Advertisment

ராங்கால் ஒரே எதிரி பா.ஜ.க. இந்தியா கூட்டணி வியூகம்! அரசியல் புள்ளிகளுக்கு கிளுகிளு உபசாரம்!

rr

"ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் அனைவரும், கஷ்டங்களை எல்லாம் மறந்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளை மகிழ்வோடு கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ராஜ்பவனில் மட்டும் கரும்பு இனிக்கவில்லையாம்.''”

Advertisment

"ஆமாம்பா, கவர்னர் ஆர்.என்.ரவி, நேரத்துக்கு ஒரு முடிவை எடுக்கிறார் என்றும். அவர் ஒரு தெளிவான மனநிலையில் இருப்பதே இல்லை என்றும் அங்கிருக்கும் அதிகாரிகள் புலம்பறாங்களே?''”

Ravi

"உண்மைதாங்க தலைவரே, அது எதனாலன்னு சொல்றேன். தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாதிக்கிற மாதிரி ஏடாகூடமாக நடந்துவரும் கவர்னர் ரவிக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போனது. நீதிமன்றமும் கண்டிப்பாக சில அறிவுறுத்தல்களை கவர்னருக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து சில விசயங்களில் தன் பிடிவாதத்தைத் தளர்த்திய கவர்னர், மறுபடியும் ’முருங்கை மர வேதாளமா’ மாறி னார் என்றும், அவர் தெளிவான மன நிலையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும் ராஜ்பவன் அதிகாரிகள் புலம்பறாங்க. குறிப்பா இப்ப, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜி னாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைமை வழக்கறிஞராக ராமனை நியமித்தது தமிழக அரசு. இது குறித்த கோப்பு, கவர்னரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்குச் சென்றபோது, டெல்லியை கலந்து ஆலோசித்துவிட்டுதான் இதுபற்றி முடிவெடுப் பேன்னு முதல்ல இழுத்தடித்த கவர்னர், திடீர்னு என்ன நினைத்தாரோ, கையெழுத்தைப் போட்டு விட்டாராம். இது ஒருபக்கம்னா, இப்போது தலைமை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டி ருக்கும் ராமன், பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவராம். தி.மு.க. அமைச்சர்கள் பழைய வழக்குகளில் சிக்கியிருக்கும் நிலையில் அவரது நியமனம், விமர்சனங்களை ஏற்படுத்தி வருது.''”

"சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு உச்சநீதிமன்றம் விலக்களித்திருக்கிறதே?''

rr

"ஆமாங்க தலைரே, பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்காக 30 நாட்கள் அவகாசத்தை யும் நீதிமன்றம் கொடுத்திருந்தது. அதனால் அவர் உடனடியாகக் கைதாவதில் இருந்து தப்பித்தார். எனினும் அப்பீல் நடைமுறைகளில் அவருக்கு உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த 30 நாள் அவகாசம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், காவல் துறையில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தது. இதன்மீதான விசாரணை

"ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் அனைவரும், கஷ்டங்களை எல்லாம் மறந்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளை மகிழ்வோடு கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ராஜ்பவனில் மட்டும் கரும்பு இனிக்கவில்லையாம்.''”

Advertisment

"ஆமாம்பா, கவர்னர் ஆர்.என்.ரவி, நேரத்துக்கு ஒரு முடிவை எடுக்கிறார் என்றும். அவர் ஒரு தெளிவான மனநிலையில் இருப்பதே இல்லை என்றும் அங்கிருக்கும் அதிகாரிகள் புலம்பறாங்களே?''”

Ravi

"உண்மைதாங்க தலைவரே, அது எதனாலன்னு சொல்றேன். தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாதிக்கிற மாதிரி ஏடாகூடமாக நடந்துவரும் கவர்னர் ரவிக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போனது. நீதிமன்றமும் கண்டிப்பாக சில அறிவுறுத்தல்களை கவர்னருக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து சில விசயங்களில் தன் பிடிவாதத்தைத் தளர்த்திய கவர்னர், மறுபடியும் ’முருங்கை மர வேதாளமா’ மாறி னார் என்றும், அவர் தெளிவான மன நிலையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும் ராஜ்பவன் அதிகாரிகள் புலம்பறாங்க. குறிப்பா இப்ப, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜி னாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைமை வழக்கறிஞராக ராமனை நியமித்தது தமிழக அரசு. இது குறித்த கோப்பு, கவர்னரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்குச் சென்றபோது, டெல்லியை கலந்து ஆலோசித்துவிட்டுதான் இதுபற்றி முடிவெடுப் பேன்னு முதல்ல இழுத்தடித்த கவர்னர், திடீர்னு என்ன நினைத்தாரோ, கையெழுத்தைப் போட்டு விட்டாராம். இது ஒருபக்கம்னா, இப்போது தலைமை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டி ருக்கும் ராமன், பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவராம். தி.மு.க. அமைச்சர்கள் பழைய வழக்குகளில் சிக்கியிருக்கும் நிலையில் அவரது நியமனம், விமர்சனங்களை ஏற்படுத்தி வருது.''”

"சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு உச்சநீதிமன்றம் விலக்களித்திருக்கிறதே?''

rr

"ஆமாங்க தலைரே, பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்காக 30 நாட்கள் அவகாசத்தை யும் நீதிமன்றம் கொடுத்திருந்தது. அதனால் அவர் உடனடியாகக் கைதாவதில் இருந்து தப்பித்தார். எனினும் அப்பீல் நடைமுறைகளில் அவருக்கு உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த 30 நாள் அவகாசம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், காவல் துறையில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தது. இதன்மீதான விசாரணை 12ஆம் தேதி வந்தபோதுதான் சரணடைய விலக்களித்து,பொன்முடி தரப்பின் டென்சனைக் குறைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.''”

"ஆனாலும் பொன்முடியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி நீங்கவில்லையே?''”

"உண்மைதாங்க தலைவரே, சரணடைவதில் விலக்கு கோரி பொன்முடி தரப்பு தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு வந்தபோது, பொன்முடிக்காக வும் அவரது மனைவிக்காகவும் சீனியர் கவுன்சில் களும், அவர்களது ஜூனியர்களும் ஏகத்துக்கும் நீதிமன்றத்தில் குவிந்திருந்ததை கண்டு, உச்சநீதி மன்ற நீதிபதி சதீஷ் சந்திரசர்மா, "என்ன? அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கா இது? இவ்வளவு சீனியர் கவுன்சில்கள் வந்திருக்கிறார்களே?'’என ஆச்சரியப்பட்டிருக்கிறார். இதன்பின் வழக்கு ஆவணங்களைப் புரட்டிய அவர், பொன்முடியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சரணடை வதில் இருந்து அவருக்கும் அவர் மனைவிக்கும் விலக்களிப்பதாக அறிவித்தார், வழக்கும் தள்ளி வைக்கப்பட்டது. சரண்டைவதற்கு விலக்களிக் களிக்கப்பட்டாலும், தீர்ப்பும் தண்டனையும் ரத்தாக வில்லை. தீர்ப்பிற்கு தடையும் கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் 90 நாட்கள் அவகாசம் மட்டுமே பொன் முடிக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு வழங்கப் பட்ட தண்டனைக்கு ஸ்டே கிடைத்தால் மட்டுமே பொன்முடியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி, சற்று விலகும் என்பதுதான் இப்போதைய நிலை.''”

"பரபரப்பான சூழலில் இந்தியா கூட்டணி யின் கூட்டம் நடந்திருக்கே?''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, மோடி தலைமையி லான ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்தும் நோக்கத் தோடு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘இந்தியா கூட்டணியின் ஐந்தாவது ஆலோசனைக் கூட்டம் 13ஆம் தேதி உற்சாகமாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் அலசப்பட்டன. அதோடு இந்த இந்தியா கூட்ட ணிக்கு தலைவராக காங் கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட் டார். "நமக்கு ஒரே எதிரி பா.ஜ.க.; ஒரே இலக்கு வெற்றி'’என்ற ரீதியி லேயே, இதில் பங்கேற்ற அத்தனை தலைவர்களும் உறுதிபடப் பேசியிருக் கிறார்கள். இந்தியா கூட்டணியின் தொகுதி உடன்பாடு குறித்து, பொங்கல் முடிந்த பிறகு பேச்சுவார்த்தை நடக்கும் என்று தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.''”

"தமிழக அளவில் தேர்தல் பொறுப்பாளர் களை காங்கிரஸ் நியமித்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தனித் தனியாக பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறது காங்கிரஸ். இதேபோல, ஒவ்வொரு மாநிலத் திலும் தொகுதிப் பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். இப்படி நியமிக்கப் பட்ட தொகுதிப் பொறுப்பாளர் களை கடந்த 11ஆம் தேதி டெல்லிக்கு அழைத்து, ஆலோசனைக் கூட்டத் தை நடத்தியிருக் கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே. அதில் தமிழகத் தொகுதி பொறுப் பாளர்களும் கலந்துகொண்டி ருக்கிறார்கள். அப்போது அவர் களிடன் விவாதித்த கார்கே, தமிழ் நாட்டில் நமக்கும் 8 எம்.பி.க்கள் இருக் கிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவர் கூட தங்கள் தொகுதி யில் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவில்லை. மக்கள் மனதில் இவர்களால் இடம் பிடிக்க முடியவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடானது. "8 எம்.பி.க்கள் இருந்தால் ஒரு கட்சி எந்த அளவுக்கு அசுர வளர்ச்சி அடையலாம் தெரியுமா?' என்றெல்லாம் விமர்சித்து, அவர்களைத் திகைக்க வைத்திருக் கிறார். மேலும், எப்படி தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வகுப்பு எடுத்தாராம்.''”

"பா.ஜ.க.வும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அது தன் முதல் வேட்பாளர் பட்டியலை இந்த மாத இறுதியில் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது. அதற்காக வேட்பாளர் களை அலசிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், வடசென்னையில் சீட் கேட்டிருக்கும் வழக்கறிஞர் பால்கனகராஜோடு, ஃபெப்சி சிவா, ஏ.என்.எஸ்.பிரசாத் ஆகியோர் முண்டியடித்து வருகிறார்கள். இவர்களுக்கிடையில் வடசென்னை யின் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப் பினரான நடிகை குஷ்புவின் பார்வையும் விழுந் திருக்கிறதாம். அதற்காக அவர் டெல்லித் தொடர்பு கள் மூலம் மூவ் செய்கிறாராம். அவர் எதற்கு வடசென்னையைக் குறிவைக்க வேண்டும்? என்று கேட்டால், அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, தொழிலாளர்கள் உள்பட நலிவடைந்த மக்கள் அதிகமுள்ள தொகுதி அது என்றும், அவர்களிடம் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதாகவும் குஷ்புக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதை நம்பிதான் அவர் தென்சென்னை, மத்திய சென்னையை எல்லாம் தவிர்த்துவிட்டு வடசென்னையின் மீது கண் வைத்திருக்கிறாராம்.''”

"தென்சென்னை தொகுதிக்கும் பா.ஜ.க.வில் பலமான போட்டி நிலவுதேப்பா?''”

rr

"ஆமாங்க தலைவரே, அதுக்குக் காரணம் பிராமணர்கள் அதிகமுள்ள மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, தென்சென்னையில் வருவதால், அங்கே அதிகமாக ஓட்டு வாங்கலாம் என்று பா.ஜ.க.வில், ஆளாளுக்கு கனவு காணுகிறார்கள். குறிப்பாக இந்தத் தொகுதியை, கரு.நாகராஜனும் எஸ்.ஜி.சூர்யாவும் கேட்பதோடு, இதற்காக வலைத்தளங்களில் ஒருவரோடு ஒருவர் வாள் சுழற்றி வருகிறார்களாம். அதேபோல் புதுவை கவர்னர் தமிழிசையோ தூத்துக்குடி, நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றை எனக்குக் கொடுங் கள். இல்லையெனில் நானும் தென்சென்னையில் நிற்கிறேன் என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைமை யிடம் கேட்டுக்கொண்டிருந்தாராம். அ.தி.மு.க. வுடன் கூட்டணி முறிந்ததாக எடப்பாடி அறிவித்த தும், அவரிடம் தயக்கம் தெரிந்ததாம். இதைக் கவனித்த பா.ஜ.க. மேலிடம், ’எதற்கு ரிஸ்க் எடுக்க ஆசைப்படுகிறீர்கள்? நீங்கள் கவர்னராகவே தொட ருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது. கட்சிக்கும் நல்லது.’ என்று சொல்லிவிட்டதாம். இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையப் பொறுப்பில் இருந்து, ஊழல் புகாரால் அந்தப் பதவியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஆர்.ஜி.ஆனந்த், அண்ணா மலைக்கு ’கனமாக’ மொய் எழுதி, திருச்சி தொகுதி தேர்தல் பொறுப்பாளராக ஆகி யிருக்கிறாராம்.''”

"எடப்பாடித் தரப்பில் இருந்து பா.ஜ.க. அட்டாக் ஆரம்பித்திருக்கிறதே?”

