த்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜ கோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்கும்போது, குளித்து விட்டு பாத் ரூமிலிருந்து இடுப்பில் வெறும் துண்டோடு வந்து வகுப்பு எடுத்தது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுகின்றன.

onlinecalss

மாணவிகளிடம் இரவு நேரங்களில் வாட்சப்பில் தொடர்பு கொள்வது, ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது என்று பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து முன்பே புகாரளிக்கப்பட்டும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இதையடுத்தே பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர், இதுகுறித்த சில பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் இந்த விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்து, ஆசிரியர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இப்போது ஒரு பிரபலப் பள்ளியின் ஆசிரியர் மாட்டிக்கொண்டதால் இந்த குற்றத்தை இந்த ஒரே பள்ளியோடு சுருக்கிப் பார்க்க முடியாது. இனிவரும் காலங்களில் ஆன் லைன் வகுப்புகள் கட்டாயமாகும் சூழலில், ஒட்டுமொத்தமாக ஆன் லைன் மூலம் பாடம் நடத்துவதில் இருக்கும் நன்மை, தீமைகள் குறித்து அலசவேண்டிய தருணம் இதுவாகும்.

Advertisment

மத்திய அரசு, இந்தியா முழுவதும் ஆன்லைன்மூலம் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில்தான் இந்த கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி, நாடு முழுவதும் லாக்டவுனால் வீட்டுக்குள் முடங்கியது.

எனவே பள்ளிக் கூடங்கள் ஆன்லைன் கல்விமுறைக்கு உடனே மாறியாகவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. அதுநாள் வரை பள்ளியின் கரும்பலகையில் எழுதி பாடம் நடத்திய ஆசிரியர்கள், வீடியோக்களை உருவாக்கி, அதன்மூலம் பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது ஒருபுறமென்றால், மாணவர்கள், ஆசிரியர்களின் பிரைவஸி என்பது ஆன்லைன் கல்வியால் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ஆன்லைன் பாடமுறைக்கு முன்பாக, பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் மட்டுமே பள்ளி நிர்வாகத்தின் வசம் இருக்கும். மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு எடுத்து வருவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்படியிருந்த கட்டுக்கோப்பான கல்விச்சூழல், ஆன்லைன் கல்விமுறை வந்ததும் தலைகீழாக மாறிப்போனது. ஆன்லைன் கல்விக்கான அடிப்படையே செல்போன் என்பதால், வீட்டிலுள்ள மாணவ, மாணவிகளின் கைகளில் செல்போன் புழங்குவது சகஜமானது.

Advertisment

onlineclass

"ஜூம் ஆப்' மூலமாகப் பாடம் நடத்துவதும், சந்தேகங்களை வாட்சப் மூலமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதும் வழக்கமானது. ஒவ்வொரு பள்ளிக்கும், வகுப்புவாரியாக வாட்சப் குரூப்கள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெறும் சூழல்.

இப்படி செல்போன் மூலமாகவே பாடம் படிக்கும் நிலையில், வீட்டிலுள்ள பெற் றோருக்கு தங்கள் பிள்ளைகளைக் கண் காணிப்பது கடினமானது. அவர்கள் பாடம் படிக்கிறார்களா, நண்பர்களோடு அரட்டையடிக்கிறார்களா அல்லது கேம் விளையாடுகிறார்களா என்றெல்லாம் நோட்டம் விடவேண்டிய கட்டாயம்.

ஆன்லைன் வகுப்பின் இன்னொரு பெருந்தீங்கு, மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட செல்போன் நம்பர்கள் அனைத்தும், பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியக்கூடிய சூழல். அதேபோல பள்ளி ஆசிரியர்களின் தொடர்பு எண்கள், மாணவர் களின் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும் நிலையும் உள்ளது. இந்த இரண்டினாலும்தான் தற்போது பல்வேறு பிரச்சனைகள் உருவாகிவரு கின்றன. ஒரு பத்மா சேஷாத்ரிதான் நமக்கு தெரிய வந்துள்ளது. இன்னும் வெளியே தெரியாத பல்வேறு பாலியல் தொல்லை விவகாரங்கள் வெளியே வராமலிருக் கின்றன. இனி, ஒவ்வொன்றாக வெளிவரக்கூடும்.

"பாலியல் தொந்தரவு என்றால் ஆசிரியர்கள், மாணவிகளுக்குத் தரும் தொந்தரவு மட்டுமே என்றில்லை'' எனப் புதுக்குண்டைப் போடுகிறார் சிறார் எழுத்தாளர் விழியன். தொடர்ந்து பேசியவர், "ஆன்லைன்னு கல்விமுறை மாறியதுமே பிரைவஸி என்பதே இல்லாததாகிவிட்டது.

தற்போது வெளிவந்துள்ள பாலியல் குற்றச்செயல்போல் இனியும் தொடராதிருக்க சில கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் அவசியம், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையே பாடம் தொடர்பான தகவல் பரிமாற்றம், காலை 9 முதல் மாலை 6 மணி வரை என்ற நேர வரையறைக்குள் இருக்கும்படி செய்யலாம். வாரம் முழுக்க ஆன்லைன் வகுப்புகள் என்பதை மாற்றியமைத்து, வாரம் ஒரு நாள் ஆன்லைன் வகுப்புகள் என்றும், மற்ற நாட்களில் செய்முறை வகுப்புகள் என்றும் இருந்தால் நல்லது. அதேபோல, மாணவர்கள், ஆசிரியர்களிடம் வாட்சப் மூலம் சந்தேகம் கேட்கத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ளாமல் ஒரு குழுவுக்குள் அவரவர் சந்தேகங்களைப் பகிர்ந்து, விடைகளைப் பெற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும்.

onlineclass

மொத்தத்தில் எந்தவொரு தகவல் பரிமாற்றமும், பெற்றோர், பள்ளி நிர்வாகமென இருதரப்புக் கண்காணிப்புக்குள் இருக்க வேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல், பாலியல்ரீதியான துன் புறுத்தல் என்பது ஆசிரியர் களால் மாணவர்களுக்கு ஏற்படுவது ஒருபுறமென்றால், மாணவர்களின் அப்பாக்கள், சந்தேகம் கேட்கும் சாக்கில், ஆசிரியைகளிடம் தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பியும், கால் செய்தும் தொந்தரவு செய்வ தும் நடக்கிறது. இரவு நேரங்களில் பாலியல்ரீதியாகப் பேசித் தொல்லை கொடுப்பதாக அப்பாக்கள்மீது ஆங்காங்கே புகார்கள் எழுகின்றன. இங்கே இருதரப்பிலும் தனிப் பட்ட தொடர்பு எண்கள் அனைவருக்கும் பகிரப்படுவது தான் தவறாகப் பயன்படுத்து வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

எனவே கண்காணிப்பை பலப்படுத்து வதன்மூலம் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும்'' என்கிறார்.

பாலியல் தொந்தரவின் இன்னொரு பக்கம் குறித்து விழியன் குறிப்பிட்டுள்ள விஷயங்களைத் தெளிவுபடுத்த ஓர் தனியார் பள்ளி ஆசிரியையைத் தொடர்புகொண்டோம். பெயர்சொல்ல விரும்பாத அவர், "மாணவர் களின் அப்பாக்களின் தொந்தரவு இருப்பது உண்மை. பள்ளிக்கூடக் கட்டணம் குறித்து, மகனின், மகளின் படிப்பு எப்படியெனக் கருத்து கேட்கும் சாக்கில் நேரங்கெட்ட நேரத்தில் செல்பேசியில் அழைப்பதுண்டு. அவர்களைக் கடிந்து பேசுவ தற்கும் தயக்கமாக இருக்கும். ஒருவர் எனக்கு இரவு 11 மணிக்கு மிஸ்டு கால் கொடுக்க, அதை எனது கணவர் தவறாக நினைத்து என்னைச் சந்தே

கப் பட, மிஸ்டு கால் கொடுத்தவரிடம் என்ன விஷயமென்று கேட்டால், "என் பையன் தவறுதலாக அழுத்திவிட்டான்'' என்று கூலாகப் பதில் சொன்னார். அவர், இதேபோல அவ்வப்போது மிஸ்டு கால் கொடுக்க, அந்த எண்ணை ப்ளாக் செய்த பின்னர்தான் நிம்மதி. இதேபோல தேவையற்ற மெசேஜ்கள், இரட்டை அர்த்த ஜோக்குகள் பார்வர்ட் செய்வது, கேள்வி எழுப்பினால் தங்கள் பிள்ளைகள் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்வது என்று அப்பாக்களின் பாலியல் தொல்லைகளும் அதிகம்'' என்று குற்றம்சாட்டுகிறார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள், பள்ளிகளுக்கு மட்டுமல்ல, கல்லூரிகளுக்கும் அப்படியே பொருந்தும். அங்கும் ஆன்லைன் கல்வி முறையில் இத்தகைய அத்துமீறல்கள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்காணித்துக் கட்டுப் படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அதற்கேற்ப இத்தகைய குற்றங்களுக்கான தண்ட னைகளை அதிகப்படுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மாணவர்கள், தங்கள் மீது நடக்கும் அத்துமீறல்களை பெயர் குறிப்பிடாமல் புகாரளிக்கும் வசதிகளை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்துவதோடு, குற்றச்சாட்டுகளின்மீது நியாயப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்ற காரணத்துக்காகக் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கக்கூடாது. ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய கல்விக்கூடமே ஒழுக்கக்கேடுகளுக்கு இடம்தரும் இடமாக அமைந்துவிடக்கூடாது.

-தெ.சு.கவுதமன்

_________________________

பிரபலங்களுக்கு நேர்ந்த அவமானம்!

பத்ம சேஷாத்திரி பள்ளி தனது நிர்வாக நடைமுறை என்ற பெயரில் மாணவர்களையும் பெற்றோரையும் நடத்துவது பற்றி அதில் படித்த இன்றைய பிரபலங்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானையும் அவரது தாயாரையும் அந்தப் பள்ளி நிர்வாகம் மாணவப் பருவத்தில் கடுமையான வார்த்தைகளால் புண்படுத்தியுள்ளது. ஃபீஸ் கட்ட தாமதமான நிலையில், “கோடம்பாக்கம் ப்ளாட்பாரத்திற்குப் போங்க.. காசு கிடைக்கும்’என்று பள்ளி நிர்வாகம் சொன்னதை ஏ.ஆர்.ரகுமான் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதுபோலவே, பிரபல நடிகை குட்டிபத்மினியும் தனக்கு நேர்ந்தவற்றை விவரித்துள்ளார். தனது பிரபலத்தன்மையை வைத்து வருமானவரித்துறை நெருக்கடியை சமாளிக்க பத்ம சேஷாத்திரி பள்ளி முயன்றது பற்றி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். தவறுகளை மறைத்து, இமேஜை காப்பாற்றும் வகையில் தனது அதிகார நெட்வொர்க்கைக் கையாள்வதையே நோக்கமாகக்கொண்டிருக்கிறது இந்தப் பள்ளி.