தி.மு.க. ஆட்சி கடந்த இரண்டாண்டு களில் பல புகாருக்குள்ளானது. அதற்கு யார் காரணம் என ஒரு சுய விமர்சனத்தை மேற்கொண்டதில் தொண்ணூறு சதவிகிதம் தி.மு.க.வை பாதித்த பிரச்னைகளுக்கு காரணம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் என்கிற முடிவுக்கு தி.மு.க. வந்துள்ளது. பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.விற்கு தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. அனைத்து அதிகாரிகளும் அ.தி.மு.க. ஆட்சியில் கோலோச்சியவர் களாகவே இருந்தார்கள். அவர்களில் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்தன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் கொள்கைகள் மற்றும் அமைச்சரவையின் செயல்பாடுகளைப் பார்த்துக்கொண்டார். கட்சி விவகாரங்களை உதயநிதி மற்றும் துரைமுருகன் போன்றவர்களிடம் ஒப்படைத்தார். மருமகன் சப ரீசன் அரசு ஒப்பந்தங் கள் மற்றும் திட்டச் செலவீடு களை பார்த்துக்கொண்டார். ஆனால் அரசின் முக்கியக் கருவியான அதிகாரிகளை யார் கட்டுப் படுத்துவது என்பதில் ஒரு பெரிய மோதலே இருந்தது.

ias

அதிகாரிகள் நியமனத் தில் குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை ஸ்டாலின் விரும்பவில்லை. பல சந்தர்ப் பங்களில் ஸ்டாலினே “நேரடி யாக அதிகாரிகள் விசயத்தில் யாரும் தலையிட வேண்டாம்” என குடும்ப உறுப்பினர்களை எச்சரிக்கும் சம்பவங்களும் நடந்தன. குடும்ப உறுப்பினர் களைத் தாண்டி அமைச்சர் களும் அதிகாரிகள் விசயத்தில் தலையிடவில்லை. அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்தவர் முஷ்டியை முறுக்கி னார். “"அமைச்சரை நான் மாற்று கிறேன்'’என சவால் விடுத்தார்.

தற்பொழுது மத்திய அரசின் உள்துறையில் பணியில் இருக்கும் அவர் தி.மு.க. அரசுக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல் லாம் செய்துவருகிறார். அவரைப்பற்றி முத்துசாமி புகார் சொன்னபோது, முதல்வர் அதைப் பொருட் படுத்தவில்லை. ஆனால் தற்பொழுது அவரது செயல்பாடுகள் தி.மு.க. வுக்கு எதிராக இருப் பதைக் கண்டு முத்துசாமி சொன்னது உண்மைதான் என முதல்வர் அதிர்ந்து போயிருக்கிறார்.

அதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் அவரது துறை செயலாளராக இருந்த அமுதாவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற் பட்டது. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த எஸ். நந்தகுமார், ஒரு கிள்ளுக்கீரை அளவிற்கு கூட மதிக்கவில்லை எனப் புகார் எழுந்தது.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும், அந்தத் துறையின் செயலாளரும் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஒரு மீட்டிங்கில் கூட நேரடியாக சந்தித்துப் பேசிக்கொண்டதில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்துக்கும் அவரது துறை செயலாளருக்கும் மோதல் ஏற்பட்டது. “"அமைச்சர் கலந்துகொள்ளும் விழாக் களில் நான் கலந்து கொள்ள முடியாது'’ என செயலாளர் வெளிப்படையாகவே அறிவித்தார்.

காவல்துறையிலோ, கோவையில் நடைபெற்ற சிலிண்டர் குண்டு வெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல். மக்கள் மத்தி யில் வெடிக்க வேண்டிய அந்த குண்டு, தவறுதலாக முன்கூட்டியே வெடித்து விட்டது. இதைக் கேள்விப்பட்ட முதல்வர் அதிர்ந்துபோனார். கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி மர்ம மரணத்தைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுத்துறை தோல்வியடைந்தது அரசுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. வேங்கைவயல் சம்பவத்தில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அலட்சியமாக நடந்து கொண்டன எனப் புகார் எழுந்தது.

இறுதியாக நடந்த கள்ளச்சாராயச் சாவுகள் தி.மு.க. அரசை கடும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. அந்த சம்பவத்துக்கு முன்புதான் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் போதைப்பொருள் களை கட்டுப்படுத்தாவிட்டால் நான் சர்வாதிகாரியாக மாறு வேன் என ஸ்டாலின் எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழக மது ஒழிப்புப் பிரிவு காவல்துறை தலைவர் மகேஷ் குமார் அகர்வால், கஞ்சா ஒழிப்பு 4.0 என்கிற திட்டத்தை முதல்வர் மூலம் அறிமுகப்படுத்தி னார். கஞ்சா ஒழிப்பில் கவனம் செலுத்திய மது விலக்குத் துறை யும், சட்டம்- ஒழுங்குப் பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பில் கோட்டை விட்டன.

Advertisment

dd

மரக்காணம், செங்கல்பட்டு சாவுகளுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை உள்துறைச் செயலாளர் அமுதா தலைமையில் கூட்டினார். "மரக்காணம் சம்பவத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயத்தைக் கண்டுபிடிக்கிறீர்கள், நூற்றுக்கணக்கான பேரை கைது செய்கிறீர்கள். இந்த சம்பவத்திற்கு முன்பும் அவர்கள் கள்ளச்சாராயம்தானே விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் கேட்ட கேள்விக்கு அதிகாரி களிடம் பதில் இல்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை திரும்பிய முதல்வர், அதிகாரிகளை கையாள்வதில் ஏற்பட்டுள்ள பலவீனம்தான் அரசுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம்” என அதிகாரிகளைக் கையாளும் பொறுப்பை மருமகன் சபரீசனிடம் ஒப்படைத்தார். அவர், தமிழக அமைச்சர்களிடம் அதிகாரிகள் பற்றி கருத்துக் கேட்டார். “ஏற்கெனவே உதயசந்திரனின் ஆதிக்கத்தில்தான் அனைத்து அதிகாரிகளும் அமைச்சர்களை மதிக்காமல் செயல்பட்டார்கள்” என அமைச்சர்கள் சபரீசனிடம் குற்றப்பத்திரிகை வாசித்தார்கள். “உதயசந்திரனின் ஆதிக்கம் இனி வராது. அதற்கு முடிவு கட்டியாகி விட்டது. அடுத்தது என்ன சொல்லுங்கள்''’என கேட்க, அமைச்சர்கள் சொன்ன அடிப்படையில் மதுரை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஈரோடு மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மாற்றப்படுவதற்கான லிஸ்ட்’ தயாரானது.

Advertisment

காவல்துறையில் பெரிய மாற்றமாக சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின் ஆவடி மாநகராட்சி போலீஸ் கமிஷனராக சட்டம்-ஒழுங்கில் சிறப்பாக செயல்பட்ட அருண் என்பவர் நியமிக்கப்பட்டார். காவல்துறை அதிகாரிகள் மாற்றத்தில் பா.ஜ.க.வின் மறைமுகத் தலையீடும் இருப்பதாகக் காதைக் கடிக்கிறார்கள். இதற்கான பட்டியலில் குட்கா வழக்கில் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட நிர்மல்குமார் ஜோஷி என்கிற ஐ.பி.எஸ். அதிகாரியின் பெயர் வடக்கு மண்டல சென்னை மாநகர கூடுதல் இயக்குனராக இடம்பெற்றிருந்தது.

dd

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரின் பெயரை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும், உளவுத்துறை தலைவர் டேவிட்சனும் பரிந்துரைத் திருந்தார்கள். இதற்கு உள்துறைச் செயலாளர் அமுதாவும், முதல்வரின் செயலாளராக புதிதாகப் பொறுப்பேற்றவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதுவரை சைலேந்திரபாபு சொன்னபடியே அதிகாரிகள் நியமனம் என்கிற நிலையில் ஒரு பெரிய மாற்றமாக நிர்மல்குமார் ஜோஷியை நியமிப்பதற்கு மாப்பிள்ளை சபரீசன் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்.

வருகிற ஜூன் மாதம் டி.ஜி.பி. சைலந்திரபாபு ஓய்வுபெறுகிறார். அப்பொழுது ஒரு பெரிய மாற்றம் நடக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோர், சுனில் போன்றவர்கள் இல்லாத ஒரு புதிய டீமை களத்தில் இறக்கி அரசின் செயல்பாடுகள், அது ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து 2024 தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகிவருகிறது.

இனி அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.