75-ஆவது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ்-3. இப்பொழுதெல்லாம் சினிமா எடுக்கும் வரை சிவனே என இருந்துவிட்டு, ரிலீஸ் நேரத்தில், "இந்தப் படத்தின் கதை என்னுடையது' என புகார் கிளப்பி கோர்ட்டுக்குப் போவார் ஒரு பார்ட்டி. "அந்தக் கதைக்குச் சொந்தக்காரர் அவர் தான்' என தென்னிந்திய திரைப்பட எழுத் தாளர்கள் சங்கமும் தீர்ப்பளிக்கும்.

kkkஅப்படி கதை திருட்டு சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்ட படம் விஜய்யின் "கத்தி'யும் சமீபத்தில் ரிலீசான ஜெயம் ரவியின் ‘"கோமாளி'யும். உண்மையான கதாசிரியருக்கு திரைமறைவில் வெயிட்டாக செட்டில் பண்ணிவிடுவார்கள். இப்படியும் படங்களுக்கு பப்ளி சிட்டி கிடைக்கும்.

ஏன்? இதே பிக்பாஸ்-3-யை நடத்தும் கமலின் "விஸ்வ ரூபம்' படம், "நாட்டைவிட்டே கிளம்பப் போறேன்' என்ற சூப் பர் பப்ளிசிட்டியால் 200 கோடி ரூபாயை அள்ளியது.

கமல் நடத்துவதால் தானோ என்னவோ, இப்போ தைய பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ஏடாகூட சம்பவங்கள், சட்டை கிழியும் அளவு சண்டைகள், வார்த்தைப் போர்கள் இவற்றால் பிக் பாஸ்-3க்கு எக்குத்தப்பாகவும் பப்ளிசிட்டி கிடைக்கிறது. நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டுவதால், 1 கோடி ரூபாய் பரிசை தட்டிச் செல்வது யாராக இருக்கும் என பொது மக்களும் ரொம்பவே ஆர்வ முடன் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். அதனால்தான் ""இன்னும் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து'' என்ற ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டனர் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.

Advertisment

பிக்பாஸ்-3 ஆரம்பித்த போது மொத்தம் 16 போட்டி யாளர்கள் இருந்தனர். இரண் டாவது வாரத்திலிருந்து வெளி யேற்றுதல், வெளியேற்றப்படுதல் அடிப்படையில் 9 பேர் கழித்துக் கட்டப்பட்டு, இப்போது டைரக்டர் சேரன், நடிகை ஷெரின், முகிலன், தர்ஷன், கவின், லாஸ்லியா, சாண்டி என ஏழு போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கி றார்கள்.

mmm

பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டு முறை போலீஸ் புகுந்து பரபரப்பாக்கினார்கள் என்றால், காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும் விருந்தாளியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதாவிற்குமிடையே வாக்குவாதம் முற்றி, மதுமிதா கத்தியால் கையைக் கிழிக்கும் அளவுக்குப் போனது. மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

Advertisment

மூன்று வாரங்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரியை பிக்பாஸின் ரகசிய அறைக்குள் ஒரு நாள் இருக்கச் சொன் னார்கள். இதை ஏற்க மறுத்ததால் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். கஸ்தூரிக்கு முன்பே வெளி யேறிய அபிராமி, சாக்ஷி அகர்வால், மோகன் வைத்யா ஆகியோர், கடந்த வாரம் மீண்டும் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி யானார்கள்.

இதற்கு முன்பு நடந்த இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி களிலும், பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறினால், வேறொரு பிரபலத்தைத்தான் போட்டியாளராக உள்ளே அனுப்பினார்கள். ஆனால் இந்த முறை ஏடாகூட சம்பவங்கள் ஏராளமாக நடப்பதால், புதிய போட்டியாளர்கள் யாரும் உள்ளே வரவில்லை.

அதனால்தான் வனிதா விற்கு ஏற்கனவே பேசிய சம்பளத்தைவிட கூடுதலாக சில ஆயிரங்களை சம்பளமாகப் பேசி விருந்தினராக உள்ளே வரவைத்து, போட்டியாளராக்கி விட்டார்கள்.

வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் ரவுசு பண்ணி ரவுண்டு கட்டுகிறார் வனிதா. இதையெல்லாம் கேள்விப் பட்டு கடுப்பாகித்தான், பிக் பாஸ் வீடிருக்கும் போலீஸ் லிமிட்டில் வரும் நசரத்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரு நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றைக் கொடுத்தார் "ஜாங்கிரி' மதுமிதா.

nnn

""பிக்பாஸ் போட்டியில் 100 நாட்கள் கலந்து கொண்டு வெற்றிப் பரிசை பெற வேண்டும் என நினைத்தேன். ஆனால் 56-ஆவது நாளில், தமிழ்ப்பற்று குறித்த எனது கருத்தை தெரிவித்ததற்காகவும் சக போட்டியாளர்களின் ஹராஸ் மெண்ட் குறித்தும் பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளரிடமும் நிகழ்ச்சியை நடத்தும் கமலிட மும் சொன்னேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவன மும் டி.வி.யும் எனக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, என்னைப் பற்றி தவறான விமர்சனங்களை பரப்புகிறது. எனவே அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இதுதான் மதுமிதா அளித்துள்ள புகார்.

நாம் மதுமிதாவைத் தொடர்பு கொண்ட போது, ""புகாரில் இருப்பது அத்தனையும் உண்மை. இப்போது எனது உடல்நிலை சரியில்லாததால், இரண்டு நாட்களில் இன்னும் பல உண்மைகளை சொல்லத்தான் போகிறேன்''’ என்றார்.

மதுமிதாவின் புகாருக்கு விளக்கம் பெற விஜய் டி.வி.யின் பி.ஆர்.ஓ. லட்சுமியை தொடர்பு கொண்ட போது பதிலளிக்க மறுத்துவிட்டார்.

""வெறும் நடிகராக மட்டும் இருந்து பிக்பாஸின் இரண்டு எபிசோடுகளை நடத்தினார் கமல். அப்போ தெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி யாளர்கள் சொல்வதற்கெல் லாம் தலையாட்டாமல், போட்டியாளர்களின் உணர்வு களுக்கு மதிப்பு கொடுப் பார்.

இப்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிக்கும் தலைவராக இருந்து கொண்டு நிகழ்ச்சியாளர்களுக்கு ஒன் சைடாக இருப்பதும் நியாயமா?'' என்கிறார்கள் பார்வையாளர்கள். பிக்பாஸ் நிர்வாக டீமின் மோசடி மெல்ல மெல்ல வெளிப்படும் வகையில், போலீசில் அளித்த புகார் மூலம் தோலுரித் திருக்கிறார் மதுமிதா.

டெயில் பீஸ்: டைரக் டர் சேரன், நடிகை ஷெரின் ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படலாம்.

-ஈ.பா.பரமேஷ்வரன், அரவிந்த்