சட்டமன்றத் தேர்தலா -நாடாளுமன்றத் தேர்தலா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரிசல்ட். இங்கே 1989-ல் தொடங்கி 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என வெற்றிபெற்று வருகிறார் தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.
அமைச்சராக இருந்த காலங்களில் காவேரி கூட்டுக் குடிநீர், கல்லூரி, மருத்துவமனைகள், தாலுகா அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் போன்ற பல திட்டங் களையும் கொண்டு வந்ததால் தொகுதி மக்களிடம் நல்ல செல் வாக்கு. எதிர்க்கட்
சட்டமன்றத் தேர்தலா -நாடாளுமன்றத் தேர்தலா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரிசல்ட். இங்கே 1989-ல் தொடங்கி 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என வெற்றிபெற்று வருகிறார் தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.
அமைச்சராக இருந்த காலங்களில் காவேரி கூட்டுக் குடிநீர், கல்லூரி, மருத்துவமனைகள், தாலுகா அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் போன்ற பல திட்டங் களையும் கொண்டு வந்ததால் தொகுதி மக்களிடம் நல்ல செல் வாக்கு. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தொகுதிப் பிரச்சினை களில் தனி கவனம் செலுத்துவது ஐ.பி.யின் வழக்கம். 2011-ல் தி.மு.க. ஆட்சியை இழந்தபோதும், வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் அதிக வாக்குகளில் வென்றவர் ஐ.பெரியசாமி. அப்போது அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க அவரை எதிர்த்து நின்றது. 2016-ல் அப்போதைய அமைச்சர் நத்தம் விசுவநாதனைக் களமிறக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க. வாரி இறைத்த பணத்திற்கு ஈடுகொடுத் தது ஐ.பி.யின் தேர்தல் வியூகம்.
கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சி இல்லாத நிலை யிலும், தனது தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தனது சொந்த பணத்தில் செலவு செய்து நிறைவேற்றி கொடுத்தார். விவசாய மக்களுக் காக குடகனாறு மற்றும் குளங்களை ஒரு கோடி செலவில் தூர்வாரி விவசாய மக்களின் துயர் துடைத்தார். கட்சி பாகுபாடின்றி அனைவர் வீட்டுத் திருமண -துக்க நிகழ்வுகளில் பங்கேற்றார்.
எல்லாருக்கும் பொதுவானவர் என்ற பெயர் எடுத்த ஐ.பெரியசாமியை எதிர்த்து பா.ம.க வேட்பாளராக அதன் பொருளாளரும் கவிஞருமான திலகபாமா நிறுத்தப்பட்டபோதே தி.மு.க தரப்புக்கு நம்பிக்கை கூடிவிட்டது. தேர்தல் முடிவுகளில், ஐ.பெரியசாமி 1,65,809 வாக்குகள் வாங்கினார். திலகபாமா வாங்கியது 30,238 வாக்குகள். வாக்கு வித்தியாசம் 1,35.571
பா.ம.க உள்ளிட்ட 19 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டில் இம்முறை அதிக வாக்குகள் என்ற சாதனை மட்டுமின்றி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றி லும் இந்தளவு வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற்றதில்லை.
"தங்களுக்கு செய்த நன்மைகளை மனதில் வைத்து மக்கள் வாக்களித்ததால் இந்த சாதனை'' என்றார் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன். பெரும்பாறை மலை கிரா மத்தை சேர்ந்த யூனியன் துணைத் தலைவர் ஹேமலதா, "இந்தக் கிராமங்களுக்கு தொகுப்பு வீடு, மின்சாரம். ரோடு, இலவச பட்டா, குடிதண்ணீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத் திருக்கிறார். முதியோர் உதவித் தொகையும் பலருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். 90 வயதான மூதாட்டி பொன்னுத்தாய், "நானும் ஓட்டு கேட்க வருகிறேன்' என்று கூறி ஐ.பி. முன்னே ஓட்டு கேட்டும் சென்றார். அப்போதே வெற்றி உறுதியாகிவிட்டது'' என்றார்.