டந்த மாதம் வரை, இதோ கொரோ னாவின் ஆட்டம் முடிந்தது. இனி உலகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பப்போகிறது. பொருளாதார, சுகாதார நிலவரம் சகஜ நிலைக்குத் திரும்பப்போகிறதென மெல்லியதொரு நம்பிக்கை உலக அளவில் எழுந்தது. உலக நாடுகள் அனைத்துமே பெருமளவில் தம் மக்களுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளைப் போட்டிருந்ததும் அந்த நம்பிக்கைக்குக் காரணம். ஆனால், கொரோனாவின் புதிய வகையான ஒமிக்ரான் அனைத்தையும் தகர்த்திருக்கிறது.

Advertisment

தென் ஆப்பிரிக்காவில் தட்டுப்பட்ட ஒமிக்ரான் மிகக் குறுகிய காலத்தில் பாஸ்போர்ட், விசா வாங்காமல் 106 நாடுகளில் காலடி பதித்துள்ளது. எனவே உலகம் முழுவதுமிருந்து ஒமிக்ரான்,… ஒமிக்ரான்… எனும் பதற்றக் குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

oo

இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித்தின் கூற்றுப்படி, இங்கிலாந்தில் கொரோனா தொற்று ஏற்படுபவர்களில் 60 சதவிகிதம் பேர் ஒமிக்ரான் தாக்குதலுக்குள்ளான வர்கள். கடந்த டிசம்பர் 18, 19-ஆம் தேதிகளில் 82,000, 90,000 என இருந்த கொரோனா தொற்று, டிசம்பர் 22-ஆம் தேதி 1,06,122 என அதிகரித்தது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் மேயர் சாதிக் கான், "மருத்துவமனையில் அனுமதிக்கப்படு பவர்கள் எண்ணிக்கை திடீரென தாறுமாறாக அதிகரிப்பதையடுத்து, சுகாதாரப் பணியாளர் களான நர்ஸ், மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது'' என கவலை தெரிவித்துள்ளார். அண்டை நாடான ஜெர்மனி, இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை களின்போது இங்கிலாந்தில் 1,46,000 பேர் இறந்துள்ளனர். உலக அளவில் ஒமிக்ரான் தொற்றால் முதல் மரணம் இங்கிலாந்தி லேயே நிகழ்ந்துள்ளது. தற்போது ஒமிக்ரான் வரவால் அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் நிலைமையைக் கையாள் வதைப் பொறுத்து 25000-லிருந்து 75000 மரணங்கள் நிகழலாமென "லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசின்' எனும் ஆய்வகம் எச்சரிக்கை செய்துள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கண்டு இங்கிலாந்தின் அதிபரான போரிஸ் ஜான்சன், தன் நாட்டு மக்களை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள் ளார். இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசெபத் முன்னெச்சரிக்கையாகவும், மக்களுக்கு முன்னுதாரணமாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட் டங்களை ரத்துசெய்துள்ளார். கிறிஸ்துமஸுக்குப் பின் கெடுபிடிகள் அதிகரிக்கலாமெனத் தெரிகிறது.

இங்கிலாந்தில் முந்தைய ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு காரணமாக, ஊரடங்கு அறிவிக்க அரசுத் தரப்பில் தயக்கங்கள் தெரிந்தாலும், மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும், தேவைப்பட்டால் ஊரடங்கை அறிவிக்க அரசு தயங்கக் கூடாதென எச்சரிக்கை செய் துள்ளனர். இதனையடுத்து, படுக்கை வசதிகள், கொரோனா மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கொரோனாவுக்குப் பிந்தைய மருந்துகள் போன்றவற் றைத் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதற்கான நடவடிக் கைகளில் இங்கிலாந்து அரசு வேகம்காட்டி வருகிறது.

சீனா

"கொரோனாவின் பிறப்பிடம்' எனச் சொல்லப் படும் சீனாவில், வரும் 2022-ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த நிலையில் ஒமிக்ரானின் பராக்கிரமத்துக்கு சீனாவும் தப்பவில்லை. அதிலும் குறிப்பாக ஷான்சி மாகாணத்தின் தலைநகரான ஷியானில் ஒமிக்ரான் உற்சாகமாக மக்களை தன்வசம் ஈர்த்துவருகிறது.

Advertisment

oo

சீனாவின் கணக்குப்படி ஷியானில் 143 பேருக்குத் தொற்று எனச் சொல்லப்பட்டாலும், அசல் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்கிறார்கள். இதனால் ஷியான் நகரில் டிசம்பர் 22 முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரலாம். ஷான்சி மாகாணம் மட்டுமல்லாமல் வேறு பல மாகாணங்களிலும் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

டெல்டா போன்ற மற்ற கொரோனா வகைகளை விடவும் ஒமிக்ரானின் தொற்றும் வேகம் சூப்பர் பாஸ்ட்டாக உள்ளதால், சீனா முன்கூட்டியே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மொத்த சீன மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 10 சதவிகிதம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. போதிய இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை அரசு ஊக்கப்படுத்துகிறது. அங்கு நடந்த ஆய்வொன்று "ஒமிக்ரான் தொற்று உச்சத்தில் இருக்கும்போது நாளொன்றுக்கு 22,000 சீனர்களுக்கு கொரோனா தொற்றலாம்' என கணித்துள்ளது.

வியட்னாம் நாட்டை ஒட்டியுள்ள டாங்ஜிங் நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி கிட்டத்தட்ட 2 லட்சம் மக்களுள்ள ஒரு நகரத்துக்கே லாக்டவுன் அறிவித்துவிட்டது சீனா.

மூடிய உள்ளங்கையைப் போல் நாட்டு நடப்புகளை வைத்துக்கொண்டுள்ள சீனாவில், தொற்று எண்ணிக்கையும் சரி, மரண விவரங்களும் சரி அரசு தெரிவிக்கும் தகவல்களில் மட்டுமே வெளிப்படுகின்றன. உலக அளவில் சிறிய நாடுகளிலே, கொரோனா தொற்று, மரண எண்ணிக்கை ஐம்பதாயிரம், லட்சம் எனச் செல்லும் நிலையில்... இதுவரை சீனாவில் கொரோனாவால் 4636 பேர் மட்டுமே இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கட்ட கொரோனா அலையிலும் தற்போதும் சேர்த்து கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 100,644 என்று மட்டுமே சொல்கிறது. சீனா சொல்லும் தகவல்களை நாம் கேட்டுக்கொள்வதன்றி செய்ய வேறில்லை. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் உலகம் முழுவதும் சந்தேகத் துடனே பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா

ஒமிக்ரான் தொற்றில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக நாளொன்றுக்கு இருபதாயிரம், முப்பதாயிரம் கொரோனா நோயாளிகளைச் சந்தித்துவருகிறது அமெரிக்கா. 6 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். டிசம்பர் 12 முதல் 18-ல்தான் அமெரிக்காவில் ஒமிக்ரான் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பரவியிருக்கிறது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது நியூயார்க்தான்.

oo

Advertisment

அமெரிக்காவில் இன்னும் கிட்டத்தட்ட 4 கோடி பேர் முதலிரண்டு தடுப்பூசிகளே போட்டுக் கொள்ளவில்லை. அமெரிக்காவிலும் சமீபத்தில் தான் டெக்ஸாஸைச் சேர்ந்த முதல் ஒமிக்ரான் நோயாளி பலியானார். அவர் தடுப்பூசி போடா தவர் எனத் தெரியவந்ததில் அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர். தடுப்பூசி போடாதவர்கள் அடை யாளம் காணப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி போடு வதற்கான நடவடிக்கைகள் துரிதமெடுத்துள்ளன.

கிறிஸ்துமஸை ஒட்டி விடுமுறையில் இருக்கும் மக்களை எச்சரித்துள்ள அரசு, "குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடுவது நல்ல விஷயம்தான். ஆனால் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது அதைவிட நல்லது' என்கிறது.

"எத்தனை விரைவாய் பூஸ்டர் தடுப்பூசி போடமுடியுமோ, அத்தனை விரைவாய் போட்டுக் கொள்ளுங்கள். இப்போதும் 80,000 இடங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன''’எனத் தெரிவித் துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

கோவிட் வேலை நெருக்கடியால் மருத்துவர்கள் சோர்வடைவதைத் தவிர்க்க மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், நர்ஸ்கள் என ஆயிரக்கணக்கில் பணிக்கு அமர்த்தப் பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படும் நோயாளிகளின் எண்ணிக்கைய அதிகரிக்க படுக்கை வசதி உள்ளிட்ட இதர வசதிகளைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே ஆம்புலன்ஸுகள், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றைக் கண்டறியும் சோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியாவில் இன்னும் ஒமிக்ரான் தன் முழுவேகத்தைக் காட்டவில்லை. டிசம்பர் 24-ஆம் தேதி நிலவரப்படி ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 300. டெல்லி, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தலா 55 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

பெரும் மக்கள் தொகையுள்ள இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் இந்த எண்ணிக்கை மின்னல்வேகத்தில் அதிகரிக்கலாம். இந்தியாவில் ஒரேயொரு தடுப்பூசியாவது போட்டவர்கள் எண்ணிக்கை 87 சதவிகிதமாகவும் இரு தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 56 சதவிகிதமாகவும் இருக்கிறது.

அதிகரித்துவரும் ஒமிக்ரான் தொற்று குறித்து பிரதமர் மோடி, உயர் அதிகாரிகளுடனும், மருத்துவத் துறை நிபுணர்களுடனும் டிசம்பர் 23-ஆம் தேதி ஆலோசனை செய்தார்.

கொரோனா இரண்டாவது அலையின் போது இடமில்லாமல் மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் கிடத்தப்பட்டதையும் மருத்துவமனை சுற்றுப்புறத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் அனுமதிக்கப்பட்டதையும், கொரோனா மரணங்களின்போது சுடுகாட்டில் வரிசையில் காத்திருக்க நேர்ந்ததையும், கங்கைக்கரை பிணங்களால் நிரம்பிவழிந்ததையும், ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு அலைக்கழிந்ததையும் இந்திய மக்கள் கண்கூடாகக் கண்டனர்.

"இந்தமுறை ஒமிக்ரான் குறித்து முன் கூட்டியே திட்டமிட்டு, முந்தைய இக்கட்டுகள் எதுவும் நேராமல், திறம்படக் கையாளவேண்டும்' என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதனை மத்திய -மாநில அரசுகள் நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.