"ஐயோ காப்பாத்துங்க, எனக்கு நெஞ்சு வலிக்குது, என்ன அடிக்க வர்றாங்க...'' என மேயர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் புரண்ட விவகாரம் குடந்தை வட்டாரத்தை பரபரப்பாகி யுள்ளது
கும்பகோணம் மாநகராட்சிக் கூட்டம் காங்கிரஸ் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் வந்திருந்தனர். தி.மு.க. கவுன்சிலரான குட்டி. தட்சிணாமூர்த்தி, "கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு மேயர் இதுவரை பதில் சொல்லவில்லை. இப்போது அஜெண்டாவில் வைத்துள்ள 50 தீர்மானங்களின் கோப்புகளில் மேயர் கையெழுத்து போட்டுள்ளாரா என்பதை அனைத்து கவுன்சிலர்களும் பார்க்க வேண்டும்'' என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத மேயர் சரவணன், "மாநகராட்சிக் கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைக்கிறேன். நாளைய கூட்டத்தில் தீர்மானத்தின் கோப்புகள் பார்வைக்கு வைக்கப்படும்'' என்று கூறியபடியே, அவசர அவசரமாக நாற்காலியை விட்டு எழுந்து தன் அறைக்குச் செல்ல முயன்றார்.
மேயரை செல்லவிடாமல் தடுத்ததோட

மேயரை செல்லவிடாமல் தடுத்ததோடு, தட்சிணாமூர்த்தி, மேயர் அறையை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அதன்வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார். இதை எதிர்பார்க்காத மேயர் சரவணன் அவரை தாண்டிச் செல்ல முயன்றிருக் கிறார். அவரை போகவிடாமல் தடுத்து நிறுத்தியதால் வேறு வழியின்றி திடீரென "நெஞ்சு வலிக்கிறது, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என்று கத்தியபடியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து உருண்டுபுரண்டார்.
மேயர் சரவணனின் திடீர் செயல்பாடுகளைக் கண்ட சக கவுன்சிலர்கள் அனைவரும் திகைத்து நிற்க, தி.மு.க. கவுன்சிலரான சோடா.கிருஷ்ணமூர்த்தி தரையில் படுத்து உருண்ட மேயர் சரவணனை கைப்பிடித்து எழுப்பி, அவரது அறைக்கு அழைத்துச்சென்று தண்ணீர் கொடுத்தார்.
மேயரின் செயலைக்கண்டு ஆத்திரமடைந்த தி.மு.க. பெண் கவுன்சிலர்கள், "நாங்கள் கேட்கிற எந்த கேள்விக்கும் மேயரிடம் பதில் இல்லை. இப்போது வைக்கிற 50 தீர்மானங்களின் கோப்புகளை நாங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டால் நெஞ்சு வலிப்பதாக நாடகம் ஆடுகிறார்'' என்று கோஷமிட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி கவுன்சிலர்களிடம் கேட்டால், “"தற்போது அவர் கொண்டுவந்த தீர்மனங்களில் ஐந்து தீர்மானங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதை எப்படி பாஸ் பண்ண முடியும். இதை மன்றத்திலுள்ள சக கவுன்சிலர்களிடமோ, அதிகாரிகளிடமோ ஆலோசனை செய்து ஓ.கே. செய்திருக்கலாமே. இதுகுறித்துக் கேட்டால் "தி.மு.க. மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் கொடுத்த தீர்மானங்களை தடுக்குறீங்க' என பிரச்சினையை மடைமாற்றிவிடுறார். தீர்மானங்கள் பற்றி ஆலோசனை செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்குமேன்னுதான் கேட்டோம். அதற்கு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நாடகம் நடத்தி பூதாகரமாக்கிட்டார். இதன்பிறகு ஒருமணிநேரம் மாமன்ற ஆணையரிடம் பேசியிருக்கிறார். பிறகு சில மணிநேரம் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வேறு நம்பரில் யாரிடமோ ஆலோசனை செய்திருக்கிறார். பிறகே மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவசர, அவசரமா அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.
சொந்த கட்சிக்காரர்களையும் மதிக்கிறது இல்ல. வெற்றிபெற வைத்து மேயராக்கிய தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளையும் மேயர் மதிக்கிறது இல்ல. பணம் மட்டுமே குறியா செயல் படுறார். தேர்தல் சமயத்தில் மக்களிடம் வாக்கு கேட்டு நாங்கதான் போகணும். அவர்களின் கோரிக் கையை செயல்படுத்த முடியாமல் தடுப்பவரை வைத்துக்கொண்டு மக்களை நாங்கள் எப்படி சந்திப்பது?'' என்கிறார்கள் ஆத்திரம் பொங்க.
இதுபற்றி மருத்துவமனையில் இருக்கும் மேயர் சரவணன் கூறுகையில், "தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் வேண்டுமென்றே என்னை துன்புறுத்தவேண்டும் என்கிற நோக்கத்தோடு இப்படி செய்யுறாங்க. தி.மு.க. மா.செ.வும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் கொடுத்த தீர்மானத்தைத்தான் மாமன்றத்தில் வைத்தேன். கலந்தாலோசிக்காம தீர்மானம் வைத்துவிட்டேன் என கேள்வி கேட்டு துன்புறுத்துகின்றனர். ஒருநாள் அவகாசம் கொடுங்க, மறுநாள் கூட்டம் நடத்தலாம் என்று கூறியும் விடாமல் கோப்புகளைப் பார்க்கவேண்டும் என்று என்னை அறைக்குப் போகவிடாமல் பொதுசுகாதாரக் குழு தலைவர் தெட்சிணாமூர்த்தி தாக்கியதால் எனக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது..'' என்கிறார்.
மருத்துவமனையிலிருக்கும் குட்டி.தட்சிணா மூர்த்தி கூறுகையில், "நான் தீர்மானத்தில் கையெழுத்திட்ட கோப்புகளைத்தான் கேட்டேன். சுகாதாரக்குழு தலைவராக இருப்பதால் கேட்கும் உரிமை உள்ளது. சுகாதாரக்குழு தலைவர் சொன்ன தாலதான் இந்த மன்றத்தை ஒத்திவைக்கிறேன் என தவறான ஒரு தகவலை சொல்லிட்டு, எழுந்து அவரது அறைக்குப் போக முயன்றார். என்மீது தவறான தகவலை பதிவு செய்துவிட்டு போறீங்க. அதுக்கு மறுபடி மறுப்பு தெரிவிச்சிட்டுப் போங்கன்னுதான் நான் கதவை பூட்டி தர்ணாவில் அமர்ந்தேன். என்னை ஏறி மிதிச்சுட்டுப் போனதில் நிலைகுலைந்து போய்விட்டேன்'' என்கிறார்.
மக்கள் பணிகள் நடக்குதோ… இல்லையோ… நாடகமும் சண்டையும் தவறாம நடக்குதென அலுத்துக்கொள்கின்றனர் குடந்தைவாசிகள்.