Advertisment

பெயரில் மட்டுமே இதயம்! நல்லெண்ணைய் அதிபர் மீது குற்றச்சாட்டு!

idhayam

"சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க ஒருவரால், என் கட்சிக்காரர் கோபிநாத் கடுமையாக மிரட்டப் பட்டிருக்கிறார். கோடிகளில் நடந்த மோசடியும், நம்பிக்கைத் துரோகமும் சேர்ந்து, கோபிநாத்தின் குடும்பத்தை பெரிய அளவில் இக்கட்டில் தள்ளியுள் ளது. அந்தப் பிரபலம் மீது நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆவணங்களின் அடிப்படையில் உறுதியான ஆதாரங்கள் உள்ளன. அதுகுறித்துப் பேசவேண்டும்''’ என்றார் நம்மைத் தொடர்புகொண்ட சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார்.

Advertisment

"அவர் யார்?''’என்று கேட்டபோது, "இதயம் (நல்லெண்ணெய்) குழுமத்தின் தலைவர் வி.ஆர். முத்து''’என்று பதிலளித்தார். நேரில் சந்தித்தபோது, கோர்ட் ஆவணங்கள், சட்ட நோட்டீஸ்கள், கணக்கு விவரங்கள், சொத்து தொடர்பான பதிவுகள் உள்ளிட்ட பல ஆவணங்களை கத்தை கத்தையாக நம்முன் பரப்பினார்.

Advertisment

என்ன விவகாரம் இது?

கோயம்புத்தூரில் வசித்துவரும் கோபிநாத் தொடர்பான இந்த விவகாரம், கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்குள் நடந்த பங்குதாரர் தகராறாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னணியையும், காலகட்டங் களையும், ஆவணங்களையும் கவனித்தால், இது ஒரு கடுமையான பிரச்சினை என்பது தெளிவாகிறது.

"2012-2013 காலகட்டத்தில் தொடங்கிய ஒரு பார்ட்னர்ஷிப் தான், இன்று இவ்வளவு பெரிய சட்டப் போராட்டமாக மாறியுள்ளது. கோபிநாத் குடும்பத்துக்கு 40 சதவீத பங்குகளை வழங்க வேண்டும் என்பதற்கான தெளிவான ஒப்பந்தங்களும், அதற்கான கையெழுத்துகளும் உள்ளன.

இதயம் ஃபைனான்ஸ் என்பது ஆரம்பத்தில் ஒரு சஇஎஈ NBFC (Non-Banking Financial Company)  ஆக செயல்பட்ட நிறுவனம். பொதுமக்களிடமிருந்து வைப்புத் தொகை பெறாமல்

"சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க ஒருவரால், என் கட்சிக்காரர் கோபிநாத் கடுமையாக மிரட்டப் பட்டிருக்கிறார். கோடிகளில் நடந்த மோசடியும், நம்பிக்கைத் துரோகமும் சேர்ந்து, கோபிநாத்தின் குடும்பத்தை பெரிய அளவில் இக்கட்டில் தள்ளியுள் ளது. அந்தப் பிரபலம் மீது நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆவணங்களின் அடிப்படையில் உறுதியான ஆதாரங்கள் உள்ளன. அதுகுறித்துப் பேசவேண்டும்''’ என்றார் நம்மைத் தொடர்புகொண்ட சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார்.

Advertisment

"அவர் யார்?''’என்று கேட்டபோது, "இதயம் (நல்லெண்ணெய்) குழுமத்தின் தலைவர் வி.ஆர். முத்து''’என்று பதிலளித்தார். நேரில் சந்தித்தபோது, கோர்ட் ஆவணங்கள், சட்ட நோட்டீஸ்கள், கணக்கு விவரங்கள், சொத்து தொடர்பான பதிவுகள் உள்ளிட்ட பல ஆவணங்களை கத்தை கத்தையாக நம்முன் பரப்பினார்.

Advertisment

என்ன விவகாரம் இது?

கோயம்புத்தூரில் வசித்துவரும் கோபிநாத் தொடர்பான இந்த விவகாரம், கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்குள் நடந்த பங்குதாரர் தகராறாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னணியையும், காலகட்டங் களையும், ஆவணங்களையும் கவனித்தால், இது ஒரு கடுமையான பிரச்சினை என்பது தெளிவாகிறது.

"2012-2013 காலகட்டத்தில் தொடங்கிய ஒரு பார்ட்னர்ஷிப் தான், இன்று இவ்வளவு பெரிய சட்டப் போராட்டமாக மாறியுள்ளது. கோபிநாத் குடும்பத்துக்கு 40 சதவீத பங்குகளை வழங்க வேண்டும் என்பதற்கான தெளிவான ஒப்பந்தங்களும், அதற்கான கையெழுத்துகளும் உள்ளன.

இதயம் ஃபைனான்ஸ் என்பது ஆரம்பத்தில் ஒரு சஇஎஈ NBFC (Non-Banking Financial Company)  ஆக செயல்பட்ட நிறுவனம். பொதுமக்களிடமிருந்து வைப்புத் தொகை பெறாமல், கடன், நிதி சேவைகள், சொத்து அடமானக் கடன் போன்றவற்றில் கவனம் செலுத்தி இயங்கியது. பின்னாளில், பேங்க் மாதிரி ஒரு பெரிய நிதி நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்ற கனவோடு அது விரிவடைந்தது. இந்த வளர்ச்சிக்குப் பின்னால் கோபிநாத்தின் வங்கி அனுபவம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதனால்தான், இது ஒரு சாதாரண சிவில் தகராறு அல்ல; நிதி முறைகேடு மற்றும் பங்குதாரர் உரிமை மீறல் தொடர்பான வழக்காகப் பார்க்கப்படுகிறது.

கோபிநாத் தரப்பு அளித்துள்ள தகவல்படி, நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை உள்ளது. ஏழு பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள், பல குடோன்கள், கட்டடங்கள், விருதுநகர், சூலக்கரை, காமராஜர் பொறியியல் கல்லூரி அருகிலுள்ள 36 ஏக்கர் நிலம் உள்ளிட்ட முக்கிய சொத்துகளுக்கு, நம்பிக்கையின் அடிப்படையில் கோபிநாத்தும், அவருடைய மனைவியும் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த 25 மாதங்களாக கோபிநாத்துக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. லாபத்தில் கோபிநாத் தரப்பினருக்கு வர வேண்டிய பல கோடி ரூபாயும் மறுக்கப்பட்டுள்ளது. நிறுவனச் சொத்துக்கள் குறைந்த விலையில் மாற்றப்பட்ட தாகவும், கணக்குகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், கோபிநாத் குடும்பத்தை சட்ட ரீதியாகவும் காவல் துறை மூலமாகவும் அழுத்தம் கொடுத்து ஒதுக்க முயற்சி செய்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போது சட்டத்தின் முன் பரிசீல னையில் உள்ள விஷயங்கள்''’என்றார் ராஜ்குமார்.

இதையடுத்து கோபிநாத் நம்மிடம் பேசினார்.

"நான் ஆரம்பத்துல பேங்க்ல வேலை பார்த்தவன். லட்சங்களில் சம்பளம், செட்டிலான வாழ்க்கை. லோன், ஃபைனான்ஸ், ஆடிட், RBI நடைமுறைகள் எல்லாம் எனக்கு நல்லா தெரியும். அந்த நேரத்துல தான் முத்து என்கிட்ட பேசினார். முதல்ல ‘ஹெல்ப் பண்ணுங்கன்னு சொன்னார். நான் வேலை பார்த்த எச்.டி.எப்.சி. பேங்க்ல இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்துக்கு குறைஞ்ச (7 பெர்சன்ட்) வட்டில ரூ.50 கோடிக்கு லோன் வாங்கிக் கொடுத்தேன். டாக்குமெண்ட்ஸ் எல்லாம் நான்தான் பார்த்தேன். அப்புறம், "நாம சேர்ந்து பெரிய நிதி நிறுவனம் பண்ணலாம். அதுல நீங்க எம்ப்ளாயி இல்ல, பார்ட்னர்'னு சொன் னார். அந்த நம்பிக்கையில தான் 2013-2014ல் பேங்க் வேலையை விட்டேன். பிறகுதான்  

இதயம்-ஏ பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம்  வேகமா வளர்ந் துச்சு. தமிழ் நாடு முழுக்க கிளைகள் ஆரம்பிச் சோம். 2018-19 வரைக்கும் எல்லாமே சரியா போயிட்டு இருந்துச்சு. 70-க்கும் மேல கிளைகள், துணை நிறுவனங்கள், கோடிக்கணக்கான சொத்து கள்- எல்லாத்தையும் நான் தான் ரன் பண்ணினேன்.

idhayam1

ஆனா 2020-க்கு பிறகு நிலைமை மாறிருச்சு. கொரோனா காலத்துல கன்சல்டன்ட் பேச்சை கேட்க ஆரம்பிச்சாங்க. ‘இப்ப பணம் கொடுக் கத் தேவையில்லைன்னு முடிவு பண்ணி, சம்பளத்தை நிறுத்திட்டாங்க. கணக்கு கேட்டா தரமாட்டோம். ‘செட்டில்மெண்ட் பண்ணு றோம்னு சொல்லி கையெழுத்து வாங்கினாங்க. ஆனா அதுக்கப்புறம் எதுவுமே சொன்ன மாதிரி நடக்கல. என் னோட உரிமையா கோரிய 40 சதவீத பங்கு கள் பற்றி பேச ஆரம்பிச்சதும் சூழ்நிலை ரொம்பவே மாறிச்சு. அப்புறம் தான் மிரட்டல் ஆரம்பிச்சது. வக்கீல், ஆடிட்டர் எல்லாரும் வந்து, ‘உனக்கு ஒண்ணும் இல்லை. கையெழுத்து போட்டுட்டு போ. இல்லன்னா போலீஸ் கேஸ் வரும்ன்னு சொன்னாங்க. என்னோட அம்மா, மனைவி பேர்ல கூட புகார் கொடுக்க முயற்சி நடந்துச்சு.

நிறுவனத்தோட சொத்துகள், சம்பளம், லாபப் பங்கு பற்றி பேச்சு வந்தப்ப, எங்களுக்கு வர வேண்டியது பல கோடி ரூபாய்னு சொன்னேன். ஆனா நான் பணம் வேண்டாம் சார். கணக்கை லீகலா முடிச்சு, எங்களுக்கு உரியதை கொடுத்துடுங்கன்னுதான் கேட்டேன். அதுக்கு ‘"பொய் வழக்குல உன்னை சிக்க வச்சிருவோம். எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் போலீஸ் எங்க கட்டுப்பாட்டுலதான் இருக்கும். இதை வெளிய சொன்னா உயிரோடு இருக்க முடியாது'ன்னு ரொம்பவே கடுமையா பேசினாங்க. அப்ப உள்ளுக்குள்ள எனக்கு,  இவர்களுக்கெல்லாம் இதயமே இல்லையா? நெஞ்சில் ஈரம் இல்லையா? என்ற ஆத்திரம் வந்துச்சு.  அனைத்து மட்டத்திலும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு நானெல்லாம் எம்மாத்திரம்? எங்களுக்கு  நியாயம் கிடைக்கலங்கிற தவிப்போட என் மனைவி அகிலா, இதயம் முத்து வீட்டுக்கு முன்னால காத்துக்கிடந் தது எல்லாம் ரொம்பக் கொடு மைங்க. உள்ளேகூட விடல. அத னாலதான் சட்ட ரீதியாக நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கிறேன்''’ என்றார் ஆதங்கத்துடன்.  

