Advertisment

ஒரு வாய்.... இரு வாய்ஸ்...!-அரசியல் களத்தில் ரஜினி எஃபெக்ட்!

aa

"இப்போ இல்லாட்டி எப் போதும் இல்லை' என்று 2020 டிசம்பர் தொடக்கத்தில் கூறி அரசியல் கியரை மாற்றிய ரஜினி, டிசம்பர் 31-க்குள்ளேயே, தன் உடல்நிலை பற்றி வெளிப்படையாகக் கூறி, ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டு, அரசியல் என்ட்ரி இல்லாமலேயே ஒதுங்கிவிட்டார்.

Advertisment

"அரசியலுக்கு வருவேன்' என்று ரஜினி சொன்னபோதும், "வரப்போவ தில்லை' என அறிவித்தபோதும், தமிழக அரசியல் களத்தின் குரல் எப்படி இருந்தது?

Advertisment

babarajini

சீமான் -

ரஜினியை நான் மிகவும் மதிக்கிறேன். திரையில் அவரை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரை என்னால் அர சியலில் ஏற்றுக் கொள்ள முடி யாது என்று ஆரம்பித்தவர் ஒருகட்டத்தில், "ரஜினி மற்றும் கமலை அடிக் கும் அடியில் இனி விஜய் போன்ற எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே கூடாது. இது மராட்டியனா… மானத்தமிழனா என்பதற்கான போர்' என்று வெளிப்படையாகவே ரஜினியை விமர்சித்தார்.

அதே சீமான் ரஜினி அரசியலே வேண்டாம் என கைவிட்டபின்...

""ரஜினிக்கு அரசியல் சரிப்பட

"இப்போ இல்லாட்டி எப் போதும் இல்லை' என்று 2020 டிசம்பர் தொடக்கத்தில் கூறி அரசியல் கியரை மாற்றிய ரஜினி, டிசம்பர் 31-க்குள்ளேயே, தன் உடல்நிலை பற்றி வெளிப்படையாகக் கூறி, ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டு, அரசியல் என்ட்ரி இல்லாமலேயே ஒதுங்கிவிட்டார்.

Advertisment

"அரசியலுக்கு வருவேன்' என்று ரஜினி சொன்னபோதும், "வரப்போவ தில்லை' என அறிவித்தபோதும், தமிழக அரசியல் களத்தின் குரல் எப்படி இருந்தது?

Advertisment

babarajini

சீமான் -

ரஜினியை நான் மிகவும் மதிக்கிறேன். திரையில் அவரை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரை என்னால் அர சியலில் ஏற்றுக் கொள்ள முடி யாது என்று ஆரம்பித்தவர் ஒருகட்டத்தில், "ரஜினி மற்றும் கமலை அடிக் கும் அடியில் இனி விஜய் போன்ற எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே கூடாது. இது மராட்டியனா… மானத்தமிழனா என்பதற்கான போர்' என்று வெளிப்படையாகவே ரஜினியை விமர்சித்தார்.

அதே சீமான் ரஜினி அரசியலே வேண்டாம் என கைவிட்டபின்...

""ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது. நாங்கள் 10 ஆண்டுகளாகப் போராடுகிறோம். எங்கள் கொள்கை, எங்கள் போராட்டத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவு கொடுக்கட்டும். சிறுவயதில் இருந்து தியானம், அமைதி என இருந்த ரஜினியால் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கமுடியாது. அவரால் உட்கட்சி பிரச்சனையைக் கூட சமாளிக்கமுடியாது. எனவே அவருடைய இந்த முடிவை நான் முழுமையாக வரவேற்கிறேன்'' என்று கூறினார்.

திருமாவளவன் -

""ரஜினி அரசியல் கட்சி துவங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம். அதேநேரத்தில் அவர் அரசியலுக்கு வருவதற்கு பா.ஜ.க.வின் அழுத்தம்தான் காரணம். நடிகர் ரஜினி மீதும் திருவள்ளுவர் மீதும் காவிச் சாயம் பூசப் பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்கமாட்டார் ரஜினியும் சிக்கமாட்டார். நடிகர் ரஜினி விழிப்புடன் இருக்கிறார், உறுதியாக இருக்கிறார்.

ரஜினியின் இந்த முடிவால் அ.தி.மு.க. தப்பித்துவிட்டது. ஒருவேளை ரஜினி கட்சி துவங்கியிருந்தால் அ.தி.மு.க. பல பிளவுகளாகப் பிரிந்திருக்கும். வறட்டு கவுரவம் பார்க்காமல் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்மையை வெளிப் படையாகக் கூறியதை நான் வரவேற்கிறேன்.

தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வம் -

""அரசியலில் ரஜினிகாந்த் என்ற குழந்தை இப்போதுதான் பிறந்துள்ளது. அ.தி.மு.க. என்பது ஒரு ஆலமரம். ஒன்றரைக் கோடி தொண்டர்களால் உருவாக்கப் பட்ட இயக்கம். இதை எவராலும் அசைக்கமுடியாது. ரஜினி கட்சியுடன் கூட்டணிகூட உருவாகலாம்.

தற்போது ரஜினி எடுத்து ள்ள முடிவை நான் வரவேற்கிறேன். அவர் உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழவும் வாழ்த்துகிறேன்.''

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -

""ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர். அவர் சொல்வதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. முதலில் ரஜினி கட்சியைப் பதிவுசெய்யட்டும். அதற்குப் பிறகு கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். அதுதான் சரியாக இருக்கும்.''

கட்சி அறிவிப்பு கைவிடப் பட்டபிறகு

""ரஜினியின் முடிவை நான் வரவேற்கிறேன்.''

அமைச்சர் ஜெயக்குமார் -

""தமிழக மக்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய தலைவர்களின் கொள்கைகளைப் பார்த்துதான் வாக்களிப்பார்கள். வெற்றிடத்தை ஏற்கெனவே அ.தி.மு.க. நிரப்பிவிட்டது. ரஜினி அல்ல எந்த சினிமா நபர் வந்தாலும் அவர்களின் அரசியல் இங்கு நிலைக்காது'' என்று கூறியிருந்தார்.

""ரஜினியின் முடிவிற்கு என்னுடைய ஆதரவு உண்டு. அவர் கட்சி ஆரம்பிக்காவிட் டாலும் அ.தி.மு.க.வை ஆதரிப்பார்.''

கே.எஸ் அழகிரி

""தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பது தான் ரஜினி அரசியலுக்கு வந்ததன் நோக்கம். தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும். அரசியலில் ஆன்மீகம் எடுபடாது. அரசியலுக்கு வந்தாலும் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார்.

அ.தி.மு.க.வைக் காப்பாற்ற பா.ஜ.க. செய்த முயற்சிகள் தோற்றுப்போய்விட்டன. தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு இரண்டாவதாகக் கிடைத்த பலத்த அடி. தனி மனிதர்களை மையமாக வைத்து இன்றைய தமிழக அரசியல் இல்லை.''

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:

""நீட், விவசாயிகள் பிரச்சனைகள் என மக்களுக்கான போராட்டக் களத்திலில்லாத ஒருவர் திடீரென தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

எல்லா தொலைக்காட்சி யிலும் பிரேக்கிங் நியூஸா ஓடுது. உயிரைக் கொடுக்கவும் தயார்னார். இப்ப உடல்நிலை யைக் காரணம்காட்டி அர சியலை விட்டு விலகுகிறார்.''

பொன். ராதாகிருஷ்ணன்- பா.ஜ.க.

""அரசியலுக்கு வரும் ரஜினிகாந்துக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரஜினியின் அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்க ளுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.''

குருமூர்த்தி

""ஒட்டு மொத்த தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த முடிவை எடுத் துள்ளார். இது அவரது வசனப்படி லேட்டு ஆனாலும் லேட்டஸ்ட்.

உடல்நிலை காரணமாக அவர் எடுத்துள்ள முடிவு தவிர்க்கமுடியாதது. ஆனால் நேரடி அரசியலில் ஈடுபடாவிட் டாலும் தமிழக மக்களுக்கு சேவை செய்வேன் என்றிருக் கிறார். 1996-ஐ போல அரசியல் தாக்கத்தை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துவார்.''

-தொகுப்பு: சேகுவேரா

nkn060121
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe