""ஹலோ தலைவரே, பா.ஜ.க., கர்நாடகாவில் தீவிரமா கவனம் செலுத்தியிருந்தாலும் அதன் பார்வை தமிழ்நாட்டிலும் ஊடுருவியிருக்கு.''’
""இங்கேயும் ஆட்சி மாற்றமா?''’
""ஆட்சி மாற்றத்துக்கு அவசரப்படலை. ஆனா, தமிழ்நாட்டில் தங்களுக்கு எப்படியாவது மக்கள் பிரதிநிதித்துவம் வேணும்ங்கிறதுதான் பா.ஜ.க. வியூகம். அதற்கான செயல்பாட்டுக்குப் பேரு ஆபரேசன் தாமரையாம். ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே ஆட்சிங்கிற பாலிஸியைக் கொஞ்சம் கொஞ்சமா செயல்படுத்தப் பார்க்குது பா.ஜ.க. முதற்கட்டமா பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை மாநில வாரியா வீழ்த்திட்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் பா.ஜ.க. குடைக்குள் கொண்டு வரணும்ங்கிறதுதான் பிரதமர் மோடி -கட்சித் தலைவர் அமித்ஷாவின் திட்டமாம். அதுக்காக ஜனநாயகத்துக்கு எதிரான சூதாட்டத்தை மோடி தரப்பு தொடங்கிடிச்சி. அதன் எதிரொலியா அரசியல் குழப்பங்களும் ஆரம்பிச்சிடிச்சி.''’
""ஒரு கட்சியில் இருந்து ஜெயிச்சி வர்ற எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ, அதுக்கு எதிரான கட்சிகளிடம் விலைபோயிடக் கூடாதுன்னுதான் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுச்சு. இருந்தும் எம்.எல்.ஏ.க்களையும் எம்.பி.க்களையும் பர்ச்சேஸ் செய்து ஜனநாயகத்தைக் கேலிக்குரியதா ஆக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க. அரசே இறங்குறது ரொம்பவும் ஆபத்தானது. ஆனால் எல்லா மாநிலத்திலும் இதே வேலையைத்தான் பார்க்குது.''’
""உண்மைதாங்க தலைவரே, அரசியலமைப்புச் சட்டத்தின் 91 ஆவது சட்டத் திருத்தத்தின் படி ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப் பினர்கள் பிரிந்தால், அது அந்தக் கட்சியின் பிளவாகக் கருதப்பட்டு, அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. இதைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கிட்டு, எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் தங்கள் வசம் கொண்டுவர முயற்சி செய்யுது பா.ஜ.க. அதன்படி கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸுடன் இணைந்து மதச்சார்பற்ற ஜனதாதளம் அமைத்திருக்கும் ஆட்சியைக் கவிழ்க்க, அந்த இரு கட்சிகளில் இருந்தும் ஏறத்தாழ 16 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தன்பக்கம் இழுத்திருக்கு. மேலும் சிலரை இழுத்து, ஆட்சியைத் தன் கையில் எடுத்துக்க பா.ஜ.க. துடியாய்த் துடிக்கிது. அதேபோல் கோவாவிலும் மூன்றில் இரண்டு பங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் கொண்டு வந்தது. அதே பாணியில் தமிழகத்தில் இருக் கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பக்கமும் பா.ஜ.க.வின் பார்வை திரும்பி இருக்குதாம்.''’
""தமிழக அரசியல் சூழலில் அது நடக்குமா?''’
""இங்கிருக்கும் 8 காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களில் 6 பேரை தங்கள் பக்கம் இழுத்து தமிழக காங்கிரஸை பலவீனப்படுத்தணும்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. இதன் மூலம் சட்டசபையில் தங்கள் குரலை எழுப்பலாம் என்பதோடு, அ.தி.மு.க. அமைச்சரவையிலும் பங்கெடுக்கலாம்ன்னு பா.ஜ.க. நினைக்கிறது. அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களோடு டீலிங் பேசுது. அவங்களுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தர்றதாவும் ஆசை காட்டுது. இதனால் இப்பவே மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கம் தாவ ரெடியாயிட்டாங்களாம். இன்னும் மூணு பேரை வளைச்சதும் பா.ஜ.க.வின் பவர் ஆட்டம் இங்க ஆரம்பிக்குமாம். இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் ஜரூரா களமிறங்கி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்களாம். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்ட சபைக்குள் நுழைய முடியுமான்னு பா.ஜ.க. பகீரதப் பிரயத்தனங்கள்ல இறங்கியிருக்கு.''’
""தி.மு.க. சைடில், கடந்த சில நாட்களாக அறிவாலயத்தை விட இளைஞரணித் தலைமையகமான அன்பகத்தில் கூடுதல் பரபரப்பு தெரியுதே?''’
""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க இளைஞரணிச் செய லாளரா நியமிக்கப்பட்ட உதயநிதி, தொடர்ந்து அன்பகத் துக்கு வர்றார். அவரை வாழ்த்தி மகிழ, தமிழகம் முழுக்க இருந்தும் இளைஞரணி நிர்வாகிகள் படை யெடுத்து வர்றாங்க. இளைஞரணி யினர் மட்டுமல்லாது கட்சியின் அனைத்து அணிகளையும் சார்ந்த பொறுப் பாளர்களும் உதயநிதியை சந்திக்க ணும்னு மேலே இருந்து உத்தரவு போனதால், மாவட்டங்களின் நிர்வாகி களும் அன்பகத்தை முற்றுகையிடறாங்க. கட்சி யில் எத்தனையோ அணி கள் இருந்தும் இளைஞ ரணிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தா எப்படி? மற்ற அணி களையும் பலப்படுத்தி னால்தானே கட்சியின் வாக்கு வங்கி பரவலா ஸ்ட்ராங் ஆகும்ன்னு சீனியர்கள் தரப்பில் இருந்து முணுமுணுப்பும் கேட்குது. அவங்க தரப்பில் அதிர்ச்சி தெரியுது. இருந்தாலும் உதயநிதியின் அப்ரோச் இளைஞர்களை ரொம் பவே கவருது. அங்கங்கே உள்ள கட்சியின் நிலவரம் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களிடம் உதயநிதி விவாதிக்கிறாராம். பொறுப்புக்கு வந்த வேகத் திலேயே, ஆக்ஷனையும் ஆரம்பிச்சிட்டாரு. சரி யாகச் செயல்படலைங்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் இளைஞ ரணியின் நாகை மாவட்ட அமைப்பாளர் ராம்குமாரைத் தூக்கிவிட்டு, திருக்குவளை மலர்வண்ணனையும், மதுரை மாவட்ட அமைப்பாளர் பாலாஜி யைத் தூக்கிவிட்டு மதன் குமாரையும் நியமிச்சிருக்கார் உதயநிதி. அவருடைய இந்த அதிரடி ஆக்ஷன்கள் மேலும் தொடரணும்ங்கிற எதிர்பார்ப்பு இளைஞரணியினர் மத்தியில் அதிகமாவே இருக்கு.''’
""தினகரன் சைடில் சைலண்ட் கடைப்பிடிக்கப்படுதே?’வேலூர் எம்.பி. தேர்தலிலும் அ.ம.மு.க. போட்டியிடலையே?''
""தேர்தல் தோல்வியில் இருந்து தினகரன் இன்னும் எழுந்துவரலை. அதோட தனது தொடர் சங்கடங்களுக்கு, இப்ப இருக்கும் அடையாறு வீட்டின் வாஸ்து கோளாறுதான் காரணம்ன்னு அவர் நினைக்கிறாராம். அதனால் கொஞ்சநாள் புதுவையில் போய் ஸ்டே பண்ணலாமாங்கிற யோசனை அவருக்கு வந்திருக்காம். இந்த நிலையில் அவர் கூடாரத்தில் இருக்கும் திருச்சி மனோகரன் அ.தி.மு.க. பக்கமும், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தி.மு.க. பக்கமும் தாவப் போறதா வந்த தகவலால், தினகரன் மேலும் நொந்து போயிட்டாராம்.''’
""தமிழகத்திலிருந்து 6 பேர் ராஜ்யசபா எம்.பி. ஆகியிருக்காங்க. மத்திய மந்திரி ஆசையும் அதிகமாகியிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் முடிஞ்சதும், அமைச்சரவை விரிவாக்கத்தைச் செய்யப்போறாராம் மோடி. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ராஜ்யசபாவுக்குப் போகும் பா.ம.க. அன்புமணி எப்படியும் மத்திய அமைச்ச ரவையில் இடம்பெற்றே ஆகணும்னு விரும்பறாராம். டெல்லியில் மோடியிடமும் அமித்ஷாவிடமும் வாழ்த்துப்பெறும் போது, மந்திரி பதவி குறித்த தன் கோரிக்கையை அவர்களிடம் அழுத்தமாக வைக்கத் திட்டமிட்டிருக் காராம் அன்புமணி. அதேபோல் அ.தி.மு.க. விலிருந்து ’ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கும் அ.தி.மு.க.வின் சீனியர் களில் ஒருவரான வைத்திலிங்கத்துக்கும் தூங்குனாலே மந்திரியாகுற மாதிரி கனவு வருதாம்.''’
""அ.தி.மு.க. பக்கம் சலசலப்பு அதிகமா கேட் குதே?''
""ஆமாங்க தலைவரே, ஆளும்கட்சி எம்.எல். ஏ.வான தி.நகர் சத்யா, கட்சிப் பதவிகளில் இருந் தவர்களை நீக்கிட்டு, தன் ஆட்களைப் பதவியில் உட்காரவச்சது பத்தியும், அவருக்கு எதிரா நடக்கும் போராட்டம் பத்தியும் போனமுறை நாம் பேசிக்கிட்டோம். இப்ப கே.பி.முனுசாமியை விட்டு, சத்யா மீதான புகாரை விசாரிக்கச் சொல்லியிருக்காராம் எடப்பாடி. அதேபோல் கட்சி ரீதியாக மேலும் ஒரு மாவட்டத்தை சென்னையில் உருவாக்கி, அதில் கட்சிப் பிரமுகர்களுக்குப் பதவி கொடுக்கும் ஆலோசனையிலும் இருக்காராம்.''
""ம்...''
""சமீபத்தில் மதுரையில் ரௌடீசம் வளர்ந்திருப்பது பற்றி நமது நக்கீரனில் வந்த ஒரு ரிப்போர்ட்டில், வரிச்சூர் செல்வம் பேரும் இருந்தது. தன் முரட்டுத்தனங்களை எல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு வரிச்சூர் செல்வம் அமைதியாக ஒதுங்கி வாழும் நிலையில், அவரது பழைய விரோதிகள் தன் பெயரை இழுத்து விடுறாங்கன்னு அவர் தரப்பில் சொல்றாங்க. போலீஸ் ஏரியாவிலும் அதைத்தான் சொல்றாங்க.''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சண்முகம் பொறுப்பேற்று ரெண்டு வாரத்துக்கு மேல் ஆகியும், பழைய தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் தினமும் கோட்டைக்கு வர்றாராம். ஏன்னு கேட்டா நான் பெண்டிங் வச்சிட்டுபோன கோப்புகள் பத்தி, சந்தேகம் எழுப்புறவங்களுக்கு தெளிவுபடுத்தத்தான் வந்துகிட்டு இருக்கேன்னு சொல்றாராம்... நம்பிட்டோம்.''’