ரடங்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தியபோதும், மதுக்கடைகளை திறக்க புதுச்சேரியில் அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள். மாமூலை வாங்கிக்கொண்டு காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

pondy

மது மட்டும் கள்ளத்தனமாக விற்பனை நடைபெறுவதால், தங்களுக்கு வருமானம் இல்லாததால் எரிச்சலடைந்த கள், சாராய வியாபாரிகள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களிடம் தூபம் போட, உடனடியாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் கள்ள மது விற்பனையை தடுக்க கோரினார். அதையடுத்து அனைத்து மதுபானக் கடைகளையும் சீல் வைத்து, அதில் உள்ள மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுக்குமாறு கிரண்பேடி அதிரடி உத்தரவிட்டார்.

இதனையடுத்து தூங்கி எழுந்த கலால்துறையினர், மதுபானக் கடைகளை சீல் வைத்து, மதுபானம் இருப்பு குறித்து கணக்கெடுக்க தொடங்கினர். உடனடியாக ரெய்டு நடத்தி, ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 224 வழக்குகள் பதியப்பட்டு, 130 மதுபானக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 67 லட்சம் மதிப்புள்ள 30 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

அதேசமயம் மதுபானங்களை கடத்தி விற்பனை செய்வதற்கு போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக கிரண்பேடிக்கு மீண்டும் புகார்கள் பறந்தன. அதனைத் தொடர்ந்து ‘புதுச்சேரி மாநிலத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தால், விற்பனை நடந்த சரகத்துக்கு உட்பட்ட காவல்நிலைய அதிகாரி காணொலி காட்சியில் விசாரிக்கப்படுவார்.

pppp

இந்த விசாரணையில் துணை நிலை ஆளுநர், டி.ஜி.பி, ஐ.ஜி, முதுநிலை எஸ்.பி. ஆகியோர் ஈடுபடுவோம். காவல்துறையினரிடம் விசாரிப்பது போல், கலால்துறையினரையும் தலைமைச்செயலர், துறைச்செயலாளருடன் விசாரிக்க உள்ளேன்’என அறிவித்தார்.

Advertisment

கிரண்பேடி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே மதுபானங்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், மது பாட்டில் திருடியதற்காகவும் வில்லியனூர் சரக தாசில்தார் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

விசாரித்ததில், கார்த்தி கேயன் தலைமையிலான குழுவினர் மடுகரை கிரா மத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஆய்வுக்கு சென்றபோது கடை உரிமையாளர் சங்கர், ""கொஞ்சம் மது பெட்டி களை எடுத்துக்கொள் கிறேன்'' என தாசில்தாரிடம் கேட்க, அவரோ, ""சரி, எடுத்துக்குங்க. எனக்கும் சில பாட்டில்களை எடுத்து வைங்க'' என சொல்லி அங்கிருந்த மதுபாட்டில் களில் உயர்தர மது புட்டிகளை தாசில்தார் கார்த்திகேயன் அவரது தேவைக்கு எடுத்து கொண்டதாகவும், அதையடுத்து மதுபானம் கடத்தலுக்கு உதவி செய்தார்’என கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்து வந்த ஆனந்த்பாபு என்பவரை பிடித்து விசாரித்த போது போலீசாரிடம் கூறினார்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தியதில் தாசில்தார் கார்த்திகேயன் மதுபானங்களை திருடியது உறுதிபடுத்தப்பட்டதால் ஊரடங்கு உத்தரவை மீறல், தொற்றுநோயை பரப்புதல், பேரிடர் கால அரசு உத்தரவை மீறல், கலால்துறை சட்டம் உள்பட 4 பிரிவின் கீழ் தாசில்தார் கார்த்திகேயன் மீது மடுகரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் வீட்டிலிருந்த மது புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தாசில்தாருடன் மது பாட்டில்களை பங்கு போட்டுக்கொண்ட வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், எழுத்தர்கள் சேதுராமன், செந்தில்ராஜா, ஓட்டுநர்கள் கருணமூர்த்தி, சுந்தர், உடந்தையாக இருந்த நெட்டப்பாக்கம் உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன், காவலர் ஜெயராமன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல கள்ள மது விற்பனையை கண்டுகொள்ளாமல் கவனக்குறைவாக இருந்த பாகூர் பகுதி காவல் ஆய்வாளர் அனில்குமார், வில்லியனூர் பகுதி உதவி காவல் ஆய்வாளர் நந்தகுமார் உள்பட 7 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே மதுபான வழக்கில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை சில காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், காவல் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்து கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார். கொரோனா காலத்தில் சட்டம் ஒழுங்கை கவனிப்பதை விட்டு, சாராய வழக்கை கவனிக்க இடம்மாறுதலா என பலரும் முதலமைச்சர் நாராயணசாமியிடம் குமுறியதால், பேரிடர் கால நிர்வாகம் நம் கையில்தானே உள்ளது என டி.ஜி.பியின் உத்தரவுகளை ரத்து செய்து மீண்டும் பழையபடியே காவல்துறை அதிகாரிகளை செயலபட அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா காலத்திலும் முன்பு போலவே துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் வழக்கம் போல மோதிக் கொள்வதால் புதுச்சேரியில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

-சுந்தரபாண்டியன்