அரசின் கவனத்துக்குத் தன் பிரச்சினையை எடுத்துச் சென்று, போராடிவரும் ஒரு இஸ்லாமியப் பெண்மணியை, அது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டும் கூட, பிரச்சினையைத் தீர்க்காமல் அலட்சியப்படுத்தி அல்லாட வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜமிலா என்ற பெண்மணி, "நடந்தவைகளையும் நான் பட்ட வேதனை களையும் சொல்லுகிறேன். என்னுடைய படம் வேண்டாம். வெளியானால் என்னைக் குறிவைத்துப் பழிவாங்குவார் கள்...''’என்ற பீடிகையோடு சொன்ன தகவல்கள் இவை.
பதினோரு வருடங்களுக்கு முன்பு, பாளையிலுள்ள தென்னிந்திய இஸ்லாத்துல் சபைக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டு வதற்காக இரண்டு மனைகள் வாங்கி யுள்ளார் ஜமிலா. பல வருடங்களுக்கு முன்பு இந்த சபையின் நிர்வாகிகள், தங்களது சபையின் சார்பில் அலுவல கக் கட்டிடம், அனாதை இல்லம் கட்டுவதற்காக வைத்திருந்த நிலத் தினை தங்களது. சபை உறுப்பினர் களின் வாயிலாக தீர்மானம் போட்டு, சர்வே எண் 730 மற்றும் 728ல் பிளாட் எண் 204, மற்றும் பிளாட் எண்:258 என இரண்டு பிளாட் மனைகளை வீடு க
அரசின் கவனத்துக்குத் தன் பிரச்சினையை எடுத்துச் சென்று, போராடிவரும் ஒரு இஸ்லாமியப் பெண்மணியை, அது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டும் கூட, பிரச்சினையைத் தீர்க்காமல் அலட்சியப்படுத்தி அல்லாட வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜமிலா என்ற பெண்மணி, "நடந்தவைகளையும் நான் பட்ட வேதனை களையும் சொல்லுகிறேன். என்னுடைய படம் வேண்டாம். வெளியானால் என்னைக் குறிவைத்துப் பழிவாங்குவார் கள்...''’என்ற பீடிகையோடு சொன்ன தகவல்கள் இவை.
பதினோரு வருடங்களுக்கு முன்பு, பாளையிலுள்ள தென்னிந்திய இஸ்லாத்துல் சபைக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டு வதற்காக இரண்டு மனைகள் வாங்கி யுள்ளார் ஜமிலா. பல வருடங்களுக்கு முன்பு இந்த சபையின் நிர்வாகிகள், தங்களது சபையின் சார்பில் அலுவல கக் கட்டிடம், அனாதை இல்லம் கட்டுவதற்காக வைத்திருந்த நிலத் தினை தங்களது. சபை உறுப்பினர் களின் வாயிலாக தீர்மானம் போட்டு, சர்வே எண் 730 மற்றும் 728ல் பிளாட் எண் 204, மற்றும் பிளாட் எண்:258 என இரண்டு பிளாட் மனைகளை வீடு கட்டுவதற்காக வாங்கியிருக்கிறார். அதேபோல், பல்வேறு பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வர்களும் அந்த இஸ்லாமிய அமைப்பிடம் மனைகள் வாங்கியுள்ளனர்.
தான் வாங்கிய மனையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கேட்டு அதற்கான கட்டணமாக ரூ.25 ஆயிரத் தைச் செலுத்தி விண்ணப் பித்திருக்கிறார். ஆனால் திட்டக்குழுமத்தின் இணை இயக்குனரான ரங்கநாதனோ குறிப்பிட்ட அந்த சர்வே எண்களில் உள்ள அனை வரும் ஒன்றிணைந்து வந்தால் மட்டுமே வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்று தெரிவித் திருக்கிறார்.
"60க்கும் மேற்பட்ட வர்களின் முகவரிகள் எனக்குத் தெரியாதே... அவர்களை எப்படி என்னால் ஒருங் கிணைக்க முடியும்?' என்று அதிகாரிகளிடம் ஜமிலா முறையிட்டும், பலனில்லை யாம். வழி தெரியாமல் தவித்த ஜமிலா அனுமதிக்காகப் போராடியவர், அரசுத்தரப்பின் அத்தனை துறை அதிகாரி களுக்கும் பல வருடங்களாகக் கோரிக்கை மனுக்கள் அனுப்பி யும் வழி பிறக்கவில்லையாம்.
கடந்த ஆட்சியில் போராடியே சோர்ந்து போனவர், ஆட்சி மாறி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்து துறை சார்ந்த இயக்குநர், அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பியிருக்கிறார். அதே சமயம் இது போன்ற பலரின் கோரிக்கைகள் பிற மாவட்டங்களிலிருந்தும் அரசுக்குப் போயிருக் கிறது. இதையடுத்தே அம்மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டுத் துறையின் அமைச்சர் முத்துசாமி மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநர் சரவணவேல்ராஜ் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள், இந்த விவகாரத்தைப் பரிசீலனை செய்திருக்கிறார்கள்.
இது போன்று நகர்ப்புற மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மனைகளை அங்கீகாரம் செய்து வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கி னால் அவர்களின் பல வருட கோரிக்கைகள் நிறைவேறும். அதேசமயம், இந்த அங்கீகாரம் மாநிலம் முழுவதிலும் அனு மதிக்கப்படுவதுடன் அரசுக் கான வருவாய் கிடைக்கவும் வழியுள்ளது என்பதன் அடிப்படையில் முதல்வரின் ஒப்புதலோடு 12.09.2022 அன்று நகர ஊரமைப்பு இயக்குநரான சரவணவேல் ராஜ். ஐ.ஏ.எஸ். அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்களுக்கு அரசாணை அனுப்பினார். மேலும், இதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான விளக்க அறிக்கையும் குறிப்பிட்ட அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
மேலும், 15.09.22 முதல் அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள், கட்டிட அனுமதி, நில உபயோக மாற்றம் குறித்த விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பெற்று அனுமதி அளிக்கும் முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த ஆணை நெல்லை நகர் ஊரமைப்பின் இணை இயக்குனரகத்திற்கும் வந்திருக்கிறது. அதனையறிந்ததும், ஒரு வழியாக பிரச்சினை தீரும் என்று மறுபடியும் வீடு கட்ட அனுமதி கேட்டு நெல்லை நகர் ஊரமைப்பு அலுவலகம் சென்று முறையிட்டிருக்கிறார் ஜமிலா.
"இத்தனை வருசமா போராடிக்கிட்டு இருக்கேன். இப்ப அரசு உத்தரவு வந்தது தெரிந்து, போய்க் கேட்டப்ப, அது வேற, இது வேறன்னு சொல்லி ஜே.டி.ரெங்கநாதன், தன் உதவியாளர் வரதராஜனைப் பார் என்கிறார். வரதராஜனோ ஜே.டி.யைப் பார் என்கிறார். இப்படி மாறி மாறி அலையவிடுறாக. எனக்கு அனுமதி கெடைக்குமாய்யா. அரசு உத்தரவு போட்டும் அதை அலட்சியப்படுத்தறாங்களே... என் பிரச்சினைக்கு விடிவு கிடைக்குமாய்யா... மன உளைச்சல்ல தவிக்கிறேன்யா...'' என்கிறார் வேதனை மண்டிய குரலில் ஜமீலா.
நாம் நெல்லை நகர் ஊரமைப்புத் திட்ட இணை இயக்குனரான ரெங்கநாத னைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டபோது. சற்று யோசித்தவர், "அந்தம்மா ஃபைல் சென்னைக்குப் போயி ருக்கு'' என்றவர், பின்னர் "அந்த ஃபைலை எடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.
தொடர்ந்து தொடர்பு கொண்ட நாம், "அந்த ஃபைலை சென்னைக்கு அனுப்ப வேண் டியதில்லையே. நீங்கள்தானே அனுமதி வழங்க வேண்டும்'' என்றதும், "இரண்டு நாளில் முடிக்கப் பார்க்கிறேன்'’என்று முடித்துக்கொண்டார்.
தன்னால் முடிய வேண்டிய ஒரு வேலையை, அரசே உத்தரவு போட்டும் அதை நிறைவேற்ற, பஞ்சாங்கம் பார்த்துக்கொண்டி ருப்பது என்ன வகை நீதி? மக்களின் நீண்ட கால வாட்டத்தையும் ஏக்கத்தையும் போக்கும் வகை யிலான முதல்வரின் அரசாணை, இப்படிப் பட்ட அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப் படுவது, மக்களின் மனவேதனையைக் கிளறியுள்ளது.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்