Advertisment

ஆன்-லைன் நெட்வொர்க் தேடி 6 கி.மீ. நடந்த மாணவி!

onlineclass

கொரோனா வந்தபின் பொருள் வாங்குவது -விற்பது, சம்பளம் போடுவது எல்லாமே ஆன்லைனில் என்றாகிவிட்டது. இதில் கல்வியும்கூட தப்பவில்லை. சில இடங்களில் தேர்வுகள்கூட ஆன்லைனிலேயே நடந்துவருகிறது. நகரத்தில் உள்ளவர்கள் ஓரளவு சமாளித்துவிடுகிறார்கள். தொலைபேசி, செல்போன்களுக்கான நெட்வொர்க்கே கிடைக்காத மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள்?

Advertisment

d

நெல்லை மாவட்டத்தில் அம்பை நகரின் பக்கமுள்ள பாபநாசம், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. இந்த மலைப்பகுதியில் காரையாறு -முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முண்டந்துறை புலிகள் வனக்காப்பகம் தடைசெய்யப்பட்ட பகுதியாகும். தரைப்பகுதியிலிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இந்த முண்டந்துறை மலையின்மீது கிடையாது. அதன் காரணமாகவே அங்கு செல்போன் டவர்கள் ஏதும் அமைப்பதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவ்வாறு அமை

கொரோனா வந்தபின் பொருள் வாங்குவது -விற்பது, சம்பளம் போடுவது எல்லாமே ஆன்லைனில் என்றாகிவிட்டது. இதில் கல்வியும்கூட தப்பவில்லை. சில இடங்களில் தேர்வுகள்கூட ஆன்லைனிலேயே நடந்துவருகிறது. நகரத்தில் உள்ளவர்கள் ஓரளவு சமாளித்துவிடுகிறார்கள். தொலைபேசி, செல்போன்களுக்கான நெட்வொர்க்கே கிடைக்காத மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள்?

Advertisment

d

நெல்லை மாவட்டத்தில் அம்பை நகரின் பக்கமுள்ள பாபநாசம், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. இந்த மலைப்பகுதியில் காரையாறு -முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முண்டந்துறை புலிகள் வனக்காப்பகம் தடைசெய்யப்பட்ட பகுதியாகும். தரைப்பகுதியிலிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இந்த முண்டந்துறை மலையின்மீது கிடையாது. அதன் காரணமாகவே அங்கு செல்போன் டவர்கள் ஏதும் அமைப்பதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவ்வாறு அமைக்கப்படுமேயானால் அது தொடர்பான சிக்னல்கள், அதிர்வலைகள், ஆட்கள் புழங்குவது புலிகளின் சுதந்திர நடமாட்டத்திற்கு இடையூறாக இருக்கும்.

முண்டந்துறை மலைப்பகுதிக்கு மேலே காரையாறு, சேர்வலாறு, மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த மலைப் பகுதியில் பழங்குடியின மக்களான காணிகள் குடும்பம் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்கள் தங்க ளின் தொடர்புகளுக்காக செல்போன்கள் வைத்திருந்தாலும் செல் டவர் இல்லாததால் வெளிப்பகுதியினர் யாரையும் தொடர்புகொள்ள இயலாது. வாரம் ஒருமுறை தங்களின் விளைபொருள்களை விற்பதற்காக பாபநாசம் நகருக்குத் தரையிறங்கும் போதுதான் அவர்கள் மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியும். தங்களது டீலிங்குகளை அன்றைய தினம் மட்டுமே வைத்துக்கொள்கிறார்கள்.

Advertisment

அடிப்படை வசதியில்லாத இங்குள்ள காணி இன மக்களின் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை அங்குள்ள காணி இன அரசுப் பள்ளியில் மட்டுமே படிக்கமுடியும். மேற்படிப்பு படிக்கவேண்டு மென்றால் கீழேயுள்ள பாபநாசம் வி.கே.புரம் நகருக்குத் தரையிறங்கவேண்டிய கட்டாய நிலை. இது காலம்காலமாக நடைபெற்றுவரும் அவலங்களில் ஒன்று.

போக்குவரத்து வசதி காரையாறு பகுதி வரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இந்த இன மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடிப் போக்குவரத்து கிடையாது. இங்குள்ள காரையாறு பழங்குடியின காணியின மக்களின் பிள்ளைகள், வி.கே.புரம் பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு பயின்றுவருகின்றனர். கொரோனாவுக்குப் பின்பு ஆன்லைன் கல்வி என்றாகிவிட்டது. செல் டவர் இல்லாததால் இவர்களுக்கு அது எட்டாக் கனியாகிவிட்டது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த டிசம்பரில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால் காரையாறு பகுதியான மயிலாறு, இஞ்சிக்குழி பகுதியின் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகள் செல்போன் டவர் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பது பெரிய சிரமமாக இருந்திருக்கிறது.

மயிலாறு காணிக்குடியிருப்பின் பின்பகுதியின் தரைமட்டத்திலிருந்து சுமார் 300 அடியிலுள்ள சொங்கமொட்டை மலைப்பகுதியின் உச்சியில் செல் டவர் கிடைப்பதையறிந்து அந்தப் பகுதிக்கு சென்று மாணவ- மாணவிகள் மலைமுகடுகளில் மழை மற்றும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொட்டகைகள் அமைத்து பாடம் கற்றிருக்கின்றனர்.

மாணவர்கள் இப்படி சிரமங்களை அனுபவிக்கின்ற நேரத்தில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தற்போது ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடந்துவருகின்றது. சேர்வலாறில் பெயருக்கு வசதிகள் இருந்தாலும் அங்கு டவர் கிடைக்க வாய்ப்பில்லை. சேர்வலாறு காணி குடியிருப்பைச் சேர்ந்த அமல்ராஜ் மகள் ரம்யா, பாபநாசம் கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது இவருக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. மலைமீதுள்ள மாணவ- மாணவிகளில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டிருக்கும் ஒரே மாணவி ரம்யாதான்.

onlineclass

தங்களது குடியிருப்பினருகில் செல் டவர் இல்லாததால் பரீட்சை எழுதத் திணறினார். வேறுவழியின்றி அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் லோயர் டேம் பகுதியில் டவர் லைன் கிடைப்பதையறிந்து தனது உறவினர் இசக்கிராஜா துணையோடு ஆறு கிலோமீட்டர் நடந்துசென்று சாலையோரத்தில் அமர்ந்தபடி ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதிவருகிறார்.

“"செல் டவர் கிடைக்காததால் அரியர் போடலாம் என்று நினைக்காமல் டவர் லைன் கிடைக்கும் இடத்தைத் தேடிச்சென்று தேர்வு எழுதிவருகிறேன். ஆறு நாட்களும் இப்படித்தான் தேர்வு எழுதி ஆகவேண்டும். மன உறுதிதான் என்னை இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க வைத்திருக்கிறது''’என்கிறார்.

பழங்குடி இன மலைக் காணி மக்களின் மாணவ- மாணவிகளுக்கு ஏற்படும் இந்த தொந்தரவு குறித்து மாவட்ட கலெக்டரான விஷ்ணுவிடம் கேட்டபோது, "அவர்களின் சிரமங் களை நான் அறிவேன். விரைவில் வனத்துறையினருடன் பேசி நல்லதொரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பேன்''’என்றார் உறுதியாக.

nkn030721
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe