கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி எடப்பாடி தலைமையிலான அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது, சமூக ஆர்வலர்களையும் ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக எங்காவது மூலையில் சீட்டு விளையாடிக்கொண்டி ருந்தால்கூட, போலீஸ் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுபோய்விடும் என்ற பயத்தில் சீட்டு விளையாட்டுப் பக்கம் வராத தலைமுறை இருந்தது ஒரு காலம். அப்பா ஹாலில் அமர்ந்தபடியும், பிள்ளை தன் தனியறையில் இருந்தபடியும் ஒரே வீட்டுக் குள் தத்தம் செல்போனில் ரம்மி விளையாடுவது இக்காலம்.
ஸ்மார்ட்போனின் வருகையோடு, வரமும் சாபங்களும் ஒருசேர மக்களுக்கு வசப்பட்டன. கையடக்க போனில் புகைப்படமெடுக்கலாம், தகவல் அனுப்பலாம், ரேடியோ கேட்கலாம், டி.வி. பார்க்கலாம். இப்படி ஆயிரம் வேலைகளைச் செய்ய முடியுமென்றால் வரப்பிரசாதமில்லைய
கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி எடப்பாடி தலைமையிலான அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது, சமூக ஆர்வலர்களையும் ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக எங்காவது மூலையில் சீட்டு விளையாடிக்கொண்டி ருந்தால்கூட, போலீஸ் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுபோய்விடும் என்ற பயத்தில் சீட்டு விளையாட்டுப் பக்கம் வராத தலைமுறை இருந்தது ஒரு காலம். அப்பா ஹாலில் அமர்ந்தபடியும், பிள்ளை தன் தனியறையில் இருந்தபடியும் ஒரே வீட்டுக் குள் தத்தம் செல்போனில் ரம்மி விளையாடுவது இக்காலம்.
ஸ்மார்ட்போனின் வருகையோடு, வரமும் சாபங்களும் ஒருசேர மக்களுக்கு வசப்பட்டன. கையடக்க போனில் புகைப்படமெடுக்கலாம், தகவல் அனுப்பலாம், ரேடியோ கேட்கலாம், டி.வி. பார்க்கலாம். இப்படி ஆயிரம் வேலைகளைச் செய்ய முடியுமென்றால் வரப்பிரசாதமில்லையா?… ஆனால் அதே கையடக்கப் போன்தான், வயது வராதவர்களுக்குக்கூட பாலியல் வலைத்தளங் களைக் காட்டியது, திரைக்கு வராத படங்களை தரவிறக்க வழிசெய்தது, போலீஸ் கவலையின்றி சூதாட்டம் ஆட வழிவகுத்தது.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மதுரை தம்பதி தற்கொலை (2018), பண்ருட்டியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தாயுடன் தற்கொலை (2019, மே 31), ஆன்லைன் ரம்மியில் 7 லட்சம் இழந்த கோவை இளைஞர் விரக்தியில் ரயிலில் விழுந்து தற்கொலை (2021, ஜனவரி 9) என தினசரியைப் புரட்டினால் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்ளாதவர்களின் செய்தி வராத மாதமே இல்லை எனும் அளவுக்கு புற்றீசல்போல ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டுகளின் தாக்கம் அதிகரித்தது.
ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் நக்கீரன் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. தொடர் தற்கொலைகள் தமிழகத்தில் அதிர்ச்சிகளை எழுப்பிய நிலையில், “"ஆன்லைன் ரம்மி ஏமாத்து! ஊரடங்கில் சீரழியும் குடும்பங்கள்!'” என 2020 ஜூலை 25- 28 இதழிலும், “"உருட்டப்படும் உயிர்கள்! ஆட்டிப்படைக்கும் ஆன்லைன் சூதாட்டம்!'” என 2020, நவம்பர் 7-10 நக்கீரன் இதழிலும் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் தரப்பிலிருந்து வந்த தொடர்அழுத்தங்களின் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு, சூதாட்டம் மற்றும் போலீஸ் விதிகள் திருத்தச் சட்டம் 2020-ஐ கொண்டுவந்து ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்தது.
தமிழக அரசின் இச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் ஆட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில், "நாங்கள் இந்தியா முழுவதும் இந்த வணிகத்தை சட்டபூர்வமாக செய்துவருகிறோம். இந்தியா முழுவதும் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் ஒன்று, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி சட்டவிரோதமானதாக ஆகும்' என்ற கேள்வியை முன்வைத்தனர். மேலும் 1986-ல் உச்சநீதி மன்றம், "ரம்மி திறமையை வெளிப்படுத்தும் ஆட்டமேயன்றி, தற்செயல் வாய்ப்புகளின் ஆட்டமல்ல' என தீர்ப்பொன்றில் சொன்னதையும் எடுத்துரைத்தனர்.
அரசுத் தரப்பில், இளைஞர்கள் தங்கள் சம்பளப் பணத்தையும், வாழ்நாள் சேமிப்புப் பணத்தையும் வைத்து இழப்பதையும், கடைசியில் விரக்தியில் உயிர்துறப்பதையும் எடுத்துரைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்தச் சட்டம் தவறானதாகவும், தர்க்கபூர்வமற்ற தாகவும் உள்ளது. ஏன் ஆன்லைன் ரம்மி தடைசெய்யப்படுகிறது என்பதற்கு அரசுத் தரப்பு போதுமான காரணங்களைக் குறிப்பிடவில்லை. தவிரவும் எந்தவொரு வாழ்க்கைத் தொழில், பணி, வியாபாரம் செய்வதற்கான உரிமை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் 19 (1) (ஞ்)-ஐ மீறுவதாக இச்சட்டம் அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசின் ஆன்லைன் ரம்மியை தடைசெய்யும் சட்டம் செல்லாது என அறிவித்தனர்.
அதேசமயம், "உரிய விதிகளைப் பின்பற்றி புதிய சட்டம் இயற்றிட அரசுக்கு எந்தவிதத் தடையும் இல்லை' எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்ய புதிய சட்டம் கொண்டுவரப்படும்' என்றிருக்கிறார்.
முந்தைய அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போதைய அரசு அந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்களாக நீதிபதிகள் சொன்னதை ஆழ்ந்து பரிசீலித்து, சட்ட வல்லுநர்களைக் கொண்டு ஆலோசித்து ரத்து செய்ய முடியாதவண்ணம் ஒரு வலுவான சட்டத்தை உருவாக்கவேண்டும்.
மக்களும் சட்டத் தடையை எதிர் பார்த்துக்கொண்டிராமல், ஆன்லைன் வடிவத்தில் வந்தாலும், நேரடி விளையாட்டாய் இருந்தாலும், பேராசைக்கு இடம்கொடுக்கும் சூதாட்டத்துக்கு ஒரு டபுள் ஸ்ட்ராங் நோ சொல்லிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.