Advertisment

அதிகாரி அட்டகாசம்! ஆட்சி மாறியும் தொடரும் கல்குவாரி கொள்ளை!

qq

மாவட்ட கலெக்ட ரால் தற்காலிகமாக சீல் (சஸ்பெண்ட்) வைக்கப்பட்ட விதிகளுக்குப் புறம்பான கல்குவாரிகளை திறந்து விட... துறையின் உயரதி காரி ஒருவர் உத்தரவு பிறப்பித்திருக்கும் விவகாரம் தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

கனிமவளத்துறை வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ”தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறு வனங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான கட்டுமான ப்ராஜெக்ட்டுகள் நடந்து வருகின்றன. ஆற்று மணலுக்கு தடை நீடிப்பதால் எம்.சாண்ட் மணல்தான் கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எம்.சாண்ட் மணலுக்கு மூலப்பொருள் சக்கை கல்கள்.

qq

பட்டா நிலங்களிலிருந்து இந்த சக்கைக் கல்களை வெட்டி எடுத்துச் செல்ல லைசன்ஸ் தருகிறது தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை. அந்தவகையில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கல் குவாரிகள் அரசின் அனுமதியுடன் இயங்குகின்றன. பெரும்பாலான குவாரிகளில் விதிகளுக்குப் புறம்பாக கற்களை வெட்டி எடுத்துக் கடத்துவது தொடர்கதையாகவே நடக்கிறது.

Advertisment

கடத்தல் குறித்து சில தகவல்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ்.சுக்கு கிடைக்கிறது. இதனையடுத்து, துறையின் இணை இயக்குநர் முருகானந்தத்தை அழைத்துக்கொண்டு கடந்த அக்டோபர் 2-ந்தேதி காஞ்சிபுரம் அருகே ஒரகடம் பகுதியில் சோதனையில் ஈடுபடுகிறார் நிர்மல்ராஜ். அப்போது, ஒரே நடைச்சீட்டை பயன்படுத்தி யும், நடைச்சீட்டு இல்லாமலும், அனு மதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவும் பல நூறு லோடுகள் கல், எம்.சாண்ட் ஆகியவற்றை கடத்தி வந்த 17 லாரிகளை மடக்கிப் பிடிக்கின்றனர். இவை காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையில்

மாவட்ட கலெக்ட ரால் தற்காலிகமாக சீல் (சஸ்பெண்ட்) வைக்கப்பட்ட விதிகளுக்குப் புறம்பான கல்குவாரிகளை திறந்து விட... துறையின் உயரதி காரி ஒருவர் உத்தரவு பிறப்பித்திருக்கும் விவகாரம் தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

கனிமவளத்துறை வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ”தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறு வனங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான கட்டுமான ப்ராஜெக்ட்டுகள் நடந்து வருகின்றன. ஆற்று மணலுக்கு தடை நீடிப்பதால் எம்.சாண்ட் மணல்தான் கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எம்.சாண்ட் மணலுக்கு மூலப்பொருள் சக்கை கல்கள்.

qq

பட்டா நிலங்களிலிருந்து இந்த சக்கைக் கல்களை வெட்டி எடுத்துச் செல்ல லைசன்ஸ் தருகிறது தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை. அந்தவகையில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கல் குவாரிகள் அரசின் அனுமதியுடன் இயங்குகின்றன. பெரும்பாலான குவாரிகளில் விதிகளுக்குப் புறம்பாக கற்களை வெட்டி எடுத்துக் கடத்துவது தொடர்கதையாகவே நடக்கிறது.

Advertisment

கடத்தல் குறித்து சில தகவல்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ்.சுக்கு கிடைக்கிறது. இதனையடுத்து, துறையின் இணை இயக்குநர் முருகானந்தத்தை அழைத்துக்கொண்டு கடந்த அக்டோபர் 2-ந்தேதி காஞ்சிபுரம் அருகே ஒரகடம் பகுதியில் சோதனையில் ஈடுபடுகிறார் நிர்மல்ராஜ். அப்போது, ஒரே நடைச்சீட்டை பயன்படுத்தி யும், நடைச்சீட்டு இல்லாமலும், அனு மதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவும் பல நூறு லோடுகள் கல், எம்.சாண்ட் ஆகியவற்றை கடத்தி வந்த 17 லாரிகளை மடக்கிப் பிடிக்கின்றனர். இவை காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையில் இயங்கிய கல் குவாரிகளிலிருந்து கற்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்த லாரிகள்.

நிர்மல்ராஜ் உத்தரவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதேசமயம், 7 லாரிகள் ஓட்டம் பிடிக்கின்றன. அதன் பதிவு எண்கள் இருந்தும் இப்போதுவரை அந்த லாரிகளை பறிமுதல் செய்யவில்லை. மடக் கிப் பிடிக்கப்பட்ட லாரிகளில் இருந்த கல் மற்றும் எம்.சாண்ட் முழுதும் 6 குவாரிகளிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த 6 குவாரிகளையும் சஸ் பெண்ட் செய்யுமாறு காஞ்சி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவ னுக்கு (தற்போது இவர் இடமாற்றப்பட்டுள் ளார்) அக்டோபர் 4-ந் தேதி கடிதம் மூலம் உத்தரவிடுகிறார் இயக்குநர் நிர்மல்ராஜ்.

qq

அந்த உத்தரவை கலெக்டர் ஆர்த்தியின் கவனத்துக்கு விஜயராகவன் எடுத்துச் செல்ல, குவாரிகளை ஆய்வுசெய்ய உத்தரவிடுகிறார் கலெக்டர். முறைகேடுகள் நடந்திருப்பது தெரிந் ததும், அக்டோபர் 7-ந் தேதி 6 குவாரிகளின் லைசன்சும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. மேலும், தங்கள் பங்குக்கு 4 குவாரிகளை சீல் வைக்கிறது கலெக்டர் அலுவலகம்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 10 குவாரி களின் உரிமையாளர்களில் பலர் இந்த தொழிலில் ஜாம்பவான்கள். உடனே, எங்க ளிடம் விளக்கம் கேட்காமலே குவாரிகளுக்கு சீல் வைத்தது தவறு என இயக்குநரிடம் மேல்முறையீடு செய்கிறார்கள். இயக்குநர் நிர்மல்ராஜை சந்தித்தும் முறையிடுகிறார்கள். தவிர, மாவட்டத்திலுள்ள மற்ற குவாரி உரிமையாளர்களுடன் அவசர ஆலோசனையும் நடத்துகின்றனர்.

இந்த நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கை யை ரத்து செய்யுமாறு கலெக்டர் ஆர்த்திக்கு அக்டோபர் 29-ந் தேதி அறிவுறுத்துகிறார் இயக்குநர் நிர்மல்ராஜ். அதன்படி சீல் வைக் கப்பட்ட குவாரிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்கிறார்கள் கனிம வளத்துறையினர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜிடம் பேசியபோது, ”"குவாரிகள் மற்றும் எம்.சாண்ட் தொழிலை முறைப்படுத்துமாறு இயக்கு நர் நிர்மல்ராஜிடம் நாங்கள் முறையிட்டபோது, குவாரி கள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 150 கோடி ரூபாய்தான் வருவாய் கிடைக்கிறது எனச் சொன்னார். அப்போது, கிருஷ்ணகிரியில் மட்டுமே 121 கல் குவாரி மலைக்கு லைசன்ஸ் கொடுத்திருக்கீங்க. இதில் 70 மலை ஓசூரிலேயே இருக்கிறது. 300 கிரஷர் யூனிட்டுக்கும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. கர்நாடகாவுக்கு கடத்துவதற்காகத்தான் இவ்வளவு அனுமதி தரப்பட்டிருக்கிறது.

qq

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மட்டும் ஒரு நாளைக்கு 4000 லோடு கல், எம்.சாண்ட் கடத்தப்படுகிறது. அப்படிப் பார்த்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மட்டுமே 150 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு வருவாய் கிடைத்திருக்க வேண்டுமே எனக் கேட்டேன்.

அதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்மல்ராஜ் சொல்ல, தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்காமல் காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை மட்டுமே குறி வைக்கிறீர்களே, ஏன்? என கேட்டதற்கு பதில் இல்லை. குவாரி தொழில்களை சட்டரீதியாக முறைப்படுத்துவதை விட்டுவிட்டு, அதனை அமைச்சர்களுக்கும் தங்களுக்கும் வருவாய் கிடைக்கும் தொழிலாக அதிகாரிகள் மாற்றுவதால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அமைச்சர்கள் பலரும் பினாமி பெயர்களில் குவாரிகள், கிரஷர்கள் நடத்துகின்றனர்.

இந்த தொழிலில் மட்டும் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த 10,000 கோடியும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், குவாரி உரிமையாளர்களிடம் புழங்குகிறது. இந்த ஊழல்களை யார் தடுத்து நிறுத்துவது?'' என்கிறார் ஆவேசமாக.

இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, குவாரிகள் சீல் வைக்கப்பட்டதும் குவாரி உரிமையாளர்கள் நடத்திய ஒரு ரகசிய ஆலோசனையின் முடிவில், அதிக லோடுகள் அடிக்காமல் ஒரு நாளைக்கு 50 டன் மட்டும் அடிப்பது என்றும், ஏற்கனவே ஒரு நாளைக்கு ஒரு குவாரியில் விதிகளுக்குப் புறம்பாக 500 டன் அடித்து வந்தபோது கிடைத் துவந்த லாபத்தை இந்த 50 டன்களின் விலையில் ஏற்றி விற்பது எனவும் ரகசியமாக முடிவெடுக்கின்றனர். அதன்படி, ஒரு குவாரியிலிருந்து 50 டன் மட்டுமே சக்கைக் கற்கள் எடுத்தனர். இதனால்தான் டிமாண்ட் அதிகரித்தது.

பொதுவாக, கல்குவாரி உரிமையாளர்களே கிரஷர் தொழிலும் செய்வதுண்டு. அந்த கிரஷர் மூலம் எம்.சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். பலரிடம் கிரஷர் தொழில் இருக்காது. அதனால் கிரஷர் தொழில் செய்பவர் களிடம் கற்களை விற்று விடுவர். இப்படிப்பட்ட நிலையில், ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு குவாரியிலிருந்து 500 டன்கள் சக்கைக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டபோது, ஒரு டன் கல்லின் சந்தை மதிப்பு 200 ரூபாயாகவும், எம்.சாண்டின் விலை 600 ரூபாயாகவும் இருந்தன. இவை நுகர்வோர்களுக்கு (மக்கள்) 950 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டதற்கு பிறகு ஒரு டன் 1,450 ரூபாயாக அதிகரித்தது. மூல பொருட்களுக்கான தட்டுப்பாட்டை (டிமாண்ட்) செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் ஜல்லி மற்றும் எம்.சாண்டின் விலையை பொதுச் சந்தையில் அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சுரங்கத் துறையினர்.

இதுகுறித்து சுரங்கத்துறையின் இயக்குநர் நிர்மல்ராஜிடம் கேட்டபோது, "லாரிகளை மடக்கிப் பிடித்து வழக்குப் பதிவு செய்ய வைத்தது நான்தான். அதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தேன். குவாரிகளை சஸ்பெண்ட் செய்தது கலெக்டர்தான். ஆனால், முறையாக விசாரித்து அவர் நடவடிக்கை எடுக்காததால், சட்டப்படி மனுதாரருக்கு வாய்ப்புக் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மற்றபடி, சஸ்பெண்ட் செய்தது கலெக்டர்தானே தவிர நானில்லை'' என்கிறார்.

இதுபற்றி கலெக்டர் ஆர்த்தியை தொடர்புகொண்டு கேட்டபோது, "லாரிகள் மடக்கிப் பிடிக்கப்பட்ட சூழலில் சம்பந்தப்பட்ட குவாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது மேலதிகாரிதான். தற்போது மனுதாரருக்கு வாய்ப் பளித்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என சொல்வதும் அதே மேலதிகாரிதான். தவறு நடந்திருப்பது உறுதியானதால்தானே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர். நடவடிக்கை எடுத்த பிறகு ஏன் முரண்பாடு வருகிறது? எனக்குத் தெரியவில்லை. மனுதாரருக்கு வாய்ப்புக் கொடுக்கும் முகமாக விசாரித்த பிறகுதான் இதில் அடுத்தகட்ட நடவடிக்கை தெரிய வரும்''‘என்பதோடு முடித்துக் கொண்டார்.

நேர்மையான நிர்வாகத்தையும் வெளிப்படையான ஆட்சியையும் கொடுக்க நினைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், குவாரி உள்ளிட்ட கனிமவளத் தொழில்களை முறைப்படுத்த அரசாங்கமே மாவட்டத்துக்கு 2 கல் குவாரிகளை நடத்தினால் செயற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகள் தடுக்கப் படுவதோடு, அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாயும் கிடைக்கும், நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் அரசாங்கத்தை மீட்டெடுக்கவும் உதவும். செய்வாரா, முதல்வர்?

nkn011221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe