மதுரையில் வெளி நாட்டுப் பொருட்கள்விற்கும் பாண்டி பஜார், மீனாட்சி பஜார் பகுதியில் போலீஸார் புகுந்து இரண்டு பேர்களை பிடித்துச்சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் பெற்றோர், "சின்னப்பசங்க ஏதோ செல்போனில் நெட் பார்த்தார்கள் என்று பிடித்து விசாரிக்கிறது. இதுக்கெல்லாமா போலீஸ் பிடிக்கும்?'' என்று போலீஸாரிடம் வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க... க்ரைம் பிராஞ்ச் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாவிடம் விசாரித்தோம்.
"சும்மா செல்போன் பார்த்ததற்கெல்லாம் பிடித்து விசாரிப்போமா? ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையத் திற்கும் ஆபாச வீடியோ அப்லோடு செய்யும் நபர்களின் விவரம், ஆபாச லைவ் வீடியோ சாட் செய்யும் நபர்களின் விவரத்தை அனுப்பியுள் ளார்கள். இந்தியாவில் ஆபாச லைவ் சாட் பார்ப்பவர்கள், இதை அப்லோட் செய்து மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்பவர்கள் அனைவரின் ஐ.பி. நம்பரை வைத்து செல் நம்பரை கண்டுபிடித்து அவர்களின் இருப்பிடத்திலிருந்து இதை எங்கு செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க இந்திய அரசு பிரத்யேகமான டவரை மும்பையில் அமைத்திருக்கிறது.
அப்படிக் கண்காணிக்கப்படுபவர்களின் விவரம், தமிழக சைபர் க்ரைம் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட காவல் நிலையத்திற்கு வந்து சேர்கிறது. மதுரையில் 10-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் சமீபத்தில் குழந்தைகள் வன்புணர்வு, சிறார் குற்ற நடவடிக்கைகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது எனவே இதுகுறித்து கடு மையான நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியிருக் கிறது''’என்றார்
மேலும் அவர், “"ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து, அதை மற்றவர்களுக்கு அனுப்பு வது என்று இருந்த இளசுகள், தற்போது லைவ்சாட் மூலம் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல வெப்சைட்டில் பணத்தைச் செலுத்தி ஆபாசமாகப் பேசுவதும், வீட்டுக்குத் தெரியாமல் மேற்கொள்ளும் பாலியல் நட வடிக்கைகளை ஆர்வம் காரணமாக ஆபாசத் தளங்களுக்கு அப்லோட் செய்வதும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்படி ஆபாச சாட் செய்வதும், அதற்கான தளங்களில் பணம் கட்டி சந்தாதாரர்கள் ஆவதும் சட்டப்படி குற்றம் என்று தெரியாமல் பலர் தங்கள் பணத்தையும், வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள்.
தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை லைவ் சாட் வீடியோ மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பல்வேறு ஏமாற்று வேலையும் நடக்கிறது. பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. காரணம், புகார் கொடுத்தால் அசிங்கம் என நினைக் கிறார்கள். இதைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது போன்ற ஆபாச இணையதளங்கள் பலவற்றை ஒன்றிய அரசு தடைசெய்தாலும் புதிய பெயரில், அல்லது அதே வலைத்தளத்தின் பெயரில் சிறிய மாற்றங்கள் செய்து வந்துகொண்டேயிருக்கிறார்கள். மேலும் செயலி வடிவிலும் நேரடியாக செல்போனிலே தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் வந்திருக்கிறது.
பப்ஜி விளையாட்டுக்கிடையில் ஆபாசமாக பேசியதற்காக மதனைப் பிடித்து உள்ளே போட்டோம். ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு செல்போனில் செயலிகள் வந்துவிட்டன. "ஆப்'பை தேர்வுசெய்து அதற்கு வயது, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை டைப் செய்யவேண்டும். பிறகு எதிர்முனையில் எந்த வயதுடைய பெண் நம்மிடம் பேச வேண்டும் என்பது குறித்தும் டைப் செய்யவேண்டும். நாம் செலுத்தவேண்டிய தொகையை தேர்வு செய்யவேண்டும். 496 ரூபாயிலிருந்து லட்சக் கணக்கில் பணம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றாற்போல் நம்மிடம் அவர்கள் உரையாடுவார்கள்.
"லொகேஷன்' என்ற பிரிவில் சென்று நாம் எங்கிருக்கிறோம் என்பதை டைப் செய்யவேண்டும். பணம் கட்டிய பிறகு அவருடன் எதிர்முனையிலிருந்து பெண் காம ரசம் சொட்டச் சொட்ட பேசுவார். தனியாக ஒரு தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு, ஆன்லைன் சாட்டிங் கில் பல பள்ளி, கல்லூரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரியவருகிறது''’என்றார்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஸ்டாலினோ, “"ரூம் சாட், அடல்ட் பிரண்ட், ஃபைண்டர், டிண்டர், ஆண்டி ரூம், செக்ஸ் பிரண்ட் இதுபோன்ற செயலிகள் சர்வசாதாரணமாக செல்போனில் விளம்பரமாக வருகிறது. இதுபோன்ற கலாச்சாரச் சீரழிவுச் செயல்கள் பெருகிவருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. காசுக்காக எதிர்முனையில் உரையாடுபவர்கள் எத்தகைய பேச்சையும் சகித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இது பேசுபவரின் வக்கிரத்தை வளர்க்கவே துணைசெய்யும். டிக்-டாக்கை தடை செய்ததுபோல் இத்தகைய செயலிகளையும் வலைத்தளங்களையும் ஒன்றிய அரசு தடை செய்யவேண்டும். குடும்பத்தினரும் இளைய வயதினரை ஓரளவு கண்காணித்து வரவேண்டும். இத்தகைய டிஜிட்டல், ஆபாச கேளிக்கைகள் தடை செய்யப் படாவிட்டால், ஒவ்வொரு குடும்பமும் சீரழியத் தொடங்கி நாட்டுக்கே இடைஞ்சலாக மாறும்''’என்றார்.