"ஆமாங்க தலைவரே, இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததோடு , அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர முயன்றுவருகிறார் எடப்பாடி. எனினும் பிரதமர் மோடியையோ பா.ஜ.க.வையோ யாரும் விமர்சிக்கக்கூடாது என்று தன் கட்சியினருக்கு வாய்ப்பூட்டையும் போட்டு வைத்திருந்தார். இதனால் எடப்பாடி பா.ஜ.க.விடம் பயந்து போய் பம்முவதாக ஓ.பி.எஸ். தரப்பினர் கிண்டலடித்து வந்தனர். இந்த நிலையில், எடப்பாடி தரப்பிலிருந்து முதல்முறையாக, கே.பி.முனுசாமி இப்போது மோடிக்கு எதிராக வாய் திறந்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "மோடியை இந்தியாவின் பிரதமர் என்கிறார்கள். அப்படிப் பட்டவர் ஏன் தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கிறார்? தமிழக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் ஏன் நழுவுகிறார்? அவர் பிரதமர் போல் நடந்துகொள்ளவில்லை. இப்போதும் அவர் குஜராத் முதல்வர் போலத்தான் நடந்துகொள்கிறார்'’ என்று ஏகத்துக்கும் அட் டாக் செய்திருக்கிறார். "எடப்பாடி சொல்லித் தான் முனுசாமி இப்போது விமர்சனத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அடுத்து எடப்பாடியும் பா.ஜ.க. மீது அட்டாக் அணுகுண்டை வீசுவார்' என்று அ.தி.மு.க. தரப்பு சொல்கிறது. இது பா.ஜ.க. தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது.''”

"அமலாக்கத்துறை எவ்வளவோ அதிரடி காட்டியும் மணல்குவாரிகள் சைலண்டாக இயங்கிவருகின்றதே?’''’

rr

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தின் பிரபல மணல் புள்ளிகளான ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன், ராஜ் குமார், நந்தகுமார் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி யிருந்த நிலையில், சம்மனைக் கண்டு பதறிய மணல் புள்ளிகள், ’"எங்களுக்கு சம்மன் அனுப்பும் உரிமை அமலாக்கத்துறைக்கு இல்லை'’ என்று அவசரம் அவசரமாக நீதிமன் றத்தை நாடினர். நீதிமன்றமும் அந்த சம்மன் களுக்கு உடனே தடை விதித்தது. எனினும், இவர்களில் கரிகாலன் மட்டும் அமலாக்கத் துறையின் சம்மன் பற்றி கவலைப்படவோ, நீதிமன்றத்தில் தடைகேட்கவோ இல்லை. கொஞ்சமும் பயமில்லாமல் அவர் தனது குவாரித் தொழிலை ’ஜாம்ஜாம்’ என்று நடத்தி வருகிறாராம். எதனால் இப்படி என விசா ரித்தபோது, "அரசியல் புள்ளிகள் பலரையும் வெயிட்டாக கவனிப்பதோடு, கிளுகிளு உப சாரங்கள் மூலமும் வளைத்து வைத்திருக்கிறார். அதனால் அவர்கள் இருக்கும் தைரியத்தால் தான் அவர் தெம்பாக இருக்கிறார்' என்கிறார்கள் குவாரி தரப்பினரே.''”

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்தமுறை நாம் பேசிக்கொண்டபோது, தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்தபோதும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோதும், வரவேற்பு ஏற்பாட்டுக்காக கட்சியின் தேசியத் தலைமை அனுப்பிய சில கோடிகளை பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் சுருட்டிக்கொண்டதாக, நம் காதுக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டோம். அது பிறழ் செய்தியாம். பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், அரசு நிகழ்ச்சி களுக்காக எங்கு சென்றாலும் அதற்கான முழுச்செலவையும் அரசே செய்துவிடுமாம். கட்சித் தலைமை அதற்கு நிதி அனுப்பா தாம். இந்த நிலையில் தொண்டர் களை கூட்டத்திற்கு அழைத்து வருவது உள்ளிட்ட செலவு களை கட்சி நிர்வாகி களே ஏற்கவேண்டி வருமாம். இதற்குப் புறம்பான செய்தி யை, ஒரு பிரபல நடிகரின் பெயரைக் கொண்ட சர்ச்சைக் குரிய பா.ஜ.க. நிர் வாகிதான் கிளப்பி விட்டிருக்கிறார்னு அவர்கள் தரப்பிலேயே சொல்கிறார்கள்.''

nkn170124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe