மிழகத்திலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மத்திய அரசின் உயரதிகாரிகள் நடத்தும் அட்ராசிட்டி யால் இந்திய தொழில் நிறுவனங்கள் ஏகத்துக்கும் மிரண்டு போயுள்ளன. இதனால், ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

சென்னை தாம்பரம் அருகேயுள்ள மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க (மெப்ஸ்) வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 54 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் மெப்ஸ்தான் தலைமை. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கட்டுப்பாட்டில் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் இயங்குகின்றன.  இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களிலுள்ள உயரதிகாரிகள் குறித்துத்தான் தற்போது மத்திய அரசுக்கு புகார்கள் பறந்துள்ளன.  

இது பற்றி நாம் விசாரித்தபோது, "மெப்ஸ் வளாகத்திலுள்ள சிறப்பு பொருளாதார மண்ட லத்தில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற 106 நிறுவனங்களும், மாவட் டங்களிலுள்ள பொருளாதார மண்டலங்களில் 1000-த்திற்கும் மேற்பட்ட கம்பெனிகளும் செயல்பட்டு வருகின்றன. மெப்ஸ் வளாகத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

Advertisment

மெப்ஸில் செயல்படும் நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3,600 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியிருக்கிறது மத்திய அரசு. 54 சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வருவாயை கணக்கிட்டால் ஒவ்வொரு ஆண் டும் நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு லட்சம் கோடிகளைத் தாண்டும். 

இந்த சிறப்பு பொருளா தார மண்டலங்களின் டெவலப்மெண்ட் கமிஷன ராக அலெக்ஸ்பால் மேனன் ஐ.ஏ.எஸ். மற்றும் இணை டெவலப்மெண்ட் கமிஷனராக ஆர்த்தர்வர்ச்சியூ ஆகிய இருவரையும் சில ஆண்டுகளுக்கு முன்பு டெபுடேசனில் (அயல் பணி) நியமித்துள்ளது மத்திய அரசு. 

mepz1

Advertisment

இவர்களுக்கு கீழே, டெபுடி டெவலெப் மெண்ட் கமிஷனர் (டி.டி.சி.) 3 பேர், அடிஷனல் டெவலெப்மெண்ட் கமிஷனர் (ஏ.டி.சி.) 12 பேர் இருக்கின்றனர்.  தமிழகத்திலுள்ள 54 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் இந்த 12 பேருக்கும் பிரித்துத் தரப்பட்டுள்ளன.  இவர்களின் அதிகார கட்டுப்பாட்டில்தான் இவை இயங்குகின்றன. இதில், டி.டி.சி. 3 பேர், ஏ.டி.சி. 12 பேர் என 15 அதி காரிகளின் அட்ராசிட்டியில் தொழில் நிறுவனங்கள் மிரண்டு கிடக்கின்றன. இவர்களில் டி.டி.சி. பிரபுகுமார், ஏ.டி.சி.க்கள் வெங்கட்ராமன், சிவக் குமார், விஜயானந்த், ஆகியோர் வைத்ததுதான் சட்டம்! இவர்களது மிரட்டல்களால் பல்வேறு நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது''’என்கின்றனர் தொழிலாளர்கள். 

மேலும் நாம் விசாரித்தபோது, "மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்திலிருந்து அடிசனல் டெவலெப்மெண்ட் கமிஷனர் 12 பேரையும் டெபுடேசனில் தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் டி.டி.சி. பிரபுகுமார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த 12 அதிகாரிகளும் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு புதியவர்களை நியமிக்க வேண்டும். ஆனால், இந்த 12 பேருக்கும் 2 முறை பணி நீட்டிப்பு கிடைக்கச் செய்தார் பிரபு. இதன் பின்னணியில் பல லட்சங்கள் விளையாடியது. தற்போது மூன்றாவது  முறையாகவும் பணி நீட்டிப்பு வழங்க காய்களை நகர்த்தி வருகிறார் பிரபுகுமார். 

இதுகுறித்த புகார்கள் மத்திய அரசுக்கு சென்றுள்ள நிலையில், அதனை தங்களின் சோர்ஸ்கள் மூலம் தடுத்து விடுகிறார் பிரபுகுமார் மற்றும் உயரதிகாரிகள். இதனால், இவர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பதுடன், நிறுவனங்களின் லைசைன்ஸ் ரினீவல், புதிய நிறுவனங்கள் பதிவு செய்தல், புதிய உற்பத்தி தொடங்குதல், பெயர் மாற்றம், நிறுவனங்களுக்குரிய வசதிக் குறைபாடுகள் என எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. 

இவர்களுக்கு ஏ.டி.சி. வெங்கட்ராமன் தான் ஏஜெண்டாக இருந்து அனைத்தையும் முடித்துக் கொடுக்கிறார்.  இவைகளில் பல கோடி ஊழல் பெருக்கெடுத்துள்ளன.    

மெப்ஸில் குப்பை அள்ளுவதற்காக சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் எனும் நிறுவனத்தை நியமித்துள்ளனர். குப்பையை மட்டும் அகற்றுவதற்காக நியமிக்கப்பட்ட இந்த நிறுவனத்திடம்தான், அனைத்து கழிவுகளையும் கொடுக்க வேண்டும் என்றும், ஒரு கிலோவுக்கு அந்த நிறுவனம் நிர்ணயிக்கும் தொகையை தரவேண்டும் என்றும் அனைத்து நிறுவனங்களுக் கும் சட்டத்திற்குப்புறம்பாக, கட்டளை போடுகிறார் பிரபுகுமார். இதனை ஏற்க மறுக்கும் நிறுவனங் களை ப்ளாக் லிஸ்டில் வைப்போம் என மிரட்டுகிறார். இந்த விவகாரத்தில் மட்டும் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. 

அதேபோல, தூத்துக்குடியிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் ஏ.டி.சி. சிவக்குமாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நான் வைத்ததுதான் சட்டம்; எனது உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்; இல்லையேல் ஒழித்துவிடுவேன் என மிரட்டி வருகிறார். இதனால் தமிழக கம்பெனிகள் பயந்து சாவதுடன், அமைதியாக தொழில் நடத்த முடியாமல் தவிக்கின்றன. 

இதனைக் கவனிக்கவேண்டிய  தலைமை அதிகாரி அலெக்ஸ்பால் மேனன் ஐ.ஏ.எஸ்., அக்கறை காட்டாததால், ஊழல்களும் மிரட்டலு களும் சட்டத்திற்கு புறம்பான பணி நீட்டிப்புகளும் பூதாகரமாகி வருகின்றன'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகின்றனர் தமிழக தொழில்துறை அதிகாரிகள். 

இத்தகைய புகார்கள் குறித்து கருத்தறிய அலெக்ஸ்பால் மேனனை தொடர்பு கொண்ட போது, அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது. 

-இளையர்