தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மருத் துவமனையான மதுரை அரசு மருத் துவமனை மாணவிகள் 40 பேர் மதுரை மருத்துவமனை டீன் இரத்தினவேலிடம், மயக்கவியல் டாக்டர் சையது தாஹிர் உசேன் தகாத முறையில் நடக்கிறார் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கல்லூரி துணைமுதல்வர் தனலட்சுமி தலைமையிலான விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர் சையது தாஹிர் உசேனை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பைத் தொடர்பு கொண்ட போது, அவர்கள் தங்கள் பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினர். “"ஆபரேஷன் தியேட்டரில் சர்ஜரிக்கு முன்பாக நோயாளி களுக்கு மயக்கவியல் துறை சார்பில் மயக்க மருந்து தரப்படும். அப்போது அந்த ரூமில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். இந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி மாணவிகளிடம் டாக்டர் சையது தாஹிர் உசைன் தவறான இடங்களை தொட்டுப் பேசுவார்.
ஆபரேஷன் தியேட்டரில் முகக்கவசம் அணியக் கூடாது என மாணவிகளை கட்டாயப் படுத் துவார். ஆபாசமாக பட்டப்பெயர் வைத்து
தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மருத் துவமனையான மதுரை அரசு மருத் துவமனை மாணவிகள் 40 பேர் மதுரை மருத்துவமனை டீன் இரத்தினவேலிடம், மயக்கவியல் டாக்டர் சையது தாஹிர் உசேன் தகாத முறையில் நடக்கிறார் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கல்லூரி துணைமுதல்வர் தனலட்சுமி தலைமையிலான விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர் சையது தாஹிர் உசேனை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பைத் தொடர்பு கொண்ட போது, அவர்கள் தங்கள் பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினர். “"ஆபரேஷன் தியேட்டரில் சர்ஜரிக்கு முன்பாக நோயாளி களுக்கு மயக்கவியல் துறை சார்பில் மயக்க மருந்து தரப்படும். அப்போது அந்த ரூமில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். இந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி மாணவிகளிடம் டாக்டர் சையது தாஹிர் உசைன் தவறான இடங்களை தொட்டுப் பேசுவார்.
ஆபரேஷன் தியேட்டரில் முகக்கவசம் அணியக் கூடாது என மாணவிகளை கட்டாயப் படுத் துவார். ஆபாசமாக பட்டப்பெயர் வைத்து அழைப்பார். பேசிக்கொண்டிருக் கும் போதே பின்னாடி தட்டுவார். இதுகுறித்து பலமுறை நாங்கள் எச்சரித்தோம். சில மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டு கண்ணீ ருடன் வரத்தொடங் கினார் கள். இதுகுறித்து தைரியமாக டீனிடம் புகார் கொடுத் தோம். இருந்தும் இது போன்ற செயல்கள் நீடித்து வந்தன. கலாஷேத்ரா மாணவிகள் போல் போராட்டம் நடத்துவோம் என்ற பின்புதான் நடவடிக்கை எடுத் துள்ளனர். சையது மட்டுமல்ல… இங்கிருக்கும் பெரும்பாலான டாக்டர்கள் மிக மோசமாகத்தான் நடந்துகொள்கிறார்கள். வெளியில் சொல்ல முடியவில்லை''’என்றனர்.
மற்றொரு மாணவியோ, “"எனக்கு சில மாதங்களுக்கு முன் இடுப்புப் பகுதியில் ஆபரேஷன் நடந்தது. அப்போது டாக்டர் சையது என்னிடம் வந்து "இடுப்பில் ஆபரேஷன் செய்தால் செக்ஸில் அவ்வளவா ஈடுபட முடியாது.… அதற்கு சில எக்ஸர்சைஸ் இருக்கு சொல்லிக் கொடுக்கட் டுமா'? என்றார். அதிலிருந்து அந்தாளு இருந்தா நான் வகுப்பில் இருக்கமாட்டேன். கடுகடுப்பாமுகத்தை வைத்துக்கொள்வேன்''’ என்றார்.
மாணவிகள் மேலும், "இங்கு செவிலியராக வேலைபார்க்கும் ஒரு அக்காவிடம் கேளுங்கள்' என்றனர். நாம் அந்தச் செவிலியரை அணுகிக் கேட்க... தயங்கினார். “"உங்க பெயர், புகைப்படம் எதுவும் வராது'’என்று தைரியமளித்ததும், பேச ஆரம்பித்தார். "இங்கு வேலைசெய்யும் பெரும்பாலான டாக்டர்கள் சபலபுத்தி உள்ளவர்களே. நாம் புகார் சொல்ல டீனிடம் போனால் அவர் ஆர்.எம்.ஓ. லதா மேடத்திடம் அனுப்பி வைப்பார். "நான் சாரிடம் சொல்லி அந்த டாக்டரை வேறு டிபார்ட்மெண்டுக்கு மாற்றிவிடுகிறேன். இனி ஏதாவது தொந்தரவு செய்தால் சொல்… கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்' என்று என்னைப் போன்றோரை சமாதானம் செய்து அனுப்பிவிடுவார் அவர்.
மருத்துவமனை நிர்வாகத்தில் வேலை செய்யும் பெண்ணை டாக்டர் வீரபாண்டி தொடர்ச்சியாக பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் பொறுக்கமுடி யாமல் மருத்துவமனை முதல்வர் இரத் தினவேலுவிடம் புகார் கொடுத்தார். அந்த டாக்டருக்கு ஆதரவாக டாக்டர் சங்க தலைவர் செந்தில் வர, வேறுவழியின்றி டீன் அந்த புகாரை கிழித்தெறிந்துவிட்டு அந்த மருத்துவரை வேறு இடத்திற்கு மாற்றுவதாகச் சொல்லி சமா தானம் செய்து அனுப்பி வைத்தார். இதில் யாராவது பிடிவாத மாக இருந்தால் டாக்டர் சங்க தலைவர் செந்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட பெண்ணை மிரட்டத் தொடங்குவார். டாக்டர் சையது, மருத்துவர் சங்க தலை வர் செந்திலுக்கு எதிரான சங்கத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் மதுரை மருத்துவ சங்கத்தை குறித்தும், தலைவர் செந்தில் குறித்தும் கவர்னரிடம் புகார் கொடுத் திருந்தார். அதனால்தான் சையது காப் பாற்றப்படவில்லை. இல்லையென்றால் எல்லாத்தை யுமே சரிக்கட்டிவிடுவார்கள்.
இங்கு வேலைசெய்யும் பெண் மருத்துவர்கள் முதல் செவிலியர்கள், நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள் என பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு பாலியல் தொந்தரவைச் சந்திக்காமல் இருந்த தில்லை. முதலில் மருத்துவமனையில் அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் அது கொஞ்சமாவது பாதுகாப்பைத் தரும் என நம்புகிறேன்''’என்றார். இதுகுறித்து அரசு மருத்துவ மனை டீன் இரத் தினவேலிடம் பேச, "மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர், செவிலியர், மாணவிகள் என்று 7000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இவர்களுக்குப் பாதுகாப்பாக மதுரை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் எப்போதும் இருக்கும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர் சையது தாஹிர்உசேனோ, "மதுரை மருத்துவ சங்கத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மருத்துவ சட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலச் செயலாளராக இருக்கிறேன். என் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவ சங்கத்தை வைத்துக்கொண்டு பல்வேறு வகையில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். பணிமாறுதலுக்கு 7 லட்சம், பணி நிரந்தரத்திற்கு 10 லட்சம், காண்ட்ராக்டர்களிடம் பல லட்சங்கள் வாங்கிக்கொண்டு வேலை கொடுப்ப தென ஊழல் நடைபெறுகிறது என கவர்னரிடம் புகார் கொடுத்தேன். அதன் எதிரொலியாக மாணவிகளைத் தூண்டி விட்டு இப்படி செய்திருக்கிறார்கள்''’ என்கிறார். மருத்துவத் துறையில் பாலியல் புற்றுநோய் பரவுவது நல்லதல்ல.