தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள பதவி உயர்வு கோல்மால்களை ஆராய்ந்து வருகிறது மத்திய அரசின் சி.பி.ஐ.! இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள் ளது மத்திய அரசு. அப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்கிறார்கள் தமிழக கல்வியாளர்கள்.
சென்னையில் ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பல்கலைக்கழகத்தை கடந்த 2008-ல் உருவாக்கினார் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர். இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வியல் கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு கல்வியியலில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்களை உருவாக்கும் இந்த பல்கலைக்கழகத் தில்தான் நிர் வாகம் தூய் மையாக இருக்க வேண்டும். ஆனால் அப் படியில்லாததால் நிர்வாகம் சீர்குலை கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர்கள், "இந்த பல்கலைக்கழகத் தில் கடந்த 5 மாதங
தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள பதவி உயர்வு கோல்மால்களை ஆராய்ந்து வருகிறது மத்திய அரசின் சி.பி.ஐ.! இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள் ளது மத்திய அரசு. அப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்கிறார்கள் தமிழக கல்வியாளர்கள்.
சென்னையில் ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பல்கலைக்கழகத்தை கடந்த 2008-ல் உருவாக்கினார் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர். இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வியல் கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு கல்வியியலில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்களை உருவாக்கும் இந்த பல்கலைக்கழகத் தில்தான் நிர் வாகம் தூய் மையாக இருக்க வேண்டும். ஆனால் அப் படியில்லாததால் நிர்வாகம் சீர்குலை கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர்கள், "இந்த பல்கலைக்கழகத் தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாகவே இருக்கிறது. அதனை நிரப்புவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். தலைமையிலான கன்வீனர்ஸ் கமிட்டிதான் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தருக்கு இணை யான பொறுப்புமிக்க பதவி பல்கலைக்கழகப் பதிவாளர் பதவிதான். இந்த பதவியில் இருந்த கலைச்செல்வனின் பணிக்காலம் 2016-ஜூன் மாதம் முடிந்தது. அதன்பிறகு பதிவாளர் நியமனமே நடக்கவில்லை. பதிவாளர் பொறுப்பு என்ற நிலையே இப்போது வரை நீடித்து வருகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளராக பேராசிரி யர் நாகசுப்ரமணியை கடந்த 7.2.2023-ல் நியமிக்கிறார் கார்த்திக்கேயன் ஐ.ஏ.எஸ். சீனியாரிட்டிப்படி தகுதி வாய்ந்த 4 பேராசிரியர்கள் இருக்கும் போது ஜூனியரான நாகசுப்பிரமணி நிய மிக்கப்படுகிறார். ஜூனியர் என்பதைத் தாண்டி, கல்வித்தகுதியும் நாகசுப்பிரமணிக்கு இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.
சீனியாரிட்டியும் கல்வித்தகுதியும் இல்லாத ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகத்தின் முக்கிய பதவியில் நியமிக்கவேண்டிய அவசியம் என்ன? அதாவது, இந்த பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக நாகசுப்பிரமணி தேர்வுசெய்யப்பட்டபோதே, விதிகளின்படி உரிய கல்வித்தகுதி அவருக்கு இல்லை.
அதாவது, நாகசுப்பிரமணி தனது பி.ஹெச்.டி. படிப்பை 2011-ல்தான் முடிக்கிறார். ஆனால், இணைப்பேராசிரியர் நியமனங் களுக்கான அரசின் அறிவிப்பு 2015-ல் வருகிறது. அந்த அறிவிப்பில், நெட், செட் மற்றும் பி.ஹெச்.டி. ஆகியவற்றை முடித்த பிறகு 8 ஆண்டுகாலம் பணி அனுபவம் இருக்க வேண்டும் என விதிகளை வகுத்திருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது 8 ஆண்டுகால சர்வீஸ் நாகசுப்பிரமணிக்கு இல்லை. 4 ஆண்டுகாலமும் 2 மாதங்களும்தான் இருக்கிறது. மேலும், நெட்டும் செட்டும் அவர் க்ளியர் பண்ணலை.
இது தவிர, சர்வீஸ் இருப்பதாக அவர் தாக்கல் செய்த சான்றிதழும் போலியானது. அதாவது, நத்தத்தி லுள்ள ஒரு தனியார் பி.எட். கல்லூரியில் வேலை பார்த்ததாக அனுபவ சான்றிதழை கொடுத்திருக்கிறார். ஆனால், இவர் பணிபுரிந்ததாக சொல்லப்பட்ட அதே காலகட்டத்தில் டீச்சர் ட்ரைனிங்கில் வேலை பார்த்திருக்கிறார். ஒரே நபர் ஒரே காலகட்டத்தில் எப்படி இரண்டு இடங்களில் பணிபுரிந்திருக்க முடியும்? அதனால் இவர் கொடுத்த சர்வீஸ் சான்றிதழே போலியானது.
இதெல்லாம் நிர்வாகத்துக்கு தெரிந்தும் அவரை இணைப்பேராசிரியராக தேர்வு செய்தனர். அதன்பிறகு நடந்த பேராசிரியர் பதவி உயர்வுக்கான இண்டர்வியூவின்போதும் நாகசுப்பிரமணிக்கு எதிராக சிண்டிகேட் உறுப்பினர்கள் பலர் குற்றச்சாட்டுகள் கூறினர். அதனையும் மீறி அவருக்கு பேராசிரியர் பதவி உயர்வு கொடுக்கப் பட்டது. இந்த நிலையில், தற்போது பொறுப்பு பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் நாக சுப்பிரமணி.
இவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள், பணி அனுபவச் சான்றிதழ்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளரான கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., ஏற்கனவே 2 கடிதங்களை எழுதியிருக்கிறார். அப்படி கடிதம் எழுதிய அவரே, கல்வித்தகுதி இல்லாத ஒருவரை பொறுப்பு பதிவாளராக ஏன் நியமிக்க வேண்டும்?
இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. அதையெல்லாம் ஆராய்ந்த பொன்முடி, "பொறுப்பு பதிவாளர் நியமனத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது; தகுதியுள்ள பேராசிரியர்தான் நியமிக்கப்பட வேண்டும்' என கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு உத்தரவுபோட்டுள்ளார். ஆனால், அமைச்சரின் அந்த உத்தரவை மதிக்காமல், கல்வித்தகுதியில்லாத நாகசுப்பிரமணியை நியமித்தார் கார்த்திக்கேயேன்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்தறிய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., நாகசுப்பிரமணி ஆகியோரை தொடர்புகொண்டபோது அவர்களது மொபைல் எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியி லேயே இருந்தன.
இதற்கிடையே, இந்த கோல்மால்களை தமிழக கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் கல்வியாளர்கள் தெரிவித்த நிலையில், இதனை ரகசியமாக விசாரிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. சி.பி.ஐ.யும் இது தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருகிறது.
"சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டிய இந்த பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிர்வாக கோல்மால்கள் தி.மு.க. ஆட்சியிலும் தொடரும் நிலையில்... திராவிட மாடல் அரசுக்கு எதிரான சிந்தனையில் இருக்கும் மத்திய அரசால், விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாகும்' என்கிறார்கள் கல்வியாளர்கள்.