ப்பான் நாட்டில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் உற்சாகமாகத் தொடங்கியுள்ள நிலையில், இவ்வாண்டு தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ள 11 பேரில் எத்தனை பேர் எந்தெந்தப் பதக்கங்களைத் தட்டிவரப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

olympic

சி.ஏ. பவானிதேவி (வாள் வீச்சுப் போட்டி)

ஒலிம்பிக்கில் வாள் வீச்சுப் போட்டியில் பங்குபெறும் முதல் இந்தியப் பெண் பவானிதேவி. தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இவர், 2014-ல் 23-வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.

பள்ளியில் ஆறு போட்டிகளில் வாள் வீச்சைத் தேர்வுசெய்யும் நிர்பந்தத்துக்கு ஆளானார். இப்போது அதே வாள்வீச்சு பவானியை ஒலிம்பிக் களத்துக்கு கொண்டுசேர்த்திருக்கிறது. 9 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். பவானியின் பதக்கப் பயணம் வெற்றிப் பயணமாக அமையட்டும்.

சரத் கமல் (டேபிள் டென்னிஸ்)

சென்னையைச் சேர்ந்த 38 வயது டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், தொடர்ந்து நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை யைப் பெற்றிருக்கிறார். அர்ஜுனா விருது, 9 முறை தேசிய சாம்பியன், மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் வீரர் வில்லியம் ஹென்சலை வீழ்த்தி தங்கப் பதக்கம் என மார்பில் பதக்கங்களுக்குக் குறைவில்லாதவர்.

இம்றைய ஒலிம்பிக் டோக்கியோவில் தனி யாகவும் மணிகா பத்ராவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியிலும் ஆடவிருக்கிறார். அர்ஜூனா விருதை வென்றவரால், பதக்கத்தை குறிதவறாமல் வீழ்த்தமுடிகிறதா என பார்க்கலாம்.

olympic

Advertisment

இளவேனில் வாலறிவன் (துப்பாக்கி சுடுதல்)

டோக்கியோ ஒலிம்பிக்கில், இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிப் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2018 ஜூனியர் வேர்ல்டு கப்பில் வாங்கிய 631.4 புள்ளிதான், இந்த வகை துப்பாக்கி சுடும் போட்டியிலேயே அதிக புள்ளி.

பள்ளிப் படிப்பை குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொண்டவர் இளவேனில். 2019 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவில் முதல் பதக்கத்தை வென்றிருக் கிறார். சிட்னி ஜூனியர் உலகக் கோப்பை, ஜெர்மனியின் ஷுல் உலகக் கோப்பையில் தங்கம் வென்றிருக்கும் இவர் தன் ஒலிம்பிக் பதக்கமும் தங்கமாக இருக்கவேண்டுமென்ற உறுதியுடன் குறிபார்த்து வருகிறார்.

Advertisment

விஷ்ணு சரவணன் (படகுப் போட்டி)

இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் படகுப் போட்டியில் பங்கேற்கத் தேர்வான நான்கு இளைஞர்களில் ஒருவர் விஷ்ணு சரவணன். 22 வயது இளைஞரான விஷ்ணு சரவணனுக்கு டோக்கியோ ஜாக்பாட்டைப் பெற்றுத் தந்தது ஓமனில் நடந்த படகுப் போட்டிதான். 21 வயதுக்குக் கீழானவர்களுக்கான போட்டியில் வெண்கலம், ஹாங்காங் படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2016-ல் தேசிய சாம்பியன் என தன் பெயர் சொல்வதற்கு நிறைய விசிட்டிங் கார்டுகளை வைத்திருக்கிறார். ஒலிம்பிக் பதக்கம் அவர் கழுத்தை அலங்கரிக்கட்டும்.

dd

சத்யன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்)

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகம் சார்பாக பங்கேற்கும் இன்னொரு டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் சென்னையைச் சேர்ந்தவர். ஐரோப்பிய மண்ணில் ஐ.டி.டி.எஃப். டோர்ன மெண்டை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். 2018 காமன்வெல்த் போட்டி யில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வெவ்வேறு போட்டிகளில் வென்று கம்பீரமாக சர்வதேச களத்துக்குள் நுழைந் தவர். ஐ.டி.டி.எஃப். பட்டியலில் முதல் இருபத் தைந்து பேர் பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றிருப்பதும் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நேத்ரா குமணன் (படகுப் போட்டி)

நேத்ரா குமரன், விஷ்ணு சரவணனின் அக்கா. ஒலிம்பிக் போட்டியில் படகுப் போட்டியில் பங்குபெறத் தேர்வான முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் நேத்ரா தட்டிச்சென்றிருக்கிறார். கூடைப்பந்து, டென்னிஸ், பரதநாட்டியம் என பல திசைகளிலும் முட்டிப் பார்த்தாலும் படகுதான் இவரைக் கரைசேர்த்திருக்கிறது.

ஓமனில் நடைபெற்ற படகுப் போட்டிக்காக ஒன்றரை வருடம் வீட்டுப் பக்கமே வராமல் கடுமையாக உழைத்தேன். அது ஓமன் போட்டியில் மட்டும் அல்லாமல் ஒலிம்பிக்கில் பெயர் இடம்பெறுவதுவரை பலனளித்திருக்கிறது என உற்சாகமாகச் சொல்கிறார் நேத்ரா.

கே.சி. கணபதி (படகுப் போட்டி)

25 வயது தமிழ் இளைஞரான கே.சி. கணபதி, டோக்கியோ செல்லும் ஒலிம்பிக் பட்டாளத்தில் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார். ஓமனில் நடைபெற்ற முஸன்னா படகுப்போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

கே.சி. கணபதி தனியாகத் தேர்வாகவில்லை. வருண் தாக்கர் என்பவருடன் இணைந்தே தேர்வாகியிருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் போட்டியாளர்களாக இருந்தவர்கள்.

கணபதி-வருண் ஜோடி 2018 ஜாகர்த்தா ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

oo

ராஜீவ் ஆரோக்கியா (தடகளம்)

திருச்சியைச் சேர்ந்த ராஜீவ் ஆரோக்கியா, 2வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றும் ராஜீவ், ஆண்களுக்கான 4ஷ்100 மீட்டர் பிரிவில் போட்டியிடு கிறார். ரியோ ஒலிம்பிக்கில் தவறவிட்ட பதக்கத்தை, டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்று விட வேண்டு மென்ற துடிப்புடன் ஆயத்தமாகி வருகிறார்.

ரேவதி வீரமணி (தடகளம்)

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி- ராணி தம்பதியின் மகள் ரேவதி. 4ல400 மீ கலப்பு ஓட்டத்தில் பங்கேற்கத் தேர்வான வீராங் கனைகளில் ஒருவர். பாட்டி ஆரம்மாளின் அர வணைப்பும், ஆறாவது வகுப்பில் வெறும் காலில் ஓடியதைக் கண்டு பயிற்சியளித்த கண்ணனின் மெரு கேற்றலும் தன்னை இந்த அளவுக்கு வளர்த்தது என்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தேசிய அள வில் தங்கப் பதக்கம் வாங்கியவர். கத்தார் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அடைந்த காயம் பின்னடைவாக அமைந்தாலும், ஒலிம்பிக் தகுதிப் போட்டியின் போது இவர் காட்டிய வேகம், ஒலிம் பிக்கில் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

தனலட்சுமி சேகர் (தடகளம்)

திருச்சி அருகே குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி தனது அம்மாவின் பராமரிப் பில் வளர்ந்தவர். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலைக் கனவில் தடகளத்தின் பக்கம் வந்தாலும், அவரது வேகம் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தி ருக்கிறது. இந்தியாவின் டூட்டி சந்த், ஹிமா தாஸ், பி.டி. உஷா போன்ற முன்னாள் தடகள வீரர்களின் சாதனைகளை வென்றுகாட்டியிருக்கும் தனலட்சுமி, சர்வதேச களத்தில் தன்னுடன் ஓடுபவர்களின் சவாலை யும் வென்று காட்டும் உத்வேகத்திலிருக்கிறார்.

சுபா வெங்கடேசன் (தடகளம்)

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், 4ஷ்400 ரிலே போட்டியில் கலப்பு ரிலே போட்டியில் ஓடவிருப்பவர். அப்பா வெங்க டேசன் கட்டடத் தொழிலாளி. அம்மா பூங்கொடி குடும்பத் தலைவி. தாத்தா சங்கிலிமுத்துவின் உத்வேகமே தன்னை இத்தனைதூரம் கொண்டு வந்தது என்கிறார். ஜூனியர்களுக்கான ஆசியன் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வர். நேபாளத்தில் நடந்த தெற்காசியப் போட்டியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் ஜெயித்தவர்.

கொரோனாவால் வந்த உற்சாகக் குறைவை, டோக்கியோவின் ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளிவந்து மாற்றுகிறார்களா என பார்க்கலாம்!

-க.சுப்பிரமணியன்

_______________

பாராலிம்பிக்

dd

2016 ரியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுத லில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்றுதந்த தமிழக வீரர் மாரி யப்பன், டோக்கியோ பாரா ஒலிம்பிக் கிலும் தேர்வாகி யிருக்கிறார். சமீபத்தில் "கேல் ரத்னா' விருது வென்ற அவருக்கு, டோக்கியோ பாராலிம்பிக் அரங்கில், இந்திய தேசியக் கொடியைச் சுமந்துவரும் கௌரவமும் அளிக்கப் பட்டுள்ளது.