மிழகத்தில் வடஇந்தியரின் மறைமுக குடியேற்றம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அப்படி வருவோருக்கு வசதியாகத்தான் "ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழக மக்களுக்கு கிடைக்கிற ரேஷன் பொருட்களை கபளீகரம் செய்யும் வகையிலான இந்தத் திட்டத்தை தமிழக அரசும் ஆதரிக்கும் நிலைக்கு சென்றிருப்பதாகவே தெரிகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி யிருக்கிறது.

rationcard

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தென்னிந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வட இந்தியரின் எண்ணிக்கை 77.5 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அது இப்போது மேலும் பல லட்சங்கள் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் வடஇந்தியரின் எண்ணிக்கை 30 லட்சம் என்று ஒரு கணக் கெடுப்பு தெரிவிக்கிறது. ஏற்கெனவே தனியார் தொழில் துறைகளிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் வடஇந்தியர் ஆதிக்கம் அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன.

veluஇன்றைய நிலையில் எலக்ட்ரிகல் உள்ளிட்ட ஐந்து தொழில்துறைகளின் சங்கத் தலைவர்களாக வெளி மாநிலத்தவர்தான் இருக்கிறார்கள் என்று பா.ம.க. வழக்கறிஞர் கே.பாலு ஒருமுறை கூறியிருந்தார். தமிழகத்தின் நகை அடகுத்தொழில் 95 சதவீதம் மார்வாடிகள் வசம் இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த மறைமுகக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் முன்னேறிய மாநிலமாக கருதப்படும் தமிழகத்தின் சமூகநலத் திட்டங்களை சீர்குலைக்கவுமே மத்திய அரசு "ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு' திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டி ருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்தத் திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்று ஒரு கருத்து பரவுகிறது. ஆனால், அதையும் தாண்டி, அந்தந்த மாநில மக்கள் இப்போது அனுபவித்துவரும் ரேஷன் வசதிகளை வெளிமாநிலத்தவர் அபகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், இது தமிழகத்துக்கு கேடு என்பதை சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சம் மக்கள் தொகைக்கு, 1 கோடியே 99 லட்சத்து 53 ஆயிரத்து 682 குடும்ப அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. இதிலேயே இங்கு வேலைக்காக வரும் வடஇந்தியர்கள் பெற்றுள்ள ரேஷன் கார்டுகளும் அடங்கும். தற்காலிகமாக குடியேறும் இவர்கள் போலியான சான்றிதழ்களை தயார்செய்து குடும்ப அட்டைகளையும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் பெறுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதையும் கவனத்தில் கொண்டால், மத்திய அரசின் இந்த திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சதி இருப்பதாகவே கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் வெவ்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்கம் வெவ்வேறாக உள்ளது. இந்நிலையில் பொது வினியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சிப்பதன் மூலம் நாடு முழுவதும் ஒரே உணவுப் பழக்கத்தை திணிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

மேலோட்டமாக பார்த்தால் ஒரே ரேஷன்கார்டைக் கொண்டு நாடு முழுவதும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்பது நல்ல ஏற்பாடுதானே என்று தோன்றும். ஆனால், பொதுவினியோகத் திட்டத்தில் முதன்மையான மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறும் மக்களை ஊக்குவிக்கும் வகையிலேயே மத்திய அரசு இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியது ""வடமாநிலங் களில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமிழகத்திற்கு வருகிறார்கள். fffஅவர்கள் ஹோட்டல் பணிகளில் இருந்து சலூன்கள்வரை வேலை செய்கிறார்கள். கட்டுமானப் பணிகளை பெரும்பகுதி அவர்கள்தான் ஆக்கிரமிக்கிறார்கள். அவர்களை குறிவைத்தே மத்திய அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்த துடிக்கிறது. ரேஷன் உணவுப்பொருள் வினியோகம் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது. கோதுமை மற்றும் அரிசி அளவிலும் வேறுபாடு இருக்கும். அப்படி இருக்கும்போது "ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு' என்ற திட்டம் நடைமுறை சாத்தியமற்றது. மேலும் இது, மாநில அரசின் அதிகாரத்தை பறித்து, அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்ப தாகும். பொதுவினி யோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரேவிதமான உணவுப் பழக்கத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பா.ஜ.க. அரசின் உள் நோக்கம் மிகப்பெரிய பிரச் சனையை உருவாக்கும்'' என்றார்.

மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும்போது,…""ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு என்ற திட்டம் குறித்து மத்திய அரசு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படும். தற்போதுகூட தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் அவர்களுடைய மாநிலத்தில் உள்ள அட்டைகளை ரத்து செய்த பிறகுதான் வழங்குகிறோம். மத்திய அரசின் புதிய திட்டத்தில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வுசெய்து, தற்போதுள்ள வினியோகமுறை பாதிக்காத வகையிலேயே செயல்படுத்துவோம்'' என்றார்.

அதாவது, தமிழக அரசு எதிர்க்காது என்பதே அமைச்ச ரின் பதிலாக இருக்கிறது.

-அருண்பாண்டியன்