மறைந்த இந்தியன் வங்கி தலைவரும் நிர்வாக இயக்கு நருமான கோபாலகிருஷ்ணனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அவரைப் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்ட பின்னர் தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் உரையாற்றினார்கள்.
நக்கீரன் ஆசிரியர்: ""அய்யன் திருவள்ளுவர் சொல்லுவார் "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்' என்று. இந்தியாவிலுள்ள அனைத்து பெரிய தலைவர்களுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். சாதாரண வங்கி ஊழியராகச் சேர்ந்து மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். உண்மையிலேயே பெரிய மனிதர்.
மும்பையிலிருந்து அவசரமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். மும்பையில் சொன்னேன், இன்று நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள் வதற்கு, இவ்வளவு அன்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஐயா கோபாலகிருஷ்ணன்தான். அவர் மட்டும் 93-ல் லோன் கொடுக்கவில்லை என்றால் நான் மறுபடியும் எங்க ஊரு
மறைந்த இந்தியன் வங்கி தலைவரும் நிர்வாக இயக்கு நருமான கோபாலகிருஷ்ணனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அவரைப் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்ட பின்னர் தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் உரையாற்றினார்கள்.
நக்கீரன் ஆசிரியர்: ""அய்யன் திருவள்ளுவர் சொல்லுவார் "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்' என்று. இந்தியாவிலுள்ள அனைத்து பெரிய தலைவர்களுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். சாதாரண வங்கி ஊழியராகச் சேர்ந்து மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். உண்மையிலேயே பெரிய மனிதர்.
மும்பையிலிருந்து அவசரமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். மும்பையில் சொன்னேன், இன்று நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள் வதற்கு, இவ்வளவு அன்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஐயா கோபாலகிருஷ்ணன்தான். அவர் மட்டும் 93-ல் லோன் கொடுக்கவில்லை என்றால் நான் மறுபடியும் எங்க ஊருக்கே போயிருப்பேன்.
88-ல் நக்கீரன் ஆரம்பித்தேன். நாலாயிரம் ரூபாய்தான் முதலீடு. ஒரே வருடத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் காப்பி போய்விட்டது. பத்திரிகைக்கு சொந்தமாக பிரஸ் போடவேண்டும், மிஷின் போடவேண்டும்... அதற்கு வங்கிக் கடன் வாங்கவேண்டும் என்று ஒவ்வொரு வங்கியாகப் போனேன். ஒவ்வொரு வங்கிக்கும் பெரிய பெரிய ஆட்கள் அழைத்துக்கொண்டுபோய் கடன் வாங்கித் தருவதாக ஏமாற்றினார்கள்.
அப்போது ஒரு பெரியவர், ""ஏம்ப்பா இவ்வளவு அலையிற கோபாலகிருஷ்ணன் எல்லோருக்கும் லோன் கொடுத்துக்கிட்டிருக்கிறாரு, நீ அங்க போகவேண்டியதுதானே'' என சொன்னார். உடனே இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு போன் போட்டேன். ""நான் நக்கீரன் அலுவலகத்திலிருந்து பேசுறேன், சேர்மனைப் பார்க்கணும்'' என்றேன். உடனே லைன் கொடுத்தார்கள். உடனே கோபாலகிருஷ்ணன் கேட்ட கேள்வி, ""கோபால் எவ்வளவு நேரத்தில் வருவீங்க'' என்றார். ""அண்ணே ஒரு 20 நிமிஷத்துல வர்றேன்னு'' சொன்னேன். ""உங்களுக்காக 40 நிமிஷம் வெயிட் பண்றேன்'' என்றார். இது நடந்தது 1993-ல். உடனே போனேன்.
""சொல்லுங்க கோபால்'' என்றார். ""ஐயா எங்க அப்பா பியூன். நான் ஊரிலிருந்து பை நிறைய காசு எடுத்துக்கிட்டு வரல. வந்த இடத்துல நக்கீரன் ஆரம்பிச்சி நல்லா போய்க்கிட்டு இருக்கு. பிரிண்ட்டிங் மிஷின் வாங்கணும்'' எனச் சொல்லி, ஒவ்வொரு வங்கியாகப் போனதையும், ஏமாந்ததை யும் சொன்னேன். ''எவ்வளவு வேணும்'' என்றார். ""23 லட்ச ரூபாய் மிஷின்'' என்றதும், ""23 லட்ச ரூபாயும் கொடுத்துடுறேன். ஓ.கே.வா?'' என்றார்.
சூரிட்டி கொடுப்பதில் எனக்கு இருந்த பிரச்சனையைச் சொன்னதும், என்னிடம் ""மிஷின் வாங்குங்க, பிரஸ் போடுங்க... ஊர்ப்பகுதிகளில் குறைந்த விலைக்கு இடம் கிடைக்கும், உங்க உழைப்பில் அப்படி இடம் வாங்குங்க. ரொம்ப கம்மி விலைக்கு கிடைக்கிற சின்னச்சின்ன இடங்கள ஒவ்வொன்னா வாங்கி, அதை சூரிட்டியாக பின்னால கொடுங்கன்னு'' சொன்னார். அவர் சொன்னபடியே நக்கீரன் உழைப்பில் சூரிட்டி கொடுத்தோம்.
எத்தனையோ பேருக்கு, வங்கி விதிகளின் அடிப்படையில் உதவிய அவருக்கு கடைசி காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் யாருக்கும் வரக்கூடாது. அத்தனை சோதனைகளையும் அவர் எதிர்கொண்டார். அவர் இப்போது இல்லை என்றாலும், அவருக்காக இவ்வளவு பெரிய கூட்டம், குறும் படம், இதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி இவையெல்லாம் பார்க்கிற போது அவர் நம்மைவிட்டுப் போகவில்லை. நிச்சயம் அவர் நம்முடன் இருப்பார்.''’’
த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா: ""சென்னை திருவான்மியூரில் பத்திரிகையாளர்கள் குடியிருப்புப் பகுதிக்கு அரசு நிலத்தை வழங்கியது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் நிதியை ஒதுக்கியது. அதனால் வீடுகளைக் கட்ட முடிய வில்லை. நிலம் வழங்கிய அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் இந்தியன் வங்கியின் மூலமாக கடன் உதவி செய்தவர் கோபாலகிருஷ்ணன்.''
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்: ""தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர். தமிழகத்தில் இன்று நிறையபேர் மிகப்பெரிய தொழிலதிபர்களாக வந்ததற்கு காரணம் ஐயாதான். தொழில் வளம் அதிகமுள்ள மாநிலம் தமிழகம். இந்த மாநிலத்தில் உள்ளவர்கள் அதிக தொழில் செய்யவேண்டும், தொழிலதிபர்களாக வரவேண்டும் என்று தனது கடமையைச் செய்தார்.''
தே.மு.தி.க. சுதீஷ்: ""சினிமாவுக்கு கடன் தர வங்கிகள் தயங்கியபோது, கேப்டனும் இப்ராகிம் ராவுத்தரும் சென்று "நீங்க சினிமாவுக்கு கடன் தரமாட்டேங்குறீங்க' எனச் சொல்ல, "நீங்க கேட்கமாட்டேங்குறீங்க' எனச் சொல்லி கடன் கொடுத்தார்.''
-பெருந்தொழில், சினிமா, கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கு மட்டுமல்ல, சிறு வியாபாரிகள், தொழில் தொடங்க உதவியவர். சென்னை மாநகரிலே பல நூறு ஆட்டோ ஓட்டுநர்களை ஆட்டோ உரிமையாளர்களாக மாற்றியவர் கோபாலகிருஷ்ணன். காலத்தின் மீது அவரது புகழ் முத்திரை என்றென்றைக்குமாய் அழுந்தப் பதிந்திருக்கும். அதற்கான கண்ணீர் நன்றியாக அமைந்திருந்தது அவரது நினைவேந்தல் நிகழ்வு.
-தொகுப்பு: ராஜவேல், சுப்பிரமணி
படங்கள் : ஸ்டாலின்