திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய குமார். இவருக்கு சொந்தமான 12 சென்ட் இடத்தை இவரது உறவினர்களாக வேடியப்பன், சுரேஷ் ஆகியோர் போலி பத்திரம் மூலமாக எழுதிக்கொண்டனர். அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு தந்து அதில் 10 சென்ட் இடத்தினை மீட்டவர், இன்னும் 2 சென்ட் இடத்தினை மீட்க திருவண்ணாமலை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் தொடங்கி, முதலமைச்சர் தனிப்பிரிவு வரை கடந்த 3 ஆண்டுகளாக மனுக்கள் தந்தபடியே இருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விஜய குமார், "இரண்டாண்டுகளாக மனுக்களாகத் தந்து போராடியபின்னர் கடந்த ஆண்டுதான் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி. உத்தரவின்படி விசாரணை நடத்தி, மூன்று சர்வே நம்பரில் பதிவான பத்திரத்தை ரத்து செய்தார்கள். ஒரு சர்வே நம்பரில் உள்ளதை ரத்து செய்யவில்லை. காரணம் கேட்டபோது, என் தந்தையிடமிருந்து ஒருவர் வாங்கியுள்ளதாகவும், அவரிடமிருந்து எங்கள் சித்தப்பா வாங்கியதாகவும், அவர் இறந்துவிட்டதால் அது அவர்களது பிள்ளைகளுக்கு சொந்தம் என்றார
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய குமார். இவருக்கு சொந்தமான 12 சென்ட் இடத்தை இவரது உறவினர்களாக வேடியப்பன், சுரேஷ் ஆகியோர் போலி பத்திரம் மூலமாக எழுதிக்கொண்டனர். அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு தந்து அதில் 10 சென்ட் இடத்தினை மீட்டவர், இன்னும் 2 சென்ட் இடத்தினை மீட்க திருவண்ணாமலை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் தொடங்கி, முதலமைச்சர் தனிப்பிரிவு வரை கடந்த 3 ஆண்டுகளாக மனுக்கள் தந்தபடியே இருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விஜய குமார், "இரண்டாண்டுகளாக மனுக்களாகத் தந்து போராடியபின்னர் கடந்த ஆண்டுதான் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி. உத்தரவின்படி விசாரணை நடத்தி, மூன்று சர்வே நம்பரில் பதிவான பத்திரத்தை ரத்து செய்தார்கள். ஒரு சர்வே நம்பரில் உள்ளதை ரத்து செய்யவில்லை. காரணம் கேட்டபோது, என் தந்தையிடமிருந்து ஒருவர் வாங்கியுள்ளதாகவும், அவரிடமிருந்து எங்கள் சித்தப்பா வாங்கியதாகவும், அவர் இறந்துவிட்டதால் அது அவர்களது பிள்ளைகளுக்கு சொந்தம் என்றார்கள். என் தந்தையிடமிருந்து இடத்தை வாங்கியதற்கான பத்திரத்தை காட்டச்சொல்லுங் கள் எனக்கேட்டால் அதிகாரிகள் அதை காதிலேயே வாங்கமாட்டேன் என்கிறார்கள். நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முயன்றதை அரசியல் சக்திகள் தடுத்துவிட்டனர். எதிர்த்தரப்பு நீதிமன்றத்துக்கு போனதும், நாங்க விசாரிக்கமுடியாது, நீங்கள் நீதிமன்றத் தில் பார்த்துக்கொள்ளுங்கள் எனச்சொல்லிவிட்டார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருந் தாலும், அரசு இயற்றியுள்ள பத்திரப்பதிவுத் துறை புதிய சட்டவிதியின்கீழ் விசாரணை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.க்கு 3 முறை கடிதம் அனுப்பியும், விசாரணை நடத்த மறுக்கிறார்'' என்றார்.
வேலூர் மாவட்டம், பெருமுகை கிராம ஊராட்சியில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரும்பு குடிநீர் பைப்புகளைத் திருடி விற்பனை செய்துள்ளனர் சிலர். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் ஒன்றியத் தலைவர் சிவக்குமார் நம்மிடம், "ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உட்பட சிலருக்கு புகார் அனுப்பினேன். சத்துவாச்சாரி போலீஸார் விசாரித்துவிட்டு, திருடியது யார்னு தெரியலன்னு சொல்றாங்க. புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி சிலர் நெருக்கடி தர்றாங்க''.
மேலும்... "இதே பஞ்சாயத்து நிர்வாகத் தில் 2018- 2019, 2019-2020, 2020-2021 ஆண்டு களில் வீட்டு வரி, தொழில்வரி, நிறுவன லைசென்ஸ், ப்ளான் அப்ரூவல் தந்துள்ள னர். பணம் கட்டியதற்கான ரசீது நகல் கள் அலுவலகத்தில் இருக்கவேண்டும். ஆனால் அப்படியொரு பில்லே இல்லை. அதிகாரி கள் முறையாக தணிக்கை செய்யாமலேயே எல்லாம் சரியாக உள்ளது என ரிப்போர்ட் தந்துள்ளார்கள். முறையாக தணிக்கை செய்தால் அதிகாரிகள் சிக்குவார்கள் என்பதால் சரியாக தணிக்கை செய்ய வில்லை. இதுகுறித்து கலெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற வற்றுக்கு பலமுறை புகார் அனுப்பியும் இன்னமும் நடவடிக்கை இல்லை'' என்றார்.
சமம் குடிமக்கள் இயக்கத்தின் மண்டல செயலாளர் ஆம்பூர் ஜேசுபாதம், "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் என நடக்கும் பல்வேறு கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்துகொண்டேயிருப்பதற்கு காரணமே குறைகள் தீர்க்கப்படாததுதான். புகார் யார் மீது அளிக்கப்படுகிறதோ, அவர்களுக்கே மனுக்களை அனுப்புகிறார்கள். பிறகெப்படி பிரச்சனை தீரும்? தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்பதில் உயர் அதிகாரிகள் கவனமாக இருக்கிறார்கள். இதனால் விரக்தியாகும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயல்கிறார்கள். குறைதீர்வு கூட்டத்துக்கு வரும் மனுக்கள், நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்'' என்றார்.
பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை, நில அளவை, மின் வாரியம் மீதே மக்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருகின்றன. இங்குதான் புரோக்கர்கள், அதிகாரிகள் துணையுடன் போலிப் பத்திரங்கள் உருவாக்கம், பட்டா பெயர் மாற்றம், பட்டாவில் பெயர் திருத்தம், மின் இணைப்பு, மின்கம்பம் இடமாற்றம் போன்றவற்றில் குளறுபடிகள் செய்து, லஞ்சம் கேட்டு மிரட்டுவதால் பொதுமக்கள் நொந்துபோகிறார்கள். இத்துறைகளுக்கு பாதிக்கப்படு வோர் அனுப்பும் புகார்மீது அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.
மக்களின் பிரச்சனை களை தீர்ப்பதற்காக உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் தனிப்பிரிவு, ஒருங்கிணைந்த குறைத்தீர்ப்பு மேலாண்மை பிரிவு போன்றவற்றை ஒன்றிணைத்து "முதல்வரின் முகவரி' என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் 37,97,850 மனுக்கள் பெறப்பட்டு, 36,72,029 மனுக்கள் தீர்த்து வைக்கப் பட்டதாகவும், இதில் 1,13,442 மனுக்கள் சரியாகத் தீர்வு தரவில்லை என மீண்டும் விசாரிக்கச்சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாமானியர்களுக்கான அரசாக, வெளிப்படையான நிர்வாகத்தைத் தர முயல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சாமி வரம் கொடுத்தா லும் அதிகாரிகளான பூசாரிகள் தான் தடை யாகிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.