மீபத்தில் பெய்த மழையால் ஏரி முழு கொள்ளளவு நிரம்பியும் விவசாயிகள் பாசனம் செய்வதற்கு தண்ணீர் விடுவதில் பாகுபாடு காட்டி அவர்களுக்குள் மோதலை உருவாக்கப் பார்க்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

கடலூர் மாவட்டத்திலுள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1923-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கல்வ ராயன் மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் வெள்ளாற்றின் குறுக்கே தொழுதூரில் அணை கட்டப்பட்டு, அதன் வழியாக இந்த ஏரி நிரம்பு கிறது. அபரிமிதமாக மழை பெய் தால் மட்டுமே இந்த ஏரி நிரம்பி விவசாயிகளை வாழவைக்கும். வறட்சிக் காலங்களில் வெளியூர் களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் பிழைப்பைத் தேடிச்செல்வார்கள் இப்பகுதி விவசாயிகள்.

ff

Advertisment

ff

தற்போது ஏரியில் 27 அடி தண்ணீருள்ள நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் பரிந் துரையால் அரசு கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா இந்த ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரைத் திறப்பதற் கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி கடந்த டிசம்பர் 23-ல் திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சரு மான கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிர மணியன், பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன், உதவிச் செயற்பொறி யாளர் சோழராஜன் மற்றும் விவசாயிகள் பெருமளவில் கலந்துகொள்ள ஆட்சியரும் அமைச்சரும் தண்ணீரைத் திறந்துவிட்டனர்.

Advertisment

அங்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட, என்ன பிரச்சினை என விவசாயிகளிடம் கேட்டோம். "இந் தாண்டு ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த ஏரி உருவாக்கத்தின்போதே பாசன நிலங் களை இரண்டு பிரிவுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரித்துள்ளனர். அதன்படி மேல் மட்டக் கால்வாய் பகுதியில் 14,850 ஏக்கர் நிலங்களும், கீழ்மட்டக் கால்வாய் பகுதியில் 9,209 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறவேண்டும்.

தற்போது அரசு உத்தரவின்படி மேல்மட்டக் கால்வாய் பகுதிக்கு 80 நாட்கள் தண்ணீர் விடப்படும். பிறகு அந்தப் பகுதிக்குச் செல்லும் தண்ணீரை தடுத்துநிறுத்தி கீழ்மட்ட கால்வாய் பகுதிக்கு 120 நாட்கள் தண்ணீர் விடப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பாகுபாடு? அனைத்துப் பகுதிக்கும் பாகுபாடில்லா மல் 120 நாட்களுக்கு விடவேண்டிய தண்ணீரை, ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண் ணாம்பு வைக்கும் விதத்தில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்குத் தவறான முறையில் பரிந்துரை செய்து இந்த உத்தரவைப் பெற்றுள்ள னர். இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இதைத்தான் அதிகாரிகளிடம் கேட்கிறோம்''’ என்றனர் விவசாயிகள்.

மேல்மட்டக் கால்வாய் பாசன பகுதி விவசாய சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம். “"கடந்த காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது முறைவைத்து (டேம் சிஸ்டம்) தண்ணீரை விடுவார்கள். இதன்மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நெல்லை விளைய வைத்தோம். தற்போது முழுமையான அளவு தண்ணீரிருந்தும் தவறான உத்தரவைப் பெற்றுள்ளனர். இதனால் மேல்மட்டக் கால்வாய், கீழ்மட்டக் கால்வாய் விவசாயிகளிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கும் சூழ்நிலையை பொதுப்பணித்துறை அதிகாரிகளே ஏற்படுத்துகிறார்கள்''’என்கிறார்.

ff

முருகன்குடி உழவர் முன்னணிச் செயலாளர் முருகனும் தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் செங்கமேடு ஏ.வி. அன்பழகனும், "கடந்த ஆண்டும் அனைத்து பகுதிகளுக்கும் 120 நாட்கள் ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் விடப்படும் என்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, அமைச் சர் சம்பத் அறிவித்து தண்ணீரைத் திறந்துவிட்டனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மாதம்வரை மட்டுமே மேல்மட்டக் கால்வாய் பகுதிக்கு தண்ணீரை விட்டுவிட்டு, பிறகு வாய்க்காலின் குறுக்கே அணை கட்டி தண்ணீரைத் தடுத்து கீழ்மட்ட கால்வாய் பகுதிகளுக்கு மட்டும் 120 நாட்களுக்குமேல் தண்ணீர் விட்டனர். இதுகுறித்து அப்போது அதிகாரிகளுக்கு புகார்கள் எழுதியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

சமீப ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு வேண்டியவர்களை மட்டும் விவசாய சங்க பிரதிநிதிகள் என்ற போர்வையில் வரவழைத்து ஒப்புக்கு கூட்டத்தை நடத்தி வெளியேதெரியாமல் அவர்கள் இஷ்டப்படி தண்ணீரைத் திறந்து விடுவதும் நிறுத்துவதுமாக உள்ள னர். நீர்ப்பாசன சட்டத்தையும் விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, சர்வாதிகாரப் போக் கில் தற்போதுள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகளின் செயல்பாடு கள் உள்ளன. இரு பக்கமும் சமமான நாட்கள் தண்ணீர் விடாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபடு வதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், 80 நாட்களுக்குள் விளையக் கூடிய நெல் ரகம் கண்டுபிடிக்கவே இல்லை. நெல் விதைத்து அதை பிடுங்கி நடவு செய்து அறுவடை செய்ய குறைந்தபட்சம் 110 முதல் 120 நாட்கள் ஆகும்''’என்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் பாஸ்கரன், சோழராஜனிடம் கேட்டோம். "ஒரு மாதம்வரை அனைத்துப் பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் விடப்படும். அதன்பிறகு நிலைமைக்கு ஏற்ப இந்த உத்தரவை மாற்றி புதிய உத்தரவு ஒன்றைப் பெற்று அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்''’என்றார்.

"அரசுக்கு கெட்ட பெயரை ஏற் படுத்தும் நோக்கத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செயல்படுவதுபோல் தெரிகிறது' என்கிறார்கள் விவசாயிகள்.