Advertisment

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திறந்தவெளி பல்கலைக்கழகம்! -தோண்டத் தோண்ட கோல்மால்!

d

மிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தி லிருந்து நிறைய கோப்புகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அள்ளிச் சென்றிருக்கும் விவகாரம் உயர்கல்வித் துறை வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது தமிழக அரசின் திறந்தநிலை பல்கலைக் கழகம். இதன் துணைவேந்தராக இருக்கிறார் பார்த்தசாரதி. பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பல லட்சக்கணக்கான மாணவர் கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த பல்கலைக்கழகத் தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertisment

இது குறித்து பேராசிரியர்கள் தரப்பிலிருந்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும் நடவடிக்கை ஏதும் இல்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுக்கப் பட்ட புகாரும் கிடப்பில் போடப் பட்டது. இந்த நிலையில்... ஆட்சிமாற்றம் நிகழ, கிடப்பில் போடப்பட்ட புகார்கள் தூசு தட்டப்பட்டன. புகார்களில் உண்மை இருப்பதை அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், சமீபத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்து புகாரில் தொடர்புடைய பல்வேறு கோப்புகளையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அத்துடன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முக்கிய நபர்கள் 4 பேரை வரவழைத்து விசாரணையையும் நடத்தி முடித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

t

இந்த விவகாரம் உயர் கல்வித்துறையில் ரகசியமாக விவாதிக்கப்படும் நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "’பல்கலைக்கழக மாணவர்களின் சான்றிதழை மின்மயமாக்கும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த 2015-ல் இந்த திட்டத்திற்காக 11 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட தாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறத

மிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தி லிருந்து நிறைய கோப்புகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அள்ளிச் சென்றிருக்கும் விவகாரம் உயர்கல்வித் துறை வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது தமிழக அரசின் திறந்தநிலை பல்கலைக் கழகம். இதன் துணைவேந்தராக இருக்கிறார் பார்த்தசாரதி. பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பல லட்சக்கணக்கான மாணவர் கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த பல்கலைக்கழகத் தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertisment

இது குறித்து பேராசிரியர்கள் தரப்பிலிருந்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும் நடவடிக்கை ஏதும் இல்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுக்கப் பட்ட புகாரும் கிடப்பில் போடப் பட்டது. இந்த நிலையில்... ஆட்சிமாற்றம் நிகழ, கிடப்பில் போடப்பட்ட புகார்கள் தூசு தட்டப்பட்டன. புகார்களில் உண்மை இருப்பதை அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், சமீபத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்து புகாரில் தொடர்புடைய பல்வேறு கோப்புகளையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அத்துடன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முக்கிய நபர்கள் 4 பேரை வரவழைத்து விசாரணையையும் நடத்தி முடித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

t

இந்த விவகாரம் உயர் கல்வித்துறையில் ரகசியமாக விவாதிக்கப்படும் நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "’பல்கலைக்கழக மாணவர்களின் சான்றிதழை மின்மயமாக்கும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த 2015-ல் இந்த திட்டத்திற்காக 11 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட தாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், திட்டத்திற்கான கட்டமைப்பை உரு வாக்காமலேயே பணம் செலவாகியுள்ளது. அப்போது துணைவேந்தராக இருந்த சந்திரகாந்த் ஜெயபால் (அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா வின் சகோதரி), பதிவாளர் விஜயன் ஆகியோர் மீது இந்த ஊழல் புகார் எதிரொலித்தது. ஆனால், அவை மூடி மறைக்கப்பட்டன.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாததால், இப்போது அந்த புகார்கள் மீது விசாரணையைத் துவக்கியிருக் கிறோம். பல்கலைக்கழகத்துக்கு சென்று இதுகுறித்து ஃபைல்கள், வவுச்சர்கள் அனைத்தையும் அள்ளி வந்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். அதனை ஆராய்ந்த அதிகாரிகள், ஊழல் நடந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். அதேசமயம் பல கோப்புகளை காணவில்லை.

இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் தற்போதைய பதிவாளர் ரத்னகுமார், துணை பதிவாளர் வாசுதேவன், தொழில்நுட்ப ஆய்வாளர் விஜயசங்கர், சிஸ்டம் அனலைஸர் குணசேகரன் ஆகிய 4 பேரிடம் விசாரணையும் நடத்தப்பட்டி ருக்கிறது. இதில் ஒருவர், "தனக்கு மட்டுமே 24 லட்சம் ரூபாய் லஞ்சமாக கிடைத்தது' என வாக்குமூலம் தந்திருக்கிறார். மற் றொருவர், "மெடிக்கல் லீவில் இருந்ததால் கையெழுத்து மட்டும் நான் போட்டேன்' என சொல்லியிருக்கிறார். மற்ற இருவரும் "ஊழல் நடந்திருப்பது உண்மைதான்' என சொல்லியிருக் கிறார்கள். இதுகுறித்து மேலதிக நடவடிக்கைக்காக அரசின் அட்வைஸை எதிர்பார்த்து காத்திருக் கிறோம். இதுமட்டுமல்லாமல், மேலும் பல ஊழல்களுக்கான ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கிடைத்திருக்கிறது. அதை தோண்டினால் இன்னும் பூதாகரமாக வெடிக்கும் ஊழல் விவகாரம்'' என்கிறார்கள் ஆவேசமாக.

திறந்தநிலை பல்கலைக்கழக தரப்பில் நாம் விசாரித்தபோது, "பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கிறது. பேராசிரியர், இணை பேராசிரியர் விஷயங்களில் ரிசர்வேசன் ரோஸ்டர் முறையை விதிகளின்படி பின்பற்றுவதில்லை. எஸ்.சி. அருந்ததியர்களுக்கான 4 இடங்களை பி.சி. மற்றும் எம்.பி.சி. வகுப்பினரை கொண்டு நிரப்பினர். பாதிக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டில் முறையிட்டு ஜெயித்தார். அவருக்கு மட்டும் ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்த பல்கலைக்கழக நிர்வாகம், மற்ற மூவரையும் வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. இப்போதும் எஸ்.சி. அருந்ததியினருக்கான அந்த 3 இடங்களிலும் மற்ற சாதியினரே பேராசிரியராக இருக்கிறார்கள். இதற்காக பெருந்தொகை விளையாடியிருக்கிறது. இணைப் பேராசிரியருக்கு 10 ஆண்டு கால பே ஸ்கேல் இருக்கணும்; 55 சதவீத கூடுதல் கல்வி தகுதி இருக்கணும் என்கிற விதிகளை புறக்கணித்துவிட்டு, 52 சதவீத மதிப்பெண் வைத்துள்ள ஒரு பெண் மணியை தேர்வு செய்து நியமித்திருக்கிறார்கள்.

புத்தகங்கள் அச்சடிப்பதிலும் மெகா ஊழல் நடந்திருக்கிறது. குறிப்பாக, 2018 மாணவர்களின் சேர்க்கையே 12,000 பேர்தான். இவர்களுக்காக சுமார் 60,000 எண்ணிக்கையில் புத்தகங்கள் அச்சடித்தால் போதும். ஆனால், 10 மடங்கு அதிகமாக அச்சடிக்கப் பட்டிருக்கிறது. 2016-ல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் இப்படித் தான் தேவைக்கும் அதிகமாக புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. கமிஷன் பெறுவதற்காகவே தேவையைவிட கூடுதலாக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இதன்மூலம் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் ஊழல் நடந் திருக்கிறது. இதுகுறித்த ஃபைல் களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

மாணவர் சேவை மற்றும் உதவி பிரிவு என்பது பல்கலைக்கழகத்தின் உயிர்நாடி. இந்த பிரிவின் பொறுப்பாளராக இணைப்பேராசிரியர் அந்தஸ்தில் இருப்பவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், உதவிப் பேராசிரியரான மகேந்திரன் என்பவரை நியமித்திருக்கிறார் துணைவேந்தர் பார்த்தசாரதி. அதேபோல, அகடமிக் கவுன்சிலில் 20 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அனைத்து துறைகளுக்குமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனா, பார்த்தசாரதியோ, தனக்கு நெருக்கமானவர்களை அகடமிக் கவுன்சிலில் கொண்டு வருவதற்காகவே ஒரே துறையிலிருந்து 2, 3 நபர்களை நியமித்திருக்கிறார். இதில் ஒரு கொடுமை என்னென்னா…தமிழ் தெரியாதவரெல் லாம் கவுன்சிலில் இருப்பதுதான்.

பல்கலைக்கழகத்தின் நிதி தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடக்கணும். ஆனால், பல்கலைக்கழகமோ எஸ்-பேங்க் என்ற தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறது. ஒரு மாணவனிடமிருந்து அட்மிசனுக்காக 600 ரூபாய் வாங்குகிறது பல்கலைக்கழகம். அந்த பணத்தை அவர் வங்கியில் செலுத்தும்போது 60 ரூபாய் ப்ராஸசிங் கட்டணமாக வங்கி வசூலிக்கிறது. வருசத்துக்கு சராசரியாக 12,000 மாணவர்கள் சேர்கிறார்கள். அப்படியானால் 12,000 ஷ் 60 என கணக்கிட்டால் பிராஸசிங் கட்டணமாக மட்டுமே 7,20,000 ரூபாய் தனியார் வங்கிக்கு கிடைக்கிறது. இதுவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ப்ராஸசிங் கட்டணம் கிடையாது. ஆக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நிறைய இருக்கும்போது தனியார் வங்கியிடம் அக்கவுண்ட் வைக்க வேண்டிய அவசியமென்ன? தனியார் வங்கிகள் கமிஷன் தருவதுதான்.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக வருசத்துக்கு 1 கோடி ரூபாய் தருகிறது யூ.ஜி.சி.! கடந்த ஆண்டு கிடைத்த 1 கோடியில் 52 லட்சத்தை திருப்பித் தந்துவிட்டார் துணை வேந்தர் பார்த்தசாரதி. ஏன்னா, பல்கலைக்கழகத் தின் வளர்ச்சி குறித்து அவர் அக்கறை காட் டாததுதான். தமிழகத்தில் 5 பல்கலைக்கழகங் களுக்கு மட்டும்தான் புதிய படிப்புகளை தொடங்குவதற்கு யூ.ஜி.சி. அனுமதியளித்திருக் கிறது. அதில் திறந்தநிலை பல்கலைக்கழகமும் ஒன்று. இந்த பல்கலைக்கழகத்தில் 83 படிப்பு களுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், 13 படிப்பு களை மட்டும் தான் அட்மிசன் போட்டார் பார்த்தசாரதி. 70 படிப்புகளுக்கு அட்மிஷனே நடக்கலை. மேலும், 50-க்கும் அதிகமான தற்காலிக பணியாளர்கள் இங்கு இருக்கிறார்கள். இவர்களுக்கான சம்பளத்தை பல்கலைக்கழகம் நேரடியாக வழங்குவதில்லை. தனியார் ஏஜென்சி மூலம் சம்பளத்தை பட்டுவாடா செய்கின்றனர். அந்த ஏஜென்சிக்கும் பார்த்தசாரதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

சமீபத்தில் சிண்டிகேட் கூட்டம் நடந்தது. இதில் 34 அஜெண்டாக்கள் எடுத்துக்கொள்ளப் பட்டது. பொதுவாக, சிண்டிகேட் கூட்டம் னாலே குறைந்தபட்சம் 5 மணி நேரம் நடக்கும். ஒவ்வொரு அஜெண்டா மீதும் விரிவாக விவா தம் நடக்கும். ஆனா, இந்த 34 அஜெண்டாக்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த கூட்டத்தை வெறும் 15 நிமிடங்களில் முடித்துவிட்டனர். 15 நிமிடத்தில் என்ன விவாதத்தை நடத்தியிருப்பார் கள்? ஆனால், இதற்காக செலவிடப்பட்ட தொகை 3 லட்சம் ரூபாய். ஆக, இப்படி பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கவனித்து தி.மு.க. அரசு கடுமையான நடவடிக்கை எடுத் தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை காப்பாற்ற முடியும்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுகுறித்து, துணைவேந்தர் பார்த்த சாரதியை தொடர்புகொண்டு பல்கலைக்கழகத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கருத்து கேட்டபோது, "நேரில் வந்தால் பதில் சொல்கிறேன், தொலைபேசியில் பேச முடியாது''’என்பதோடு முடித்துக்கொண்டார்.

nkn080921
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe