புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட் டணி ஆட்சி நடந்துவரு கிறது. 2021 தேர்தலில் என்.ஆர்.சி. 10, பா.ஜ.க. 6 இடங்களில் வெற்றிபெற்றன. புதுச்சேரி யூனியன் பிர தேசத்துக்கு முதல்வர் ரங்க சாமியிடம் ஆலோசிக்கா மல், துணைநிலை ஆளுநர் வழியாக, ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகிய 3 பா.ஜ.க.வினர், நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இதை யடுத்து, எண்ணிக்கை சமமெனக்கூறி, மந்திரி சபையில் சம பங்கு கேட்டு ரங்கசாமிக்கு டெல்லி பா.ஜ.க. அழுத்தம் தந்தது. இதையடுத்து, முதலமைச்சர், துணைசபாநாயகர், மூன்று அமைச்சர்கள், கொறடா பதவி என்.ஆர். காங் கிரசுக்கும், சபாநாயகர், இரண்டு அமைச்சர் பதவிகள் பா.ஜ.க.வுக்குமாக பிரித்துக்கொள்ளப்பட்டது. நான்காண்டு ஆட்சி முடிவுற்ற நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி திடீரென மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல் சாய்.சரவணகுமார் தனது அமைச்சர் பதவியை பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ராஜினாமா செய்கிறேன் என்றார். இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட, புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியை வலுப்படுத்தவும், அடுத்த தேர்தலில் பெருவெற்றிபெற்று ஆட்சியமைக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக புதுவை பா.ஜ.க. நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
என்.ஆர். காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளிடம் பேசியபோது, ""பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார், அமைச்சர் பதவி வேண்டுமென்று தலைமைக்கு நெருக்கடி கொடுத்ததோடு, கோவையிலிருந்து லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸை புதுவைக்கு அழைத்துவந்து அரசியல் செய்கிறார். இதை என்.ஆர். விரும்பவேயில்லை. ஐசரி.கணேசன் உட்பட சிலர், பல கோடி தருவதாகவும், புதுச்சேரியிலிருந்து எங்களை எம்.பி.யாக்குங்கள் என்றும் கேட்டபோதே அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
அதேபோல் மாநில அந்தஸ்து, நிதி கேட்டும் ஒன்றிய பா.ஜ.க. தரவில்லை. அதனால் கடந்த நான்காண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே டெல்லி சென்றார் என்.ஆர். அவரை சமாதானப்படுத்த முயன்ற நிர்மலா சீதாராமன், எல்.முருகனிடம், ஜான்குமாரின் தனி ஆவர்த்தனத்தை தடுத்து நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர்களோ, சாய்.சரவணகுமாரை ராஜினாமா செய்யவைத்து சலசலப்பை உருவாக்கியிருக்கிறார்கள்'' என்கின்றனர்.
இதுகுறித்து அரசியல் பிரமுகர்களிடம் பேசியபோது, ""பா.ஜ.க.வுக்கு தரப்பட்ட இரண்டு அமைச்சர் பதவிகள், சாதி அடிப்படையில் நமச்சிவாயம், சாய்.சரவணகுமா ருக்கு தரப்பட்டது. இரண் டாண்டுகளில் இதில் மாறுதல் செய்து, உங்களுக்கு பதவி தரப்படுமென்று ஜான்குமாருக்கு சொன்னது பா.ஜ.க. தலைமை. ஆனால் சொன்னபடி தரப்படவில்லை. வாரியத் தலைவர் பதவியும் எதிர் பார்த்த எம்.எல்.ஏ.க்களுக்கு தரப்படாததால், அதிருப்தி யாளர்களைவைத்து குடைச்சல் கொடுத்தார் ஜான்குமார். இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடப்பொறுப் பாளர் நிர்மல்குமார் சுரானா, ஜூன் 27ஆம் தேதி, மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியபின், புதிய எம்.எல்.ஏ.க்கள் நியமனம், புதிய மாநிலத்தலைவர், புதிய அமைச்சர் நியமனம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
டெல்லி உத்தரவுப்படி, அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். பா.ஜ.க.வுக்கு கோடிகளில் செலவுசெய்யும் காரைக்கால் தொழிலதிபர் ராஜ சேகரன், ஊசூடு எக்ஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், முதலியார் பேட்டை செல்வம் ஆகியோரையும், மாநிலத் தலைவராக ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் உருவான ராமலிங்கத்தையும் தேர்வு செய்தனர். புதிய அமைச்சராக ஜான்குமாரை தேர்வு செய்த னர். அமைச்சரவை மாற்றத்துக்காக கவர்னரை சந்தித்து கடி தம் தந்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், உங்க கட்சியை சேர்ந்த அமைச்சர்களில் ஒருவரை மாற்றிவிட்டு பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவரை அமைச்சராக்குங்கள் எனக் கோரிக்கை வைத்த கவர்னர், துணை சபாநாயகர் ராஜவேலுக்கு சிபாரிசும் செய்துள்ளார். இவர் எப்படி உத்தரவு போடலாமென்று என்.ஆர். கடுப்பாகியிருக்கிறார். அமைச்சரவையிலிருக்கும் தேனீ .ஜெயக்குமார் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவருக்குப்பதிலாக ராஜவேலுவை அமைச்சராக்கலாமா என ஆலோசித்துவருகிறார்'' என்கிறார்கள்.
புதுவை உளவுத்துறை வட்டாரத்தில் பேசியபோது, ""2026-ல் பா.ஜ.க.வை கழட்டி விட்டுவிட்டு விஜய் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் அல்லது தி.மு.க. - காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமென சில மூவ்களை எம்.ஆர். எடுக்க, அதுகுறித்து டெல்லிக்கு நோட் போட்டோம். 2026-ல் புதுச்சேரியில் பா.ஜ.க. முதலமைச்சர் நாற்காலியில் அமரவேண்டுமென்பதே டெல்லி யின் எண்ணம். இதற்காகவே பிரதமருக்கு நெருங்கிய ஆலோசகரான கே.கைலாசநாதன் இங்கே துணைநிலை ஆளுந ராக்கப்பட்டார். அவர் டெல்லிக்கு அனுப்பிய அரசியல் அறிக்கை யில், ரங்கசாமியோடு கூட் டணியை முறித்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம். ரங்கசாமியை நம்முடனே வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். பின்னர் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைப் போம் எனத் திட்டம் வகுத்துள்ளார். இது கே.கே. ப்ளான் (கே.கைலாசநாதன்) எனப் பெயரிடப்பட்டது.
இதற்காக என்.ஆர். காங் கிரஸின் முக்கிய தலைவர்கள் சிலரை தங்களது சிலந்தி வலை யில் சிக்கவைத்துள்ளது பா.ஜ.க. அதேபோல் ரங்கசாமிக்கும் குறி வைத்துள்ளது. தனக்கு முதல்வர் பதவி வேண்டாமென்று சொல்லா விட்டால், என்.ஆர். மீது 9 வித மான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த ஏற்பாடாகியுள்ளது. பா.ஜ.க. சொல்வதைக் கேட்கா விட்டால் தேர்தல் நெருக்கத்தில் அல்லது தேர்தலுக்குப்பின் ரங்கசாமி சிறைக்கு செல்லவும் நேரிடும்'' என்கிறார்கள்.