மிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சி வரை எந்த பிரிவு அதி காரிகளும் ஆளும்கட்சி யினரின் சிபாரிசுகளை மட்டுமல்ல நியாயமான கோரிக்கைகளைக் கூட கண்டுகொள்வதில்லை என்பது ஆளும் கட்சி யினரின் குற்றச்சாட்டு. அரசு அலுவலர்களின் ஊழல் குறித்து விசாரிக் கச் சொல்லி உயரதிகாரி களிடம் புகார் தந்து, அவர்கள் நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டாலும், கீழ்மட்டத்தில் விசாரிப்பதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.

ff

வேலூர் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்டது பெருமுகை கிராமம். வேலூர் மாநகராட்சி எல் லைக்கு அருகிலேயே உள்ளதால் ஆண்டுக்கு சுமார் 1 கோடி வருவாய் வரும் கிராம ஊராட்சி யில், கடந்த 10 ஆண்டுகாலமாக லட்சங்களில் ஊழல் நடக்கிறது என கடந்த கிராமசபைக் கூட்டத்தின் போது, பஞ்சாயத்து கணக்கு களை பொதுமக்களின் பார்வைக்கு வையுங்கள் எனக் கேட்ட பொதுமக்க ளிடம், ஊராட்சிமன்றத் தலைவர் புஷ்பராஜ் கணக் கெல்லாம் காட்ட முடியாது எனச் சொல்ல, பொதுமக்க ளுக்கும் தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்பாபு, “"உள் ளாட்சி தேர்தல் நடந்து தலைவரை தேர்வுசெய்வ தற்கு முன்பாக எங்கள் ஊராட்சியில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. போலி பில்மூலம் வரிவசூல் செய்தது, பஞ்சாயத்துப் பணத்தை கையாடல் செய்ததற் கான சில ஆவணங்கள் என்னி டம் உள்ளன. கிராமத்திலுள்ள மின்விளக்கு, குழாய் பம்பு குறித்து சில தகவல்கள் கேட்டும், நடந்ததாகச் சொல்லப்படும் சில வேலைகள் குறித்து ஆர்.டி.ஐ. மூலமாக தகவல் கேட்டும் மனு அனுப்பினேன். இதேபோல் பலரும் கடந்த 5 வருடமாக மனு செய்தும் பதில் தரவில்லை.

Advertisment

ff

ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தல் நடந்தது. புஷ்பராஜ் தலைவராக வந்தார். அவரும் பதில் தரமறுக்கிறார். பஞ்சாயத்து கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும், பார்வையிட அனுமதி தரவேண் டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கு மனு அனுப்பி னேன். அந்த மனு வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலமாக வேலூர் பி.டி.ஓ.வுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கச்சொல்லி, மூன்று மாத மாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பஞ்சாயத்து தலைவர்தான் முடிவு செய்யணும்னு பி.டி.ஓ. சொன்னார்.

பஞ்சாயத்து நிர்வாகம் தனி அதிகாரிகளின்கீழ் நடந்தபோது, எங்கள் கிராம மக்களின் வரிப்பணத் தைக் கொள்ளையடித்த அதிகாரிகள் எங்கள் ஊரின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. என்னிடமுள்ள ஆவணங்களை வைத்து நீதிமன்றத் துக்குச் செல்லலாம் என நினைக்கிறேன்'' என்றார்.

இந்த ஊராட்சி தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறையில் மிகவும் சைலண்டாக ஒரு விவகாரத்தை அதிகாரிகள் பஞ்சாயத்து செய்யும் தகவல் கிடைத் தது. அதுகுறித்து நாம் விசாரித்தபோது, பெருமுகை ஊராட்சியில் பஞ்சாயத்து செயலாளராக பணியாற் றிய நாராயணசெங்குட்டுவன் கடிதம் ஒன்றை உயரதிகாரிகளிடம் தந்துள்ளார். அதில், ஊராட்சி மன்றத் தலைவர் சொல்லியதால் பல செலவுகளை என் பணத்திலிருந்து செய்துள்ளேன். நான் இடமாற்றலாகி வேறு பஞ்சாயத்துக்குச் சென்றபின் அந்தப் பணத்தை தரமறுக்கிறார் எனச்சொல்லி அதுகுறித்த பட்டியலையும் இணைத்துள்ளார்.

அதில், பெருமுகை கிராமத்துக்கு கலெக்டர் ஆய்வுக்கு வந்தபோது பி.ஆர்.ஓ.வுக்கு தந்தது ரூ.3500, நூறுநாள் வேலை திட்டக் கணக்கு தணிக்கை செய்த தணிக்கையாளருக்கு ரூ.6000, ஏ.டி. ஆடிட் ரூ.5500, வேலூர் மாவட்டம் வழியாக ஆம்பூருக்கு ஆய்வுக்குச் சென்ற அமுதா ஐ.ஏ.எஸ்.ஸுக்கு கிப்ட் வாங்கிய செலவு ரூ3500, குடிதண்ணீர் மோட் டார் ரிப்பேர் செய்தது, கொசுமருந்து அடித்தது, பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவியேற்பு செலவு என பட்டியல் நீள்கிறது. அந்த பணத்தை எனக்கு வாங்கித் தாருங்கள், இல்லையேல் நீதிமன்றம் செல்வேன் எனக் குறிப்பிட்டு கடிதம் தந்ததுதான் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ff

அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படும் பஞ்சாயத்து செயலாளரை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து வேலூர் பி.டி.ஓ. ராஜன்பாபுவிடம் கேட்டபோது, "கிராமசபைக் கூட்டத்தில் வரவு-செலவுகளை படிப்பார்கள். ஆய்வுசெய்ய தனிமனிதருக்கு அனுமதியில்லை. ஆடிட்டிங் ரிப்போர்ட் பார்க்க அனுமதிக்கப்படும். சுரேஷ்பாபு மனுவுக்கு பதில் அனுப்பிவிட்டோம், அவருக்கு விரைவில் தபால் கிடைத்துவிடும். அவர் நான்கு பேருடன் வந்து கணக்குகளைப் பார்ப்பேன் என்கிறார். அவர் மட்டும் பார்ப்பதாக இருந்தால் ஏற்பாடு செய்கிறேன். பெருமுகை பஞ்சாயத்து செக்ரட்டரியாக இருந்தவர் கடிதம் தந்துள்ளார். பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டபோது, சரியான பில் தரவில்லை என்கிறார். அதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்... அதுவும் சுமுகமாக முடிந்துவிடும்''’என்றார்.

"பஞ்சாயத்து கணக்குகளை வெளிப் படையாகக் காட்டினால், கடந்த 10 ஆண்டுகால முறைகேடுகள், ஊழல்கள் மக்களுக்குத் தெரிந்துவிடும் என்பதால் ஆர்.டி.ஐ. மனுக்களுக்குப் பதில் தருவதில்லை. ஒன்றியக்குழு தலைவர் அமுதாவின் கணவரும், தி.மு.க. ஒ.செ.வுமான ஞானசேகரன், முறைகேடுகளை விசாரிக்காமல் தடுக்கிறார். இதனாலயே அலுவலர்கள் உயரதிகாரிகளின் உத்தரவை மதிப்பதில்லை' என்கிறார்கள்.

-து.ராஜா