உள்ளாட்சி தேர்தலில் பதவி களை ஏலம் விட்டால் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மாநில தேர்தல் ஆணை யம் கடுமையாக எச்சரித்துள் ளது. இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ஆங்காங்கே உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டு ஜனநாயக தேர்தலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் புதிதாக பிரிக் கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் படி கடலூர் மாவட் டத்தில் வரும் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டம்பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள நடுக்குப்பம் ஊராட்சி மன்றதலைவர், துணைத்தலைவர் பதவிகள் ஏலம் விடுவதற்காக 09 ஆம் தேதி ஊர்க் கூட்டம் கூட்டப்பட்டு ஏலம் விடப்பட்டதாக வும், தலைவர்பதவியை அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தலைவர் சக்திவேல் என்பவர் ரூபாய்50 லட்சத்துக்கும், து
உள்ளாட்சி தேர்தலில் பதவி களை ஏலம் விட்டால் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மாநில தேர்தல் ஆணை யம் கடுமையாக எச்சரித்துள் ளது. இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ஆங்காங்கே உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டு ஜனநாயக தேர்தலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் புதிதாக பிரிக் கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் படி கடலூர் மாவட் டத்தில் வரும் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டம்பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள நடுக்குப்பம் ஊராட்சி மன்றதலைவர், துணைத்தலைவர் பதவிகள் ஏலம் விடுவதற்காக 09 ஆம் தேதி ஊர்க் கூட்டம் கூட்டப்பட்டு ஏலம் விடப்பட்டதாக வும், தலைவர்பதவியை அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தலைவர் சக்திவேல் என்பவர் ரூபாய்50 லட்சத்துக்கும், துணைத் தலைவர் பதவியை தே.மு.தி.க.வை சேர்ந்த முருகன் என்பவர் ரூ.15 லட்சத்திற்கும் ஏலம் எடுத்த தாகவும் செய்தி வெளியாகி அல்லோகலப் படுத்தியது.
இது குறித்து நடுக்குப்பத்தில் பெரியவர் தேவராஜிடம் பேசியபோது, ""போனமுறை தலைவராஇருந்த சக்திவேல், எங்க ஊரு திரௌபதியம்மன்கோயில்கட்டுறதுல முன்னாடி நின்னு பணிகளைச் செய்து வர்றாப்ல. இப்ப எலெக்சன் வர்றதால சக்திவேலையே தலைவரா ஆக்கினம்னா கோயில் வேலைகளை நல்லபடியா செஞ்சு முடிப்பாப்லனு ஊர்க்காரங்க முடிவு செஞ்சோம். அதுக்காக ஊர கூட்டி போட்டி யில்லாம அவரைத் தேர்ந்தெடுக்கலாம்னு பேசினோம். இதுதான் நடந்தது'' என்கிறார்.
தலைவர்பதவியைஏலம்எடுத்ததாக கூறப்படும்சக்திவேல் நம்மிடம் பேசியபோது, “""நான் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். சின்னஅளவுலமுந்திரிப்பருப்பு வியாபாரம்செய்துகிட்டிருக்கேன்.50லட்சம்ரூபாய் கொடுத்து ஊராட்சியைஏலம்எடுக்கற அளவுக் கெல்லாம் எனக்கு வசதி இல்லை. என்னை பிடிக்காத பங்காளிகள், என் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாம என்னை அசிங்கப் படுத்துறதா நினைத்து ஊரை அசிங்கப்படுத் தறாங்க'' என்றார்.
அதேசமயம் அவ்வூரிலுள்ள இளைஞர்கள் சிலரோ, ""ஒரு சிலர் ஊர் நன்மை எனச் சொல்லி அவர்களாகவே கூட்டத்தை கூட்டி இன்னார்தான் தலைவர், அவருக்கே ஒட்டுமொத்தமா ஓட்டு போடனும்னு முடிவு செய்வதை எப்படி எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியும்? இதற்குப் பின்னால் பணம்தான் இருக்கிறது. இதைச் சொன்னால் பெரியவர்கள் சண்டைக்கு வரு வார்கள்''’ என்றார்கள் பயத்துடன்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வனிடம் பேசியபோது, “""நடுக்குப்பம்ஊராட்சிமன்றத்தலைவர்பதவி ஏலம்விடப்பட்டதாக தகவல்அறிந்ததும் அலு வலர்களைஅனுப்பிஆய்வுநடத்தினோம் அதுபோன்ற நிகழ்வு அங்கு நடக்கவில்லை எனவும்,கோயில்சம்பந்தமாககூட்டம் போட்ட தாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆதலால்எந்தவொரு நபர்மீதும்நடவடிக்கை எடுப்பதற்கானவாய்ப்புஇல்லை'' என்கிறார்.
கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது தேனி, பெரம்பலூர், தர்மபுரி, ராமநாதபுரம் மாவட் டங்களிலும் ஊராட்சி பதவிகள் பல லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்ட பனைகுளம் ஊராட்சியில் இதுவரை இரண்டு முறை தேர்தல் நடத்தாமலேயே தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த முறையும் அதே ரீதியில் ஏலம் விட்டு தேர்ந்தெடுத்துள்ளனர். ஊராட்சி தலைவர் பதவி 25.4 லட்சத்திற்கும், 3 வார்டு கவுன்சிலர் பதவி தலா 50 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. பேரையூர் தலைவர் பதவி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தேனி மாவட்டம் அய்யம்பேட்டை கிராம ஊராட்சியில் பதவிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. தலைவருக்கு 5 லட்சம், துணைத்தலைவருக்கு 1.50 லட்சம், வார்டு உறுப்பினர்களுக்கு தலா 50 ஆயிரம் என்று பணம் கட்டியவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ரத்தானதால் தேர்வு செய்யப் பட்டவர்கள் பதவி ஏற்க முடி யாமல் போய்விட்டது. ஆகவே, ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளவர்களுக்கு தற்போது பதவிகள் வழங்க முயற்சிகள் நடக்கிறதாம்.
ராமநாதபுர மாவட்டம் ஏனாதி பஞ்சாயத்தில் 10 லட்சம் ரூபாய் கொடுப்பவரைத்தான் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று ஊர்ப் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட் டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. மேலும், ராம நாதபுரத்தில் பனைகுளம், கமுதி, கே.வேப்பங்குளம், புதுக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளிலும் குறிப்பிட்ட தொகை கொடுப்பவரைத்தான் தேர்ந்தெடுப்பது என ஊரார் முடிவெடுத்திருப்ப தாக தகவல் பரவியுள்ளதால், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்கள் இவ்வாறு ஏலம் விடப்படுவதும், உள்ளாட்சித் தேர்தலில் பணம் உள்ளவர்கள் மட்டுமே களமிறங்க முடியும் என்பதும் வருந்தத்தக்கது.
-சுந்தரபாண்டியன்