Advertisment

பழைய கான்ட்ராக்ட்! புது கமிஷன்! பாளை. பரபரப்பு!

cc

டந்த 2019 அ.தி.மு.க. ஆட்சியின் போது, நெல்லை மேலப்பாளையம் மண்டலத் தின் 43, 44, 45-ஆவது வார்டுகளின் சிதிலமான சாலைகளைப் புதுப்பிக்க 2 கோடிக்கான டெண்டர் நெல்லை மாநகராட்சி சார்பில் விடப்பட்டது. அந்த காண்ட்ராக்ட்டை பாளைப் பகுதியின் தேவா என்கிற காண்ட்ராக்டர் எடுத்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் அனைத்துப் பணிகளும் முடக்கப்பட்டன. மேலும் குறைவான மதிப்பீட்டால் கான்ட் ராக்டர் தேவாவும் பின்வாங்கி யிருக்கிறார்.

Advertisment

வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நெல்லைப் பகுதிக்க

டந்த 2019 அ.தி.மு.க. ஆட்சியின் போது, நெல்லை மேலப்பாளையம் மண்டலத் தின் 43, 44, 45-ஆவது வார்டுகளின் சிதிலமான சாலைகளைப் புதுப்பிக்க 2 கோடிக்கான டெண்டர் நெல்லை மாநகராட்சி சார்பில் விடப்பட்டது. அந்த காண்ட்ராக்ட்டை பாளைப் பகுதியின் தேவா என்கிற காண்ட்ராக்டர் எடுத்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் அனைத்துப் பணிகளும் முடக்கப்பட்டன. மேலும் குறைவான மதிப்பீட்டால் கான்ட் ராக்டர் தேவாவும் பின்வாங்கி யிருக்கிறார்.

Advertisment

வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நெல்லைப் பகுதிக்கு ஆய்விற்காக வரவிருக்கிறார். மேலப்பாளையத்தை ஒட்டியிருக்கும் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப் பட்ட பழமையான மேடை போலீஸ் ஸ்டேஷன் புதுப்பிக்கப்பட்டு முதல்வர் திறப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகளை முடிக்காமலேயிருப்பதால் பொதுமக்கள் கடுப்பாகி, முதல்வர் வருகிறபோது சாலை மறியலில் ஈடுபட்டால் விவகாரமாகிவிடுமே என்று பதறிய மாநகராட்சி கமிசனர் சிவகிருஷ்ணமூர்த்தி, காண்ட்ராக்டர் தேவாவை வரவழைத்து மேலப்பாளையச் சாலைப்பணியை முடித்துத்தருமாறு அறிவுறுத்தினார்.

Advertisment

cc

ஆனால் காண்ட்ராக்டரோ, 2019-ல் போடப்பட்ட காண்ட்ராக்டில் பழைய மதிப்பீட்டில் பணி செய்தால் நஷ்டமாகுமென்று மறுத்திருக்கிறார். எவ்வளவோ பேசிப்பார்த்தும் இறுதியில், டெண்டரில் 30 சதவிகிதம் உயர்த்திவிட்டு, சாலை போடும்படி கேட்டுக்கொள்ள, ஆகஸ்ட் 13ஆம் தேதி, சாலை போடும் பணியைத் துவக்கியிருக்கிறார். அத்தருணத்தில் இடையே புகுந்த மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளரான துபாய் சாகுலும், அவரது மகளும் வார்டு கவுன்சிலருமான கதீஜாவும் காண்ட்ராக்டரிடம், "தொகுதி எம்.எல்.ஏ. அப்துல்வகாப்பை போய்ப் பார்த்துட்டு வாங்க. அவரைப் பார்க்காமல் ரோடு போடக்கூடாது'' என்றும் கமிசன் பற்றியும் பேசியிருக்கிறார்களாம்.

cஇதனால் நொந்துபோன காண்ட்ராக்டர் தேவா, இவர்கள் கமிசன் கேட்டு இடையூறு செய்வதால் தன்னால் சாலைப்பணியை குறிப்பிட்ட தொகைக்குள் முடிக்க முடியாதென்று கமிசனருக்கு கடிதம் அனுப்பி விட்டாராம். இதையடுத்து இவ்விவகாரம் அரசின் உயரதிகாரிகள்வரை செல்ல... சம்பந்தப்பட்ட பகுதி செயலாளரும் கவுன்சிலரும் எச்சரிக்கப்பட்டார்களாம். அதன்பின் சாலைப்பணி வேகமெடுத்திருக்கிறது. இது குறித்து மாநகராட்சி கமிசனரிடம் விசாரித்ததில், "பிரச்சினைகள் முடிக்கப்பட்டு தற்போது பணிகள் நடக்கத் தொடங்கிவிட்டன'' என்றார்.

மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளரான துபாய் சாகுல் மற்றும் வார்டு கவுன்சிலர் கதீஜா கூறுகை யில், "நாங்கள் அப்படிப் பேசவில்லை. எம்.எல்.ஏ. அப்துல் வகாப் ஊரில் இல்லை. அவர் வந்தபிறகு வேலையை ஆரம்பியுங்கள் என்று தான் சொன்னோம். கமிசன் பற்றிப் பேசவில்லை'' என்றார்கள்.

"அதில் நான் தலையிடவுமில்லை, கமிசன் கேட்கவுமில்லை. என் பெயரை வீணாக இழுக்கிறார்கள்'' என்கிறார் பாளை எம்.எல்.ஏ.வும், நெல்லை மாநகர தி.மு.க. செயலாளருமான அப்துல்வகாப். பரபரப்பாக இவ்விவ காரம் நெல்லை மாநகரில் பலரின் புருவங்களை உயர வைத்திருக்கிறது.

nkn070922
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe