Advertisment

கட்டணக் கொள்ளை! ஓலா, ஊபர் வாடிக்கையாளர்கள் குமுறல்!

ss

"மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க...''

"அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...''

"மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...''

சென்னையில் வாடகைக்கார், வாடகை ஆட்டோக்கள் ஓடத் தொடங்கிய காலத்தில் அவர்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள் இவை. ஆட்டோ ஓட்டுனர்களோடு பேரம் பேசுவது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகக்குறைந்த தூரத்துக்கே அதிகத் தொகை வசூலிப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

காலப்போக்கில் ஆன்ட்ராய்டு போன்கள் வந்தபின்னர், கூகுள் மேப் ஆப் பயன்பாட்டின் மூலமாக ஓலா, ஊபர், ரேப்பிடோ எனப் பல நிறுவனங்கள் வர வர, பொதுமக்கள் மத்தியில் ஒருவித "அப்பாடா' மனநிலைதான். கிலோமீட்டருக்கு இவ்வளவு என ஆப் மூலமாகக் காட்டப்படும் தொகை ஏற்புடையதாக இருந்ததாலும், பேரம் பேசும் தொல்லையே இல்லையென்பதாலும் இந்த கார், டாக்ஸிகளைப் பலரும் பயன்படுத்தத் தொ

"மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க...''

"அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...''

"மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...''

சென்னையில் வாடகைக்கார், வாடகை ஆட்டோக்கள் ஓடத் தொடங்கிய காலத்தில் அவர்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள் இவை. ஆட்டோ ஓட்டுனர்களோடு பேரம் பேசுவது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகக்குறைந்த தூரத்துக்கே அதிகத் தொகை வசூலிப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

காலப்போக்கில் ஆன்ட்ராய்டு போன்கள் வந்தபின்னர், கூகுள் மேப் ஆப் பயன்பாட்டின் மூலமாக ஓலா, ஊபர், ரேப்பிடோ எனப் பல நிறுவனங்கள் வர வர, பொதுமக்கள் மத்தியில் ஒருவித "அப்பாடா' மனநிலைதான். கிலோமீட்டருக்கு இவ்வளவு என ஆப் மூலமாகக் காட்டப்படும் தொகை ஏற்புடையதாக இருந்ததாலும், பேரம் பேசும் தொல்லையே இல்லையென்பதாலும் இந்த கார், டாக்ஸிகளைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

Advertisment

ss

மிகவும் எளிதாக புக்கிங் செய்யும் வாய்ப்பு, எண்ணிக்கைக்கேற்ப கார் வகைகள், ஆட்டோக்கள், டூவீலர்கள் பயன்பாடு, குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் எனப் பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துவருகின்றன. சென்னையைப் பொறுத்தவரை, ஓலாவும், ஊபரும் அதிக வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், சமீப காலமாக இந்த நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அவற்றில் முதன்மையான குற்றச்சாட்டு, முந்தைய காலத்தில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுபவர்கள், மீட்டருக்கு மேல் காசு கேட்டதுபோல் தற்போது ஓலா, ஊபர் ஓட்டுநர்களும் அதில் காட்டும் தொகைக்கு மேலாக 40 ரூபாய், 50 ரூபாய் என்று கேட்கிறார்கள். அதைத் தர ஒப்புக்கொண் டால் மட்டுமே சவாரிக்கு வருகிறார்கள் என்கிறார்கள். நம்மிடம் புகாரளித்த ஓட்டேரியை சேர்ந்த மல்லிகா என்ற வயதான பெண்மணி, "ரேபிட்டோ ஆட்டோவை பயன்படுத்தியபோது, அதில் செலுத்தவேண்டிய தொகை 333 ரூபாய் என்று வந்தது. ஆனால் ஆட்டோ ஓட்டுநரோ 400 ரூபாய் தந்தேயாக வேண்டுமென்று மிரட்டாத குறையாகக் கறாராகப் பேசி 400 ரூபாயை வாங்கிவிட்டார். எனக்கு 67 ரூபாய் கூடுதல் செலவாகிவிட்டது. இப்படியெல்லாம் அடிதண்டமாக வசூலித்தால், அவசரத்துக்கு இதுபோன்ற ஆட்டோக்களை நம்பி வாழும் என்போன்ற முதியவர்கள் எப்படி இவர்களைப் பயன்படுத்த முடியும்?'' எனக் கேட்டார்.

இவரைப் போலவே பலரும், ஆப் மூலமாக இயங்கும் வாடகைக் கார்கள், ஆட்டோக்கள் மீது இதேபோன்ற புகார்களைக் கூறுகிறார்கள். எங்களுக்கு ரிட்டர்ன் சவாரி கிடைக்காதென்றும், எங்களுக்கு வருமானமே மிகக்குறைவு தானென்றும் வெவ்வேறு காரணங்களைக் கூறி கூடுதல் தொகையை வசூலித்துவிடுகிறார்கள். அதேபோல், வாடகைக்காரை புக் செய்தபின்னர் அதை கேன்சல் செய்யவேண்டியிருந்தால் அந்த பொறுப்பை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள். அப்படி கேன்சல் செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது.

எனவே ஆப் மூலமாக இயங்கும் வாடகைக்கார் நிறுவனங்கள் கட்டணத்தை வசூலிப்பதில் இருக்கும் கூடுதல் வசூலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள். பொதுமக்களிடம் இந்நிறுவனங்கள் எதிர்ப்பைச் சந்தித்துள்ள நிலையில், இன்னொரு பக்கம், மீட்டர் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் ஆட் டோக்களில் வசூலிக்கப்படும் மீட்டர் கட்டணத்தை உயர்த்தும்படியும், வாடகை பைக் டாக்ஸியை தடைசெய்ய வேண்டு மென்றும் கோரிக்கை வைத்து, கடந்த ஒரு வாரமாக சென்னை, கோவை எனத் தமிழகம் முழுக்க ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் சார்பாகப் போராட்டங்களில் இறங்கி யுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தரப்பில் கூறுகையில், "தமிழகத்தில் பைக் டாக்ஸியை தடைசெய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் பைக் டாக்ஸிக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள எந்த சட்டத்திலும் அனுமதி கிடையாது. இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் தெளிவான வழிகாட்டுதலுக்கு பிறகே இதுகுறித்து முடிவெடுக்க முடியுமென்று கூறிவிட் டார்.

எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்கள். அதேபோல், கடந்த 11 ஆண்டுகளாக மீட்டர் ஆட்டோவில் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.

வாடகைக் கார், ஆட்டோ கட்டணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமா?

nkn251224
இதையும் படியுங்கள்
Subscribe