Advertisment

ஆபரேஷன் மின்னல்! ராக்கெட் ராஜா அரெஸ்ட் பரபரப்பு!

ff

ராக்கெட் ராஜா, ஒரு காலகட்டத்தில் தாட்டியமாக வலம் வந்தவர். கராத்தே செல்வினின் கூட்டாளியும் வலதுகையு மாகச் செயல்பட்டவர். நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை பக்கமுள்ள ஆனைகுடியைச் சேர்ந்தவர். ஆறுமுகப்பாண்டியன் என்கிற பாலவிவேகானந்தன் என்பது இவரது பெயர். கராத்தே செல்வினின் கூட்டாளியாகச் செயல்பட்டதுடன் துடிப்பான இளைஞர்களின் வட்டத்தைக் கொண்டவர் என்றதால் பின்னாட் களில் ராக்கெட் ராஜா என்றழைக்கப்பட்டார்.

Advertisment

கராத்தே செல்வினின் மறைவிற்குப் பின்பு வெங்கடேசப் பண்ணையாரின் பக்கம் இணைந்தவர். சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர். வெங்கடேசப் பண்ணையாரின் மறைவிற்குப் பின் தனது சமூக இளைஞர்களின் பாதுகாப்பின் பொருட்டு பனங் காட்டுப்படை என்ற கட்சியை உருவாக்கிய ராக்கெட் ராஜா, அதன் நிறுவனரானார்.

Advertisment

rocketraja

தன் மீதான வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளிலிருந்து ராக்கெட் ராஜா விடுதலை யானாலும், பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்கு கள் இன்றும் விசாரணையில்

ராக்கெட் ராஜா, ஒரு காலகட்டத்தில் தாட்டியமாக வலம் வந்தவர். கராத்தே செல்வினின் கூட்டாளியும் வலதுகையு மாகச் செயல்பட்டவர். நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை பக்கமுள்ள ஆனைகுடியைச் சேர்ந்தவர். ஆறுமுகப்பாண்டியன் என்கிற பாலவிவேகானந்தன் என்பது இவரது பெயர். கராத்தே செல்வினின் கூட்டாளியாகச் செயல்பட்டதுடன் துடிப்பான இளைஞர்களின் வட்டத்தைக் கொண்டவர் என்றதால் பின்னாட் களில் ராக்கெட் ராஜா என்றழைக்கப்பட்டார்.

Advertisment

கராத்தே செல்வினின் மறைவிற்குப் பின்பு வெங்கடேசப் பண்ணையாரின் பக்கம் இணைந்தவர். சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர். வெங்கடேசப் பண்ணையாரின் மறைவிற்குப் பின் தனது சமூக இளைஞர்களின் பாதுகாப்பின் பொருட்டு பனங் காட்டுப்படை என்ற கட்சியை உருவாக்கிய ராக்கெட் ராஜா, அதன் நிறுவனரானார்.

Advertisment

rocketraja

தன் மீதான வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளிலிருந்து ராக்கெட் ராஜா விடுதலை யானாலும், பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்கு கள் இன்றும் விசாரணையில் உள்ளன. இதன் காரண மாகவே சென்னை, மும்பை, புனே என்று தனது இருப் பிடத்தை மாற்றிக்கொண்டி ருப்பவர். மேற்கு வங்காளத் தைச் சேர்ந்த பெங்காலிப் பெண்ணை திருமணம் செய்த ராக்கெட் ராஜா, கொல்கத்தா வின் நேபாள பார்டரிலுள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்தி ருக்கிறார். அங்கிருந்தபடியே மும்பை, புனே என்று பறப்ப வர். அங்குள்ள தமிழர்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கி ஃபைனான்ஸ் தொழிலையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்.

இதனிடையே அவ்வப்போது தனது சொந்த ஊரான ஆனைகுடிக்கு வரும் பொருட்டு, வழக்குகள், போலீசின் தேடல் களிருந்து தப்பிப்பதற்காக சென்னை வழியைத் தவிர்த்து மும்பை, கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்திறங்கி அங்கிருந்து நாகர்கோவில் வழியாக ஆனைகுடி வந்துவிட்டுத் திரும்புவார். ராக்கெட் ராஜாவின் பயணங்கள் ரகசிய மாகவே வைக்கப்படுமாம்.

கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று நள்ளிரவு நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி பக்கமுள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமித்துரை என்கிற வாலிபர் தனது வீட்டின் முன்பு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், திடீரென்று அவரை வளைத்த மர்ம கும்பல் ஒன்று காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று வெட்டிக் கொலைசெய்தது. ஏரியாவில் சூட்டைக் கிளப்பிய இந்தக் கொலைச் சம்பவம் பற்றி, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 2019-ல் நாங்குநேரி அருகேயுள்ள ஏர்வாடி பக்கமிருக்கும் கோதைசேரியைச் சேர்ந்த செல்வகுமார் கொலைக்குப் பழிக்குப் பழியாக சாமித்துரை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. சாமித்துரையும் அவரது சகாக்களும் இரவு வேளை நாங்குநேரி அருகேயுள்ள டாஸ்மாக் ஒன்றில் மது அருந்தி யிருக்கின்றனர். அதுசமயம், செல்வக்குமாரும் தனது நண்பர்களுடன் அதே பாரில் மது அருந்தியிருக்கிறார். அப்போது அவர்களுக் குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாகியதில் செல்வகுமார் படுகொலை செய்யப்பட்டி ருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் சாமித்துரையும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கடந்த ஜூலை 28 அன்று செல்வகுமார் தரப்பு பழிக்குப் பழியாகப் போட்டுத் தள்ளியிருக்கின்றது. இதனிடையே சாமித்துரை கொலை தொடர்பாக செல்வகுமாரின் உறவினர் முருகேசன், விக்டர், சஞ்ஜீவ்ராஜ், ஸ்ரீராம் குமார், ஆனந்த், ராஜசேகரன், பிரவீன்ராஜ், ராஜ்பாபு, ஆனந்தராஜ், ஜேக்கப் உள்ளிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

rr

இதற்கிடையே கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு பேரை நாங்குநேரி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், சம்பவத்தில் பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனர் தலைவர் ராக்கெட் ராஜா உட்பட ஒருசிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்ததையடுத்து நாங்குநேரி ஏ.எஸ்.பி.யான ரஜத்சதுர்வேதி தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டு ராக்கெட் ராஜா மற்றும் அவரது ஆதர வாளர்களைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

இந்த நேரத்தில் டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு, மாநிலம் முழுவதும் "ஆபரேஷன் மின்னல்' எனும் ரவுடி வேட்டையை நடத்த உத்தரவிட்டதையடுத்து ஓவர்நைட்டில் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம் ராக்கெட் ராஜாவையும் வளைக்க தனிப்படை வியூகம் வகுத்தது. ராக்கெட் ராஜாவின் முழு விவரங்களையும் அனைத்து விமான நிலையங் களுக்கும் அனுப்பிய தனிப்படை, இவர் எந்த விமான நிலையத்திற்கு வந்தடையும்பொருட்டு டிக்கெட் போட்டாலும் உடனடியாக தொடர்புடைய காவல் தலைமைக்குத் தகவல் தரவேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது.

வழக்கமான தனது சிகிச்சையின் பொருட்டு ஆனைகுடி வந்துசெல்லும் ராக்கெட் ராஜா, மும்பையிலிருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ப்ளைட் டிக்கெட் போட, தனிப்படைக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 10 அன்று காலை 10 மணியளவில் திருவனந்தபுரம் ஏர்போர்ட் டில் வந்திறங்கிய ராக்கெட் ராஜாவை ஏ.எஸ்.பி. ரஜத்சதுர்வேதி தலைமையிலான தனிப்படையினர் வளைத்துக் கஸ்டடிக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.

"சாமித்துரை கொலையில் தொடர்புடையவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராக்கெட் ராஜா கைதுசெய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டி ருக்கிறார்'' என்கிறார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.

nkn151022
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe