பட்டாசுத் தொழில் சட்டரீதியாக டெல்லி வரையிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளால் பட்டாசு வியாபாரிகள், பல இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.
ஜெகதீசன்-சூர்யகலா தம்பதியர், சிவகாசி வட்டம் - அனுப்பன்குளம் - மாரியம்மன் நகரில், வெடிபொருள் பட்டாசுக்கடைக்கான கட்டிடம் கட்டி, ஸ்ரீஜெயசூரியா கிராக்கர்ஸ் என்ற பெயரில் உரிமம் பெற, கடந்த மார்ச் 6-ஆம் தேதி விண்ணப்பித்தனர். அய்யன்ராஜ் என்பவர், அந்தக் கட்டிடத்துக்குப் பக்கத்திலேயே, விதிமுறைகளின் படி போதிய இடைவெளி (15 மீட்டர் தூரம்) விடாமல், ஸ்ரீகாளீஸ்வரி டிரேடர்ஸ் என்ற பெயரில், தனது பட்டாசுக் கடைக்கான கட்டிடம் கட்டி, மார்ச் 10-ஆம் தேதி விண்ணப்பித்தார். உரிமம் பெறாத நிலையிலேயே தனது கட்டிடத்தை வாடகைக்கு விட்டு, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் அங்கு பதுக்கிவைக் கப்பட்டு, ஜூலை 27-ஆம் தேதி சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி, முத்துச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முதலில் விண்ணப்பித்த ஜெகதீசனின் பட்
பட்டாசுத் தொழில் சட்டரீதியாக டெல்லி வரையிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளால் பட்டாசு வியாபாரிகள், பல இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.
ஜெகதீசன்-சூர்யகலா தம்பதியர், சிவகாசி வட்டம் - அனுப்பன்குளம் - மாரியம்மன் நகரில், வெடிபொருள் பட்டாசுக்கடைக்கான கட்டிடம் கட்டி, ஸ்ரீஜெயசூரியா கிராக்கர்ஸ் என்ற பெயரில் உரிமம் பெற, கடந்த மார்ச் 6-ஆம் தேதி விண்ணப்பித்தனர். அய்யன்ராஜ் என்பவர், அந்தக் கட்டிடத்துக்குப் பக்கத்திலேயே, விதிமுறைகளின் படி போதிய இடைவெளி (15 மீட்டர் தூரம்) விடாமல், ஸ்ரீகாளீஸ்வரி டிரேடர்ஸ் என்ற பெயரில், தனது பட்டாசுக் கடைக்கான கட்டிடம் கட்டி, மார்ச் 10-ஆம் தேதி விண்ணப்பித்தார். உரிமம் பெறாத நிலையிலேயே தனது கட்டிடத்தை வாடகைக்கு விட்டு, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் அங்கு பதுக்கிவைக் கப்பட்டு, ஜூலை 27-ஆம் தேதி சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி, முத்துச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முதலில் விண்ணப்பித்த ஜெகதீசனின் பட்டாசுக் கடைக்கு உரிமம் வழங்கப்படாமல், இரண்டாவதாக விண்ணப்பித்த அய்யன்ராஜுவின் பட்டாசுக் கடைக்கு, அதுவும் குற்ற நடவடிக்கைக்கு ஆளான கட்டிடத்தில் பட்டாசுக்கடை இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் குமுறலாகப் பேசிய சூர்யகலா, "காந்தாரியம்மன் கோயில்ல பூக்கட்டிப் போட்டுப் பார்த்துட்டுத்தான் பட்டாசுக்கடை கட்டினோம். சாமி மனசு வச்சும் இங்கேயிருக்கிற அதிகாரி மனசு வைக்கல. பத்து லட்சம் செல வழிச்சத ஒண்ணுமில்லாம பண்ணிட்டாரு. வேணும்னே எங்க கட்டிடத்துக்கு பக்கத்துல விதி களை மீறி கட்டி, கள்ளப்பட்டாசு பதுக்கி போலீஸ் கேஸான அய்யன்ராஜ் கடைக்கு லைசன்ஸ் கொடுத்திருக்காங்க. இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுறது?''’என்று நொந்துகொண்டார்.
ஜெகதீசனோ "எனக்கு வயசு 70 ஆகுது. தப்பு பண்ணுறவனுக்கு இது காலமா இருக்கு. மனசு உடைஞ்சு போயிட்டேன். அதனால.. உடம்புக்கும் முடியாம போச்சு. ஏன் இப்படி பண்ணுனீங்கன்னு டி.ஆர்.ஓ.கிட்ட முறையிட்டோம். அரசியல் தலையீடுனால அய்யன்ராஜுக்கு ஓகே பண்ணுனதா சொல்லுறாங்க''’ என்று வேதனைப்பட்டார்.
‘விபத்துகள், உயிரிழப்புகள் எனத் தொடர்ந்து சோதனைகளைச் சந்தித்துவரும் பட்டாசுத்தொழிலில், விதிமீறலுக்கு அதிகாரிகளே முறைகேடாக வழிவகுக் கிறார்களா?’ என, சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விநாயக மூர்த்தியிடம் கேட்டோம்.
“அய்யன்ராஜ் பட்டாசுக்கடைக்கு விதிமீறலாக உரிமம் வழங்கியதற்கு அமைச்சர் தலையிட்டதுதான் காரணம் என்கிறாராம் டி.ஆர்.ஓ. புதிய பட்டாசுக்கடைக்கு உரிமம் வழங்கு வதற்கு ரூ.35000 வரை லஞ்சம் வாங்குகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதிமீறலாகச் செயல்பட்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன. தீபாவளி நெருங்கும் நேரத்தில் பட்டாசு உற்பத்தி நின்றுபோனது. மீண்டும் பட்டாசு ஆலைகளைத் திறப்பதற்கு ரூ.25,000-ல் ஆரம்பித்து, ரூ.50,000 வரை லஞ்சம் வாங்குகிறார்கள்.
டி.ஆர்.ஓ. உதவியாளர் மாரீஸ்வரன், கடந்த ஒரு வருடத்தில் ரூ.1 கோடி வரை முறைகேடாக சம்பாதித்து, எஸ்.புதுப்பட்டி அம்மன்நகரில் பெரிய பங்களா கட்டியிருக்கிறார். சல்பர் சிவா என்பவர், "புதிய உரிமம், உரிமம் புதுப்பித்தல் போன்ற காரியங்களுக்கு டி.ஆர்.ஓ. உதவியாளர் மாரீஸ்வரனுக்கு பணம் பெற்றுத்தரும் புரோக்கர் வேலை பார்க்கிறார். சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டிலுள்ள சல்பர் சிவா அலுவலகத்தில், அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மது, கறிவிருந்து என புரோக்கர்களும் அதிகாரிகளின் உதவியாளர்களும் கும்மாளம் அடிக்கிறார்கள். கொட்டமடிக்கும் அதிகாரிகளின் உதவியாளர் பட்டியலில் டி.ஆர்.ஓ. உதவியாளரோடு கை கோர்ப்பவர்களாக, மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், ஆட்சியர் அலுவலக பொது மேலாளர், சிவகாசி சார் ஆட்சியரின் உதவி யாளர், சிவகாசி வருவாய் ஆய்வாளர், இ-4 செக்ஷன் அலுவலர், இ-4 செக் ஷன் ஹெட்கிளார்க் போன்றோர் இருக் கிறார்கள்''’என்று சம்பந்தப்பட்டவர்களின் பெயரையும் கூறினார்.
டி.ஆர்.ஓ. உதவி யாளர் மாரீஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "அப்படியா?'” என்று ஆச்சரி யம் காட்டிவிட்டு, "அரசுத்துறை அனுமதிபெற்று வீடு கட்டியிருக்கிறேன்''”என்று முடித்துக் கொண்டார். சல்பர் சிவாவும், "நீங்க கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியல...''” என்று தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்தார்.
விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்ரமணியன் நம்மிடம் “"ஜெகதீசனுக்கு ஏற்கனவே ஒரு கடை கொடுத்திருக்கோம். ரெண்டாவது கடைக்கு அவரு அப்ளை பண்ணுனாரு. அவருக்கு பிறகு அப்ளை பண்ணுன அய்யன்ராஜ் கடைக்குத்தான் மொதல்ல தீயணைப்புத்துறைல இருந்து சர்டிபிகேட் வந்துச்சு. அவருக்கு பொலிடிக்கல் இன்ப்ளூயன்ஸ் இருந்தது உண்மைதான். ஆனா... அமைச்சர் தலையீடு எதுவும் இல்ல. இப்பல்லாம் கலெக்டரும் நாங்களும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கோம். பெரிய பட்டாசு சங்கங்கள் ரெண்டுக்கும் இது நல்லா தெரியும். சத்தியமா யாரும் இங்கே லஞ்சம் வாங்குறதில்ல. சிவகாசி சப்-கலெக்டர் ஆபீசுல அலுவலக உதவியாளர் ஒருவரை டிரான்ஸ்பர் பண்ணுனாங்க. அங்கே இருக்கிற டிரைவரும் அந்த அலுவலக உதவியாளரும் ஒரே ஜாதிக்காரங்க. அவங்கதான், தண்ணியடிச்சிட்டு இந்த லிஸ்ட்ட லீக் பண்ணிருக்காங்க''’என்றார். ‘
லீக்பண்ணியவர்கள் தரப்பில் பேசினோம். “"பட்டாசுத் தொழில் பண்ணுறவங்ககிட்ட அதிகாரிகள் யாரும் இப்ப லஞ்சம் வாங்குறது இல்லியா? டி.ஆர்.ஓ. சொன்னதை அப்படியே போடுங்க. விருதுநகர் மாவட்டமே விழுந்து விழுந்து சிரிக்கும்''’என்றனர்.