ஸ்டெர்லைட்டை திறப்பதற்காகவே எடப்பாடி போட்ட அரசாணை! -மீண்டும் போராட்டம்?

sterlite

டும் போராட்டங்கள், போலீசின் ஈவிரக்கமற்ற துப்பாக்கிச் சூடு, 13 பேர் களப்பலி இவற்றைத் தொடர்ந்து "மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வருகிற புத்தாண்டின் துவக்கத்தில் திறந்து விடுவோம்' என அந்தக் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியான பி.ராம்நாத் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

ராம்நாத்தின் நம்பிக்கைக்கு காரணம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான தருண் அகர்வால் தலைமையிலான கமிட்டி கொடுத்த அறிக்கைதான்.

sterlite

""ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முன்பு அந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தை அழைத்துப் பேசவில்லை. அந்த நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கத்தை கேட்கவில்லை. "ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச் சூழல் விதிமுறைகளை மீறுகிறது' என தமிழக அரசு தனது "ஆலை மூடல்' அறிக்கையில் சொல்கிறது. சுற்றுச் சூழல் விதிகளை மீறுகிறது. அரசு கொடுத்த உத்தரவுகளை மதிக்கவில்லை என்பதற்காக அந்த ஆலை நிர்வாகத்தை அழைத்து விளக்கம் கேட்காமல் அரசே எப்படி தன்னிச்சையாக அந்த ஆலையை மூடும் உத்தரவை பிறப்பிக்க முடியும். அரசின் இந்த ஸ்டெர்லைட் ஆ

டும் போராட்டங்கள், போலீசின் ஈவிரக்கமற்ற துப்பாக்கிச் சூடு, 13 பேர் களப்பலி இவற்றைத் தொடர்ந்து "மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வருகிற புத்தாண்டின் துவக்கத்தில் திறந்து விடுவோம்' என அந்தக் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியான பி.ராம்நாத் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

ராம்நாத்தின் நம்பிக்கைக்கு காரணம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான தருண் அகர்வால் தலைமையிலான கமிட்டி கொடுத்த அறிக்கைதான்.

sterlite

""ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முன்பு அந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தை அழைத்துப் பேசவில்லை. அந்த நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கத்தை கேட்கவில்லை. "ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச் சூழல் விதிமுறைகளை மீறுகிறது' என தமிழக அரசு தனது "ஆலை மூடல்' அறிக்கையில் சொல்கிறது. சுற்றுச் சூழல் விதிகளை மீறுகிறது. அரசு கொடுத்த உத்தரவுகளை மதிக்கவில்லை என்பதற்காக அந்த ஆலை நிர்வாகத்தை அழைத்து விளக்கம் கேட்காமல் அரசே எப்படி தன்னிச்சையாக அந்த ஆலையை மூடும் உத்தரவை பிறப்பிக்க முடியும். அரசின் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு, பாதிக்கப்படும் கம்பெனி தரப்பையும் கேட்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இயற்கையான நீதிக்கு எதிரானது. வேதாந்தா நிறுவனம் மறுபடியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தியை தொடங்கலாம். அப்படி தொடங்கினால் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து முப்பது நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த தொழிற்சாலையைச் சுற்றி ஏகப்பட்ட மரங்களை நட வேண்டும். ஸ்டெர்லைட் கம்பெனி, காப்பர் கழிவுகள் சுண்ணாம்பு போன்றவற்றை கழிவுப் பொருட்களாக கொட்டுவதற்கு முன்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிறகே மண்ணில் கொட்ட வேண்டும்'' -இதுதான் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆராய்ந்த கமிட்டி கொடுத்த ரிப்போர்ட்.

இந்த ரிப்போர்ட்டை ஏற்றுக் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதார்ஷ்குமார் கோயல் இதுபற்றி தமிழக அரசும் வேதாந்தா நிறுவனமும் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையை ஸ்டெர்லைட் நிர்வாகம் வரவேற்றுள்ள நிலையில், திருடனுக்கு தேள் கொட்டியது போல் என்ன செய்வது என திணறிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

agriparamasivanஇதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக அரசின் சட்டத்துறை வல்லுநர்கள், ""ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்றால் இந்த தொழிற்சாலையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் தொழிற்சாலை சுற்றுப்புற சூழலுக்கு பாதகம் விளைவிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி சுதந்திரமான ஒரு விசாரணையை அரசு நடத்தியிருக்க வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை போன்ற அரசின் துறைகளோடு தனியார் தொண்டு நிறுவனங்களையும் அந்த சுதந்திர விசாரணையில் பங்கெடுக்க செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த தொழிற்சாலையை மூடும் உத்தரவை அரசு பிறப்பிப்பதற்கு முன்பு அந்த தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். நிர்வாகம் அளிக்கும் விளக்கம் திருப்தி இல்லை என அரசு முடிவு செய்தால் தொழிற்சாலையை மூடலாம்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க விடமாட்டோம் என்றோ தமிழ்நாட்டில் தாமிரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அனுமதிக்க மாட்டோம் என்றோ தமிழக அரசு பொத்தாம் பொதுவாக ஒரு உத்தரவு போட முடியாது. அப்படித்தான் தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு துறையின் பரிந்துரைகளை ஏற்று பொத்தாம் பொதுவாக ஒரு உத்தரவு போட்டது'' என்கிறார்கள்.

இந்தக் கருத்துகளை "சீல் வைத்த பூட்டு திறக்கும் -எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை' என கடந்த மே மாதமே நக்கீரன் பதிவு செய்தது. நக்கீரன் சொன்னபடியே இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தை அழைத்து கேட்காமல் ஆலையை மூடியது தவறு என க்ரீன் ட்ரிப்யூனலில் அறிக்கை தாக்கலாகியுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் தமிழக அரசு முழித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

இதற்கிடையே மாநில உளவுத்துறை அதிர்ச்சிகரமான ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளது. ""கடந்த முறை நடந்த போராட்டங்கள் யாவும் திட்டமிடாமல் நடந்தவை. ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் திட்டமிட்ட போராட்டங்கள் தூத்துக்குடியில் வெடிக்கும். "ஜனவரி மாதம் போராட்ட மாதம்' என தூத்துக்குடியில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கத்தினரும் தெரிவிக்கிறார்கள். மக்களின் மனநிலை மாறிவிட்டது என நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இறக்கிவிட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் நிரூபிக்க முயற்சிக்கிறது.

காலம் கடந்து நினைவுகள் மறைந்தாலும் காயங்கள் மறையாது என்பது போல, "தூத்துக்குடி மக்களின் மனதில் துப்பாக்கிச் சூடு சம்பவமும் ஸ்டெர்லைட் ஆலை மீதான எதிர்ப்பும் நிலை கொண்டுள்ளது' என்கிற உளவுத்துறை ரிப்போர்ட் நவம்பரில் தாக்கிய கஜா புயலை விட அதிக சேதாரங்களை போலீஸ் உயரதிகாரிகளின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது'' என்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ.யும் இதுவரை ஒரு போலீசாரை கூட கைது செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு தூத்துக்குடி மக்கள் மத்தியில் தீ போல பரவி வருகிறது. இவையெல்லாம் திட்டமிட்டு நடைபெறும் சம்பவங்கள். 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிர்வாகப் பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடங்கலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடுவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஊழியர்கள் ஆலைக்கு வந்து விட்டார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவான இந்த ரிப்போர்ட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது என வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார் ஸ்டெர்லைட் போராட்ட தளபதிகளில் ஒருவரான அக்ரி பரமசிவன்.

-தாமோதரன் பிரகாஷ், நாகேந்திரன்

nkn011218
இதையும் படியுங்கள்
Subscribe