர்களை ஆளுநராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஒன்றிய அரசின் சமீபகால வழக்கம். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியை நியமித்து கடந்த கால நாராயணசாமி ஆட்சிக்கு ஏக குடைச்சலைக் கொடுத்தவர் பிரதமர் மோடி. அதேபோல, யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேலின் ஆட்டத்திற்கு எதிராக மக்களே கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அதே பாணியில் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த ஆர்.என்.ரவியின் அட்டகாசத்துக்கு எதிராக விடுதலைப் போராட்ட இயங்கங்களும், ஆளும் பா.ஜ.க. அரசும் அவரை நாகாலாந்திலிருந்து துரத்தி யடித்ததில், தமிழகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆர்.என்.ரவியும், பன்வாரி லால் புரோஹித்தும் பரஸ்பரம் கவர்னர் மாளிகையை காலி செய்வதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி கவனிக்க வேண்டிய அசைன் மெண்டுகள் குறித்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் பாடம் எடுத்திருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல். புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஓ
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக் கிறார் என்ற பேச்சு எதிரொலித்தபடி இருந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை மாற்றிவிட்டு, நாகாலாந்து கவர்னர் ரவீந்திர நாராயண ரவியை தமிழகத்திற்கு நியமித்திருக்கிறது ஒன்றிய அரசு. பன்வாரிலாலுக்கு இன்னும் ஒரு வருடம் பதவிக் காலம் இருக்கும் நிலையில் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார் அவர்.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஓய்வுபெற்ற அரசின் உயரதிகாரிகளை, சர்ச்சைக்குரிய நபர்களை ஆளுநராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஒன்றிய அரசின் சமீபகால வழக்கம். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியை நியமித்து கடந்த கால நாராயணசாமி ஆட்சிக்கு ஏக குடைச்சலைக் கொடுத்தவர் பிரதமர் மோடி. அதேபோல, யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேலின் ஆட்டத்திற்கு எதிராக மக்களே கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அதே பாணியில் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த ஆர்.என்.ரவியின் அட்டகாசத்துக்கு எதிராக விடுதலைப் போராட்ட இயங்கங்களும், ஆளும் பா.ஜ.க. அரசும் அவரை நாகாலாந்திலிருந்து துரத்தி யடித்ததில், தமிழகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆர்.என்.ரவியும், பன்வாரி லால் புரோஹித்தும் பரஸ்பரம் கவர்னர் மாளிகையை காலி செய்வதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி கவனிக்க வேண்டிய அசைன் மெண்டுகள் குறித்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் பாடம் எடுத்திருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல். புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், அவர் கடந்து வந்த பணிகளோடு முடிச்சுப் போட்டு, ஆளுநரை வைத்து தமிழ்நாட்டில் என்ன விளையாட்டை மோடியும் அமித்ஷாவும் விளையாடப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
யார் இந்த ரவீந்திர நாராயண ரவி? அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்ன? என்பது குறித்து பா.ஜ.க. மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரிகள், "பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என்.ரவி அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தில் ஊறிப்போனவர். காவல்துறைப் பணிக்காக 1976-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கேரள கேடர் ஐ.பி. எஸ்.ஸாக நியமிக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பிரதமர் மோடியின் நண்பராகவும் உள்ள அஜீத்தோவலும் கேரள கேடர் அதிகாரிதான். அஜீத் தோவலின் கீழ் பணிபுரிந்த ஆர்.என்.ரவி, அப்போதே அஜீத் தோவலின் சிஷ்யராக வளைய வந்தவர்.
மத்திய உளவுத்துறையான ஐ.பி.யின் இயக்குநராக பணிபுரிந்து 2005-ல் ஓய்வு பெற்றார் அஜீத் தோவல். உளவுத்துறையில் அவர் பணி புரிந்த காலத்தில் தனது சிஷ்யரான ஆர்.என். ரவியை மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ள அப்போதைய காங்கிரஸ் அரசின் பிரதமரான மன்மோகன்சிங்கிடம் சிபாரிசு செய்தார் அஜீத் தோவல். அதன்படி கேரளாவி லிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆர்.என் ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யில் நியமிக்கப்பட்டார்.
அஜீத் தோவல் உளவுத்துறையில் இருந்தாலும், சி.பி.ஐ.யில் இருந்த தனது சிஷ்யர் ஆர்.என்.ரவி யிடம் பல முக்கிய அசைன்மெண்டுகள் கொடுக் கப்பட வழி வகுத்தார். அந்த அசைன்மெண்டு களால் ரவியின் பெயர் உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராகவும் நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, 2012-ல் ஓய்வு பெற்றார்.
2014-ல் பிரதமரான மோடி, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை ஆட்சி அதிகாரத்துக்குள் கொண்டுவர திட்டமிட்டு, அஜீத் தோவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து புலனாய்வு அமைப்புகளான ரா, சி.பி.ஐ., ஐ.பி. உள்ளிட்ட அமைப்புகளில் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் நியமனம் அதிகரித்தது. குறிப்பாக, ஓய்வுபெற்ற தனது சிஷ்யர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த கூட்டு உளவுத்துறை அதிகாரியாக கொண்டு வந்தார் அஜீத் தோவல். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ரவியை கொண்டுவந்தார்.
அப்போது வடகிழக்கு மாநிலமான நாகா லாந்தில் விடுதலை போராட்ட இயக்கங்களின் தனி நாடு (நாகாலிம்) கோரிக்கை உச்சத்தில் இருந்தது. ஏற்கனவே, ஐசக் மொய்வா தலைமையிலான நேசனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்த் எனும் விடுதலைப் போராட்ட இயக்கம் மற்றும் பல்வேறு இயக்கங்களுடனும் ஒன்றிய அரசு ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தால் ஆயுதப் போராட்டம் வடகிழக்கில் தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. அவர்களிடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும், முடிவு எட்டப்படாமலேயே இழுபறியில் இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு இறுதி வடிவம் கொடுக்க ஒன்றிய அரசு சார்பில் நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.
பேச்சுவார்த்தையில் தற்காலிக ஏற்பாடாக சில உடன்பாடுகளில் கையெழுத்திட்டார் ரவி. ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி, ஒன்றிய அரசும் ரவியும் செயல்படாமல் ஏமாற்றிவிட்டனர் என்றும், குறிப்பிட்ட குழுவுக்கு ஆதரவாக இருந்து பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறார் என்றும் பல குற்றச்சாட்டுகளை எழுப்பின போராட்ட இயக்கங்கள். இதனால் ஆத்திரமடைந்த அவர், போராட்ட இயக்கங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனால் கோபமான இயக்கங்கள், ரவியை வெளியேற்றினால் மட்டுமே ஒப்பந்தத்தைத் தொடரமுடியும் என போர்க்கொடி உயர்த்தின.
இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத மோடி, பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து ரவியை நீக்கினார். போராட்ட இயக்கங்கள் சந்தோசமடைந் தன. ஆனால், மறுநாளே நாகாலாந்தின் கவர்ன ராக ஆர்.என்.ரவியை நியமித்து இயக்கங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார் மோடி ஆனால், ரவியின் பேச்சும் செயல்பாடுகளும் நாகாலாந்தின் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கே தலைவலியைக் கொடுத்தது. மேலும், அரசு பங்களாக்களை காலி செய்ய மறுத்த விவகாரமும் இவருக்கு எதிரான சர்ச்சைகளை ஏற்படுத்தின.
சமீபகாலமாக, நாகாலாந்து மக்களை இந்திய விடுதலை போராட்டத்துடன் இணைத்துப் பேசிவரும் ரவியின் கருத்தை கண்டித்த நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு, நாங்கள் தனித்த தேசிய அடையாளத்தைக் கொண்டவர்கள்; இந்திய ஒன்றியத்துக்குள் எங்களை இணைக்கும் வேலையை செய்யாதீர்கள் என போர்க்குரல்கள் உயர்த்தியது. இதற்கு ஆதரவு பெருகியது. இப்படி தொடர்ச்சியாக ரவிக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்த நிலையில் தான் தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.என்.ரவி'' என்று விரிவாக அவரது பின்னணிகளைச் சுட்டிக்காட்டி னார்கள்.
சி.பி.ஐ.யில் பணிபுரிந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் நாம் பேசியபோது,”"மாநில உரிமைகள் என்ற பேரில் ஒன்றிய அரசுடன் பல்வேறு விசயங்களில் முரண்பட்டு நிற்கிறது தி.மு.க. அரசு. அது, மோடி அரசுக்கு பல விதங்களில் நெருக்கடியை ஏற்படுத்துகின்றது. மேலும், 2024 தேர்தலில் பா.ஜ.க. அரசை வீழ்த்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இப்போதே எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தி.மு.க.வின் பங்களிப்பு அதிகமிருக்கும். இவைகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, மோடியும் அமித்ஷாவும் கூட ரசிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
அதனால் தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொள்ள திட்டமிட்டே ரவியை களமிறக்கியுள்ளனர். மேலும், உளவு அமைப்புகளில் பணிபுரிந்தவர் என்பதால் ஆயுதப் போராட்டக் குழுக்களோடு ரவிக்கு நிறைய தொடர்புண்டு. இத்தகைய பின்னணிகள் தி.மு.க. அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அதற்கான அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
இதற்கிடையே சீனாவின் ஆதிக்க ஊடுருவல் இலங்கை வழியாக தென்னிந்திய கடற்பகுதியில் அதிகரித்து வருவதால் அதனை கண்காணிக்கும் அசைன்மெண்ட்டும் ரவியிடம் கொடுக்கப்பட்டி ருப்பதாக தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் புதிய ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்'' என்கிறார்கள்.
தி.மு.க.வின் மூத்த எம்.பி. ஒருவரிடம் பேசியபோது,’பொதுவாக, "ஆளுநர் நியமனம் என்பதெல்லாம் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. முந்தைய ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி வலிமையான முதல்வராக இல்லை. அதனால், கவர்னரை வைத்து ஆடிப் பார்த்தார் மோடி. அதேபோல புதுச்சேரியிலும் ஆடினார்கள். இதனால் மோடியின் ஆளுநர் நியமனம் பரபரப்பாக தெரிந்தது. தி.மு.க. ஆட்சியில் ஆளுநர் பாட்சா பலிக்காது. அவரை எந்த இடத்தில் வைக்கணு மோ அங்கு வைத்து அவரை எதிர்கொள்ளும் துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. இனி அதனைப் பார்க்கத் தானே போகிறீர்கள்''’என்கிறார் மிக அழுத்தமாக.