Advertisment

முதல்வர் உத்தரவு அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்! -காவலர்களின் குமுறல்!

police

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல நாட்களாக மாரியம்மன் கோவில் தெருவில் 70 வயதைக் கடந்த ராமுத்தாய் என்ற மூதாட்டி தள்ளுவண்டிக்கு அடியில் கவனிப்பாரற்று படுத்துக்கிடந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் அவரை மீட்டு உடை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட சிவகாசியைச் சேர்ந்த சரோஜா, காணாமல்போன தனது அம்மா ராமுத்தாயைத் தேடி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து அவரைக் கவனித்துவரு கிறார்.

Advertisment

இரவு நேரத்தில் தனியாளாக விருதுநகரிலிருந்து சைக்கிளில் கிளம்பி சாத்தூர், ஆமத்தூர் போன்ற ஊர்களிலுள்ள காவல்நிலையங்களுக்கு விசிட் போகிறார் என்றும், எஸ்.பி. சீனிவாச பெருமாள் குறித்து நல்லவிதமாகப் பலரும் பாராட்டிவரும் நிலையில், சிவகாசி சரக உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் நம்மைச் சந்தித்தார்.

Advertisment

police

"விருதுநகர் மாவட்ட எஸ்.பி. நல்ல அதிகாரிதான். அதெல் லாம் பொதுமக்களுக்கு. என்போன்ற காவலர்களின் குடும்பத்தின ரைக் கேட்டால் அப்படி சொல்லமாட்டாங்க.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல நாட்களாக மாரியம்மன் கோவில் தெருவில் 70 வயதைக் கடந்த ராமுத்தாய் என்ற மூதாட்டி தள்ளுவண்டிக்கு அடியில் கவனிப்பாரற்று படுத்துக்கிடந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் அவரை மீட்டு உடை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட சிவகாசியைச் சேர்ந்த சரோஜா, காணாமல்போன தனது அம்மா ராமுத்தாயைத் தேடி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து அவரைக் கவனித்துவரு கிறார்.

Advertisment

இரவு நேரத்தில் தனியாளாக விருதுநகரிலிருந்து சைக்கிளில் கிளம்பி சாத்தூர், ஆமத்தூர் போன்ற ஊர்களிலுள்ள காவல்நிலையங்களுக்கு விசிட் போகிறார் என்றும், எஸ்.பி. சீனிவாச பெருமாள் குறித்து நல்லவிதமாகப் பலரும் பாராட்டிவரும் நிலையில், சிவகாசி சரக உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் நம்மைச் சந்தித்தார்.

Advertisment

police

"விருதுநகர் மாவட்ட எஸ்.பி. நல்ல அதிகாரிதான். அதெல் லாம் பொதுமக்களுக்கு. என்போன்ற காவலர்களின் குடும்பத்தின ரைக் கேட்டால் அப்படி சொல்லமாட்டாங்க. ஏன்னா.. சூரி நடிச்ச "விடுதலை' சினிமாவுல வர்ற 1980கள்ல இருந்த போலீஸ் அதிகாரிங்க மனநிலைலதான் இப்ப உள்ளவங்களும் இருக்காங்க. நான் பெரிசுபடுத்தி சொல்லல. ஒவ்வொரு அதிகாரியும் அவங்கவங்க லெவலுக்கு தனக்கு கீழே இருக்கிற முதல்நிலை, ரெண்டாம் நிலை காவலர்கள், அப்புறம் தலைமை காவலர்களை கசக்கிப் பிழியுறாங்க. 2021ல நக்கீரன் ஒரு செய்தி போட்டீங்க. கிடைக்கும் ஆனா கிடைக்காது.. காவலர்களின் வார ஓய்வு குமுறல்னு.. இப்பவரைக்கும் அந்தக் குமுறல் ஓயல.

பணிச்சுமைனால மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்டு காவலர் கள் குடும்பத்துல பிரச்சனை ஏற்படுது. உளவியல் பாதிப்பால காவலர்கள் தற்கொலை பண்ணிக் கிறாங்க. இதையெல்லாம் சரி பண்ணனும்னா. காவலர்கள் அவங்க குடும்பத்தினர்கூட போதிய நேரம் செலவிடணும். இது நடந்தால்தான், காவல் துறைல வேலை பார்க்கிறவங்க, நல்ல மனநிலைல, நல்ல உடல்நிலைல சந்தோஷமா வேலை பார்ப்பாங்க. அதனால, வாரத்துல ஒருநாள் ஓய்வு கொடுக்கணும்னு 2021 நவம்பர்ல அரசாணை பிறப்பிச்சாங்க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவலர்கள் குடும்ப நிலைமைய தெரிஞ்சுக்கிட்டு, கட்டாய வார விடுமுறை கொடுக்கணும்னு உத்தரவு போட்டாரு. இந்த உத்தரவை உயரதிகாரிகள் மதிக்கிறது இல்ல. வார ஓய்வு தர்றது இல்ல. மாசத்துல ஒருநாள் ஓய்வு கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு.

என்னைமாதிரி காவலர்கள் ஸ்டேஷன்ல இருக்கிற அதிகாரிகள்கிட்ட வார ஓய்வு கேட்டால் ஊர் பொங்கல், கோவில் திருவிழா, தெருக்கட்டு பொங்கல், விளையாட்டு போட்டிகள், கிறிஸ்துமஸ், புதுவருஷ பிறப்பு, தீபாவளி, கைதிவழிக்காவல், அமாவாசை, வெளிமாவட்ட பாதுகாப்பு அலுவல், விநாயகர் ஊர்வலம்னு சாக்குபோக்கு சொல்லி 52 வாரமும் ஓய்வு தர்றது இல்ல. ஆனா.. ஓய்வு தரப்பட்டதா பொய்யான பதிவேடுகளை உருவாக்குறாங்க.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மனுவோட முக்கியத்துவத்தையும் உணர்ந்து, மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, ஒரு மனிதரின் வாழ்க்கைன்னு கள ஆய்வுக் கூட்டத்துல பேசிருக்காரு. சி.எம்.மோட நல்ல மனசு அதிகாரிகளுக்கு இல்லியே? நானும் வருஷம் பூராவும் இந்த வார ஓய்வு குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ல இருந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரைக்கும் தொடர்ந்து மனு அனுப்பிட்டே இருக்கேன். ஒரு தீர்வும் கிடைக்கல. இப்பகூட சம்பந்தப்பட்ட ஆறு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பப் போறேன். மனுவையும் கவர்களையும் நீங்களே பாருங்க''’என்று நம்முன் பரப்பினார்.

police

விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சீனிவாச பெருமாளை தொடர்புகொண்டோம். "நான் தினமும் நைட் 12 மணி வரைக்கும் ஆபீஸ்ல இருக்கேன். என்னையும் டார்ச்சர் பண்ணுறாங்கன்னு சொல்லுறதா? ஆபீஸ்ல ஏசில உட்கார்ந்து மட்டும் வேலை பார்க்கல. பந்தோபஸ்து எல்லாம் போய்ட்டு தான் இருக்கேன். ஒவ்வொரு காவலரையும் அவங்க குடும்பத்தயும் என்னோட குடும்பமாத்தான் பார்க் கிறேன். நாம மக்கள்ட்ட இருந்து சம்பளம் வாங்கு றோம். வேலைங்கிறத எல்லாரும் பார்த்துத்தான் ஆக ணும். ஒரு மனிதாபிமான அடிப்படைல காவலர்கள் கஷ்டப்படக்கூடாதுன்னு வார ஓய்வுன்னு ஒதுக்குறாங்க. காவலர் பணின்னா சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். லீவு நாம கொடுத்திருவோம். இந்தப் புகாரை என்னன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்''’என்று உறுதியளித்தார். விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்ல, பல மாவட்டங்களிலும் காவலர்களின் வார ஓய்வு என்பது அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது. கோயம்புத்தூர் எஸ்.பி. பத்ரி நாராயணன் ஓபன் மைக்கி லேயே காவலர்களுக்கு வார ஓய்வு தரப்படாததைச் சுட்டிக்காட்டி, கோவை புறநகர் லிமிட்டில் உள்ள காவல்நிலையங்களைத் தொடர்பு கொண்டு, சக அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக்கிறார்.

பத்ரி நாராயணன் எஸ்.பி. ஓபன் மைக்கில் பேசியபோது "மேட்டுப்பாளையம், அன்னூர்ல மட்டும் தான் காவலர்களுக்கு வார ஓய்வு ஒழுங்கா கொடுக் கிறாங்க. கோட்டூர்ல என்ன பிரச்சனை? ஏன் வார ஓய்வு யாருக்கும் கொடுக்கல? காவலர்கள் கேட்கும்போதுதான் வார ஓய்வு கொடுக்கணும்னு அரசாணையில் இல்லை. காவலர்கள் வார ஓய்வு கேட்கிறாங்களோ இல்லியோ, கொடுத்தே ஆகணும்னு அறிவுறுத்திருக்காங்க. இதுல காவல்துறை அதிகாரிகள் பவர் எதுவும் இல்ல. ஆனா.. ‘அதிகாரிகள் நினைச்சா மட்டுமே வார ஓய்வு கொடுக்க லாம். காவலர்கள் வந்து அதிகாரியோட ரூம் வாசல்ல வந்து நின்னு, அரைநாள் வெயிட் பண்ணி, அப்புறம் பாதி நாளை அதிகாரியா பார்த்து கொடுக்கலாம்கிற மாதிரி நடந்துக்கிறது சரியில்ல. காவலர்களுக்கு ஷெட்யூல் போட்டு வார ஓய்வு கொடுக்கணும்''’என்கிற ரீதியில் ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரியின் தவறையும் சுட்டிக்காட்டி அறிக்கை கேட்டுள்ளார்.

வார ஓய்வு அரசாணைக்கு மதிப்பளித்து காவல்நிலையங்கள் செயல்படவேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

nkn100523
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe