அ.தி.மு.க.வில் சசிகலா என்ன செய்வார் என்கிற கேள்வி வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அதன் எதிர்வினை, அ.தி.மு.க. இரண்டாக உடையுமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆபரேஷன் ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்., எடப்பாடியை விட பலவீனமானவர். தர்மயுத்தத்தின்போது அவருடன் வந்தவர்களைத் தொடர்ந்து அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. எடப்பாடியை ஓ.பி.எஸ்.ஸுடன் சேர்ந்து கடுமையாக எதிர்த்த செம்மலை, கே.பி.முனுசாமி போன்றவர்களைக் கூட அவரால் தக்க வைக்க முடியவில்லை. தர்மயுத்தம் பெயிலியர் ஆனதால் பா.ஜ.க. அவருக்கு ஆதரவு தருவதை வாபஸ் பெற்றுக்கொண்டது. இனி ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்காது என எடப்பாடி சொல்லிவந்தார். ஆனால் அவரை சசிகலா வித்தியாசமாக கையாளத் தொடங்கினார். எடப்பாடிக்கு எதிராக சசிகலா என்கிற நிலையை ஓ.பி.எஸ். எடுக்கத் தொடங்கினார். தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை சசிக்கு ஆதரவாக பேச வைத்தார். ஆறுமுகசாமி கமிஷனில் சசி மீது மரியாதை வைத்திருப்பதாக சாட்சியம் அளித்தார். இதை எடப்பாடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பா.ஜ.க.வும் ஓ.பி.எஸ்.ஸின் சசிகலா ஆதரவு நிலைக்கு எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை.
தனது தம்பி ராஜா மற்றும் மகன்கள் மூலம் முழுமையான சசிகலா ஆதரவு நிலையை எடுத்து ஓ.பி.எஸ். நகரத் தொடங்கியுள்ளார். எடப்பாடியின் வெளிப்படையான சசிகலா எதிர்ப்பு நிலைக்கு எதிரான ஓ.பி.எஸ்.ஸின் சசிகலா ஆதரவு நிலையை எதிர்த்து எடப்பாடியால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
கட்சித் தேர்தல்
ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கோஷம் உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வில் வலுப்பெறத் தொடங்கியது. அந்த கோஷத்தை உருவாக்கியதே எடப்பாடிதான். அந்த ஒற்றைத் தலைமை நான்தான் என்கிறார் எடப்பாடி. எடப்பாடி இல்லை சசிகலா என்கிறார் ஓ.பி.எஸ். இந்த நேரத்தில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி கட்சித் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் வந்தது. அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் முயன்றுவருகிறார்கள். பல மாவட்டங்களில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களது ஆதரவாளர்களை பதவிக்கு கொண்டுவர முயல்கிறார்கள். 75 மாவட்டங்களில் 63 மாவட்டங்கள் எடப்பாடியை ஆதரிக்கின் றன. 12 மாவட்டங்கள் ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்கின்றன. சென்னை மாவட்டத்தில் உள்ள மா.செ.க்கள் ஓ.பி.எஸ்.ஸுடன் சேர்ந்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர் என்கிற புகார் எழுந்துள் ளது. மற்ற மாவட்டங்களில் பழையவர்கள் அதே பதவியில் நீடிக்கிறார்கள். அவர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கள் என்பதால் அந்த தேர்தலை ஏற்று உத்தரவு போடும் இடத்தில் உள்ள ஓ.பி.எஸ். கையெழுத்திட மறுத்துவிட்டார்.
மாநில ஆதரவு நிலை
தர்ம யுத்தத்தின்போது எடப்பாடி பக்கம் நின்ற பலர், தற்பொழுது ஓ.பி.எஸ். பக்கம் நிற்கிறார்கள். ஓ.பி.எஸ்.ஸை எதிர்க் கும்போது சசிகலா ஆதரவுடன் நின்ற எடப்பாடிக்கு நேரெதிராக சசி ஆதரவுடன் எடப்பாடியை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்க்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் இணைந் திருப்பவர்களில் முதலிடம் பெறுபவர்கள் செங்கோட்டையன், வைத்திலிங்கம் போன்றவர்கள். மா.பா. பாண்டியராஜன் வெளியேறியதால், சசிகலாவால் மறுபடி யும் மந்திரி பதவியை பெற்ற செங்கோட் டையன், கவுண்டர் இனத்தில் தனக்கு சிஷ்யனாக இருந்து வளர்ந்த எடப்பாடியை எதிர்க்கிறார். முழுக்க சசி ஆதரவாளராக ஓ.பி.எஸ். பாணியில் மாறிவிட்டார் வைத்திலிங்கம். இனி எடப்பாடியிடம் இருப்பதை விட சசிதான் பெஸ்ட் என சாதி ரீதியில் முடிவெடுத்துவிட்டனர். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் என தென் மாவட்ட அமைச்சர்கள் அனை வரும் சசிகலாவின் பின் அணிவகுக்கிறார்கள். தென்மாவட் டம் மட்டும் போதாது, மத்திய மாவட்டங்கள் வேண்டும் என எண்ணிய சசிகலா, வன்னிய அமைச்சர்களையும் தன் வழிக்கு கொண்டுவர அவரே நேரடியாக தொலைபேசியில் பேசிவருகிறார் என்கிறார்கள அ.தி.மு.க.வினர்.
சமரச முயற்சிகள்
சசிக்கு எதிராக குரல் கொடுப்பதையே தொழிலாகக் கொண்ட ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வாய் திறக்கவில்லை. அவர்கள் அனைவரும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி குறித்து சசிகலா தொடர்ந்திருக்கும் வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அதில் தீர்ப்பு எப்படி வந்தாலும் சசிகலா, அ.தி.மு.க.வில் தனது பலத்தை அதிகரிக் கும் ஆபரேஷனில் தீவிரமாக இருக்கிறார். இந்த மோதலில் எடப்பாடியை வெற்றிகொள்கிற சசியின் தூதுவர்கள் எடப்பாடியுடன் பேசுகிறார்கள். நீங்களும் சசியை ஏற்றுக்கொள்ளுங்கள் என பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சசிகலா ஆதரவாளர்கள் மீடியாக்களில் பேசி வருகிறார்கள். எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் கையெழுத்து போடும் அதிகாரம் இருப்பதால் தற்பொழுது சமரசம் செய்துகொள்ள தலைமைக் கழகத்தில் கூட்டம் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் எடப்பாடியின் ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓ.பி.எஸ்., சசி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த கூட்டம் முடிவெடுக்க முடியாமல் கலைந்தது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
ஓ.பி.எஸ். நீக்கம்
அடுத்து தனது ஆதரவாளர்களை ஒன்றாகத் திரட்டி "நான்தான் கட்சி என ஓ.பி.எஸ்.ஸை நீக்க எடப்பாடி முயற்சி செய்வார்' என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். அதற்கு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். ஆனால் ஓ.பி.எஸ். சம்மதிக்கமாட்டார். ஓ.பி.எஸ்.ஸை மீறி பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றால் கட்சி இரண்டாக உடைந்துவிடும். அதற்கு சசிகலா தயாராக இருக்கிறார். சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் அவர் பின்னே இருக்கிறார்கள் என வெளிப்படையாக எடப்பாடி ஆதரவாளர்களே ஒத்துக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் பா.ஜ.க. என்ன நிலை எடுக்கும்? கட்சி உடைந்தால் இ.பி.எஸ்.ஸை. பா.ஜ.க. ஆதரிக்குமா? தேர்தல் கமிஷனில் இ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு கிடைக்குமா? இரட்டை இலை முடக்கப்படுமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளால்... அடுத்து என்ன என 20 ல 20 போட்டியின் பைனல் ஓவர் பார்வையாளர் களாக அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.