"ஹலோ தலைவரே, ம.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் 20ந் தேதி நடக்குதே, என்ன விசேஷம்னு கேள்விப்பட்டீங்களா?''
"வைகோவின் மகன் துரை வையாபுரி, தன்னுடைய பெயரை துரை.வைகோன்னு மாத்திக்கிட்டது பற்றியும், அவரோட அரசியல் என்ட்ரி பற்றியும் பேசியிருந்தோமே.. அது சம்பந்தமா விவாதிக்கவா?''””
"சரியாச் சொன்னீங்க தலைவரே, வைகோ முன்பைவிட சுறுசுறுப்பாக இருந்தாலும் அவரோட உடல் நிலை ஒத்துழைக்கலையாம். அதனால் அவர் மகன் துரை வையாபுரியை, அவரது வாரிசாக கட்சிக்குள் முக்கிய பதவியில் அமர வைக்கணும்னு மல்லை சத்யா உள்ளிட்ட அக்கட்சியின் சீனியர்கள் பலரும் விரும்பறாங்க. அதோட முதல் ஸ்டெப்ததான், துரை.வையாபுரி தன்னோட பெயரை துரை வைகோன்னு மாத்தியது. இந்த நிலையில் ம.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டம் வரும் 20-ந் தேதி கூட இருக்குது. அதில் துரை வைகோவை ம.தி. மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக அந்தக் கட்சி தேர்ந்தெடுக்கும் ஆயத்தத்தில் இருக்குது.''”
"93-ல் தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டு, 94-ல் தொடங்கப்பட்ட ம.தி.மு.க.வுக்கு இது அடுத்த கட்டப் பயணம்.''”
"ஆமாங்க தலைவரே, அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளையும் டிஸ்டர்ப் செய்யணும்னு டார்கெட் வச்சிருக்காம் பா.ஜ.க.''”
"அதுசரிப்பா, பா.ஜ.க. செயற்குழுவில் இருந்து, சுப்பிரமணியசாமிக்கு மோடி கல்தா கொடுத்திருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின்

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுவை 8-ந் தேதி மாற்றியமைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இதில் புதியவர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கு. அதேபோல் பலர் நீக்கப்பட்டிருக்காங்க. அதில் குறிப்பா சு.சாமியை, அடிக்கோடு போட்டு மோடி நீக்கியிருக்கார். ஆர்.எஸ்.எஸ்.சும் அவரை நீக்கணும்னு பரிந்துரை செய்திருக்கு தாம். ராஜ்யசபாவின் நியமன எம்.பி. யாக 2016-ல் தேர்வு செய்யப்பட்டார் சு.சாமி. அந்த நிமிடத்தில் இருந்தே அவர் மத்திய அமைச்சராகணும்னு முண்டியடிச்சார். அதை மோடி ஏத்துக்காததால், பா.ஜ.க.வில் இருந்துக் கிட்டே பா.ஜ.க. அரசை, சாமி விமர்சிச் சிக்கிட்டே இருந்தார். அந்தக் கோபத் தில்தான் சு.சாமிக்கு கல்தா கொடுத்திருக் கிறாராம் மோடி. இதில் வெடவெடத் துப் போயிருக்கிறார் சாமி.''”
"தமிழக அமைச்சர்களின் பி.ஏ.க் களின் தர்பார் கொடிகட்டிப் பறக்குதாமே?''”
"எல்லா ஆட்சியிலும் அது வழக்கம்தானே.. தி.மு.க. அமைச்சர்களில் சிலர் ரொம்ப கவனமா இருக்காங்க. பி.ஏ.க்கள் உள்பட தன்னைச் சுற்றி இருப் பவங்களை கண்காணிக்கிறாங்க. ஆனா, மற்ற அமைச்சர்கள் அந்தளவுக்கு இல்லை. அதனால் பெரும்பாலான அமைச்சர்களின் பி.ஏ.க்கள் ரொம்ப பிஸியாயிட்டாங்க. பிரபல தொழில் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளும் பி.ஏ.க்கள், இவர் எம்.எல்.ஏ.வுக்கு வேண்டப்பட்டவர், அவர் எம்.பி.க்கு வேண்டப்பட்டவர், மா.செ.வுக்கு வேண் டப்பட்டவர்ன்னு சொல்லி, ஏதாவது ஒரு காண்ட்ராக்ட்டைக் கொடுக்கச் சொல்லி, சம்பந்தப்பட்டவங்ககிட்ட இருந்து கணிசமா லாபம் பாக்கறாங் களாம். அதேபோல், ஒரு அமைச்சரின் பொலிட்டிக்கல் பி.ஏ.வாக இருக்கும் அந்த நபர், பெண்களுக்குத் தூண்டில் போடறதிலேயே பிஸியா இருக்காராம். போன்ல வந்தா டேப் பண்ணிடுவாங் கன்னு வாட்ஸ்ஆப் கால்லதான் அவரோட லூட்டி நடக்குதாம். இப்படி பி.ஏ.க்களின் ஏடாகூட தர்பார் பத்தி கோட்டை வட்டாரத்தில் பரபரப்பா டாக் அடிபடுது.''”
"சில அதிகாரிகள்கூட அமைச்சர்களிடம் ஏறுக்கு மாறா நடக்கறாங்களேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர்களை மதிக்காத ஐ.ஏ.எஸ். களும், ஐ.ஏ.எஸ்.களை மதிக்காத அமைச்சர்களும் இருப்பதாவும் தலைமைச் செயலக வட்டாரத்திலேயே சர்ச்சை உலவுது. சில துறைகளில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால், மோசமான நபர்களுக்கு ட்ரான்ஸ்ஃபர்கூட போட முடிவதில்லை யாம். அமைச்சர்கள் அதுக்கு பிரேக் பிடிச்சிடறாங் களாம். அதேபோல், துறை அமைச்சர்கள் சிலர் அனுப்பும் ட்ரான்ஸ்ஃபர் பட்டியலை, குறிப்பிட்ட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உடனே ஓ.கே. செய்யாமல் இழுத்தடிக்கிறாங்களாம். அதனால், இந்தத் துறையி லிருந்து எங்களை டிரான்ஸ்பர் பண்ணிடுங்கன்னு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைக்க, இன்னொரு பக்கம், என் துறைக்கு இந்த அதிகாரி வேண்டாம்னு தலைமைச் செயலாளர்ட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சொல்றாங்களாம். இதனால் அங்கங்கே புகையுது.''”
"முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், பாதயாத்திரை போயிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், அவருடைய கருத்துச் சுதந்திரத்திலும், உரிமையிலும் முதல்வர் தலையிடுவதில்லை.. தேர்தல் நேரத்தில் கணவரின் வெற்றிக்காக வேண்டிக்கொண்ட துர்கா, அந்த வேண்டுதல்களின் படி கடந்த வாரம் திருச்சிக்கு விசிட்டடிச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் ஆகியவற்றில் வழிபட்டதோடு, அந்தக் கோயில்களுக் கிடையில், சில கிலோ மீட்டர் தூரம் மனமுருக பாதயாத்திரை நடத்தியிருக்கார். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாலை நேரத்தில் அவர் நடந்தபோது, அமைச்சர் நேருவின் மனைவி, இரண்டு மகள்கள், சென்னை ரமேஷ், வாளாடி கார்த்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர். அப்ப ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள், பூஜை வழிபாடுகள் மட்டும்தான் எங்களுக்கு வாழ்வாதாரமா இருக்கு, எங்களோட பாரம்பரிய அர்ச்சகர் தொழிலுக்கு எந்தவித இடையூறும் வராமல் பார்த்துக்கங்கன்னு அவரிடம் கோரிக்கை வச்சிருக்காங்க.''
"அகில இந்திய காங்கிரஸில் புதிய விறுவிறுப்பு தெரியுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி அடுத்த வாரம் டெல்லியில் கூடுது. இந்த கூட்டத்தில், உ.பி.யில் நடந்த விவசாயிகள் படுகொலை தொடர்பான எதிர்ப்பு, அடுத்த வருடம் நடக்க விருக்கும் உ.பி., பஞ்சாப் தேர்தலை எதிர் கொள்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களை இதில் முன்னெடுக்க இருக்காங் களாம். அதோடு, கட்சியின் முழு நேர தலைவராக சோனியா அல்லது ராகுல்காந்தியை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தவும் இருக்காங்களாம். அவர்கள் ஏற்காத பட்சத்தில், பிரியங்கா காந்தி யை தலைவராக்கும் யோசனைகளை மூத்த தலைவர்கள் முன்வைப்பார் கள்னு எதிர்பார்க் கப்படுது.''
"நானும் ஒரு முக்கிய தகவலை இங்க பகிர்ந்துக்கறேன்பா. பர்மா அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட ரெப்கோ கூட்டுறவு வங்கியில், அண் மைக் காலமாக ஏகப்பட்ட ஊழல் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துச்சு. இந்த வங்கியின் தலைவரான இசபெல்லா, ’மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஆஃப் சோசியல் சர்வீஸ்’ என்ற அமைப்புக்கும் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு பராமரித்து வந்த 130 குழந்தைகளில் பலருக்கு, இவரும் இவர் கணவரும் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகவும் அண்மையில் புகார் எழ, மாவட்ட குழந்தைகள் நல வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து, இசபெல்லாவை அமைச்சர் கீதா ஜீவனே நீக்கி இருக்கார். அப்படிப்பட்ட இசபெல்லா, அண்மையில் முதல்வர் ஸ்டா-னை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கார். விரைவில் கைது நடவடிக்கைக்கு ஆளாகப் போகிறவர் என்று பலராலும் சுட்டப்படும் இசபெல்லா, முதல்வரின் செயலாளர்களில் ஒருவர் மூலம்தான் இந்த நிதியை வழங்கினாராம்.''”