Advertisment

ஆன்லைன் வகுப்பு! அலட்சிய துணைவேந்தர்! -பரிதவிப்பில் மாணவர்கள்

ss

ண்ணற்ற எதிர் பார்ப்புகளோடும், உயர்ந்த லட்சியங்களோடும் கல்லூரிக்குள் காலடி வைத்த அந்த மாணவர் களின் கனவுகளை கடந்த இரண்டரை ஆண்டுகளாக, காலடியில் போட்டு மிதிக்கிறது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம். திருச்சியில் உள்ள நாவலூர் குட்டப்பட்டு பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் கடந்த பத்தாண்டு களாக செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம். நாடு முழுவதும் நடத்தப்படும் ‘கிளாட்’ (ஈகஆப) எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இங்குள்ள ஐந்தாண்டு சட்டப்படிப்பில் சேர முடியும் என்பதால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உ.பி., ம.பி., புதுடெல்லி என இந்தியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் மாணவர்கள் அனைவரையுமே இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் காணமுடியும்.

Advertisment

online

திருச்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கித்தான் பயில

ண்ணற்ற எதிர் பார்ப்புகளோடும், உயர்ந்த லட்சியங்களோடும் கல்லூரிக்குள் காலடி வைத்த அந்த மாணவர் களின் கனவுகளை கடந்த இரண்டரை ஆண்டுகளாக, காலடியில் போட்டு மிதிக்கிறது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம். திருச்சியில் உள்ள நாவலூர் குட்டப்பட்டு பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் கடந்த பத்தாண்டு களாக செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம். நாடு முழுவதும் நடத்தப்படும் ‘கிளாட்’ (ஈகஆப) எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இங்குள்ள ஐந்தாண்டு சட்டப்படிப்பில் சேர முடியும் என்பதால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உ.பி., ம.பி., புதுடெல்லி என இந்தியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் மாணவர்கள் அனைவரையுமே இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் காணமுடியும்.

Advertisment

online

திருச்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கித்தான் பயில வேண்டும். பேராசிரியர்களுக்கும் கூட இதேதான். இப்படிப் படித்தால்தான் இங்கு நடத்தப்படும் நேரடி வகுப்பு மற்றும் கலந்துரையாடல்களில் தவறாமல் கலந்துகொள்ள முடியும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இந்தியா முழுவதும் இதே போல உள்ள 23 தேசிய சட்டப் பள்ளிகளும் அப்படித்தான் செயல்படும். ஆனால், கொரோனாவைக் காரணம்காட்டி முதல் அலையின் துவக்கத்திலேயே மூடப்பட்ட இந்த தேசிய சட்டப்பள்ளியானது, சுமார் இரண்டரை ஆண்டுகளாக ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்துவது, கனவுகளோடு வந்த அந்த மாணவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ddஇது குறித்து தங்களது பெயர் மற்றும் அடையாளங்களை மறைத்தவாறு நம்மிடம் பேசிய அக்கல்லூரியின் மாணவர்கள் சிலர், “"தமிழ்நாட்டில் மட்டும்தான் சார் இப்படி. 2020 மார்ச் மாதம் கொரோனாவிற்காக ஊரடங்கு போட்டபோது மூடப்பட்ட எங்க காலேஜை இன்னைக்கி வரைக்கும் திறக்கவே இல்லை. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்துப் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்துவரும் நிலையில் ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மட்டுமே கிளாஸ் நடத்துனா எப்படி சார் படிக்க முடியும்? கடினமான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று, வருசத்துக்கு ஒன்னரை லட்ச ரூபா ஃபீஸ் கட்டி இங்கு நாங்க சேருவதற்குக் காரணமே இங்கே நேரடியா கொடுக்கப்படுற படிப்புக்காகவும், பயிற்சிக்காகவும் தான். ஆனா, மொத்த ஃபீஸையும் முழுசா வாங்கிக்கிட்டு இன்னமும் கொரோனாவைக் காரணம் காட்டி காலேஜை திறக்காம இருக்கிறது நியாயமா சார்? ரெண்டரை வருசமா ஆன்லைன்ல கிளாஸ் எடுத்தா எத்தனை ஸ்டூடன்ஸுக்கு அது புரியும்?

"ஆன்லைன்ல நடத்துறது எங்களுக்கு புரிய மாட்டேங்குது. காலேஜை திறந்து நேரடியா கிளாஸ் எடுங்க'ன்னு பல தடவ பல்கலைக்கழக வி.சி. மேடத்துக்கு மெயில் அனுப்பியும், கொரோனா முடியட்டும். எனக்கு நீங்க அட்வைஸ்பண்ணத் தேவையில்ல அப்படீன்னு மட்டுமே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்புறமாலா மினிஸ்டருக்கு மெயில் அனுப்பின பின்னாடி, ’சரி நீங்க காலேஜுக்கு வாங்க. ஹாஸ்டல்ல தங்குங்க. ஆனா, கிளாஸை ஆன்லைன்லதான் அட்டன்ட் பண்ணணும். அதுவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க திருச்சியிலே இருக்கிற உங்க சொந்தக்காரங்க வீட்டில தங்கி ஆன்லைன் கிளாஸை அட்டன்ட் பண்ணுங்க. இதுக்கு பேரு ‘ஹைப்ரிட் மோட்' அப்படீனு சொன்னாங்க. அதுக்கு எதுக்கு ஹாஸ்டலுக்கு வரணும்னு சொல்லி. நெறைய பேரு போகல. வந்திருந்த ஒரு சிலருக்கு மட்டும் 45 நாள் கிளாஸ் எடுத்திட்டு, "4-வது கொரோனா அலை வந்திருச்சு. அதனால, ஜூலை 10ஆம் தேதிக்குள்ள ஹாஸ்டலை உடனே காலி பண்ணுங்க. இல்லேன்னா கதவ உடைச்சு உங்க சாமானையெல்லாம் ஒரு ரூம்ல போட்டு மூடிருவேன். டேமேஜ் ஆனா அதுக்கு நான் பொறுப்பில்லை'ன்னு பொறுப்பில்லாம சொல்றாங்க. கடைசியா, செமஸ்டர் லீவு முடிஞ்சு ஆகஸ்ட்ல காலேஜை திறங்க மேடம்னு மெயில் போட்டதுக்கு, "நான் யேசுவ ஃபாலோ பண்ற ஆளு. அதனால நீங்க சொல்றதயெல்லாம் கேட்கத் தேவையில் லை'ன்னு சம்பந்தமே இல்லாம பதில் அனுப்புறாங்க''’என அதிர வைத்தனர் நம்மை.

Advertisment

onlineclass

மாணவர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எலிசபெத்தை அவரின் மொபைல் எண் (75******37) மூலமாகத் தொடர்புகொண்டோம். “"பத்திரிகைகளுடன் நான் பேசுவதில்லை'’எனக் கூறி தொடர்பைத் துண்டிக்கவே...

இப்பிரச்சினை குறித்து விளக்கம் அறிய தமிழக சட்டத்துறை அமைச்சரான எஸ்.ரகுபதியை தொடர்புகொண்டு பேசினோம். நாம் கூறியதை கேட்டுக்கொண்ட அவர், சிறிது நேரத்திற்குப் பிறகு நமது லைனில் வந்து, “"ஜூன் மாதம்கூட வகுப்புகள் நடத்தி அட்டெண் டென்ஸ் எடுத்திருப்பதாக வி.சி. கூறுகிறார். இருந்தபோதும், விரைவில் அங்கு இன்ஸ் பெக்சனுக்கு போகிறேன்''’என பொறுப்புடன் பதிலளித்தார்.

பணம் கட்டிய மாணவர்களுக்கு நியாயமான கல்வியைக் கொடுக்குமா கல்லூரி?

nkn160722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe