Advertisment

மாணிக்கத்தை காவலராக்கிய அந்த ஒரு மார்க்! -பின்னணியில் PBTS அமைப்பு!

ss

சில முயற்சிகள் ஆச்சரியமான வெற்றியைத் தேடித்தரும். சிவகாசியைச் சேர்ந்த மாணிக்கராஜாவும் அப்படியொரு வெற்றிக் களிப்பில் திளைக்கிறார். சென்னையில் இயங்கிவரும் PBTS (Pay back to the Society) என்ற அமைப்பைச் சேர்ந்த கருப்பசாமி, அந்த த்ரில்லான வெற்றிக்குப் பின்னால் நடந்தவற்றை விவரித்தார்.

Advertisment

"2020ல் எங்க அமைப்பு நடத்திய காவலர் தேர்வுக்கான பயிற்சியில் கலந்துகொண்டார் மாணிக்கராஜா. அந்தத் தேர் வில் அவர் வெற்றியடைய வில்லை. ஆனாலும் எங்களோடு தொடர்பிலேயே இருந்தார். அவ்வப்போது போட்டித்தேர்வு குறித்த ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவார். அதன்பிறகு, கடந்த ஆண்டு நடந்த காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். உடற்தகுதித் தேர்விலும் தேர்வானார். தனக்கு எப்படியும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தவருக்கு இறுதிப்பட்டியல் வெளியானபோது அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisment

dd

காவலர் தேர்வில் ஆண்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் 85 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாணிக்கமும் 85 கட்-ஆப் மதிப்பெண் சரியாக எ

சில முயற்சிகள் ஆச்சரியமான வெற்றியைத் தேடித்தரும். சிவகாசியைச் சேர்ந்த மாணிக்கராஜாவும் அப்படியொரு வெற்றிக் களிப்பில் திளைக்கிறார். சென்னையில் இயங்கிவரும் PBTS (Pay back to the Society) என்ற அமைப்பைச் சேர்ந்த கருப்பசாமி, அந்த த்ரில்லான வெற்றிக்குப் பின்னால் நடந்தவற்றை விவரித்தார்.

Advertisment

"2020ல் எங்க அமைப்பு நடத்திய காவலர் தேர்வுக்கான பயிற்சியில் கலந்துகொண்டார் மாணிக்கராஜா. அந்தத் தேர் வில் அவர் வெற்றியடைய வில்லை. ஆனாலும் எங்களோடு தொடர்பிலேயே இருந்தார். அவ்வப்போது போட்டித்தேர்வு குறித்த ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவார். அதன்பிறகு, கடந்த ஆண்டு நடந்த காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். உடற்தகுதித் தேர்விலும் தேர்வானார். தனக்கு எப்படியும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தவருக்கு இறுதிப்பட்டியல் வெளியானபோது அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisment

dd

காவலர் தேர்வில் ஆண்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் 85 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாணிக்கமும் 85 கட்-ஆப் மதிப்பெண் சரியாக எடுத்திருந்தார். ஆனால், அவருக்கு வேலை உறுதியாகவில்லை. ஏன் தெரியுமா?

பிறந்த தேதி அடிப்படையில் மாணிக்கம் பிறந்தநாளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரையில் உள்ளவர்களுக்கு பணி உறுதியானது. அவர்களைவிட மாணிக்கம் இளைய வய துள்ளவர் என்பதால், 85 கட்-ஆப் இருந்தும் கிடைக்கவில்லை. இதை வருத்தத்தோடு எங்களிடம் சொன்ன மாணிக்கம், "நானும் என் நண்பனும் விளையாட்டுச் சான்றிதழ் சமர்ப்பித்தோம். நண்பனுக்கு ஒரு மதிப்பெண் போட்டுள்ளார்கள். எனக்கோ போடவில்லை'’ என்றார்.

எங்களது அமைப்பு இதை ஒரு ஊக்கியாகப் பிடித்துக்கொண்டு, அந்த ஒரு மதிப்பெண்ணை மாணிக்கத்துக்குப் பெற்றுத் தருவதற்கு களமிறங்கியது. விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாணிக்கம் சம்பந்தப்பட்ட விளையாட்டுத் துறையில் விசாரித்தோம். அதனால், சான்றிதழின் தகுதி உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயத்தை சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தை தொடர்புகொண்டு தெரிவித்தோம். தவறை ஒப்புக்கொண்டனர். மாணிக்கத்தை நேரில் வந்து எழுத்துப் பூர்வமாக முறையிடச் சொன்னார்கள். மாணிக்கத்துக்கு தகவல் தெரிவித்து சென்னைக்கு கிளம்பிவரச் செய்தோம். பிறகென்ன? அவர் எழுத்துப் பூர்வமாக முறையிட்டதும், அடுத்த ஓரிரு நாட்களிலேயே, அந்த ஒரு மதிப்பெண் சேர்க்கப்பட்டதால் 86 மதிப்பெண்களானது. மாணிக்கத்தின் பெயர் சேர்க்கப்பட்டு பட்டியல் வெளியானது. ஜூன் 1ஆம் தேதி பணி நியமனம் கிடைக்கப்பெற்ற மாணிக்கம் பயிற்சியில் இணைந்திருக்கிறார்''’என்றார் மகிழ்ச்சியுடன்.

மாணிக்கத்தின் வாழ்க்கையில் நல்ல தொரு திருப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக் கும் PBTS அமைப்பின் செயல்பாடு கள் குறித்து அதன் உறுப்பினரும் வழக்கறிஞருமான பத்மநாபனிடம் கேட்டோம்.

"எங்க அமைப்புல இருக்கிற எல்லாரும் 2000-2001ல் இந்திய அரசுப்பணி தேர்வுக்கு தயாரானவங்க. 1999-2000ல் வெவ்வேறு பகுதில இருந்து இங்கே வந்து ஒண்ணா சேர்ந்து படிச்சப்ப நண்பர்கள் ஆனவங்க. ஒத்த கருத்துள்ள தோழமைகள் நாங்க 26 பேர் சேர்ந்து ஆரம்பிச்ச அமைப்பு இது.

dd

படிச்சு வாழ்க்கைல செட்டிலான பிறகு, சமூகத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்யணும்கிற அடிப்படைல, இந்த அமைப்பை கட்டமைச்சிருக்கோம். பாபா சாகேப் அம்பேத்கரோட மேற்கோள்தான் #Pay back to the Society. அதையே எங்க அமைப்போட பெயரா வச்சு செயல் படுறோம். நம்ம நாட்டோட இளைய சமுதாயத்தினரை பொறுப்பான, சமூகப் பங்களிப்பை உணர்ந்த தலைமுறையா உருவாக்கணும்கிறது எங்களோட குறிக்கோள். இந்த அமைப்போட தலையாய நோக்கம்னா, பாபா சாகேப் மற்றும் பெரியார் கருத்துகளைப் பரப்புவதுதான். இங்கே வெவ்வேறு தளங்கள்ல பணி செய்றவங்க இருக்காங்க. நான் (பத்மநாபன்) வழக்கறிஞரா இருக்கேன். மீனா சோமுங்கிறவங்க, தமிழ்நாடு தலைமைச் செயலகத்துல சார்பு செயலாளரா இருக்காங்க. டாக்டர் சதீஷ் முத்துராமன் மதுரை மருத்துவக்கல்லூரில உதவிப் பேராசிரியரா இருக்காரு. வங்கி ஊழியர்கள் எங்க அமைப்புல இருக்காங்க. இப்படி பலதரப்பட்ட நண்பர்கள் ஒரு குழுவா சேர்ந்திருக்கோம்.

மொதல்ல நாங்க கவனம் செலுத்துறது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும்தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரணும்கிறதுல உறுதியா இருக்கோம். சமூகம் சார்ந்து, கல்வி சார்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துறோம். கிராமங்களுக்குச் சென்று, சமூக பொருளாதாரத்துல பின்தங்கியிருக்கிற மாணவர்களைச் சந்திச்சு ஊக்குவிக்கிறோம். இரவுப் பாடசாலைகளை அடையாளம் கண்டு, அங்கு இடவசதி உள்ள இரவுப் பாடசாலைகளுக்கு லைப்ரரி கட்டுறதுக்கு உதவி பண்ணுறோம். லைப்ரரி கட்டுறது, அங்குள்ள மக்களுடைய பங்களிப்புடன் கூடிய செயல்பாடா இருக்கும். எங்க அமைப்போட செயல்பாட்டுக்கு வெளில இருந்து நிதி வாங்குறது இல்ல. எங்க அமைப்புல இருக்கிற 26 உறுப்பினர்கள், அவங்க வாங்குற மாதச் சம்பளத்துல இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை, இதுபோன்ற செலவுக்கு ஒதுக்கித் தர்றாங்க.

"சென்னை, அசோக் நகர்ல ஹைடெக் க்ளாஸ் ரூம் ஏற்பாடு பண்ணிருக்கோம். அங்கே காவலர் பயிற்சி அளிக்கிறோம். ஸ்கூல் முடிச்சிட்டு அடுத்து என்ன படிக்கலாம்கிற ஆலோசனை தர்றோம்''” என்று அந்த அமைப்பு ஆற்றிவரும் சேவைகளை ஆர்வத்துடன் கூறினார்.

நமது நாட்டில் நமக்கு என்னென்ன கிடைத்ததோ, என்னென்ன பலன்களை நாம் அனுபவித்து வருகிறோமோ, அதையெல்லாம் எதிர்வரும் தலைமுறையினருக்கு திருப்பிச் செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

nkn070623
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe