மிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் 40க்கும் மேற்பட்டவர்கள் இணையதளம் வாயிலாக ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்களை விளையாடி, லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் பலர் கடனாளிகளாக மாறி தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொலைத் திருக்கிறார்கள். இன்னும் பலர் தாங்கள் இழந்ததை வெளியே சொல்லாமல் வேதனையில் உள்ளுக்குள் புழுங்கியபடி உள்ளனர். பல மாணவர்கள், இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி தங்கள் எதிர் காலத்தை தொலைக்கிறார்கள். அவர்களில் பலர் மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்றவர் களாக, குற்றச்செயல்களில் ஈடுபடு பவர்களாக, மோசமான சூழலில் வாழ்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, இப்படியான ஆன்லைன் சூதாட்டங்களை எங்கிருந்தோ இயக்கியபடி, இந்தியாவிலுள்ள பலருடைய வங்கிகணக்குகளிலுள்ள பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து சமீப காலமாக விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளது.

Advertisment

cc

அதன் ஒரு பகுதியாக, கடந்த 14ஆம் தேதி, வியாழனன்று, திருச்சியில் அமலாக்கத் துறையினர், திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலுள்ள சீனாவை சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின் பின்னணி குறித்து நாம் விசாரித்தபோது, பீவின் (Fiewin) என்பது, சீனர்களுக்கு சொந்தமான ஆன்லைன் கேமிங் செயலியாகும். சிறிய விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என இணையதள வாசிகளின் ஆசையைத் தூண்டி, அவர்களின் சேமிப்பைத் திருடுவதுதான் இவர்களின் இலக்கே. இதனை நம்பிய பலரும், அந்த ஆன்லைன் கேமிங் செயலியில் எளிதாகக் கணக்கு துவங்கி விளையாடி, பல வகைகளில் பணத்தை இழந்துள்ளனர். அந்த கேமிங் செயலியில் தெரிவித்திருப்பது போல தொடக்கத்தில் பணம் சேரும். தங்கள் கணக்கில் சேர்ந்துள்ளதாகக் காட்டப்படும் பணத்தை கேம் விளை யாடுபவர்கள் எடுக்க நினைக்கும்போது, அந்த செயலியானது பணத்தை எடுக்கவிடாமல் தடுத்ததோடு, அவர்கள் தொடக்கத்தில் செலுத்திய பணத்தையும் எடுக்கவிடவில்லை.

இப்படியாக இந்த செயலியில் பணம் கட்டி, பணத்தை எடுக்கமுடியாமல், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலத்தவர்களும் புகாரளித்துள்ளனர். கிட்டத்தட்ட 400 கோடி அளவுக்கு இந்த செயலி மூலமாக ஆன்லைன் மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு, அவர்களின் சோதனையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

Advertisment

cc

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியர்கள் சிலரின் உதவியுடன் சீனர்கள் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. பயனர்கள் செலுத்திய தொகை கரன்சிகளாக மாற்றப்பட்டு சீனர்களின் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக செயல்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த அருண் சாகு, அலோக் சாகு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஜோசப் ஸ்டாலின், சீனாவை சேர்ந்த பைபெங் யுன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறையினர் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சயா யாமோ, வூ யுவான் லுன் ஆகிய இரு சீனர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். வியாழனன்று காலை 9 மணியளவில் இரு கார்களில் வந்த ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், சுமார் 3 மணி நேரம் சம்பந்தப்பட்ட சீனர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு பல்வேறு தகவல்களை சேகரித்துச் சென்றனர். .

பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சீன கும்பலிடமிருந்து இந்தியர்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் ஏமாற்றும் கும்பல்களைத் தடுப்பதற்காக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த அமலாக்கத்துறை ரெய்டு, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய அதே நேரத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டின். அவரது மருமகனும் வி.சி.க. துணை பொதுச் செய லாளருமான அர்ஜூன் ரெட்டி ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினரின் ரெய்டு நடைபெற்ற சம்பவம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினும் லாட்டரி விற்பனை, ஆன்லைன் சூதாட்ட பிசினஸ்களில் ஈடுபட்டுவரும் நிலையில், ஒரே நேரத்தில் நடைபெறும் இரண்டு சோதனைகளுக்கும் தொடர் பிருக்குமென்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை நீதிமன்றங்களும், ஒன்றிய அரசும் அங்கீகரித்துள்ள நிலையில், இதில் நடைபெறக்கூடிய ஏமாற்றுவேலைகள், பணப்பரிவர்த்தனை மோசடிகள் காரணமாக ஒட்டுமொத்தமாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் முடிவுக்கு ஒன்றிய அரசு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.