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதயம் குழுமத்தின் தலைவர் வி.ஆர்.முத்துவிடம் விளக்கம் கேட்டபோது, "இதையெல்லாம் பத்திரிகைல கொண்டு வரணுமா?'' என்றார் ஆதங்கத்துடன். 

"உங்களால் பாதிப்புக்கு ஆளான கோபிநாத் பேட்டி வாயிலாக தனது குமுறலை வெளிப் படுத்தியிருக்கிறாரே?''’என்றதும், "ஆக்சுவலா எல்லாமே கோர்ட்டில்தான் இருக்கு. கோர்ட்ல இருக்கும் போது இதைப்பற்றி பேசக் கூடாதுங்கிறது என்னுடைய கருத்து''’என்று கூறி முடித்துக் கொண்டார்.

இது  தற்போது கோர்ட் டிலும், விசாரணையிலும் இருக்கிறது. அதனால் அதி காரப்பூர்வ தீர்ப்பு வரும்வரை இவை எல்லாம் புகார் தரப் பினர் சொல்லும் குற்றச் சாட்டுகளாகவே பார்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில்,  ஒரு சஇஎஈ ஆக ஆரம்பித்து,  ‘பேங்க்’ ஆக வளர வேண்டும் என்ற கனவுடன் இயங்கிய ஒரு தனியார் நிறுவனத்துக் குள், பங்குதாரர்களின் உரி மைகள் எப்படி கையாளப் பட்டன என்ற பெரிய கேள்வியை, இந்த விவகாரம்  பொதுமக்களிடையே எழுப்புகிறது.                      

-அதிதேஜா


_________
சமூக சேவகர் முகமூடியின் பின்னால்?

பொதுவெளியில் அவர் எப்போதும்  “பெரிய மனிதர்தான். சமூக சேவை, அர்ப்பணிப்பு என்ற வார்த்தைகள் இல்லாமல் அவருடைய மேடைப் பயணம் அமைந்ததில்லை. விழாக்கள், பாராட்டு உரைகள், விருதுகள், பட்டங்கள் -இவையெல்லாம் அவரது பொதுமுகமாக மாறின. புகைப்படங்களிலும் பேனர்களிலும் தோன்றிய அந்த முகம், அவரது அடையாளம் ஆனது. ஆனால் அந்த வெளிப்படையான மரியாதைக்குப் பின்னால், புகழ் மீதான ஆசையே இருந்தது. புகழ் இருந்தால்தான் மதிப்பு” என்ற மனநிலையே அவருடைய செயல்பாடுகள் அனைத்தையும் இயக்கியது. பட்டங்கள் வாங்கப்பட வேண்டியவை, விருதுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டியவை, நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட வேண்டியவை -எல்லாம் அந்தப் புகழை நிலைநாட்டுவதற்காகவே. சமூக சேவை ஒரு செயலாக இல்லை; அது ஒரு காட்சியானது.  

வெளியில் கைதட்டல் முக்கியம். உள்ளே கேள்விகள் தேவையில்லை. கேள்வி கேட்கும் நபர் எதிரியாகிவிடுகிறார்.  கேள்வி எழுப்புவது தவறு, உரிமை கேட்பது துரோகம் என்ற அளவுக்கு, அதிகாரம் தனக்கே உரியது என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றியிருக்கிறது.  அதனால்  சமூக சேவகர் என்ற போர்வையின் பின்னால், தன்னை எதிர்த்தவர்களை நசுக்கத் தயங்காத அதிகார மனநிலையே மேலோங்கியிருக்கிறது. இதனால், சமூக சேவகர் என்ற முகமூடியின் பின்னால், விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் ஏற்க மறுக்கும் மனநிலை கொண்டவராக இருக்கிறார்.  

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெளியில் சமூக நலன் பேசும் ஒருவர், தன்னை முழுமையாக நம்பி வந்தவர்களுக்கு அடிப்படை நீதி கூட வழங்கவில்லை என்றால், அந்தப் புகழ் எதற்காக?

nkn040226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe