எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில், முடிந்தவரை காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்பி கல்லா கட்டும் பணிகள் கனஜோராக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அறநிலையத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வரும் நிலையில்... அத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பிரபாகர் ஐ.ஏ.எஸ். முதல்வர் எடப்பாடியாரின் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், இடமாறுதல், புதிய பணி நியமனம், டெண்டர் உள்ளிட்ட அனைத்தும் இவர் கண்காணிப்பில் உள்ளதால் அவற்றின் வருமானம் அனைத்தும் தங்குதடையின்றி நேரடியாக மேலிடத்திற்கு செல்வதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபாகர் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திலேயே மத்திய அரசானது மின்சாரத்துறை திட்டத்திற்கு அவரை அழைத்தும், "
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில், முடிந்தவரை காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்பி கல்லா கட்டும் பணிகள் கனஜோராக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அறநிலையத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வரும் நிலையில்... அத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பிரபாகர் ஐ.ஏ.எஸ். முதல்வர் எடப்பாடியாரின் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், இடமாறுதல், புதிய பணி நியமனம், டெண்டர் உள்ளிட்ட அனைத்தும் இவர் கண்காணிப்பில் உள்ளதால் அவற்றின் வருமானம் அனைத்தும் தங்குதடையின்றி நேரடியாக மேலிடத்திற்கு செல்வதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபாகர் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திலேயே மத்திய அரசானது மின்சாரத்துறை திட்டத்திற்கு அவரை அழைத்தும், "நீங்க இங்கேயே இருங்க...'’என முதல்வர் சொல்லிய வார்த்தைக்காக மத்திய அரசின் அழைப்பை ஏற்காமல் இருப்பதாகக் கூறுகின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.
108 வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கத்தின் இணை ஆணையராக இருந்த ஜெயராமன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் இணைஆணையராக இருக்கும் அசோக்குமார்தான் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அந்த இடத்தை நிரப்ப பலர் முயற்சி செய்துவந்தாலும், திருச்சி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இணைஆணையராக பணியாற்றிய கல்யாணி என்பவரின் மீது ஆணையர் எஸ்.பிரபாகரின் பார்வை விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்யாணி மீது ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் உள்ள நிலையில்... தற்போது இராமநாதபுரம் கோவிலில் இணை ஆணையராகப் பணியாற்றிவருகிறார். ஆனாலும், திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு மாறுதல் பெற்று வருவதற்கு இந்துசமய அறநிலையத்துறை ஆணையரான எஸ்.பிரபாகர் மூலம் பகீரத பிரயத்தனம் செய்துவருகிறார். கல்யாணியின் சொந்த ஊர் திருச்சி என்பதும், ஏற்கனவே திருச்சி மாவட்ட உபகோயில்களின் இணைஆணையராக இவர் பணியாற்றியபோது இதே ஸ்ரீரங்கம் கோவிலின் பொறுப்பு அதிகாரியாக சில காலம் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கும், அவருக்கு பக்கத்து ஊரான ஆத்தூரைச் சேர்ந்தவரான பிரபாகரன் ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் வேண்டியவராக கல்யாணி இருப்பதால், "நான்தான் ஸ்ரீரங்கத்திற்கு வருவேன், எனக்காகவே இன்னும் ஸ்ரீரங்கத்தில் பணியில் அதிகாரி நியமிக்கப்படாமல் இருப்பதாக'வும் சக இணை ஆணையர்களிடம் கூறி வருவதாகவும் சொல்கின்றனர். இராமநாதபுரத்தில் இருக்கையிலேயே, ‘"நித்தியப்படி’ என்று சொல்லக்கூடிய கடவுளுக்கு படைக்கும் பொங்கல் உள்ளிட்ட அனைத்து வகையான பிரசாதங்களுக்கான பில் தொகையை நிறுத்தி வைத்தும், தனியார் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரருக்கு அனைத்து பில்லையும் ‘பாஸ்’ செய்தும் தன்னுடைய ராஜவிசுவாசத்தைக் காட்டியவர்' என்கிறார்கள்.
ஏற்கனவே, திருச்சியில் பணியாற்றிய போது புகழ்பெற்ற உறையூர் வெக்காளியம்மன் தங்கத்தேர் திருப்பணி விசயத்தில் இவர்மீது காவல்துறையில் ஒரு எஃப்.ஐ.ஆர். போடப் பட்டதாகவும் கூறும் திருக்கோவில் பணியாளர்கள் சிலர், ‘""இப்படிப்பட்ட கல்யாணி தற்போது ஸ்ரீரங்கத்திற்கோ அல்லது பழனிக்கு அடுத்த படியாக வருமானம் ஈட்டும் சமயபுரத்திற்கோ வந்தால், பல மடங்கு அதிகம் சம்பாதிக்கும் திட்டத்தோடுதான் வருவார்''’எனவும் ஆணித் தரமாக கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, தற்போது, இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக உள்ள எஸ்.பிரபாகர் பணியில் சேர்ந்து சில வாரங்களிலேயே தனது ‘பவர்’ என்ன என்பதை அறநிலையத்துறையிலுள்ள அனைவருக்குமே காட்டிவிட்டாராம். அதுவரை, துறையின் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடமிருந்து சமிக்ஞை வந்தால்தான் அறநிலையத்துறையில் எந்த அசைவுமே என இருந்துவந்த நிலையில்... பதவியேற்ற அடுத்த சில வாரங்களிலேயே டெண்டர், காலிப் பணியிடங்கள் என அத்தனையிலும் மூக்கை நுழைத்த எஸ்.பிரபாகர் தனது இஷ்டத்திற்கு செயல்படவே... கடுப்பான அமைச்சர், "கொஞ்சம் பார்த்து நடங்க'’’ என நாசூக்காக அட்வைஸ் செய்துவிட்டு நகர்ந்திருக்கிறார். அதன்பிறகும் இவரது ஆட்டம் அடங்கவில்லையாம்.
அது பணியிட மாற்றமாக இருந்தாலும், சரி, ஒப்பந்த விவகாரமாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்டவர்களிடம் தானே டீல்செய்து, உரிய பங்கை மேலிடத்திற்கும் அனுப்பி வைப்பதால், "அய்யோ, வடை போச்சே'’’ என்ற மனநிலைதான் சேவூராருக்கு எனக் கூறப்படுகிறது. மேலும், ஒருசில காலிப் பணியிடங்களுக்காக பலரும் அமைச்சரை ‘சந்தித்த’ நிலையில்... அதே பணியிடங்களுக்கு பிரபாகர் கேரண்டி கொடுத்து முடிப்பதாகவும், ஆன்லைன் டெண்டருக்குக்கூட, ஆப்லைனிலேயே இவர் வேலையை முடிப்பதாகவும் கூறப்படுகிறது. "முதல்வர் வீட்டு செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் இவரைக் கண்டு அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனே மிரண்டுபோயிருப்பது தான் வேடிக்கை' என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்!