Advertisment

அறநிலையத்துறை கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே! -விவாதத்தைக் கிளப்பிய விளம்பரம்!

dd

மிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க. வந்ததிலிருந்தே இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின் றன. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக ஏற்கனவே 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி இயங்கிவருகின்றன. சட்டசபை மானியக் கோரிக்கையின்போது, இந்த ஆண்டுக்குள் மேலும் 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்தார்.

Advertisment

hh

அதன்படி, சென்னை கொளத்தூரில் தொடங் கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங் களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பில், உதவிப்பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தேர்வில் இந்துக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக நடத்தப்படும் கல்லூரி என்றாலும், கல்லூரி நிர்வாகத்தில் இந்திய அரசின் மதச்சார்பின்மை கோட்பாடுதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், இந்த அறிவிப்பு, இந்திய அரசியலமைப் புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த அறிவிப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும

மிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க. வந்ததிலிருந்தே இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின் றன. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக ஏற்கனவே 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி இயங்கிவருகின்றன. சட்டசபை மானியக் கோரிக்கையின்போது, இந்த ஆண்டுக்குள் மேலும் 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்தார்.

Advertisment

hh

அதன்படி, சென்னை கொளத்தூரில் தொடங் கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங் களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பில், உதவிப்பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தேர்வில் இந்துக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக நடத்தப்படும் கல்லூரி என்றாலும், கல்லூரி நிர்வாகத்தில் இந்திய அரசின் மதச்சார்பின்மை கோட்பாடுதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், இந்த அறிவிப்பு, இந்திய அரசியலமைப் புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த அறிவிப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின்கீழ் நடத்தப்பட அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.

Advertisment

அதேநேரத்தில், இக்கல்லூரியின் பணி நியமனங்கள் குறித்து உதவி விரிவுரை யாளர்களுக்கான விண்ணப்பம் கோரும் ddவிளம்பரத்தில் "இந்துக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும்' என்று கூறி, ‘ஞய்ப்ஹ் ஐண்ய்க்ன்ள் என்று போட்டிருப்பது மிகவும் அதிர்ச்சிக் குரியது. அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கும் முற்றிலும் விரோதமான, தவறான செய்கை. இது இந்துக் கோவில் பணிக்கான வேலை அல்ல. இது அனைவருக்கும் கல்வி சொல்லிக் கொடுக்கும் கல்லூரிப் பணி. அரசுப் பணி. அனைத்து மத மாண வர்களும், மதமற்றவர்களும்கூட அக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் உரிமை பெற்றவர்கள்தானே!

அதுபோலவே வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில், அனைத்து மதத்தவரும் விண்ணப்பிக்க உரிமை உண்டு.

இது அரசு கல்லூரி; இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு அரசின் துறை. கோவில் பணி களுக்கு அர்ச்சகர் நியமனங்களுக்கு அந்நிபந்தனை பொருந்தக்கூடும்; ஆனால், கல்லூரி விரிவுரையாளர் களுக்கு அது பொருந்தாது'' என்று தெரிவித்திருப்ப துடன் 1928-க்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்களும் முஸ்லிம்களும் சேர முடியாத நிலை இருந்ததையும், அதனை அன் றைய திராவிட ஆதரவு ஆட்சி மாற்றிக் காட்டிய தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் கி.வீரமணி.

இந்த அறிவிப்பு குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 1959-ம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டத்தின்படியே கல்லூரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும், ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படுவதாகவும் விளக்கியுள்ளார். தனது விளக்கத்துக்கு ஆதார மாக அவர், அச்சட்டத்தின் பிரிவு 10-ஐ மேற்கோள் காட்டியுள்ளார்.

dd

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் விளக்கம் குறித்து முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமனிடம் கேட்டபோது, "தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 (ஐத&ஈஊ ஆஸ்ரீற்), பிரிவு 10-ஐ சுட்டிக் காட்டித்தான் இந்த அறிவிப்பு வெளி யிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த பிரிவில், அறநிலையத் துறை ஆணையர், அலுவலர்கள், அர்ச்சகர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்துக்களை நியமிக்க வேண்டும், கோவில் அபிவிருத்திக்கான செயல்பாடுகளுக்கு இந்துக்களை நியமிக்க வேண்டும் என்றுதான் குறிப்பிடுகிறது. ஆனால் பொதுமக்களின் கல்விச்சேவைக்கான பள்ளி, கல்லூரிகளின் நியமனங்களுக்கு இது பொருந்தாது. ஏனெனில், இந்த பணிகள், மதம் சார்ந்த பணிகளோடு தொடர்புடையவை அல்ல. கல்வி, மருத்துவமனை, தங்குமிடங்கள், பேருந்துப் போக்குவரத்து போன்றவற்றைச் செயல்படுத்தும் போது அந்த சட்ட விதிமுறை பொருந்தாது.

அதேபோல் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர் கள், பேராசிரியர்கள், ஆசிரியரல் லாத ஊழியர்களின் பணி நியமனம், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அற நிலையக் கொடைகள் சட்டத்தின்கீழ் வரக்கூடி யது கிடையாது. தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர் களுக்கான சட்டத்தின்கீழ் வராது. இந்த ஆசிரி யர்கள், பேரா சிரியர்கள், கோவில் ஊழியர்களாகக் கருதப்படுவதில்லை. கோவில் நிர்வாகப்பணி தொடர்பாக நியமனம் செய்யப் படுபவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்று தகுதி நிர்ணயிக்கலாம். இதை யாரும் ஆட்சேபணை செய்யப்போவதில்லை. ஆனால், கோவில் நிர்வாகத்தின் மூலம், பொதுமக்களுக்கான சேவை அமைப்புகளை உருவாக்கும்போது அப்படியெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. உதாரணத்துக்கு, திருப்பதி கோவில் நிர்வாகத்தின் சார்பில் பேருந்துகளை இயக்கு கிறார்கள். அதில், பேருந்து ஓட்டுநர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டுமென்றோ, பேருந்தில் பயணிப்பவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டுமென்றோ கட்டாயப்படுத்த முடியுமா?

ddஇது, இந்து சமய அறநிலையத் துறையால் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி கிடையாது. இதேபோல ஏற்கனவே கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கப்பட்டு பல்லாண்டு களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் இந்துக்கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவரவில்லை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரி யர்கள் அங்கெல்லாம் பணியாற்றுகிறார்கள். அதேபோல, மற்ற மதத் தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் இந்து மதத்தைச் சேர்ந் தவர்கள் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கி றார்கள். இந்த விவகா ரத்தில் ஆசிரியர் சங் கங்களும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மருத்துவமனை கட்டினால் அங்கே பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவார் களா? நோயாளிகளும் இந்துக்களாகத்தான் இருக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்து வார்களா? கிறிஸ்தவர்களின் சி.எம்.சி. மருத்துவமனைக்கு நான் சென்றிருந்தேன். அங்கு இந்து மதத்தைச் சேர்ந்த மருத்து வர்கள் நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். அங்கெல்லாம் மதரீதியான கட்டுப்பாடு கிடையாது. அதுவே கிறிஸ்துவ தேவாலயத் திற்குள் ஒரு பொறுப்பு அளிக்கும்போது அவர் கிறிஸ்தவராக இருக்க வேண்டு மென்று எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கிறது. அதுபோலவே இந்த நியமனத் திலும் 'இந்துக்கள் மட்டுமே விண்ணப் பிக்கலாம்' என்ற விதிமுறையை நீக்க வேண்டும்'' என்றார்.

கபாலீஸ்வரர் கல்லூரியில் பேராசிரியர் கள், அலுவலர்கள் நியமன விவகாரத்தில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எவ்விதக் கருத்தும் பகிராமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை, இந்த விவ காரத்தில் தமிழ்நாடு அரசு தங்கள் நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டால் மட்டுமே குரல் எழுப்பி அரசியல் செய்யக்கூடும். சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படக்கூடிய அரசு, இந்த அறிவிப்பைத் திரும்பப்பெறுவதே சமூக நீதிக்கான பயணத்தில் குறுக்கிடும் தடையைக் களைவதாக இருக்கும்.

nkn231021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe