"ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும்' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும், "இத்திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது' என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜுவும் திட்டவட்டமாக அறிவித்ததால் "கல்வி, மருத்துவத்தில் கை வைத்த மத்திய-மாநில அரசுகள் ஏழை-எளிய மக்களின் சோற்றிலும் கைவைக்கத் தொடங்கிவிட்டன' என்ற புதிய சர்ச்சை உருவாகியிருக்கிறது.

ee

இந்தியாவிலேயே தமிழகம், கேரள மாநிலங் கள்தான் ரேஷன் பொருட் களை வழங்கும் பொது விநியோகத் திட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது வும், தமிழகத்தில் மட்டும் தான் அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட் கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன. 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் அப்போதைய முதல்வர் ஜெய லலிதா. காரணம், நகர்ப்புறத்தில் ஒருநாளைக்கு 32 ரூபாயும் கிராமப்புறத்தில் ஒருநாளைக்கு 26 ரூபாயும் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட் டிற்கு மேல் (ஆக்ஷர்ஸ்ங் டர்ஸ்ங்ழ்ற்ஹ் கண்ய்ங்) என்பதும் இதற்குக் குறைவாக சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் (இங்ப்ர்ஜ் டர்ஸ்ங்ழ்ற்ஹ் கண்ய்ங்) என்பதும்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அம்சம்.

""இந்த வருமானத்தைக் கொண்டு வறுமைக் கோட்டுக்கு மேல் வறுமைக் கோட்டுக்கு கீழ் என்று பிரிப்பது ஏற்புடையதல்ல. அதுவும், 3,000 கோடி ரூபாய் கூடுதலாக இருந்தால்தான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த முடியும்'' என் றார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருந்த நேரத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெ ழுத்து போட்டுவிட்டார் ஓ.பி.எஸ். இதனால், 2016 நவம்பர் 1-ந் தேதி உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த ஆரம்பித்துவிட் டனர். அதன் விளைவுதான் தற்போது "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை.'

Advertisment

"பொது விநியோகத் திட்டத்தை பாதுகாப்போம் என்று தேர்தல் அறிக்கை கொடுத்து வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசோ, காங்கிரஸ் கொண்டு வந்த தேசிய உணவுப் பாது காப்புச் சட்டத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்தி பொது விநியோக திட்டத்தை சீரழிக்க ஆரம்பித்துவிட்டது' என்ற குற்றச்சாட்டுகள் எழ ஆரம் பித்தன. "எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள் வது சிறப்பான திட்டம்தானே' என்று தோன்றினாலும் மோடி அரசின் நோக்கம் வேறு.

ee

Advertisment

துறை மாறாத மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. எம்.பி.யுமான சாந்தக்குமார் தலைமையிலான கமிட்டியை அமைத்தார். அக்கமிட்டியின் பரிந்துரை என்ன தெரியுமா? "உணவு தானியங்கள் கொடுப்பது மக்களுக்கு போய்ச் சேரவில்லை. அதனால், கேஷ் ட்ரான்ஸ்சக் ஷன்தான் செய்யவேண்டும்' என்று பரிந்துரை செய்தது. அதாவது, "ரேஷன் பொருட்களை விநியோகிப்பதற்குப் பதிலாக அதற்கான மானியத் தொகையை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதுதான் சாந்தக்குமா ரின் பரிந்துரை. 52 நகரங்களில் ரேஷனுக்கு பதிலாக நேரடி மானியத்தை கொண்டுவர வேண்டும். உணவு கொள்முதலை கைவிட வேண்டும்' என்று பரிந்துரை செய்திருக்கிறார்.

அடுத்தது, வறுமைக்கோட் டிற்கு கீழ் என்று பிரிக்கப்பட்ட வர்களுக்கு அரிசி 3 ரூபாய், கோதுமை 2 ரூபாய் இதர தானியங்கள் 1 ரூபாய் எனவும் வறுமைக் கோட்டிற்கு மேலுள்ள வர்களுக்கு அரிசி 8 ரூபாய் 30 பைசா எனவும் மூன்று வரு டங்களுக்கு மட்டும் வழங்கி பிறகு மார்க்கெட் ரேட்டுக்கு விற்கலாம் என்பது அடுத்த பரிந்துரை. அதாவது, கார், ஏ.சி., மூன்றுதளம் கொண்ட வீடு உள்ளவர்களை வறுமைக் கோட்டிற்கு மேல் என பிரித்துக்கொண்டு வந்து அவர் களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்திவிடுவதுதான் திட்டம்.

11

இப்படிப்பட்ட பரிந்துரை களைக் கொண்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் 2016 அக்டோபர் மாதம் ஓ.பி.எஸ். கையெழுத்து போட்டதும் "தமிழ் நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் பாதுகாக்கப்படும்' என்றும் "குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 20 கிலோ அரிசியும் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி என எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் அரிசி வழங்கப்படும்' என்று அறிவித்தார். ஆனால், இன்றுவரை அப்படி வழங்கப் படவில்லை. 16 கிலோ அரிசி கொடுத்துவிட்டு மீதி 4 கிலோ கோதுமைதான் கொடுக்கிறார் கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசும் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தி, ""ஜெயலலிதா கடுமையாக எதிர்த்ததை மிகத்தீவிரமாக செயல்படுத்துகிறார்கள் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும். அதாவது, வறுமைக்கோட் டிற்கு கீழ், வறுமைக்கோட்டிற்கு மேல் எனப் பிரித்து ரேஷன் பொருட்களை வழங்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருந்தார் ஜெயலலிதா. ஆனா, கணினிமயமாக்குகிறோம் என்கிற பெயரில் 650 கோடி ரூபாய் செலவுசெய்து புதிய ரேஷன் அட்டைகளை கொண்டுவந்தார் கள். அதில் பி.ஹெச்.ஹெச். எனப்படும் முன்னுரிமை உள்ள குடும்பங்கள், பி.ஹெச்.ஹெச். ஏ.ஏ.ஒய். எனப்படும் முன்னுரிமை உள்ள குடும்பங்கள் -அந்தியோதையா அன்னயோஜனா, என்.பி.ஹெச்.ஹெச். எனப்படும் முன்னுரிமை இல்லா குடும்பங்கள், என்.பி. ஹெச்.ஹெச்.எஸ். எனப்படும் முன்னுரிமை யில்லா குடும்பங்கள் சர்க்கரை மட்டும், என்.பி.ஹெச்.ஹெச். என்.சி. எனப்படும் எப்பொருளும் வேண்டாதவர்கள் என ஐந்து விதமாக குடும்ப அட்டைகளை பிரித்துவிட்டது தமிழக அரசு.

யாரிடம் எங்கு ஆய்வு நடத்தி இப்படி குடும்ப அட்டைகளை பிரித்தது தமிழக அரசு என்பதே கேள்விக்குறி. தமிழகத்தில் நடை முறையில் இருந்த யுனிவர்செல் எனப்படும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தையே நிறுத்தி விட்டது தமிழக அரசு. இதனால், தினமும் பல கோடி பேர் பசியால் வாடுவது பற்றியோ, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றியோ கவலைப்படாமல் மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

அதாவது கொள்முதல், சேமித்தல், விநியோகம் என மூன்று கம்பெனியாக பிரித்துவிட வேண்டும் என்று எஃப்.சி.ஐ. எனப்படும் உணவுப் பாதுகாப்பு கழகத்தையே கலைக்க இருக் கிறார்கள். சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் பொருட்களில் இரண்டு வருடங்களாக உளுத்தம்பருப்பு வழங்கப்படுவதில்லை.

33,000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 1,200 கடைகளைத்தான் சிவில் சப்ளை கார்ப்ப ரேஷன் நடத்துகிறது. மீதமுள்ள கடைகளை கூட்டுறவு நிறுவனங்கள் நடத்துகின்றன. அதுவும் 9,000 கடைகள் பகுதி நேர கடைகள், 23,000 முழு நேர கடைகள். இதில், 3,000 கடைகளில்தான் இரண்டு பேர் பணியாளர் களாக இருக்கிறார்கள். மீதமுள்ள கடைகளில் ஒருவர் மட்டும்தான் வேலை செய்கிறார். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஒற்றை ஆளாக கஷ்டப் படுகிறார்கள். உட்காருவதற்கு இருக்கைகள்கூட இல்லாமல் அரிசி மூட்டைகளில் அமர்ந்திருக் கிறார்கள்.

1000 குடும்ப அட்டை கொண்ட ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கான பொருட்கள் மட்டுமே வந்து இறங்குகின்றன. மேலும், எடை குறைவாக இறக்கப்படு வது, மிகக்குறைந்த சம்பளம், மாமூல் பிரச்சினை என ரேஷன் கடை ஊழியர்கள் பல பிரச் சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் கட்டுப்பாடற்ற பொருட்களான சோப்பு, மிளகாய்த்தூள் போன்றவற்றை விற்று வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நிலை. பல கடைகள் வாடகைக் கட்டிடங்களில் திண்டாடிக்கொண்டிருக் கின்றன.

இப்படியே விட்டால் ரேஷன் கடைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலையில் "ஒரே நாடு; ஒரே ரேஷன்' என்கிற பெயரில் மற்ற மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்கினால் சமாளிக்கவே முடியாது'' என்கிறார் அவர்.

தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் இரா.லெனின் நம்மிடம், ""கொள்முதல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்கிறது. இதனால், 1 கிலோ அரிசியை 10 ரூபாய்க்கு வாங்கி, மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வந்த தமிழக அரசு 22 ரூபாய்க்கு வாங்கி விற்கவேண்டிய நிலை. இதற்கு, 10,000 கோடி நிதி ஒதுக்கவேண்டும். ஆனா, 5,500 கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கே தமிழக அரசு தடுமாறிக்கொண்டிருக்கும் சூழலில் வெளி மாநிலத்தவருக்கும் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது மிகவும் கடினம்' ' என்கிறார். புதிய திட்டத்தினால் ரேஷனில் எந்தப் பொருளும் கிடைக்காது என்பதே அச்சம் ஊட்டும் நிலவரம்.

"ஒரே நாடு ஒரே கார்டு' என்பது சிறப்பாக செயல்படும் தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் மூக்கை நுழைத்து, தமிழக ஏழை எளிய மக்களின் சோற்றிலும் கைவைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கின்றன மத்திய-மாநில அரசுகள்.

-மனோசௌந்தர்