மனநல மருத்துவமனையில் நிர்மலாதேவி என்றதுமே ஊடகங்கள் பர பரப்பாயின. நெல்லையில் அவர் சிகிச்சை பெற்ற இடத்தில் விசாரித் தோம். ""21-ஆம் தேதி அவங்களா வந்து அட்மிட் ஆனாங்க. எங்க ஹோமில் சீனியர் சைக்கியாட்ரிஸ்ட் மூலம் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ஆரம்பத்துல சிவன் வந்தாரு... சக்தி வந்தாங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க. பிறகு, இன்ஜெக்ஷன் போட்டு தூங்க வச்சி, தூக்கத்துலயே கவுன்சிலிங் கொடுத்தோம். ஒருவழியா நார்மலுக்கு கொண்டு வந்துட்டோம். பத்திரிகை படிக்கிற அளவுக்கு தேறிட்ட தால, 25-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டாங்க''’என்றனர்.
நிர்மலாதேவிக்கு மனநல ட்ரீட்மெண்ட் தரப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் குடும்பத்தினர் என்ன நினைக்கின்றனர்? பலரும் இது பற்றி பேசவே விரும்பவில்லை. "தன்னுடைய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றத் தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுமே நிர்மலாதேவிக்கு சாமியாட்டம் வந்துவிட்டது'’என்று வியந்தார் மாணவி ஒருவரின் உறவினர். “"எங்க பிள்ளைங்கள விசாரிச்ச போலீஸ்காரம்மா கண்டிஷனா சொல்லிட் டாங்க. நீங்க என்ன கேட்டாலும் எங்ககிட்ட இருந்து பதில் வராது'’என்றார் இன்னொரு மாணவியின் தாயார் அழுத்தமாக. நிர்மலாதேவி தரப்பிலோ, "சாமி விவகாரத் தில் ஒருபோதும் அவர் நடிக்க மாட்டார்'’என்றனர்.
இத்தகைய சூழலில் வழக்கு விசாரணை என்ன வாகும் என முன்பு பரபரப் பாகப் பேசப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அழகர்சாமியிடம் கேட் டோம். “""தனக்கு எதிரான வழக்கில் நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடக்கிறதென்றே புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் குற்றம்சாட்டப்பட்டவர் இருந்தால், அவருக்குத் தண்டனை அளிக்க முடியாது. ஆனாலும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்தான் என்பதை அரசு மருத்துவரின் சான்றிதழ் மூலம் நிரூபித்தாக வேண் டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, மாணவி களிடம் நான் பேசினேன் அல்லது பேசவில்லை என்பதைத்தான் நிர்மலாதேவி தெரிவிக்க வேண்டும். இவர் கூப்பிட்டார்; அவர் கூப்பிட்டார் என்று யார் மீதும் குற்றம் சுமத்திவிட முடியாது. அது பற்றி அவர் தனி புகார் வேண்டுமானால் அளிக்கலாம். மன அழுத்தத்திற்கு நிர்மலாதேவி தள்ளப்பட்ட நிலையில், அவரால் வி.ஐ.பி.கள் தப்பிவிடுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.
மாணவிகள் ‘"நிர்மலாதேவி பேசியதை நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டோம்...'’என்று கூறினாலும்கூட, அவர்களைக் குறுக்கு கேள்விகள் கேட்பதற்கு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் உண்டு. இதுபோன்ற வழக்குகளில் அரசாங்க தரப்புதான் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும்''’என்றார் விரிவாக.
நிர்மலாதேவியின் தொடர்புகளால் பரபரப் பான மதுரை காமராஜர் பல்கலைக்கழக வட்டார மோ, ""நிர்மலா விவகாரத்திற்குப் பிறகு, இதேபோன்ற புகார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை மீது ஆடியோ ஆதாரத்துடன் வெளியாகியும் வழக்குப் பதிவு செய்யவில்லை. நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசியது தவறு. ஆனால், அதில் எந்தவொரு குற்றச் செயலும் நடக்கவில்லையே?''’என்கிறது.
உயர்கல்வித் துறை வட்டாரங்களில் விசாரித்த போது, தொலைதூர கல்வி மைய இயக்குநர் விஜயதுரையிடம் நிர்மலாதேவி அறிமுகப்படுத்தப் பட்டபோது, கெஸ்ட் லெக்சர் வேண்டுமென்று கேட்டார். மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநர் கலைச்செல்வனிடமும் நிர்மலாதேவிக்கு நல்ல அறிமுகம் இருந்தது. துணை வேந்தராக இருந்த செல்லதுரை வரை நிர்மலாதேவிக்காகப் பேசியிருக்கிறார். இதைத் தாண்டி பல்கலைக்கழக விவகாரங்களில் நிறைய அரசியல் இருக்கிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனின் வழிகாட்டுதலில் நடந்த துணைவேந்தர் நியமனங் களை ஆளுநர் பன்வாரிலால் தன் கையில் எடுத் தார். அவரால் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, பட்டமளிப்பு விழாவில், இணைவேந்தர் அன்பழகன் அமரவேண் டிய சீட்டில் கவர்னரின் செயலாளர் ராஜகோபால் உட்கார அனுமதித்தார். அதிருப்தியை பேட்டி யாகவே வெளிப் படுத்தினார் அமைச்சர். அது மட்டுமின்றி, மாவட்டங்கள்தோறும் அதிகாரிகளுடன் கவர்னர் நடத்திய ஆய்வு, மாநில அரசை சங்கடப்படுத்தியது.
இந்த நிலையில் நிர்மலாதேவி மாணவி களிடம் பேசிய ஆடியோ வெளியானது. கவர்னர் என்ற வார்த்தை அதில் இருந்தது. கவர்னர் மாளிகை வட்டாரம் பதற்றமானது. ஆவணங்கள் அழிப்பு எனப் புகார் கிளம்பியது. இதை எடப்பாடி அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. அண்மைக்காலமாக கவர்னர் எந்த ஆய்வும் செய்வதில்லை. அவரது செயலாளர் ராஜகோபாலுடன் கவர்னர் அதிகம் தென்படுவ தில்லை.
இந்த வழக்கில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி மட்டுமே சிக்கியுள்ளனர். சி.பி. சி.ஐ.டி. போலீசாருக்கு முழுவிவரமும் தெரியும். அடுத்தகட்ட கைது நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டால், சென்னைவரை கை காட்டு வார்கள், எதற்கு வம்பு என மூவருடன் வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. நிர்மலாதேவி வேறு சாமியாடுகிறார். அவரை யாரோ ஆட்டி வைப்பதாகவே கருத நேரிடுகிறது. நீதிமன்றத் தில் அரசுத்தரப்பு எப்படி நடந்துகொள்ளும்? வழக்கு என்னவாகும்? என்பது இப்போதே பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பித்து விட்டது''’’ என்றனர்.
-ராம்கி, பரமசிவன்
படம் : ப.இராம்குமார்