"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்குவதை வைத்து ஆளும்கட்சி யான தி.மு.க., கட்சிக் கட்டமைப்பில் அதிரடி நியமனங்களை உருவாக்கியிருக்கிறது''”

Advertisment

"ஆமாம்பா, தி.மு.க. கையில் எடுத்திருக்கும் அதிரடிகள் குறித்து சர்ச்சைகளும் உருவாகி வருகிறதே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வில் துணைப் பொதுச் செயலாளராக ஏற்கனவே அமைச்சர் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 5 பேர் இருக்கும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் சாமிநாதன் ஆகியோரும் து.பொ.செ.க்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே  பெண்களை இழிவாகப் பேசியது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய  பொன்முடிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. குறிப்பாக, சைவ -வைணவம் குறித்தும் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு கட்சிக்கு சங்கடத்தை அவர் ஏற்படுத்தினார். இதனால் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.''”

rang1

"இதையெல்லாம் தி.மு.க.வினராலும் மறக்க முடியாதே?''”

"ஆமாங்க தலைவரே, விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடிக்கு எதிராக எம்.எல்.ஏ. லஷ்மணனுக்கு முக்கியத்துவம் தந்தது தி.மு.க. இதனால், கட்சியி லிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார் பொன்முடி. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காது என்கிற பேச்சும் விழுப்புரம் மாவட் டத்தில் எதிரொலித்தது. இதனால் அவர் சார்ந்த சமூகம் அதிருப்தியடைந்தது. அவர்களை அ.தி.மு.க. தங்கள் பக்கம் இழுக்க முயன்றது. குறிப்பாக அ.தி.மு.க. எம்.பி. சி.வி. சண்முகம் இந்த முயற்சியில் இறங்கினார். எனவே, மீண்டும் பொன்முடியை து.பொ.செ.வாக நியமித்துள்ளார் ஸ்டாலின். அதேபோல, து.பொ.செ. பதவியிலிருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அந்த இடம் காலியாக இருந்தது. அவர் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் என்பதால், அந்த இடத்தில் அதே சமூகத்திற்கு வழங்கவேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே அவர்கள் தரப்பு கோரிவந்தது. இப்போது, கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில், அமைச்சர் சாமிநாதனுக்கு து.பொ.செ. பதவி கொடுக்கப்பட்டி ருக்கிறது.''” 

Advertisment

"தி.மு.க.வில் மாவட்டச் செய லாளர்களும் மாற்றப்பட்டிருக்கிறார் களே?''”

"வேலூர் மாவட்ட தி.மு.க.வை வடக்கு, தெற்கு என 2ஆக உடைத்திருக்கிறது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளராக எம்.எல்.ஏ. நந்தகுமா ரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக துரை முருகன் மகன் கதிர்ஆனந்தும் நியமிக்கப்பட்டி ருக்கிறார்கள். இதில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 3 தொகுதிகள் நந்தகுமாருக்கும், காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் 2 தொகுதிகள் கதிர்ஆனந்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளும் நந்தகுமார் வசமிருந்தன. அதில் 2 தொகுதிகளை எடுத்துதான் கதிர்ஆனந்த்தை அதற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித் துள்ளனர். துரைமுருகனின் ஆதரவாளராக இருந்த நந்தகுமார், பின்னர் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளராக மாறினார்.  வேலுவும், நந்த குமாரும் நாயுடு சமூகம் என்பதால், இருவருக்கும் ஒத்துப்போய்விட்டது. இந்த நிலையில்தான், துரை முருகனையும் வேலுவையும் திருப்திப்படுத்தும் வகையில் நந்தகுமாரை நீக்காமல், வேலூர் மாவட்டத்தை உடைத்து, துரைமுருகன் மகனுக்கும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலூர் மாவட்ட வன்னியர் சமுதாயத்தினரின் மனதும் குளிரவைக்கப்பட்டிருக்கிறது.''

"கொங்கு பெல்ட்டிலும் இந்த மாற்றம் நடந்திருக்கிறதே?''”

rang3

"திருப்பூர் கிழக்கு மா.செ.வாக இருந்த சாமிநாதனுக்கு து.பொ.செ. பதவி கொடுக்கப் பட்டதால், தெற்கு மா.செ.வாக இருந்த இல.பத்ம நாபனை கிழக்கு மா.செ.வாக நியமித்திருக்கிறார்கள். தெற்கு மா.செ.வாக அமைச்சர் சக்கரபாணிக்கு நெருக்கமான எம்.பி. ஈஸ்வரசாமியை நியமித் துள்ளது அறிவாலயம். சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் தி.மு.க.வில் நடந்துள்ளது என்கிறார்கள். இதற்கிடையே, துரைமுருகனிடம் உள்ள பொதுச்செயலாளர் பதவியைக் குறி வைத்து காய்களை நகர்த்திவரு கிறார் அமைச்சர் எ.வ.வேலு என்கிறார்கள். இதுவும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"தி.மு.க. ஒரு அதிரடி ஆபரேசனில் இறங்கியிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, ஆபரேசன் அ.தி.மு.க. என்கிற ஸ்கீமை கையில் எடுத்திருக்கிறது தி.மு.க. அதாவது சில தொகுதிகளைக் கண்டறிந்து, அங்கேயுள்ள அ.தி.மு.க. மற்றும் போட்டி அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரைத் தங்கள் பக்கம் இழுப்பதுதான், இந்தத் திட்டத்தின் குறிக் கோளாம். இதற்காக  தி.மு.க.வில் உள்ள சபரீச னின் "பென்' அமைப்பு, பல்வேறு தொகுதிகளின் பல்ஸ்ரேட்டை ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம் பகுதியில் உள்ள நாடார் பெல்ட்டை, தி.மு.க. மாஜி மந்திரியான பூங்கோதை ஆலடி அருணா, கவனிக்கவில்லை என்பதை "பென்' அமைப்பு கண்டறிந்தது. அங்கு தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க நாடார் சமூக பிரபலம் இல்லாததால், அந்த சமூகத்தினர் பா.ஜ.க. பக்கம் செல்லக்கூடிய நிலையிருந்தது. ஆகவே சபாநாய கர் அப்பாவு மூலமாக ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியனை அணுகும்படி "பென்' தெரிவித்தது, இதைத் தொடர்ந்துதான் மனோஜ்பாண்டியன் தி.மு.க.வுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். இவருக்கு வரும் தேர்தலிலும் ஆலங்குளத்தைத் தருவதாக வாக்குறுதி தரப்பட்டிருக்கிறது. அதேபோல் மற்றொரு ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஐயப்பனிடமும் டீலிங் நடந்துவருகிறது. அவரும் தி.மு.க. வரவிருக்கிறாராம். அதேபோல் ஓ.பி.எஸ். பக்கம் இருக்கும் மாஜி மந்திரி வைத்திலிங்கத்துக் கும் குறி வைக்கப்பட்டிருக்கிறதாம். இவர் தி.மு.க. ஆட்சி அமையும்போது அமைச்சர் பதவியும், தன் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவமும் தரவேண்டும் என்று டிமாண்ட் வைத்திருக்கிறாராம். இதேபோல் பழைய அ.தி.மு.க. மா.செ.க்கள் தி.நகர் சத்யா, ஆதிராஜாராம் ஆகியோரிடமும்  டீலிங் நடந்துவருகிறதாம்.''”

"சரிப்பா தி.மு.க.வின் 75 ஆண்டு வரலாற்றை தி.மு.க. இளைஞரணி கொண்டாடுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, இதற்காக பல்வேறு நிகழ்வுகளை தி.மு.க. இளைஞரணி முன்னெடுக் கிறது. இதற்கு "அறிவுத் திருவிழா' என்றும் பெய ரிடப்பட்டுள்ளது. வருகிற 8 ஆம் தேதி இதற்கான தொடக்க விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது. தி.மு.க.வின் கொடி உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகாலம் ஆவதைப்  பறைசாற்றும் வகையில், காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு  எனும் புத்தகத்தை வெளியிடுகிறார் ஸ்டாலின். இதனை அடுத்து, 8 மற்றும் 9 ஆகிய தேதி களில் காலை முதல் இரவு 9 மணி வரை, திராவிட வரலாற்றை நினைவுகூரும் பல்வேறு கருத்தரங்கங்கள், புகைப்படக் கண் காட்சிகள் நடக்கின்றன. 10ஆம் தேதி முதல் மாலையில் தினசரி இந்த கருத்தரங்கங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது.''

"ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்னு திரும்பவும் ராகுல் பரபரப்பை கிளப்பியிருக்கிறாரே?''

rang2

"ஆமாம் தலைவரே, புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராகுல், "ஹரியானாவில் மொத்தம் 25,41,144 போலி வாக்காளர்களை சேர்த்திருப்பதா' ஆதாரத்தோட அம்பலப்படுத்தி யிருக்கார். அதாவது, இம்மாநிலத் தில் 8 பேருக்கு ஒரு போலி ஓட்டு விகிதத்தில் இருக்குதாம். பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு அழகியின் போட்டோவை வைத்தே 10 வாக் குச்சாவடிகளில் 22 இடங்களில் ஓட்டுப் போட்டிருக்காங்க. ஒரே வீட்டில் 500 பேர் இருப்பதாக காட்டியிருக்காங்க, நேரில் பார்த்தால் ஒருவர்கூட அங்கில்லை. இதுபோல் தேர்தல் கமிஷனின் மோசடி குறித்து எக்கச்சக்கமான ஆதாரங்களை வெளியிட்டு ராகுல் குற்றம்சாட்டியிருப்பது பீகார் தேர்தலிலும் எதிரொலிக்கும்னு எதிர்பார்க்கிறாங்க.''

"கடலூர் சிறுமி நன்முகை விதைத்த ஒரு விதை, ஒரு பெரும் விருட்சமாக மாறி ஒட்டுமொத்த தமிழகத்தின்  பாராட்டையும் பெற்றிருக்கிறதே?''”

rang4

"உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மத்திய அரசின் சார்பிலான கல்விக்கான நிதி ரூ.2 ஆயிரம் கோடியைத் தருவோம் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெனாவெட்டாகப் பேசியபோது, ’மும்மொழிக் கொள்கை, குலக்கல்வி உள் ளிட்டவைகளை புகுத்தும் உங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ரூபாய் 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் ஏற்கமாட்டோம்’ என்று தமிழக முதல்வர் தன்மானத் தோடு அறிவித்தார் அல்லவா? இந்த  நிலையில் கடலூரைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் கலைக்கோவன் -மருத்துவர் கிருஷ்ண பிரியா தம்பதியின் எல்.கே.ஜி.படிக்கும் 4 வயது மகள் நன்முகை, தன் சேமிப்பில் வைத்திருந்த ரூ 10 ஆயிரத்தை முதல்வருக்கு அனுப்பி, "ஒன்றிய அரசு தரவில்லை என்றால் என்ன? நான் தரு கிறேன்' என்று தெரிவித்தார். இதுகுறித்து வீடியோ வில் பேசியதும் வைரலாகியது. இதனால் நெகிழ்ந்து போன முதல்வர் ஸ்டாலின், நன்முகையைப் பாராட்டிப் பேசினார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர் சிறுமிகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் நிதியளிக்கத் தொடங்கினர். இந்த நிதி கடந்த 10 மாதங்களில் ரூ.1000 கோடியாக பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு விதை போட்ட சிறுமி நன்முகையை முதல்வர் தொடங்கி கல்வியாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.''’

"கரூர் துயரத்திற்குப் பிறகு  த.வெ.க.வின் முதல் சிறப்பு பொதுக் குழுவில் ஆளாளுக்கு  முண்டா தட்டியிருக்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே.. 5ஆம் தேதி மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் த.வெ.க.வின் முதல் சிறப்புப் பொதுக்குழு கூடியது. த.வெ.க. பொதுக்குழுவில் பேசிய கொள் கைபரப்பு செயலாளர் அருண்ராஜ், தி.மு.க.வின் துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி என முக்கிய இரண்டாம் நிலை தலைவர்களை அட்டாக் செய்தார். அதேபோல, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சிலும் தாக்குதல் அதிகமாக இருந்தது. அவர்  செந்தில் பாலாஜியை ஒருமையில் பேசியது அநாகரிகத்தின் உச்சம். ஏற்கனவே த.வெ.க.விற்கு 20 சதவித வாக்கு வங்கி இருப்பதாகச் சொல்லி வந்த ஆதவ், இந்த கூட்டத்தில் 26 சதவீதமாக த.வெ.க. வாங்கு வங்கி கூடுதலாகியுள் ளது என போகிற போக்கில் அளந்துவிட்டார். இதில் பேசிய விஜய், ’"இந்தியாவிலேயே எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லாத அதீக கட்டுப்பாடு நமக்கு விதிக்கப்பட்டது. மக்களைப் பார்த்து கையசைக்கக் கூடாது என்றார்கள். இப்படி நிபந் தனை போட்ட குறுகிய மனம் கொண்ட அரசியல் அவர்களுடையது என்றதோடு, கரூர் சம்பவம் குறித்து நீதிமன்றங்கள் தெரிவித்தவற்றை சுட்டிக் காட்டி,  முதல்வர் பெயரைக் குறிப் பிடாமல்  தாக்கினார். சமீபகாலமாக மெல்ல மெல்ல ஓரங்கட்டப்படும் த.வெ.க. பொருளாளர் வெங்கட்ராம னுக்கு, இந்த பொதுக்குழுவிலும் பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட வில்லை. இந்தக் கூட்டத்தில் வைக்கப் பட்ட விமர்சனங்கள் தி.மு.க.வை எரிச்சல்படுத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தன் அருகே விஜய் யாரையும் நெருங்க விடாதது, அக்கட்சியின் நிர்வாகிகளை அதிரவைத்திருக்கிறது.''”  

"காவல்துறையில் ஒரு பெண் எஸ்.பி.க்குத்  தரப்பட்ட பொறுப்பு, சலசலப்பை ஏற்படுத்தி வருகிறதே?''”

"காவல்துறை சார்பில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொறுப்பு முத்தரசி எஸ்.பி.க்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் மீது அ.தி.மு.க. காலத்திலேயே ஏகப்பட்ட புகார்கள் எழுந்தன. எனவே அப்படிப்பட்ட முத்தரசிக்கு இப்படி ஒரு பொறுப்பா? என்கிற கேள்வி டிபார்ட்மெண்ட்டிலேயே எழுந்திருக்கிறது. இவர் ஏ.டி.ஜி.பி. தேவஆசிர்வாதத்தின் ஆதரவாளர் என்பதால், அவருக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதாம். இது பத்திரிகையாளர்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை உருவாக்கிவருகிறது.''”

rang5

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். எடப்பாடி தலைமையில் 5 ஆம் தேதி அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்தது.   இதில் செங்கோட்டையனின் நீக்கம் குறித்து எடப்பாடி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மா.செ.க்கள்  மத்தியில் இருந்தது. ஆனால் எடப்பாடியோ, அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இது ஒருபுறம் இருக்க, ஐ.டி. விங்க் பற்றி, மா.செ.க்கள் 15 பேர், பல்வேறு புகார்களை ஏற்கனவே எடப்பாடியிடம் கொடுத்திருந்தனர். இது குறித்தும் எடப்பாடி விவாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு மா.செ.க்களுக்கு இருந்தது. ஆனால், அதுவும்  நடக்க வில்லை. மாறாக அந்த 15 மா.செ.க்களையும் தனது வீட்டிற்கு அழைத்து ஐ.டி.விங்க் நிர்வாகிகளுக்கு எதிரான புகார்கள் பற்றி விசாரித் துள்ளார் எடப்பாடி. இதனால் அ.தி. மு.க.வின் ஐ.டி.விங்கில் மாற்றங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அங்கே நிலவு கிறது.''”