மெடிக்கல் கவுன்சில் தேர்தல் விறுவிறுப் பாகத் தொடங்கப்பட்ட சூழ்நிலையில், பல குளறுபடிகளால் இத்தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

மெடிக்கல் கவுன்சில் போர்டு தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 14-ஆம் தேதி வெளியிடப் பட்டது. 19.01.23 அன்று வாக்குப்பதிவு நடைபெறு மென்றும், வாக்கு எண்ணிக்கை 20.01.23-ல் வெளியாகுமென்றும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இந்நிலையில், வேட்பாளர்கள் சரிபார்ப்பு முடிந்தநிலையில், இத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகவும், வாக்காளர் பட்டியலே வெளியிடாமல் தேர்தல் நடத்துவதாகவும், ஆன்லைன் மூலம் நியாயமாக தேர்தல் நடத்த வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

dd

Advertisment

வழக்கு விசாரணையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆந்திர பல்கலைக் கழக செனட் உறுப்பினரான, விசாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவரை எப்படி நியமிக்க முடியும்? எனக் கேள்வியெழுப்பினர். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 'இந்த சட்டமும் விதிகளும் மூன்று மாதங்களில் முழுமையாகத் திருத்தப்படும்' என்றார். விவாதத்தின் இறுதியில், மருத்துவப் பதிவுச்சட்ட விதிகளை மூன்று மாதங்களில் முழுமையாகத் திருத்தம் செய்வதோடு, ஆன்லைன் தேர்தலுக்கான வாய்ப்புகள் பற்றியும் முடிவெடுக்கவேண்டும் என்றுகூறி, இத்தேர்தலைத் தள்ளிவைத்தார். எனவே, மெடிக்கல் கவுன்சில் தேர்தல் ஆன்லைனில் நடக்குமா? அல்லது பழைய தபால் முறையே பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த முறை தேர்தலில், சி.பி.ஐ. ரவீந்திரநாத் அணியும், சி.பி.எம், ரெஸ்க் சற்குணம், சந்திர சேகரன் அணியும் களம் காணவில்லை. ஆளும்கட்சி அணியையும், திண்டிவனம் சேகரையும் தவிர மற்றவர்களைத் திட்டமிட்டு விண்ணப்பம் சரி பார்ப்பிலேயே வடிகட்டிவிட்டதாகக் குற்றம்சாட்டு கிறார்கள். இச்சூழ்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவரான சி.என் .ராஜாவின் தலைமையில் பி.ஜே.பி அணியும், வினாயக் தலைமையில் புதிய அணியும் கட்டமைத் துள்ளார்களாம். ராஜா, வினாயக் இருவருமே, அ.தி. மு.க. விஜயபாஸ்கர் ஆதரவாளரான செந்திலின் விசுவாசிகளாம். தேர்தலில் வாக்குகளைப் பிரித்து, செந்திலை வெற்றிபெற வைப்பதே இவர்களின் யுக்தி. நீதிமன்றத் தீர்ப்புக்கேற்றபடி அவர்களின் உத்தியை மாற்ற உத்தேசித்துள்ளனராம்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், "ஓட்டுச்சீட்டு முறையில் நடத்தப்பட் டால் மருத்துவத்துறையில் அதிகாரம் மிகுந்தவர் களும், சங்கத்தின் பெயரில் பலம்மிக்கவர்களும் எளிதாக வாக்குச்சீட்டுகளை மருத்துவர்களிட மிருந்து பெற வாய்ப்புள்ளது. ஆன்லைன் தேர்தல் நடத்தினால் ஒரு ஏஜன்சி மூலமாகவே நடத்தமுடி யும். அதிலும்கூட நவீன டெக்னாலஜி மூலம் பலரின் ஓட்டை ஒருவரே போடவும் வாய்ப்புள்ளது. எனவே வழக்கறிஞர்களுக்கான பார் கவுன்சில் பாணியில் தேர்தல் நடத்தினால் நல்லது'' என்கிறார்கள்.